என் மலர்
மகாராஷ்டிரா
- மீட்புப்படையினர் கயிற்றை பயன்படுத்தி கீழே இறங்கி அந்த இளம் பெண்ணை மீட்டுள்ளனர்.
- இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புனேவை சேர்ந்த நஷ்ரீன் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி மூடப்பட்டதால் அருகிலிருந்த போர்ன் காட் என்ற இடத்தில் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அவர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த மீட்புப்படையினர் கயிற்றை பயன்படுத்தி கீழே இறங்கி அந்த இளம் பெண்ணை மீட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மீட்கப்பட்ட அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த மாதம் மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நான் எங்கே செல்ல வேண்டுமென்றாலும் வெளிப்படையாக செல்வேன்.
- நான் மாறுவேடத்தில் சென்றதாக கூறப்படும் செய்தி நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வருகிறது.
முன்னதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தன.
பின்னர் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்த பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து பறித்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.
பின்னர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜக- ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கூட்டணியில் இணைந்தார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பறித்துக் கொண்டார்.
தற்போது பாஜக மூத்த தலைவரான அமித் ஷாவை அஜித் பவார் மாறுவேடமிட்டு டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி அமைப்பது குறித்து பேசினார் என்ற செய்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த செய்தி மீதான நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது:-
நான் மாஸ்க் அணிந்து தொப்பியுடன் விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ததாகவும், என்னுடைய பெயரை மாற்றி பயணம் செய்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
நான் ஜனநாயகத்தில் பணியாற்றி வருபவன். எதையும் மறைத்து அரசியல் செய்கின்ற பழக்கம் எனக்கு இல்லை. இருப்பினும், போலியான கதைகள் மற்றும் தவறான செய்திகள் மூலம் எதிரிகளால் அவதூறுக்கு ஆளாகிறோம்.
மாறுவேடத்தில் நான் டெல்லிக்கு சென்றதாக கூறப்படும் செய்தி தவறானது. நான் எங்கே செல்ல வேண்டுமென்றாலும் வெளிப்படையாக செல்வேன். யாரையும் பற்றி கவலைப்பட வேண்டிய தேவை எனக்கு இல்லை. நான் மாறுவேடத்தில் சென்றதாக கூறப்படும் செய்தி நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்.
அதேவேளையில் இந்த செய்தி தவறானது என கண்டுபிடிக்கப்பட்டால் எந்தவித ஆதாரம் அல்லது உண்மையில்லாமல் குற்றச்சாட்டு உருவாக்கினார்களோ?, அவர்கள் அரசியலில் இருந்து விலக வேண்டும்.
இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவது நான் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எல்லோரும் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள், எனவே, அத்தகைய சம்பவம் சாத்தியமற்றது. தற்போது நடப்பது அனைத்தும் தவறு. இந்த அறிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
தற்போது, மாநிலத்தில் எனக்கு எதிராக அவதூறு பரப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது. பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
- விலைகள் உணவகங்கள் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது.
- இந்த பதிவு வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணவுகளை ஆன்லைன் செயலிகள் மூலம் ஆர்டர் செய்து இருக்கும் இடத்திற்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்பவர்கள் உணவுகளின் விலையை கண்டுகொள்வதில்லை.
ஆனால் ஓட்டல்களில் உணவு வகைகளுக்கு இருக்கும் விலையை விட ஆன்லைன் செயலிகள் மூலம் அந்த உணவு வகைகளை ஆர்டர் செய்யும் போது அவற்றின் விலை சுமார் 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கிறது.
இதுதொடர்பாக அபிஷேக் கோத்தாரி என்ற பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், சொமோட்டோ மூலம் உப்புமா ஆர்டர் செய்த போது அதன் விலை ரூ.120 என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று மெனுவில் உள்ள உப்புமா விலையை பார்த்த போது ரூ.40 ஆக இருந்தது.
இதேபோல ஓட்டலில் தட்டு இட்லி விலை ரூ.60 என இருந்தது. ஆனால் ஆன்லைன் செயலியில் தட்டு இட்லி விலை ரூ.160 என காட்டியது. இதைப்பற்றிய பில்லுடன் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், அவரது பதிவு வைரலானது.
இதையடுத்து சொமோட்டோ நிறுவனம், அபிஷேக்கிற்கு அளித்த பதிலில், `எங்கள் செயலியில் உள்ள விலைகள் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். அதே நேரம் பயனர்கள் பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் அவரது பதிவு வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- காலை முதலே தானே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- விளம்பரப் பலகை பெயர்ந்து விழும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையமானது அங்குள்ள பகுதிகளுக்குச் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் காலை முதலே தானே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்யாண் நகரில் உள்ள சஹாஜானந்த் சவுக் [Sahajanand Chowk] பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்த விளம்பரப் பலகையானது பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.
மேலும் பலகைக்குக் கீழ் யாரேனும் சிக்கியுள்ளனரா என்ற தெரியாத நிலையில் விபத்து நடத்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். இதற்கிடையில், விளம்பரப் பலகை பெயர்ந்து விழும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் மும்பையில் ராட்சத விளம்பரப் பலகை விழுந்து பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.
- இதில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
மும்பை:
பிரான்சின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவின் இறுதிப்போட்டி இன்று மதியம் நடந்தது.
இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர்.
இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். ஸ்வப்னில் குசாலே 451.4 புள்ளிகள் பெற்றார்.
சீன வீரர் யுகுன் லியு 463.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் செர்கிய் குலிஷ் 461.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த பதக்கத்துடன் இந்தியா 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இந்த மூன்று பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் போட்டி மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
குசாலேவுடன் குடும்பத்திரை போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- ஆலோசனை கூட்டம் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.
- நீண்ட நேர ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியினரும், தங்களது விருப்பங்களை கோரிக்கையாக முன்வைத்தன. இது தொடர்பாக நீண்ட நேர ஆலோசனை நடைபெற்றதாகவும், அப்போது சலசலப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது அணிக்காக சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அப்போது, அணியில் அதிகபட்சம் ஏழு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இவர்களில் இந்திய வீரர்கள், உள்ளூர் வீரர்கள், சர்வதேச வீரர்கள் என எந்த கட்டுப்பாடும் இருக்க கூடாது.
ஏலத்தின் போது வீரர்களை தக்க வைத்துக் கொள்வது தொடர்பாக வீரர்களுடன் ஆலோசிக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும் என்பது போன்றவற்றை வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- தனது தோழியை கிண்டல் செய்ய போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
- மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் 24 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியை கிண்டல் செய்ய மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
இந்த போலியான கணக்கு மூலம் தனது தோழியிடம் பேசி விளையாடியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பேசிய மனிஷ் மீது அப்பெண் காதல் வயப்பட்டுள்ளார்.
காதல் ஏற்பட்ட பிறகு அப்பெண் அந்த நபரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அவளது தோழி 'சிவம் பாட்டீல்' என்ற மற்றொரு போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
அந்த போலியான கணக்கில் நான் தான் மனிஷின் அப்பா என்று கூறி, அவள் காதலித்த மனிஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக அவளது தோழியிடம் தெரிவித்துள்ளார்.
கற்பனையான அவளது காதலன் இறந்த துக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் ஜூன் 12 ஆம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்த பெண்ணின் மொபைல்போனில் இந்த இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை பார்த்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான அவளது தோழியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசனை
- ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரான ஷாருக்கானுக்கும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை ரீ-டெய்ன் செய்யலாம் என்ற விவாதத்தில் மிக குறைவான வீரர்களையே ரீ-டெய்ன் செய்யவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்த கருத்தால் ஷாருக்கானுக்கு அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், டெல்லி கேபிடல் அணி உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படலே ஆகியோர் கலந்து கொன்றனர்.
மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- ஆடு மேய்க்கும் நபர் காட்டுக்குள் பெண்ணின் அழுகுரலை கேட்டு அங்கு சென்று பார்த்ததில் பெண் மரத்துடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
- வரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் தமிழக முகவரியுடைய கொண்ட ஆதார் கார்டு கண்டெடுக்கப்பட்டது
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் [Sindhudurg] மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை சோனுருளி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் நபர் காட்டுக்குள் பெண்ணின் அழுகுரலை கேட்டு அங்கு சென்று பார்த்ததில் பெண் மரத்துடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த போலீஸ் நடத்திய சோதனையில் பெண்ணின் உடைமைகளை சோதித்ததில் அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் தமிழக முகவரியுடைய கொண்ட ஆதார் கார்டு, மருந்து மாத்திரை பரிந்துரைச் சீட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் மீட்கப்பட்டு அருகில் இருந்த கொங்கன் பகுதியில் உள்ள சவாந்வேதி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவரது மனம் மற்றும் உடல் நிலைமை மிகவும் மோசமானதாக இருந்ததால் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் இப்போது நலமாக உள்ளதாகவும், மன ரீதியான பிரச்சனைக்கு அவர் ஆளாகியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டில் அவரது பெயர் லலிதா காயி [Lalita Kayi] என்று உள்ளது. அவரது விசாவும் முடிவடையுள்ளது.
