என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்கக் கூடாது.
- காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது அதன் கலரை கவனித்து வாங்க வேண்டும்.
சென்னை:
வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோடை காலத்திற்கு இன்னும் 2 மாதங்கள் இருந்தாலும்கூட, காலநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கோடை காலத்தில் குடிநீர், பழங்கள், குளிர் பானம் ஆகியவற்றை மிக கவனமாக வாங்கி அருந்துங்கள் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
வெயில் காலம் தொடங்க இருப்பதால் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், குளிர்பானம் ஆகியவற்றை அதிகளவில் பயன் படுத்துவதில் கவனம் வேண்டும். தினமும் 2½ லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதனை குறிப்பிட்ட நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். தர்பூசணி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

தர்பூசணி பழம் உடலுக்கு மிகவும் நல்லது. பழம் வகைகளை வாங்கி சாப்பிடும் போது அதில் கலப்படம் இருக்கிறதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது அதன் கலரை கவனித்து வாங்க வேண்டும்.
காலை வெயில் உடலுக்கு நல்லது. மதியத்திற்கு பிறகு தாக்கும் வெயிலை தவிர்ப்பது நல்லது. இளநீர், பழம் விற்பனையில் ஈடுபடுவோர் பெரிய குடையை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்யக் கூடிய வியாபாரிகள் குடைகளை பயன்படுத்தினால் நல்லது. குடிநீர் பாட்டில்களில் தரமானது எவை என்பதை கவனித்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் பாட்டில்களில் கலப்படம் வருகிறது. சிறு தொழிலுக்கான சான்றிதழ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தவும்.
முறையான பரிசோதனை இல்லாமல் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து விற்பதையும், அதை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குழந்தைகளுக்கு கலர் கலராக இருக்கும் குளிர்பானங்களை வாங்கி கொடுக்காதீர்கள்.
தரமற்ற குடிநீர், குளிர் பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகலாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டத்திற்கு விரோதமாக உணவுப் பொருட்களை தயாரித்து விற்பவர்கள் மீது ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே கோடை காலம் தொடங்க இருக்கிற நிலையில் பொதுமக்கள் தரமான சுகாதாரமான குடிநீர், குளிர்பானம், பழச்சாறு ஆகியவற்றை வாங்கி குடிக்க வேண்டும்.
போலி மற்றும் சுகாதாரமற்றவைகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 12 பெட்டிகளை கொண்ட இந்த ‘குளுகுளு’ ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன.
- ரெயில் சேவை தொடங்கப்படும் போது கட்டண விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும்.
சென்னை:
சென்னை ஐ.சி.எப். ஆலையில் வந்தே பாரத் ரெயில்கள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில் பெட்டிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு 'குளுகுளு' வசதி கொண்ட 2 குளிர்சாதன மின்சார ரெயில்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த 'குளுகுளு' மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த 'குளுகுளு' மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இன்னும் 2 வாரத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பிறகு இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கும். சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் அடுத்த மாதம் முதல் இந்த 'குளுகுளு' ரெயில் சென்னை பயணிகளுக்காக இயக்கப்படும்.
இந்த ரெயில் ஒரு நாளைக்கு எத்தனை முறை இயக்கப்படும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட இந்த 'குளுகுளு' ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரெயிலில் 5,700 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது.
சென்னை கோட்டத்தில் முதல் கட்டமாக 2 'குளுகுளு' மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் வர இருக்கிற கோடை வெயிலில் இருந்து ரெயில் பயணிகள் தப்பிக்க முடியும்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே அடுத்த மாதம் 'குளுகுளு' மின்சார ரெயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரெயில் தயாரிப்புக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ரெயிலில் நவீன மோட்டார்கள் இடம்பெற்றுள்ளதால் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்டது. இந்த ரெயில் பெட்டிகள் விரைவில் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சோதனை ஓட்டம் முடிவடைந்ததும் ரெயில் உடனடியாக இயக்கப்படும். எனவே வர இருக்கிற கோடை வெயிலை ரெயில் பயணிகள் எளிதாக சமாளிக்க முடியும். இந்த ரெயில் பயணத்துக்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
மேற்கு ரெயில்வேயில் 'குளுகுளு' ரெயில்களுக்கு கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 9 கி.மீ. தூரத்துக்கு ரூ.35, 15 கி.மீ. தூரத்துக்கு ரூ.50, 24 கி.மீ. தூரத்துக்கு ரூ.70, 34 கி.மீ. தூரத்துக்கு ரூ.95 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 'குளுகுளு' மின்சார ரெயிலில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான 28.6 கி.மீ. தூரத்துக்கான கட்டணம் ரூ.95 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ரெயில் சேவை தொடங்கப்படும் போது கட்டண விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து மனுதாரர் அளித்த புகார் மனு மீது தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்கும் வகையில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவிலும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவிகள், ஒரு வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உண்மை தகவல்களை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்தோரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து மனுதாரர் அளித்த புகார் மனு மீது தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தினர்.
- சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 9 ஆம் நாளான இன்று அதிகாலையில் உற்ச வர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
பின்னர் திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் மற்றும் பெரிய ரத வீதி வழியாக சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வன், பொம்ம தேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
- சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம்.
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
காலை 8-30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி பல்லகவுண்டன்பாளையம் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 5 கல்லூரி மாணவர்களின் கை-கால்கள் துண்டாகியது. அவர்கள் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் சுய நினைவு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக செங்கப்பள்ளி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.

