என் மலர்
ராஜஸ்தான்
- சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
- ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகின.
தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. ராஜஸ்தானில் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்கான மனுத்தாக்கல் செய்ய இன்று காலை 10 மணியளவில் ராஜஸ்தான் வந்தடைந்தார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் வந்தனர்.
#WATCH | Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi arrives in Jaipur, Rajasthan to file her nomination for the Rajya Sabha election.Her son & party MP Rahul Gandhi and her daughter & party's general secretary Priyanka Gandhi Vadra are accompanying her. pic.twitter.com/yskO2N0g8a
— ANI (@ANI) February 14, 2024
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் வந்திருந்தனர்.
பின்னர் சரியாக 12 மணியளவில் ராஜஸ்தான் சட்மன்ற வளாகம் வந்தடைந்தார். அதன்பின் மாநிலங்களவை எம்.பி. போட்டிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சோனியா காந்தி கடந்த 1999 -ம் ஆண்டில் இருந்து மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். தற்போது முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அவரது உடல்நிலை காரணமாக மாநிலங்களவை எம்.பி. ஆக முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். உடனே அவர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அசோக்கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
அவரது உடல்நிலை சீராக தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டாக்டர்கள் மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்ததால் அடுத்த 7 நாட்கள் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.
- ஜந்தர் மந்தரில் நடந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் மேக்ரானும் பங்கேற்றார்.
புதுடெல்லி:
இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.
அதிபர் மேக்ரானை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில ஆளுநர், முதல் மந்திரி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து, அதிபர் மேக்ரான் ஆம்பர் கோட்டை, ஹவா மகால் மற்றும் ஜந்தர் மந்தர் போன்ற சுற்றுலா தலங்களுக்குச் சென்றார். ஜந்தர் மந்தரில் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார்.
இந்நிலையில், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் மேக்ரானும் பங்கேற்றார். சாலை நெடுகிலும் கூட்டமாக திரண்டிருந்த மக்கள் இரு தலைவர்களுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
#WATCH | People in large numbers welcome PM Modi and French President Emmanuel Macron during their roadshow in Jaipur, Rajasthan pic.twitter.com/JyhT8GgMhl
— ANI (@ANI) January 25, 2024
- மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
- ஒரு பக்கம் பெற்றோர்கள், மற்றொரு மக்கள் பயிற்சி மையம் என நெருக்கடி கொடுப்பதால் மாணவர்கள் மனஅழுத்தம்.
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எப்படியாவது மருத்துவராக வேண்டும் என நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களை பெற்றோர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து நீட் தேர்வு மையத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
இதை லாப நோக்கத்தில் பார்க்கும் தனியார் மையங்கள் நாட்டில் பெரும்பாலான இடங்களில் நீட் பயிற்சி மையத்தை அமைத்துள்ளன. இந்த பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்த்து விடுகிறார்கள். இந்த மையங்கள் தங்களது பெயர்களை நிலைநாட்ட, மாணவர்களை கசக்கி பிழிந்து எடுக்கிறார்கள்.
நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அதிகமாக உள்ளன. இதனால் பயிற்சி முனையமாக கோட்டா திகழ்கிறது. வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிகமான அளவில் கோட்டாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் படித்து வருகிறார்கள். இவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள்.
ஏற்கனவே பெற்றோர்களை பிரிந்து வந்து தனிமையில் தங்கியிருக்கும் மாணவர்களை, தங்களது மையம் முதன்மையாக விளங்க வேண்டும் என நினைக்கும் பயிற்சி மையங்கள் தேர்ச்சியை அதிகமாக காண்பிக்க படிபடி என நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
கடந்த வருடத்தில் மட்டும் கோட்டாவில் 26 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் தங்கிருந்து படித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பெற்றோர்கள் வந்ததும் அந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ராஜஸ்தான் அரசு, பயிற்சி மையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மதுபான விற்பனை உத்தரவை நிதித் துறை (கலால்) இணைச் செயலர் இன்று பிறப்பித்தார்.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதோம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை நிதித் துறை (கலால்) இணைச் செயலர் இன்று பிறப்பித்துள்ளார்.
ஜெய்ப்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் ஹெரிடேஜ் மேயர் முனேஷ் குர்ஜார், கடந்த வாரம் ஜனவரி 22 அன்று நகரத்தில் உள்ள பாரம்பரிய பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தான் மாநில பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பாபுலால் கார்டி.
- பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பாபுலால் கார்டி. இவர் உதய்ப்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியில் வெற்றி பெற்றவர்
இந்நிலையில், பாபுலால் கார்டி நேற்று உதய்ப்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், பசியுடனும், வீடு இல்லாமலும் யாரும் உறங்கக் கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும். நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக் கொடுப்பார். வேறு என்ன பிரச்சனை உங்களுக்கு? என கேள்வி எழுப்பினார்.
பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
- கரண்பூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வி அடைந்தார்
- பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்
ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் நவம்பர் 25ம் தேதி மற்றும் டிசம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கரண்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் உயிரிழந்ததால், அந்த தொகுதியில் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. அதனை தொடர்ந்து, கரன்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜன.5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மாதம் 30ம் தேதி இணை அமைச்சராக பதவியேற்ற சுரேந்தர் பால் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜன.5 அன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், 81.38 சதவீத வாக்குகள் பதிவானது.
அதனைத்தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தோல்வியால் ராஜஸ்தான் அமைச்சர் பதவியை சுரேந்திர பால் சிங் இழந்துள்ளார்.
- ராஜஸ்தானில் முன்னாள் எம்.எல்.ஏ. மேவாராம் ஜெயின் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
- ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மேவாராம் ஜெயின் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மரைச் சேர்ந்த மேவாராம் ஜெயின் உள்ளிட்ட 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக்கூறி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பெண் புகார் அளித்தார். அதில், மேவாராம் ஜெயின் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மானபங்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டினார். அதன் அடிப்படையில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மேவாராம் ஜெயின் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் அவரது 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ.வான மேவாராம் ஜெயின் இன்று காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என மாநில காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- ராஜஸ்தானில் அமைச்சரவை இலாகாக்கள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் பஜன்லால் சர்மா வெளியிட்டுள்ளார்
- துணை முதலமைச்சர் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன
ராஜஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து பஜன்லால் சர்மா முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா தேர்வு செய்யப்பட்டார். மேலும் 22 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற 22 அமைச்சர்களுக்கு இலாகாக்கல் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், அவர்களுக்கான துறைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இலாகா தொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் பஜன்லால் சர்மா ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். முதலமைச்சரின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்துறை, கலால் வரி, ஊழல் ஒழிப்பு உள்பட 8 துறைகளை தன் வசம் வைத்துக்கொண்டார். துணை முதலமைச்சர் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதலமைச்சரான பிரேம் சந்த் பைரவாவுக்கு உயர்கல்வி, ஆயுர்வேதா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் கிம்சாரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக மதன் திலாவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரபல தலைவர்கள், சாதனையாளர்கள், விருது பெற்றவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கோவில் கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது. மேலும், கோவிலை சுற்றி அவரது சிலைகள் வைக்கப்பட இருக்கிறது.
ராமர் கோவிலில் வைக்கப்பட இருக்கும் சிலைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தலைசிறந்த சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிற்பி 51 இன்ஞ் உயரமுள்ள குழந்தை வடிவிலான ராமர் சிலையை வடிவமைத்துள்ளார்.
இந்த சிலை நேற்று உத்தர பிரதேசம் சென்றுள்ளது. கும்பாபிஷேக விழா வருகிற 16-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இதனால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்திக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைப்பு.
- புத்தாண்டு முதல் விலை குறைப்பு அமலுக்கு வரவிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைத்து இருக்கும் பா.ஜ.க. அரசு கியாஸ் சிலிண்டர்கள் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை குறைப்பதாக பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது.
அந்த வகையில், ஜனவரி 1-ம் தேதி முதல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் ரூ. 450-க்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது பேசிய முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா, மானிய தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறார்.
- திவ்யா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
- பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் காங்கிரஸ் 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது.
இதையடுத்து புதிய முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பஜன்லால் சர்மா புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் துணை முதல்-மந்திரியாக திவ்யா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா இன்று ஜெய்ப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் திவ்யா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றனர். மேலும், கோவா முதல்வர் பிரமோத் சவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட பஜன்லால் சர்மா சங்கேனர் தொகுதியில் இருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 48,081 வாக்குகள் வித்தியாசததில் தோற்கடித்தவர்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் நீண்ட காலமாக பணியாற்றிவர். ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே முதல்-மந்திரி பதவி அவரை தேடி வந்துள்ளது. பஜன்லால் சர்மா ராஜஸ்தான் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றான பத்பூரை பூர்வீகமாக கொண்டவர். அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.






