search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pregnet"

    • கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    • கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சாலையில் நடந்த பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பறிகொடுத்த பெண்ணுக்கு ₹4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி சாலையிலேயே இரட்டைக் குழந்தைகளை அவர் பிரசவிக்க, ஒரு குழந்தை அங்கேயே உயிரிழந்தது. மற்றொன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தது.

    கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளை களைய ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • சிவகிரி அருகே திருமணமான 4 மாதத்திலேயே கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார்
    • தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக குடும்ப பிரச்சினை.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி கருங்குளம் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி கனகலெட்சுமி. இவர்களது மகள் துர்காதேவி(வயது 20).

    இவருக்கும், விருதுநகர் மாவட்டம் கார்த்திகை பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி(22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது துர்கா தேவி 3 மாத கர்ப்பமாக இருந்தார்.

    இதற்கிடையே கணவன்-மனைவி இடையே தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதனால் மனம் உடைந்த துர்கா தேவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதற்கிடையே குடும்பம் நடத்துவதற்கு தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கூறி கருத்தபாண்டி சிவகிரி ஊர் நாட்டாமைகளிடம் தெரிவித்துள்ளார்.

    இதனை அவமானமாக கருதிய துர்காதேவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். பின்னர் சிவகாசியில் உள்ள தனது சித்தியிடம், விஷம் குடித்துவிட்டதாக செல்போனில் தெரிவித்துள்ளார்.

    உடனே அவர் துர்காதேவி வீட்டின் அருகே உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கு விரைந்து சென்று துர்காதேவியை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ×