என் மலர்
மகாராஷ்டிரா
- ஒரு தாயும், அவரது மகளும் கைப்பை வாங்குவதற்காக ஒரு கடைக்கு செல்கிறார்கள்.
- சில பயனர்கள், தனது ஆடம்பரத்தை காட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகைக்கு கைப்பை வாங்குகிறார்கள் என பதிவிட்டனர்.
மும்பை:
சில பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது தாங்கள் கொண்டு செல்லும் கைப்பைகள் கூட தங்களின் ஆடையின் நிறத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். சில பெண்கள் இதற்காக அதிக விலை கொண்ட மற்றும் பெரிய நிறுவனங்களின் கைப்பைகளையும் விரும்பி வாங்குகிறார்கள்.
அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஒரு இளம்பெண் லிப்ஸ்டிக் எடுத்து செல்வதற்காக ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பையை வாங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ஒரு தாயும், அவரது மகளும் கைப்பை வாங்குவதற்காக ஒரு கடைக்கு செல்கிறார்கள். அங்கு கடை உரிமையாளர் அவர்களிடம் பிரபல ஹெர்ம்ஸ் கெல்லி நிறுவனத்தின் வெள்ளை, கருப்பு, பழுப்பு மற்றும் நீல நிறங்களில் பல பைகளை காட்டுகிறார். ஒவ்வொன்றையும் பற்றி தாயும், மகளும் விளக்கமாக கேட்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் ஒரு பெரிய பையை தேர்வு செய்ய தனது மகளிடம் தாய் பரிந்துரைக்கிறார்.
அப்போது அவரது மகள் ரூ.27 லட்சம் மதிப்புள்ள சிறிய அளவிலான ஒரு பையை தேர்வு செய்து தனது விருப்பத்தை தாயிடம் வெளிப்படுத்துகிறார். மேலும் வரவிருக்கும் தேனிலவின் போது தனது லிப்ஸ்டிக்கை எடுத்து செல்வதற்கு இந்த பை கச்சிதமாக இருப்பதாகவும், ஸ்டைலாக உள்ளதாகவும் அவர் கூறியதோடு வெள்ளை நிற பையை அவர் தேர்ந்தெடுப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சில பயனர்கள், தனது ஆடம்பரத்தை காட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகைக்கு கைப்பை வாங்குகிறார்கள் என பதிவிட்டனர். ஒரு பயனர், நான் பல ஆண்டுகளாக ஹெர்ம்ஸ் பர்கினை பார்த்து வருகிறேன். ஆனால் இது எனது பட்ஜெட்டில் இல்லை என பதிவிட்டார்.
- விமான பணிப்பெண்கள் அறிவிப்பு வெளியிடுவதை போல பயணிகள் ரெயிலில் திருநங்கை ஒருவர் அறிவிப்புகளை வழங்குகிறார்.
- வீடியோ 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
மும்பையில் பயணிகள் ரெயில்களை தினமும் பல லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் ரெயிலில், விமான பணிப்பெண் போல திருநங்கை ஒருவர் அறிவிப்புகளை வெளியிடும் நகைச்சுவையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேவி வகேலா என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், விமான பணிப்பெண்கள் அறிவிப்பு வெளியிடுவதை போல பயணிகள் ரெயிலில் திருநங்கை ஒருவர் அறிவிப்புகளை வழங்குகிறார். அவர், 'ஹலோ.. எங்கள் ரெயில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினசுக்கு வர உள்ளது. உங்கள் சீட் பெல்ட்டை அவிழ்த்துவிட்டு கீழே இறங்குங்கள்' என கூறுகிறார்.
இந்த வீடியோ 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. ஒரு பயனர், பல முகங்களில் புன்னகையை வரவழைத்ததற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பது இனிமையானது என பதிவிட்டுள்ளார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் பாட்னா பைரேட்ஸ் அணி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.
நேற்று நடந்த பிளே ஆப் ஆட்டங்களில் உ.பி.யோதாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று நடந்த 2வது அரையிறுதியில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பாட்னா அணி 32-28 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் உ.பி.யோதாஸ் அணி தோற்று வெளியேறியது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.
நேற்று நடந்த பிளே ஆப் ஆட்டங்களில் உ.பி.யோதாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.யோதாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அரியானா அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- நண்பகலில் வீட்டின் வெளியே விளையாடிகொணிடிருந்தனர்.
- மாநிலந்தை விட்டு தப்பியோட கிளம்பிக்கொண்டிருந்த அஜய் தாஸை போலீஸ் குழு கைது செய்தது.
மாகாராஷ்டிராவில் இரண்டு சிறுமிகளை கடத்தி கொலை செய்த 54 வயது நபரை புனே போலீசார் கைது செய்துள்ளனர்
புனேவின் ராஜ்குருநகர் பகுதயில் கூலித் தொழிலாளியின் மகள்களான 10 வயது மற்றும் 8 வயது சிறுமிகள் நேற்று முன் தினம் [புதன்கிழமை] நண்பகலில் வீட்டின் வெளியே விளைய்டிகொண்டிருந்தனர். அப்போது அதே வீட்டின் முதல் மாடியில் தங்கியிருந்த 54 வயதான அஜய் தாஸ் என்பவர் கடத்திச் சென்றுள்ளார்.
