என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
    • பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்

    ராஜஸ்தானில் போக்ஸோ வழக்கில் போலீஸ் கஸ்டடியில் இருந்த நபர் தனது பிறப்பு உறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 35 வயதான அப்துல் வாசித் என்னும் மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு, தான் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் இருந்த அப்துல் வாசித், காவல் நிலைய கழிவறைக்குச் சென்று தனது பையில் வைத்திருத்த கூர்மையான பொருளை வைத்து தனது பிறப்பு உறுப்பை அறுத்துத் துண்டித்துக் கொண்டுள்ளார்.

    போலீஸ் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவர் உயிர்பிழைத்தார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.
    • இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது.

    விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் ராஜஸ்தானில் காரின் விண்ட்ஸகிரீனில் ஒட்டகம் ஒன்று மாட்டிக்கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமான்கர் மாவட்டத்தில், நேற்று முன் தினம் இரவு நேரத்தில் நடந்த இந்த சமபவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒட்டகம் காரின் முன்புற கண்ணாடியான விண்ட்ஸகிரீனில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் வலியில் துடிப்பது பதிவாகியுள்ளது. நொஹார் நோக்கி இரவு நேரத்தில் காரில் சென்றுகொண்டிருந்த நபர் ஒட்டகம் வழியில் இருப்பதை கவனிக்காமல் அதன் மீது மோதியுள்ளார்.

    இதனால் காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். வெகு நேரமாக வலியில் துடித்த ஒட்டகம் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது. 

     

    • ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் வசித்து வருபவர் இர்ஃபான், இவர் இன்ஸ்டாகிராமில் பேசி பெண்களை கவர்வதை தொழிலாக பார்த்து வருகிறார்.
    • அந்த சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அந்த சிறுமியை மிரட்ட துவங்கினார்.

    ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் வசித்து வருபவர் இர்ஃபான், இவர் இன்ஸ்டாகிராமில் பேசி பெண்களை கவர்வதை தொழிலாக பார்த்து வருகிறார். இம்முறை 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் நண்பர் ஆனார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் தரவுகளை பெற்றுள்ளார்.

    பிறகு, அந்த சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அந்த சிறுமியை மிரட்ட துவங்கினார். மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க 5 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு இர்ஃபான் சிறுமியை மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி வீட்டிற்கு தெரியாமல் பணத்தை திருடி இர்ஃபானிடம் கொடுத்துள்ளார்.

    மார்ச் மாதம் இவ்வாறு இர்ஃபானிடம் பணத்தை கொடுக்கும் போது இர்ஃபான், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இச்செய்தி யாருக்கும் வெளியே தெரியாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று சிறுமியை மீண்டும் மிரட்டியுள்ளார்.

    இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை காவல் துறையிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த காவல் துறை அதிகாரி, இர்ஃபான் மற்ற அவனது கல்லூரி மற்றும் பள்ளி பெண்களுடனும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

    இர்ஃபான் இதை தனியாளாக செய்யவில்லை இவருக்கு பின் ஒரு கூட்டமே செயல்பட்டு வந்துள்ளது. இர்ஃபானால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் விவரத்தை தெரிந்துக்கொள்ள காவல்துறை முயற்சித்து வருகின்றனர்.

    இர்ஃபானும் அவனுக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் கைது செய்த போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய அவசர நிலையாக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது.
    • இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    இந்தியாவின் மேற்கு மற்றம் மத்திய மாநிலங்களில் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. பீகார், ராஜஸ்தான், உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் மக்கள் சுருண்டு உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி அனூப் குமார் தாந்த் தாமாக இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்ற நிலையில், வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய அவசர நிலையாக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், வெப்ப அலையில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். மாநில முதன்மை செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை மற்றும் குளிர் காற்றுக்கு பலியாவது அதிகரித்திருக்கும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இது தொடர்பான பணிகளில் இறங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • ஜெய்ப்பூர் அருகே டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே விரைவு சாலையில் 10 அடி உயரத்தில் இருந்து ஸ்லீப்பர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    • ஓட்டுநர் கவனக்குறைவாக தூங்கியதால் டிவைடரில் மோதி 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே விரைவு சாலையில் 10 அடி உயரத்தில் இருந்து ஸ்லீப்பர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரில் இருந்து ஹரித்வார் செல்லும் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்து, ஓட்டுநர் கவனக்குறைவாக தூங்கியதால் டிவைடரில் மோதி 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விபத்து ஏற்பட்டதை அறிந்து அப்பகுதியில் வசித்து வருபவர்கள்பேருந்தின் உள்ளே சிக்கியவகர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இந்த விபத்தில் அங்கிதா என்ற 19 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பேருந்துக்குள் சிக்கியிருந்த 22 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • வாலிபர் மீதும், அவருடன் சென்ற இளம்பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் இளம்ஜோடிகளின் செயலை விமர்சித்து பதிவிட்டனர்.

