என் மலர்
ராஜஸ்தான்
- பெண் எதிர்ப்பு தெரிவித்ததும் மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை அணுகுவது மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயது திருமணமான பெண் நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த பெண்ணை ஆஸ்பத்திரியின் ஆண் செவிலியர் ஒருவர் அதிகாலை 3.30 மணியளவில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளார். முதலில் ஆபாச செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததும் மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை அணுகுவது மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக போலீசில் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவமனையின் ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டார்.
- தலித் ஆசிரியர் இடைநீக்கத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
- "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்"
"கல்விக்கு கடவுள் சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை ஹேம்லதா பைர்வா மீதான இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவு நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இரு தலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், 'கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என்று ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலித் ஆசிரியர் இடைநீக்கத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவருமான டிகா ராம் ஜூலி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆசிரியை ஹேம்லதா பைர்வாவை தடுத்த கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், அவரை இடைநீக்கம் செய்ததன் மூலம் பாஜக அரசு தலித் விரோத அரசு என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புகொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, கோட்டா மாவட்டத்தின் சங்கோட் பகுதியில் உள்ள அரசு மூத்த மேல்நிலைப் பள்ளி கஜூரியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் பணியில் சேர்க்க வேண்டும் என மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- “கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறிய ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
- “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்”
ராஜஸ்தானில் குடியரசு தினத்தின் போது மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மத்தியில் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க மறுத்து, "கல்விக்கு கடவுள் சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை" எனக்கூறிய ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இரு தலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், 'கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை' என்று ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில், லவ் ஜிஹாத், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 2 ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சாலையில் நடந்த பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பறிகொடுத்த பெண்ணுக்கு ₹4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி சாலையிலேயே இரட்டைக் குழந்தைகளை அவர் பிரசவிக்க, ஒரு குழந்தை அங்கேயே உயிரிழந்தது. மற்றொன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளை களைய ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மகேந்திரஜீத் சிங் மாளவியா இன்று பாஜகவில் சேர்ந்தார்.
- அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி மறுத்ததால் தான் வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மகேந்திரஜீத் சிங் மாளவியா இன்று பாஜகவில் சேர்ந்தார்.
நேற்று (பிப் 18) டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த மாளவியா, இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
இன்று ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில், ராஜஸ்தான் பாஜக பொறுப்பாளர் அருண் சிங், மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தெற்கு ராஜஸ்தானின் முக்கிய பழங்குடி தலைவராக இருந்த மாளவியா பாஜகவில் சேர்ந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
பாஜகவில் இணைந்த பின்னர் பேசிய மாளவியா, "பழங்குடியினர் பகுதியில் பாஜக மற்றும் மோடியைத் தவிர வேறு யாரும் வேலை செய்ய முடியாது. மோடி அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதால்தான் பாஜகவில் சேர முடிவு செய்தேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், "அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி மறுத்ததால் தான் வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மாளவியா 2008 முதல் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் 2008 முதல் 2013 வரையிலும், மீண்டும் 2021 முதல் 2023 வரையிலும் கேபினட் அமைச்சராக இருந்துள்ளார். 1998-ல் பன்ஸ்வாரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கம், 88 கிலோ வெள்ளியும் உள்ளது.
- இத்தாலியில் பரம்பரை வீடு உள்ளதாகவும், அந்த சொத்தில் கிடைக்கும் பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி வருகிற பராளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்காக கடந்த புதன்கிழமை (நேற்றுமுன்தினம்) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் மொத்த சொத்த மதிப்பு 12.53 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்.
கைவசம் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்த சொத்து மதிப்பு (அசையும் மற்றும் அசையா சொத்து) 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ஆகும்.
2014-ல் அவருடைய சொத்து மதிப்பு 9.28 கோடி ரூபாயாக இருந்தது. 2019-ல் 11.82 கோடி ரூபாயாக அதிகரித்தது. தற்போது 2024-ல் 12.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அசையும் சொத்து 6.38 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். ஜூவல்லரி, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இருந்து கிடைக்கும் ராயல்டி, முதலீடுகள், பாண்டுகள், வங்கி டெபாசிஸ்ட், கையில் இருக்கும் ரொக்கத்தொகை ஆகியவை அடங்கும்.
49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கம் இருப்பதாகவும், 88 கிலோ வெள்ளி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெள்ளியின் மதிப்பு 57.2 லட்சம் ரூபாய் ஆகும்.
இத்தாலியில் பரம்பரை வீடு உள்ளதாகவும், அவற்றில் தனக்கான பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார். 2014 தேர்தலில் இதன் மதிப்பு 19.9 லட்சம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
- சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
- ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகின.
தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. ராஜஸ்தானில் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்கான மனுத்தாக்கல் செய்ய இன்று காலை 10 மணியளவில் ராஜஸ்தான் வந்தடைந்தார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் வந்தனர்.
#WATCH | Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi arrives in Jaipur, Rajasthan to file her nomination for the Rajya Sabha election.Her son & party MP Rahul Gandhi and her daughter & party's general secretary Priyanka Gandhi Vadra are accompanying her. pic.twitter.com/yskO2N0g8a
— ANI (@ANI) February 14, 2024
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் வந்திருந்தனர்.
பின்னர் சரியாக 12 மணியளவில் ராஜஸ்தான் சட்மன்ற வளாகம் வந்தடைந்தார். அதன்பின் மாநிலங்களவை எம்.பி. போட்டிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சோனியா காந்தி கடந்த 1999 -ம் ஆண்டில் இருந்து மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். தற்போது முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அவரது உடல்நிலை காரணமாக மாநிலங்களவை எம்.பி. ஆக முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். உடனே அவர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அசோக்கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
அவரது உடல்நிலை சீராக தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டாக்டர்கள் மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்ததால் அடுத்த 7 நாட்கள் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.
- ஜந்தர் மந்தரில் நடந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் மேக்ரானும் பங்கேற்றார்.
புதுடெல்லி:
இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.
அதிபர் மேக்ரானை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில ஆளுநர், முதல் மந்திரி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து, அதிபர் மேக்ரான் ஆம்பர் கோட்டை, ஹவா மகால் மற்றும் ஜந்தர் மந்தர் போன்ற சுற்றுலா தலங்களுக்குச் சென்றார். ஜந்தர் மந்தரில் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார்.
இந்நிலையில், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் மேக்ரானும் பங்கேற்றார். சாலை நெடுகிலும் கூட்டமாக திரண்டிருந்த மக்கள் இரு தலைவர்களுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
#WATCH | People in large numbers welcome PM Modi and French President Emmanuel Macron during their roadshow in Jaipur, Rajasthan pic.twitter.com/JyhT8GgMhl
— ANI (@ANI) January 25, 2024
- மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
- ஒரு பக்கம் பெற்றோர்கள், மற்றொரு மக்கள் பயிற்சி மையம் என நெருக்கடி கொடுப்பதால் மாணவர்கள் மனஅழுத்தம்.
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எப்படியாவது மருத்துவராக வேண்டும் என நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களை பெற்றோர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து நீட் தேர்வு மையத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
இதை லாப நோக்கத்தில் பார்க்கும் தனியார் மையங்கள் நாட்டில் பெரும்பாலான இடங்களில் நீட் பயிற்சி மையத்தை அமைத்துள்ளன. இந்த பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்த்து விடுகிறார்கள். இந்த மையங்கள் தங்களது பெயர்களை நிலைநாட்ட, மாணவர்களை கசக்கி பிழிந்து எடுக்கிறார்கள்.
நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அதிகமாக உள்ளன. இதனால் பயிற்சி முனையமாக கோட்டா திகழ்கிறது. வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிகமான அளவில் கோட்டாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் படித்து வருகிறார்கள். இவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள்.
ஏற்கனவே பெற்றோர்களை பிரிந்து வந்து தனிமையில் தங்கியிருக்கும் மாணவர்களை, தங்களது மையம் முதன்மையாக விளங்க வேண்டும் என நினைக்கும் பயிற்சி மையங்கள் தேர்ச்சியை அதிகமாக காண்பிக்க படிபடி என நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
கடந்த வருடத்தில் மட்டும் கோட்டாவில் 26 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் தங்கிருந்து படித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பெற்றோர்கள் வந்ததும் அந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ராஜஸ்தான் அரசு, பயிற்சி மையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மதுபான விற்பனை உத்தரவை நிதித் துறை (கலால்) இணைச் செயலர் இன்று பிறப்பித்தார்.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதோம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை நிதித் துறை (கலால்) இணைச் செயலர் இன்று பிறப்பித்துள்ளார்.
ஜெய்ப்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் ஹெரிடேஜ் மேயர் முனேஷ் குர்ஜார், கடந்த வாரம் ஜனவரி 22 அன்று நகரத்தில் உள்ள பாரம்பரிய பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தான் மாநில பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பாபுலால் கார்டி.
- பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பாபுலால் கார்டி. இவர் உதய்ப்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியில் வெற்றி பெற்றவர்
இந்நிலையில், பாபுலால் கார்டி நேற்று உதய்ப்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், பசியுடனும், வீடு இல்லாமலும் யாரும் உறங்கக் கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும். நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக் கொடுப்பார். வேறு என்ன பிரச்சனை உங்களுக்கு? என கேள்வி எழுப்பினார்.
பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது






