என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் நடந்தது.
    • இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    மும்பை:

    இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய ஐ.பி.எல். போன்ற தொடரை உருவாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குறிப்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதிலாக இந்தியாவிலேயே விளையாட விரும்புகின்றனர். அதை பி.சி.சி.ஐ.யிடம் முன்னாள் வீரர்கள் சேர்ந்து கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

    இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பி.சி.சி.ஐ. வருங்காலத்தில் முன்னாள் வீரர்களுக்கென ஐ.பி.எல். தொடரை நடத்த பரிசீலிக்க உள்ளது.

    இதுகுறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறுகையில், முன்னாள் வீரர்கள் வைத்துள்ள கோரிக்கை தற்போது முன்மொழிவு கட்டத்தில் உள்ளது. இந்த வருடம் அதை நடத்த வாய்ப்பில்லை. அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற மற்றும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காத வீரர்கள் அந்த லீக்கில் இடம்பெறுவார்கள் என தெரிவித்தார்.

    • நேற்றைவிட இன்று 692.89 புள்ளிகள் குறைந்து 78,956.03 வர்த்தகம் நிறைவடைந்தது.
    • 208 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 24139 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.85 சதவீதம் குறைவாகும்.

    அதானி குழுமம்- செபி தலைவர் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்), இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) நேற்று கடும் சரிவை சந்திக்கும் என வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தினர்.

    ஆனால் நேற்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை வர்த்தகம் பின்னர் உயர்ந்து காணப்பட்டது. இறுதியாக மிகப்பெரிய அளவில் இல்லாமல் சற்று சரிவுடன் முடிவடைந்தது.

    ஆனால் இன்று இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 208 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை நேற்று சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து 79,552.51 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது.

    அதிகபட்சமாக 79,692.55 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. குறைந்தபட்சமாக 78,889.38 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நேற்றைவிட இன்று 692.89 புள்ளிகள் குறைந்து 78,956.03 வர்த்தகம் நிறைவடைந்தது. இது சுமார் 0.87 சதவீதம் குறைவாகும்.

    இந்திய பங்குச் சந்தை நி.ஃப்டி நேற்று 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 5 புள்ளிகள் குறைந்த 24,342.35 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக நிஃப்டி 24,539.95 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 24116.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    இறுதியாக 208 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 24139 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.85 சதவீதம் குறைவாகும்.

    இன்று ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு 3.26 சதவீதம் (54.20) குறைந்து 1,605.90 ரூபாயாக உள்ளது. டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், ஜேஎஸ்எடபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன.

    டைட்டன், ஹெச்.சி.எல். டெக், நெஸ்லே, சன் பார்மா, ரிலையன்ஸ், மஹிந்த்ரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டது.

    • நண்பர்களான சைஃப் அலி ,சக்கன் அலி மும்பையில் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
    • மது அருந்துவதற்காக நண்பர்கள் இருவரும் ஆட்டோவில் சென்றுள்ளனர்.

    ஆட்டோ கட்டணத்தை யார் செலுத்துவது என்ற சண்டையில் நண்பரை கொலை செய்த சைஃப் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சைஃப் அலி மற்றும் சக்கன் அலி அண்மையில் மும்பைக்கு குடிபெயர்ந்து ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் மது அருந்துவதற்காக நண்பர்கள் இருவரும் ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது ஆட்டொ கட்டணம் 30 ரூபாயை யார் கொடுப்பது என்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த வாக்குவாதம் கைகலப்பாகி சக்கனை சைஃப் கீழே தள்ளியுள்ளார். அப்போது தலையில் அடிபட்டு சக்கன் அலி உயிரிழந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சைஃப் அலியை கைது செய்தனர்.

    • அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 46.65 ரூபாய் குறைந்து 3,140.90 ரூபாயாக உள்ளது.
    • அதானி போர்ட் பங்கு இன்று 35.80 ரூபாய் குறைந்து 1,498 ரூபாயாக உள்ளது.

    அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர் என்று ஹிண்டர்பர்க் நேற்றுமுன்தினம் கூறியிருந்தது.

    இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும். முதலீட்டார்கள் லட்சக்கணக்கான கோடிகளை இழக்கும் அபாயும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்திருந்தது.

    இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளுடன் ஆரம்பானது. அப்போது சுமார் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமானது. அதன்பின் மெல்லமெல்ல வர்த்தகம் உயர்வை கண்டது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,106.18 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக 3.30 மணிக்கு வர்த்தகம் சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை நிறைவடைந்ததை வர்த்தகம் 56.99 சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது.

    இந்திய பங்குச்சந்தை நிஃப்டி வெள்ளிக்கிழமை 24,367.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு 24,320.05 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. சுமார் 47 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் இன்று அதிகபட்சமாக 105 புள்ளிகள் அதிகரித்து 24,472.80 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக நிஃப்டி 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்ததை விட 20.50 சதவீதம் குறைவாகும்.

    அதானியின் டோட்டல் கியாஸ் லிமிடெட் பங்கு 3.95 சதவீதம் குறைந்த 835.50 ரூபாயாக இருந்தது. இன்று 34.35 ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.

