search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air Hostess"

    • டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார்.
    • இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி. டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை சாம்பியன்ஸ் டிராபி வாங்கி கொடுத்துள்ளார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் முழங்கால் வலியுடன் விளையாடினார். தொடர் முடிந்த பிறகு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு ஓய்விற்காக ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு ஓய்வில் இருந்து வந்தார்.


    டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டோனி, தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.இதற்காக டோனி தனது மனைவி சாக்ஷியுடன் சென்னை வந்த வீடியோ அப்போது வெளியானது.

    இந்நிலையில் டோனி அதே ஹேர்ஸ்டைல் மற்றும் அதே காஸ்ட்யூம் உடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டோனி விமானத்தில் தூங்கியபடி வருகிறார். அருகில் அவரது மனைவி சாக்ஷி அமர்ந்திருக்கிறார்.

    இதனை விமானப்பணிப்பெண் வீடியோவாக தனது மொபையில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமான பணிப்பெண் கொடுத்த ரியாக்ஷன் குயிட்டாக இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    தீம்பார்க்கில் விமானப் பணிப்பெண் பலியான சம்பவம் குறித்து அவரது குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 20 வயதான விமான பணிப்பெண் பூந்தமல்லியில் உள்ள பொழுதுபோக்கு மையத்திற்கு தனது நண்பர்களுடன் சென்றார்.

    அப்போது ‘‘ஆக்டோபஸ்’’ என்ற விளையாட்டு சாதனத்தில் ‘ரைடு’ செல்லும்போது படுகாயம் அடைந்து உயிர் இழந்தார். இந்த சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி நடந்தது.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் உயிரிழந்த விமான பணிப்பெண் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். மாநில குறைதீர் ஆணையத்தின் உறுப்பினர் கே.பாஸ்கரன், இந்த வழக்கினை விசாரித்தார். உயிரிழந்த விமான பணிப்பெண் இளம் வயது உடையவர் என்பதாலும், வருவாய் ஈட்டக் கூடியவராக இருந்ததாலும் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.65 லட்சம் வழங்க பொழுதுபோக்கு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

    அவரது இறுதி சடங்கு செலவிற்கு ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரமும் வழங்கவேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளார். ஏற்கனவே ஐகோர்ட்டு மூலம் ரூ.25 லட்சம் பெறப்பட்டதால் மீதமுள்ள ரூ.40 லட்சம் நஷ்ட ஈடு தொகையினை வழக்கு உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற 4 வாரதுக்குள் செலுத்த வேண்டும். அப்படி கட்டத்தவறினால் 12 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளார்.

    இந்த வழக்கில் விமான பணிப்பெண் குடும்பம் சார்பாக வக்கீல் வாசுகி ராமன் ஆஜராகி வாதிட்டார். #tamilnews
    பாலியல் புகாருக்கு உள்ளான அதிகாரி, பொது மேலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. #AirIndia #AirHostess
    மும்பை:

    பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவில் பொது மேலாளராக (தலைமையகம்) பணியாற்றும் ஒரு உயர் அதிகாரி, தனக்கு 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக விமான பணிப்பெண் ஒருவர், கடந்த மே மாதம் குற்றம் சாட்டினார்.

    மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார். மத்திய பெண்கள் நலத்துறை மந்திரி மேனகா காந்தியை நேரில் சந்தித்து முறையிட்டார். அவரது புகார் பற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாலியல் புகாருக்கு உள்ளான அதிகாரி, பொது மேலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அவர் ஏற்கனவே மூத்த விமானியாக இருந்ததால், விமானி பொறுப்புக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறினார். 
    ஏர் இந்தியா விமான பணிப்பெண்ணுக்கு மூத்த அதிகாரி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்ட புகார் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மந்திரி உத்தரவிட்டுள்ளார். #AirIndiaHostess #AirIndiaExecutiveHarassment
    புதுடெல்லி:

    தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் விமான பணிப்பெண் ஒருவர் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தன்னை 6 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நடுநிலையான விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    ‘பெண்களை வேட்டையாடும் அந்த அதிகாரி தன்னுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துக்கொள்ளும்படி என்னிடம் வலியுறுத்தினார். நான் மறுப்பு தெரிவித்ததால் என்னை பல வழிகளில் தொந்தரவு செய்தார். என்னை அவமதித்ததுடன், எனக்கான சலுகைகளையும் வழங்க மறுத்துவிட்டார்.

    கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பாக புகார் அளித்தேன். விமான நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருக்கும் கடிதம் எழுதினேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விமான நிறுவனத்தின் மகளிர் பாதுகாப்பு பிரிவும் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தவில்லை. கம்பெனி சார்பில் அமைக்கப்பட்ட குழு சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை’ என்று அந்த பணிப்பெண் கூறியிருந்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு விமான போக்குவரத்து துறை மந்திரி பதில் அனுப்பி உள்ளார். அதில், புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணும்படி ஏர் இந்தியா தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரிடம் கூறியிருப்பதாகவும், தேவைப்பட்டால் மற்றொரு குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். #AirIndiaHostess #AirIndiaExecutiveHarassment

    ×