ராமர் கோவில் விழா- ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை

மதுபான விற்பனை உத்தரவை நிதித் துறை (கலால்) இணைச் செயலர் இன்று பிறப்பித்தார்.உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோவில் விழா- ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை
Published on

உத்தரப் பிரதோம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை நிதித் துறை (கலால்) இணைச் செயலர் இன்று பிறப்பித்துள்ளார்.

ஜெய்ப்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் ஹெரிடேஜ் மேயர் முனேஷ் குர்ஜார், கடந்த வாரம் ஜனவரி 22 அன்று நகரத்தில் உள்ள பாரம்பரிய பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com