காட்டில் பலநாள் பசியுடன் கடும் மழையில் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்ததால் அவரிடம் உடல் நிலை கருதி மேலதிக தகவல்களைப் பெற முடியவில்லை. இந்நிலையில் அவரது ஆதார் கார்டில் உள்ள முகவரியைத் தேடி போலீஸ் குழு ஒன்று தமிழ்நாடு விரைந்துள்ளது.
- நிர்வாணமாக நடுத்தர வயது பெண்ணும் ஆணும் வாக்குவாதம் செய்தபடி நடந்து வந்துள்ளனர்.
- அவர்களை ஞாயிற்றுக்கிழமை காலையில் தேடிப்பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் நிர்வாணமாக நடந்துசென்ற தம்பதிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாக்பூரின் லக்ஷ்மிநகர் சதுக்கதில் உள்ள சாலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு ஆடைகளேதுமின்றி நிர்வாணமாக நடுத்தர வயது பெண்ணும் ஆணும் வாக்குவாதம் செய்தபடி நடந்து வந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவ்வழியில் மோட்டார் வாகனத்தில் சென்ற இருவர், அவர்களைப் படம் பிடித்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். சமீப காலமாகவே நாக்பூரில், தரம்பேட் [Dharampeth], சாதர்[Sadar], பஜாஜ் நகர் [Bajaj Nagar] என பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது.
தற்போது சனிக்கிழமை இரவு நடந்த சம்பவத்தை அடுத்து அவர்களை ஞாயிற்றுக்கிழமை காலையில் தேடிப்பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடந்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களின் குடும்பத்தாரிடம் அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
- விவாகரத்தான மற்றும் கணவரை இழந்த பெண்களை குறிவைத்து திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
- பணம், லேப்டாப் போன்ற பொருட்களை திருடிச் செல்வதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து விலைமதிப்புள்ள பெருட்களை கெள்ளையடித்த 43 வயது நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2015 முதல் 20 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பாக கடந்தாண்டு பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரோஸ் நியாஸ் ஷேக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர் மேட்ரிமோனி இணையதளத்தில் புகார் கொடுத்த பெண்ணிடம் பேசி பழகி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்ணிடம் இருந்துரோ.6.5 லட்சம் மதிப்புள்ள ரொக்க பணம், மடிக்கணினி உள்ளிட்ட மதிப்புமிக்க சில பொருட்களை அவர் சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மடிக்கணினி, மொபைல் போன்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் நகைகளை போலீசார் மீட்டனர்.
2015 முதல் விவாகரத்தான மற்றும் கணவரை இழந்த பெண்களை குறிவைத்து மேட்ரிமோனியில் பேசி பழகி திருமணம் செய்து அவர்களின் பணம், லேப்டாப் போன்ற பொருட்களை திருடிச் செல்வதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- ஆசம் ஷேக்கின் ரெயில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- இதனை அடுத்து ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர்.
ஓடும் லோக்கல் ரெயிலில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து வைரலான மும்பையை சேர்ந்த ஃபர்ஹத் ஆசம் ஷேக் என்ற இளைஞர் இதே போன்று மீண்டும் ஸ்டண்ட் செய்த போது நடந்த விபத்தில் தனது ஒரு கை மற்றும் காலை இழந்துள்ளார்.
இம்மாத துவக்கத்தில் ஆசம் ஷேக்கின் ரெயில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை அடுத்து ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர்.
அப்போதுதான் ஏப்ரல் 14 அன்று மஸ்ஜித் ரயில் நிலையத்தில் ஸ்டண்ட் செய்ய முயற்சித்த போது ஷேக் தனது ஒரு கை மற்றும் காலை இழந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஜூலை 14 ஆம் தேதி வைரலான அந்த வீடியோ இந்தாண்டு மார்ச் 7 ஆம் தேதி செவ்ரி ரெயில் நிலையத்தில் தனது நண்பரால் பதிவு செய்யப்பட்டது என்று ஷேக் அதிகாரிகளிடம் கூறினார். இந்த ஸ்டண்ட் பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை ரெயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில், ஷேக் அவரது கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். யாரும் நான் செய்தது போல ஸ்டண்ட் செயல்களை செய்யவேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இத்தகைய செயல்கள் இது சட்டவிரோதமானது மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தானது என்று அவர் கூறினார்.