    அதானி எனர்ஜி பங்கு 3.25 சதவீதம் குறைந்து 1067.90 ரூபாயாக உள்ளது. இன்று 35.90 ரூபாய் குறைந்துள்ளது. என்டிடிவி பங்கு 2.32 சதவீதம் குறைந்த 203.50 ரூபாயாக உள்ளது. 4.83 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி பவர் பங்கு 1.24 சதவீதம் குறைந்த 687 ரூபாய் உடன் நிறைவடைந்தது. இன்று 8.40 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி வில்மர் லிமிடெட் பங்கு 4.10 சதவீதம் குறைந்து 369.35 ரூபாயுடன் நிறைவடைந்தது. இன்று 15.80 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 1.46 சதவீதம் குறைந்து 3,140.90 ரூபாய் உடன் உள்ளது. இன்று 46.65 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி போர்ட் பங்கு இன்று 2.33 சதவீதம் குறைந்துள்ளது. 1,498 ரூபாயாக உள்ளது. இன்று 35.80 ரூபாய் குறைந்துள்ளது.

    • நவநிர்மாண் சேனாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கோஷம்.
    • தாக்குதலுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை.

    மராட்டியத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும், அவரது உறவினரும் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரேக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் பீட் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவின் பாதுகாப்பு வாகனம் மீது உத்தவ் தாக்கரே கட்சியினர் பாக்குகளை (குட்கா) வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்தனர்.

    மராத்தா இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய ராஜ் தாக்கரேயை கண்டிக்கும் வகையில் அவரது பாதுகாப்பு வாகனம் மீது பாக்குகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தானேயில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார். தானே கட்காரி ரங்கயாதன் பகுதியில் அவரது கார் வந்தபோது, அங்கு கூடியிருந்த நவநிர்மாண் சேனாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் உத்தவ் தாக்கரே சென்ற கார் மீது தேங்காய், வளையல், தக்காளி, மாட்டு சாணம் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால் அவரது கார் அதற்குள் சென்றுவிட்டது. பின்னால் வந்த அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது அவை விழுந்து சேதமடைந்தது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் நவநிர்மாண் சேனாவினரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    ராஜ் தாக்கரே பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உத்தவ் தாக்கரேவின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட நவநிர்மாண் சேனா கட்சியினர் தெரிவித்தனர்.

    முன்னதாக ராஜ் தாக்கரே பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என உத்தவ் தாக்கரே கட்சி விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிப்பு.
    • 9வது முறைாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.

    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கியது. இன்று இந்த கூட்டம் முடவடியை உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. இதில் பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5% ஆக தொடரும். 9 ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வட்டி விகிதம் குறைக்காமல் இருப்பதற்கு நாணய கொள்கை குழுவில் நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இரண்டு உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

    பெரும்பான்மை கருதி, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக வீடு, வாகன கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. வங்கிகளின் குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. இதனால் கடன் வாங்கியவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    கடந்த 2023 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி 6.5 சதவீதமாக நீடிக்கிறது. அமெரிக்க பொருளாதாக சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

    • உத்தவ் தாக்கரே டெல்லி சென்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார்.
    • மகாராஷ்டிர மாநில முதல்வராக காங்கிரசிடம் ஆதரவு கோரும் நோக்கத்தில் சென்றதாக பாஜக புகார்.

    சிவசேனா (UBT) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவை உறுதி செய்வதற்காக டெல்லி சென்றதாக பாஜக எம்எல்ஏ ஆஷிஷ் ஷெலார் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக ஆஷிஷ் ஷெலார் கூறியதாவது:-

    உத்தவ் தாக்கரே பாதிக்கப்பட்ட பெண்கள், விவசாயிகள் அல்லது மகாராஷ்டிரா இளைஞர்களின் பிரச்சனையை வெளிப்படுத்துவதற்காக டெல்லி செல்லவில்லை. மீண்டும் முதல்வராக பதவி ஏற்க விரும்பும் (அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது) உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கட்சியின் ஆதரவை வேண்டி டெல்லி சென்றுள்ளார்.

    இவ்வாறு ஆஷிஷ் ஷெலார் தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் சிவசேனா (UBT), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (SP) ஆகிய கட்சிகளின் மகா விகா அகாதி 48 இடங்களில் 31 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நேற்று உத்தவ் தாக்கரே டெல்லி சென்றுள்ளார். அவர் இந்தியா கூட்டணியின் தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வரவிருக்கும் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "மகாராஷ்டிர மாநில முதல்வர்கள் (பாஜக மற்றும் சிவசேனா) டெல்லி செல்வதை உத்தவ் தாக்கரே எப்போதும் விமர்சனம் செய்வார். ஆனால் அவர்களுடைய (உத்தவ் தாக்கரே கட்சி) பலவீனத்தை அவர்கள் நிராகரிப்பார்கள். கனமழை காரணமாக சேதம் அடைந்த பயிர்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு உதவி கேட்பதற்காக டெல்லி செல்லவில்லை. வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்காக செல்லவில்லை. மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக கூட அவர் குரல் எழுப்பவில்லை" என்றார்.

