என் மலர்tooltip icon

    இந்தியா

    ரெயில் பாலத்தில் போட்டோஷூட்: 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி - வீடியோ
    X

    ரெயில் பாலத்தில் போட்டோஷூட்: 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி - வீடியோ

    • குறுகலான ரெயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஒரு புதுமண தம்பதி ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
    • பாலத்தில் இருந்து புதுமண தம்பதி குதிக்கும் வீடியோ உறவினரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குறுகலான ரெயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஒரு புதுமண தம்பதி ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

    அப்போது ரெயில்வே தடத்தில் திடீரென ரயில் வந்ததால் பயத்தில் செய்வதறியாது 90 அடி பள்ளத்தில் கணவன் மனைவி இருவரும் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலத்தில் இருந்து புதுமண தம்பதி குதிக்கும் வீடியோ உறவினரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.

    குறைவான வேகத்தில் ரெயில் வந்து கொண்டிருந்ததால் புதுமண தம்பதியை பார்த்து உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ஆனால் ரெயில் நிற்பதற்கு முன்பாக அவர்கள் இருவரும் பாலத்தில் இருந்து குதித்துள்ளனர்.

    ரயிலை நிறுத்திய ஓட்டுநர்கள், கீழே விழுந்த ராகுல் - ஜான்வி தம்பதியை அவர்களின் நண்பர்களுடன் இணைந்து மீட்டனர். படுகாயம் அடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×