குழந்தைகளை காணாமல் நாள் முழுவதும் தேடிய பெற்றோர், மாலையில் கெத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அஜய் தாஸ் தங்கியிருந்த முதல் மாடியில் தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்மில் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்த நிலையில் தலைகீழாக மிதந்தனர்.
நேற்று அதிகாலை, ராஜ்குருநகரில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள புனே நகரில் உள்ள ஒரு லாட்ஜில் மாநிலந்தை விட்டு தப்பியோட கிளம்பிக்கொண்டிருந்த அஜய் தாஸை போலீஸ் குழு கைது செய்தது.
சமையல் வேலை செய்யும் அஜய் தாஸ் கடந்த சில ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்ததால், சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அவரை நன்கு அறிவார்கள். எனவே அன்றைய தினம் வெளியே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சகோதரிகளுக்கு 'லட்டு' கொடுப்பதாக கூறி தனது அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறுமிகள் அவரது அறைக்குள் நுழைந்ததும், அவர் மூத்த சகோதரியை கழிப்பறைக்குள் தள்ளினார். இதைப் பார்த்ததும், தங்கை கத்தியதால் முதலில் அவளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பின் தண்ணீர் டிரம்மில் அவள் இறக்கும் வரை தலையை அதில் மூழ்கடித்துள்ளார்.
தங்கையின் மரணத்திற்குப் பிறகு, மூத்த சகோதரியை கழிவறைக்கு அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். ஆனால் அவளும் அலற ஆரம்பித்ததால் அதே டிரம்மில் மூழ்கடித்து கொன்றதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுமிகளின் மரணத்துக்கு நீதி கேட்டு பெற்றோரும் உறவினர்களும் காவல் நிலையம் முன் போராட்டம் நடத்தினர்.
- சிறுவன் காலி மைதானத்தில் உட்கார்ந்தபடி தனியாக விளையாடிக் கொண்டிருந்தான்.
- ஈவு, இரக்கமின்றி காரை நிறுத்தாமல் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு நைபாடா பகுதியை சேர்ந்த சிறுவன் ராகவ்குமார் சர்மா (வயது 6). இவன் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில் உட்கார்ந்தபடி தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அவன் பின்னால் சற்று தூரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது அங்கு வந்த டிரைவர் திடீரென காரை எடுத்து முன்னோக்கி இயக்கினார். முன்புறம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் மீது கார் ஏறியது. இதில் இரு சக்கரங்களுக்கும் இடையில் சிக்கி கொண்ட சிறுவனை கார் சிறிது தூரம் இழுத்து சென்றது. பின்னர் பின்சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது. இந்த பயங்கர விபத்தை அடுத்து கார் நிற்காமல் சென்று விட்டது.
காரில் அடிப்பட்ட சிறுவன் உருண்டு புரண்டு எழுந்தான். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் நின்ற சிறுவர்கள், அதிர்ச்சியுடன் உதவிக்காக ஓடி வந்தனர். இருப்பினும் எழுந்த சிறுவன் 'குடுகுடு' வென வீட்டுக்கு ஓடிச் சென்றான். அவனது நண்பர்கள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கார் ஏறிச் சென்றதில் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும் அவனுக்கு அதிகளவில் உள்காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தலை, நெஞ்சு, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஈவு, இரக்கமின்றி காரை நிறுத்தாமல் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
இதற்கிடைய சிறுவன் மீது கார் மோதி ஏறி, இறங்கிய சம்பவமும், உடனடியாக சிறுவன் எழுந்து வீட்டுக்கு ஓடி சென்ற காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
- சாகர் மகாராஷ்டிர அரசில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
- சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடிக்கு அரசு நிதியை இவர் மோசடி செய்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் விளையாட்டு வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அரசின் சார்பில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றுபவர் ஹர்ஷ் குமார் ஷீர்சாகர். இவர் அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்துள்ளார். அவருக்கு மாதம் 13,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
திடீரென ஹர்ஷ் குமார் பி.எம்.டபிள்யூ. காரில் வலம் வர தொடங்கினார். அவர் தனது காதலிக்கு 4 படுக்கை அறை கொண்ட வீடு ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார். இதைப் பார்த்த சக பணியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இவ்வளவு பணம் திடீரென இவருக்கு எப்படி வந்தது என தெரியாமல் திகைத்தனர்.
பி.எம்.டபிள்யூ. கார், பி.எம்.டபிள்யூ. பைக், விமான நிலையத்திற்கு எதிரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 படுக்கை அறை கொண்ட வீடு, வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி என சாகர் வசதியை பெருக்கிக் கொண்டார்.