    பாஜக உடன் மோதல் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநில முதல்வராக பதவி ஏற்றார்.

    • தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது.
    • வியாபாரத்தில் அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உதவி செய்கிறார்கள்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த 5 ரூபாய் டீ வியாபாரி ஒருவர் தனது புதுமையான அணுகுமுறையால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தாராஷிவ் பகுதியை சேர்ந்தவர் மகாதேவ் நானாமாலி. 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கடந்த 20 ஆண்டுகளாக டீ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமான தள்ளுவண்டியில் டீ வியாபாரம் செய்பவராக அல்லாமல் இவர் தனது கிராமத்தை சுற்றி வசிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தொலைபேசி மூலம் ஆர்டர்களை எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் வழங்குகிறார்.

    இதனால் தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உதவி செய்கிறார்கள். தினமும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு சென்று டீ வியாபாரம் செய்யும் இவர் நாள்தோறும் 2 ஆயிரம் கப் டீ வரை விற்பனை செய்கிறார். இதன் மூலம் தினசரி வருமானமாக ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கிடைப்பதால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இவரை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சிறுத்தை 3 குட்டிகளை ஈன்று இருந்தது தெரிய வந்தது.
    • வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டு பராமரித்து வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் மாவட்டம், நாக்பித் அடுத்த பாலாபூரில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. அப்போது 6 பேரை தாக்கி கடித்து குதறியது. சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். பல கால்நடைகளை கடித்துக் கொன்றது.

    இந்த நிலையில் நேற்று காலை பாலாப்பூரில் உள்ள விவசாயி டிம்தேவ் சலோட் என்பவரின் மாட்டு கொட்டகையில் இருந்து சிறுத்தை வெளியே செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    பின்னர் மாட்டு கொட்டகைக்குள் சென்று பார்த்தபோது அங்கு சிறுத்தை 3 குட்டிகளை ஈன்று இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை குட்டிகளை மீட்டு எடுத்துச் சென்று பராமரித்து வருகின்றனர்.

    • மார்ட்டின் படத்தின் டீசர் 97 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.
    • மார்ட்டின் திரைப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மார்ட்டின் படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை அர்ஜூன் எழுதியுள்ளார்.

    கடந்தாண்டு வெளியான மார்ட்டின் படத்தின் டீசர் 97 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    மார்ட்டின் திரைப்படம் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்துடன் போட்டியா என்று கேள்வி கேட்க பட்டது. இதற்கு பதில் அளித்த துருவா சார்ஜா, மார்ட்டின் திரைப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கங்குவா திரைப்படத்தை 10 ஆம் தேதி பாருங்கள். என் படத்தை 11 ஆம் தேதி பாருங்கள் என்றார்.

    இந்த நிகழ்வில் துருவ சார்ஜாவிடம் பாலிவுட்டில் எந்த நடிகர் பிடிக்கும் என்று கேள்வி கேட்க பட்டது. இதற்கு பதில் அளித்த துருவ சார்ஜா, பாலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர் சஞ்சய் தத் என்று கூறினார்.

    மேலும் மார்ட்டின் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கேடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். இதில் சஞ்சய் தத் என்னுடன் நடித்துள்ளார். சிறந்த நடிகருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி என்றார்.

    அதுபோல், தெலுங்கில் எந்த நடிகர் பிடிக்கும் என்ற கேள்விக்கு ஜூனியர் என்.டி.ஆர். எனக்கு பிடிக்கும் என்று பதில் அளித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வைரலான வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்தது.
    • வீடியோவை பார்த்த பலரும் தனுமிதாவின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காக இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனங்களை சந்திக்கிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த தனுமிதா என்ற பெண் தெருக்களில் 'டவல்' மட்டும் கட்டிக்கொண்டு நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    பின்னணியில் தௌபா... தௌபா பாடல் ஒலிக்க தனுமிதா டவல் அணிந்தவாறு நடந்து செல்கிறார். பொது இடத்தில் இவ்வாறு நடந்து சென்ற அவரை பஸ் நிறுத்தத்தில் நின்ற பயணிகள், பாதசாரிகள் என பலரும் பார்த்து திகைத்தனர். பின்னர் அவர் திடீரென தனது டவலை எடுத்து வீசினார். அப்போது அவர் ஆடை அணிந்திருந்தது தெரிய வந்தது.

    இன்ஸ்டாகிராமில் வைரலான இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்தது. வீடியோவை பார்த்த பலரும் தனுமிதாவின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். பல பயனர்கள், அவரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    • மீட்புப்படையினர் கயிற்றை பயன்படுத்தி கீழே இறங்கி அந்த இளம் பெண்ணை மீட்டுள்ளனர்.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    புனேவை சேர்ந்த நஷ்ரீன் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி மூடப்பட்டதால் அருகிலிருந்த போர்ன் காட் என்ற இடத்தில் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

    அப்போது அவர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அங்கு விரைந்த மீட்புப்படையினர் கயிற்றை பயன்படுத்தி கீழே இறங்கி அந்த இளம் பெண்ணை மீட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மீட்கப்பட்ட அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடந்த மாதம் மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×