டிரைவர் அதிவேகமாக பஸ்சை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்தில் பலியான 2 பேரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், அதில் ஒருவர் விருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பெரியசாமி (வயது 20), மற்றொருவர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
பெரியசாமி செங்கப்பள்ளியில் இருந்து பஸ்சில் ஏறியுள்ளார். அடுத்த 5 நிமிடத்தில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறை பனி இல்லாமல் நீர் பனி எனப்படும் சீசன் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
- கடும் குளிர் காரணமாக கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருடம் முழுவதும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை விழா மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இங்குள்ள நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், தூண்பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, பிரையண்ட் பார்க் ஆகியவை சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்லும் முக்கிய இடங்களாக உள்ளது.
கொடைக்கானலில் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை கடும் குளிர் நிலவி வரும். அதன்படி இந்த வருடமும் ஜனவரியில் கடும் குளிர் மற்றும் உறை பனி சீசன் காணப்பட்டது.
இருந்தபோதும் இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய பின்னரும் கடும் குளிர் நிலவி வருகிறது.
உறை பனி இல்லாமல் நீர் பனி எனப்படும் சீசன் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. பகல் பொழுதில் மேக மூட்டமும், பனிப்பொழிவும் நிலவுவதோடு மாலையிலேயே கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது.
கொடைக்கானலில் இ-பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தியும் கோடை காலத்தில் கூட்டம் சமாளிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இந்த குளிர் சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை காட்டிலும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடும் குளிர் காரணமாக கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
- அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
- பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பில்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டை தள்ளியதற்கு தி.மு.க. அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பிப்.8-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தான் கல்வி பயிலும் பள்ளியிலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல்.
பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பில்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டை தள்ளியதற்கு தி.மு.க. அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடை பெற்றது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்கும் வகை யில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி யிட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவிலும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவிகள், ஒரு வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.
காலை நேரம் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் மதிய நேரம் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவில் சிறிது சுனக்கம் ஏற்பட்டது. பின்னர் மாலை நேரம் மீண்டும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அடிப்படையில் வாக்குப்பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காலை 9 மணி அளவில் 10.95 சதவீதமும், 11 மணி அளவில் 26.03 சதவீதமும், மதியம் 1 மணி அளவில் 42.41 சதவீதமும், மதியம் 3 மணி அளவில் 53.63 சதவீதமும், மாலை 5 மணி அளவில் 64.02 சதவீதமும் பதிவானது.
அதைத்தொடர்ந்து இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலை விட 7 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 2023-ம் ஆண்டு தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது.
வாக்குப்பதிவு முழுமை அடைந்தவுடன், ஓட்டு போட்ட வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. பதிவு எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர மின் இணைப்புகள் முறைப்படி துண்டிக்கப்பட்டன.
பின்னர் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி. பேட் கருவிகள் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து மண்டல தேர்தல் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை பெற்றுக் கொண்டனர். அப்போது படிவங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்தனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மண்டலம் வாரியாக சேகரிக்கப்பட்டன.
பின்னர் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் இருந்தும் வாக்குபதிவு எந்திரங்கள் சித்தோடு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பாதுகாப்பு அறையில் எண் வரிசைப்படி எந்திரங்கள் வைக்கப்பட்டன.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகமான ஸ்ரீகாந்த், தேர்தல் பொது பார்வையாளர் ஆகிய முன்னிலையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு அறையின் உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குவதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பாதுகாப்பு அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த பணி நள்ளிரவு வரை நடந்து அதிகாலை 4 மணியில் நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் 4 அடுக்கு பாதுகாப்பு கொண்டு வரப்பட்டது.
இன்று முதல் அடுக்கில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும், 2-ம் அடுக்கில் தமிழ்நாடு பட்டாலியன் போலீசாரும், 3-ம் அடுக்கில் ஆயுதப்படை போலீசாரும், 4-ம் அடுக்கில் உள்ளூர் போலீசார் என 400 போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் தீ போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு வீரர்களும் வாகனங்களுடன் முன்னெ ச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நாளைமறுநாள் (சனிக்கி ழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணி க்கை தொடங்குகிறது. முதலில் தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்படு கிறது. 14 மேஜைகளில் 17 சுற்றுகள் வரை எண்ணப்ப டுகிறது. அன்று மதியம் முடி வுகள் அறிவிக்கப்படுகிறது.
- இந்த வார தொடக்கத்தில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து 905-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.760 உயர்ந்து ரூ.63 ஆயிரத்து 240-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,930-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,440-க்கும் விற்பனையாகிறது.
இந்த வார தொடக்கத்தில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240
04-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,480
03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640
02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320
01-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-02-2025- ஒரு கிராம் ரூ.107
04-02-2025- ஒரு கிராம் ரூ.106
03-02-2025- ஒரு கிராம் ரூ.107
02-02-2025- ஒரு கிராம் ரூ. 107
01-02-2025- ஒரு கிராம் ரூ. 107
- சொத்துவரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
- கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து வரியை செலுத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் நீண்டகாலமாக வரி பாக்கி வைத்துள்ள 2 லட்சம் வணிக கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் நோட்டீஸ் அனுப்பியும் சொத்து வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முறையாக சொத்துவரி செலுத்தாத நபர்களுக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சொத்துவரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து வரியை செலுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
- போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்கான, பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித் தேர்வுகளான புதிய பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. ஆனால், இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. மறுத்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., '2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும். பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளது.
- மதுரை ஐகோர்ட்டு, பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது.
- பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா பேசியிருந்தார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஸ், மாநில செயலாளர் சேவுகன், புதுச்சேரி மாநில தலைவர் குமார், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா பேசியிருந்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா, இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.