    சமீபகாலமாக பைக்குகளில் இளம் ஜோடிகள் சாகசங்கள் செய்வது, அத்துமீறி நடப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் ஒரு இளம்ஜோடி மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்லும் போது முத்தமழை பொழிந்தபடி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட அதன் பெட்ரோல் டேங்கில் வாலிபருக்கு எதிர் திசையில் அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் அவரை கட்டிப்பிடித்த நிலையில் பயணிக்கும் காட்சிகள் உள்ளன. அவர்களின் பின்னால் சிலர் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் நிலையில், அந்த ஜோடி எதையும் கண்டுகொள்ளாமல் கட்டிப்பிடித்த நிலையிலும், முத்தமழை பொழிந்து கொண்டே மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் சாகச காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கைத்துன் நகரை சேர்ந்த முகமது வாசிம் (வயது 25) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீதும், அவருடன் சென்ற இளம்பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் இளம்ஜோடிகளின் செயலை விமர்சித்து பதிவிட்டனர்.

    • இந்தியாவின் பல நகரங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • இந்த வருடம் 46 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியுள்ளது.

    நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் வெப்பம் குறையாத நிலையில், ஒன்றிரண்டு மாநிலங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

    ராஜஸ்தான் போன்ற மேற்கு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 46 டிகிரி செல்சியஸ் வரை இந்த வெயில் பதிவாகியுள்ளது.

    அப்படியென்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் வெயில் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். இந்த வெயிலிலும் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானெர் வெயில் மிகவும் அதிகமாக வாட்டி வதைக்கும் நகராக பார்க்கப்படுகிறது.

    அப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ஒருவர் மண்ணில் சிறிது நேரம் புதைத்து வைக்கப்பட்ட அப்பளம் எப்படி முறுமுறுவென நொறுங்கிறது என்பதை காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா ராஜஸ்தானின் பாலைவனம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதையும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கரொளலி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வாரம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்த தாய்க்கு அலறல் சத்தம் கேட்டது.

    வெளியே ஓடிவந்து பார்த்த போது , வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்ணையில் மகள் உடலில் தீக்காயங்களுடன் வலியால் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். அப்போது அந்த சிறுமி தாயிடம். சைகைகளில், இரண்டு பேர் தனக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறினாள்.

    இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி தீவைக்கப்ட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள்ளது.

     

     

    முன்னதாக கடந்த மே 14 ஆம் தேதி மருத்துவமனையில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்த காவல்துறையினர் காட்டிய புகைப்படங்களில் இருந்த ஒருவனை சிறுமி அடையாளம் காட்டியது குறிப்பிடத்தக்கது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தடயங்களை அளிக்க தீவைத்து எரிக்கப்பயிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே உடல் முழுதும் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் காட்சிகள் வெளியாகி காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கின்றன.  

    • மணமகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு வாலிபர் தப்பியோடி விடுகிறார்.
    • சம்பவம் தொடர்பாக மணமகளின் சகோதரர் போலீசில் புகார் அளிக்கிறார்.

    திருமண மேடையில் மணமகளின் முன்னாள் காதலன் மணமகனை அனைவர் முன்னிலையிலும் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜா துபே என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன் விவரம் குறித்து பார்ப்போம்...

    ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பில்வாராவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வீடியோவில், திருமண வரவேற்பு நடைபெறும் இடத்திற்கு வந்த வாலிபர் மணமக்களுக்கு பரிசு வழங்க மேடை ஏறுகிறார். அப்போது அவர் மணமகளுக்கு பரிசை வழங்கி புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார். இதையடுத்து மேடையில் இருந்து கீழே இறங்குவதற்கு முன் மணமகனுக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்லும் வாலிபர் திடீரென மணமகன் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்துகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் மணமகள் மற்றும் சுற்றி இருந்தவர்கள் வாலிபரை தடுக்க முயன்றனர். இருப்பினும் வாலிபர், மணமகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு அங்கே இருந்து தப்பியோடி விடுகிறார். இதில் மணமகன் பலத்த காயம் அடைகிறார்.

    இச்சம்பவம் தொடர்பாக மணமகளின் சகோதரர் போலீசில் புகார் அளிக்கிறார். இதன்பின் தான் போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது மணமகன் மீது தாக்குதல் நடத்தியது மணமகளின் முன்னாள் காதலன் என்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் வசித்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் மணமகள். அப்போது தான் அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் லால் பார்தி என்ற வாலிபருடன் மணமகளுக்கு பழக்கம் ஏற்படுகிறது. இது நாளடைவில் காதலாக மாறுகிறது. சில நாட்களுக்கு பிறகு இவர்களின் காதலில் ஏற்பட்ட கசப்பால் இருவரும் பிரிந்தனர். இதையடுத்தே மணமகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

    மணமகன் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் காதலரான சங்கர் லால் பார்தி மற்றும் அவருக்கு உதவியதாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயிர் காக்கும் ஊசி மருந்துக்காக 9 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது
    • இதில் பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரை அனைவரும் அடக்கம்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் போலீஸ் எஸ்.ஐ. ஆக இருந்து வருபவர் நரேஷ் ஷர்மா. இவரது 2 வயதில் ஹிருதயான்ஷ் ஷர்மா என்ற மகன் உள்ளார்.

    ஷர்மா ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (எஸ்எம்ஏ) எனப்படும் அரிய மரபணு கோளாறால் பாதிப்பு அடைந்துள்ளார். இதற்கு ஒற்றை டோஸ் மரபணு சிகிச்சை ஊசி மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். இந்த மருந்தின் விலை ரூ.17. கோடி. இது உலகின் மிக விலை உயர்ந்த மருந்துகளில் ஒன்றாகும்.

    ஷர்மா இடுப்பிற்குக் கீழே உள்ள அனைத்து உடல் செயல்பாடுகளையும் கிட்டத்தட்ட இழந்திருந்தான். ஊசி போடப்படுவதற்கு முன் அவனால் இயல்பான வாழ்க்கையை நடத்தமுடியும் என்பதை உறுதிப்படுத்தினர்.

    ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே.லோன் மருத்துவமனையில் 3 மாதத்துக்குள் ₹9 கோடி திரட்டப்பட்டு, ஹிருதயன்ஷுக்கு ஊசி போடப்பட்டது. மீதமுள்ள தொகையை ஒரு வருடத்திற்குள் 3 முறை செலுத்தவேண்டும்.

    பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரையிலான பலரது முயற்சியால் நிதி திரட்டப்பட்டது.

    பிரபல நடிகர் சோனு சூட் மற்றும் கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் ஆகியோர் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தனர். ஜெய்ப்பூரில் பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பழங்களை விற்பவர்கள் உள்பட அனைத்து இனத்தைச் சேர்ந்த தனிநபர்களும் நிதி திரட்டுவதில் பங்களித்தனர். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்கள் பிரசாரத்திற்காக நிதி திரட்ட உதவியது.

    மாநில காவல்துறை பணியாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 5 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ராஜஸ்தானில் இதுபோன்று நிதி திரட்டப்படுவது முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 பேர் மேல் சிகிச்சைக்காக பரத்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் அலிகாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து ஒன்று புறப்பட்டது. இப்பேருந்தானது உத்தரபிரதேச மாநில அரசு பேருந்தாகும். ஹலைனா மஹுவா நெடுஞ்சாலையில் பேருந்து சென்ற போது முன்னால் சென்ற டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக பரத்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் கூறுகையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினர் வந்தவுடன் பிரேதப் பரிசோதனை நடைபெறும் என்றும் கூறினர்.

    • சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கினர்.
    • இவர்களில் 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கோலிஹான் சுரங்கம் உள்ளது. நேற்று இரவு லிப்ட் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 15 பேர் சிக்கிக் கொண்டனர்.

    கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவை ஏற்றிச்சென்ற லிப்ட் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு திரும்பியபோது லிப்டின் கம்பி அறுந்து விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதல் மந்திரியும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

    இந்நிலையில், லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மற்ற 14 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×