என் மலர்
இந்தியா

18-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி: நாளை பிரதமர் மோடி விடுவிக்கிறார்
- இதுவரை 17 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
- விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
நாடு முழுவதும் பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி 3 கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், இந்த திட்டத்தின் 18-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியை நாளை (சனிக்கிழமை) மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விடுவிக்கிறார்.
இதன் மூலம், 9.4 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிதி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
Next Story






