வேறு பெண்ணுடன் தொடர்பு- விவாகரத்து கேட்ட மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்

தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
வேறு பெண்ணுடன் தொடர்பு- விவாகரத்து கேட்ட மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்
Published on

வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்து விவாகரத்து கேட்ட மனைவியின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட அந்த பெண், கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கடந்த 3 மாதங்களாக தாயுடன் வசித்து வந்தார். கணவர் வேலையில்லாதவர் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதையும் அப்பெண் கண்டுபிடித்தாள்.

அப்பெண் தாய் வீட்டில் இருந்த போது, நேற்று முன்தினம் அங்கு வந்த அந்த நபர் மனைவி மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com