என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலீல் அங்கோலா"

    • முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் தாயார் சடலமாக மீட்கப்பட்டார்.
    • அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் டெக்கான் ஜிம்கானா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகருமான சலீல் அங்கோலாவின் தாயார் மாலா அசோக் அங்கோலா (77) வசித்து வந்தார்.

    இந்நிலையில், இந்தக் குடியிருப்பில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். நேற்று அவரது பணிப்பெண் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கதவைத் திறந்து அவரது உடலை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார்.

    சலீல் அங்கோலா இந்திய அணிக்காக 1989 முதல் 1997-ம் ஆண்டு வரை ஒரு டெஸ்ட் மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×