search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சோனியா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.12.53 கோடி : வேட்புமனுவில் தகவல்
    X

    சோனியா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.12.53 கோடி : வேட்புமனுவில் தகவல்

    • 49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கம், 88 கிலோ வெள்ளியும் உள்ளது.
    • இத்தாலியில் பரம்பரை வீடு உள்ளதாகவும், அந்த சொத்தில் கிடைக்கும் பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி வருகிற பராளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்காக கடந்த புதன்கிழமை (நேற்றுமுன்தினம்) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் மொத்த சொத்த மதிப்பு 12.53 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்.

    கைவசம் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்த சொத்து மதிப்பு (அசையும் மற்றும் அசையா சொத்து) 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ஆகும்.

    2014-ல் அவருடைய சொத்து மதிப்பு 9.28 கோடி ரூபாயாக இருந்தது. 2019-ல் 11.82 கோடி ரூபாயாக அதிகரித்தது. தற்போது 2024-ல் 12.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

    அசையும் சொத்து 6.38 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். ஜூவல்லரி, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இருந்து கிடைக்கும் ராயல்டி, முதலீடுகள், பாண்டுகள், வங்கி டெபாசிஸ்ட், கையில் இருக்கும் ரொக்கத்தொகை ஆகியவை அடங்கும்.

    49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கம் இருப்பதாகவும், 88 கிலோ வெள்ளி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெள்ளியின் மதிப்பு 57.2 லட்சம் ரூபாய் ஆகும்.

    இத்தாலியில் பரம்பரை வீடு உள்ளதாகவும், அவற்றில் தனக்கான பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார். 2014 தேர்தலில் இதன் மதிப்பு 19.9 லட்சம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×