சாகருடன் கூட்டாக சேர்ந்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்ட சக பணியாளரின் கணவர் ரூ.35 லட்சம் மதிப்பிலான சொகுசு ரக கார் ஒன்றை சமீபத்தில் வாங்கினார். இதனால் சந்தேகம் அடைந்த சக பணியாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடி அளவுக்கு அரசு நிதியை மோசடி செய்தது, அதில் கிடைத்த தொகையை வைத்து சாகர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தது தெரிய வந்தது.
விளையாட்டு வளாகம் பெயரில் வங்கிக்கணக்கை தொடங்கி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, துணை இயக்குநரின் போலி கையெழுத்துகளைப் போட்டு காசோலைகளைத் தயாரித்து, மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் பாட்னா பைரேட்ஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.
இதற்கிடையே, பிளே ஆப் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதல் பிளே ஆப் ஆட்டத்தில் உபி யோதாஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய பாட்னா அணி 31-23 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், உபி யோதாஸ் அணிகளும், 2வது அரையிறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோத உள்ளன.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் உ.பி.யோதாஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.
இந்நிலையில், பிளே ஆப் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.
முதல் ஆட்டத்தில் உ.பி.யோதாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய உ.பி. அணி 46-18 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் அரியானா, டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
புனே:
12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும், 3வது கட்ட லீக் ஆட்டங்கள் புனேவிலும் நடைபெற்றன.
கடந்த 2 மாதமாக நடந்து வந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தன. லீக் ஆட்டங்களின் முடிவில் 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6 இடங்களைப் பிடித்த உ.பி. யோதாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், புனேவில் இன்று நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் உ.பி. யோதாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ்-யு மும்பா அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
புள்ளிப்பட்டியலில் 7 முதல் 12 இடங்களைப் பிடித்த தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
- இன்று அதிகாலை 5.50 மணியளவில் வந்துகொண்டிருந்த டிரக் பக்கவாட்டில் கவிழ்த்து தீப்பிடித்தது.
- தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
மும்பை பூனே நெடுஞ்சாலை அருகே ரசாயணம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரித்து விபத்துகளாகியுள்ளது.
டேங்கரில் ஸ்பிரிட் (எத்தனால்) ஏற்றப்பட்டு கோபோலியில் உள்ள மதுபான உற்பத்தி நிறுவனத்தை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. மும்பை-புனே விரைவுச்சாலையை தாண்டி கோபோலி பகுதியில் ஷில்பாடா அருகே இன்று அதிகாலை 5.50 மணியளவில் வந்துகொண்டிருந்த டிரக் பக்கவாட்டில் கவிழ்த்து தீப்பிடித்தது.
வாகனத்திலிருந்து விலகிய டேங்கரில் தீ மளமளவென பரவியது. மேலும் எத்தனால் சாலையில் கொட்டிய நிலையில் சாலையின் சுற்றளவில் சுமார் 20-25 அடி தூரத்திற்கு தீ பரவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
- மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு சமீபத்தில் தோ்தல் நடைபெற்றது.
- மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
புதுடெல்லி:
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு சமீபத்தில் தோ்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சிகள் அங்கம் வகித்த மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மீது இக் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
மேலும், தோ்தலுக்கு முன்பாக மாநில வாக்காளா் பட்டியலில் புதிதாக வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா். பலா் நீக்கப்பட்டனா் என்றும் அக்கட்சிகள் குற்றம் சாட்டின.
காங்கிரஸ் கட்சி சாா்பில் இது தொடர்பாக தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. இந்த சந்தேகங்கள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தோ்தலின்போது, மாலை 5 மணி முதல் இரவு 11.45 மணி வரையில் வாக்குப் பதிவு அதிகரித்திருப்பது குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. இது சாதாரணமாக நடை பெறக்கூடிய ஒன்றுதான். வாக்காளா் எண்ணிக்கையை திரட்டும் தோ்தல் ஆணைய நடவடிக்கைகளின் ஓா் அங்கம்தான் இது.
அதே நேரம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில், அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப் பட்ட முகவா்களிடம், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய '17சி' என்ற சட்டப்பூா்வ படிவம் வழங்கப்பட்டுவிடும். எனவே, உண்மையான வாக்காளா் எண்ணிக்கையை மாற்றுவது சாத்தியமற்றது.
அதுபோல, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணியானது வெளிப்படைத் தன்மை யுடன், உரிய சட்ட நடைமுறைகளுடன் மேற்கொள்ளப்பட்டது. வாக்காளா் பட்டியலில் வாக்காளா் சோ்ப்பு மற்றும் நீக்கம் செய்தலில் எந்தவித தன்னிச்சையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணிகளில் காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனா்.
எனவே, மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்ற 47 தொகுதிகள் உள்பட 50 தொகுதிகளில் கடந்த ஜூலை முதல் நவம்பா் வரை சராசரியாக 50,000 வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி முன் வைத்துள்ள புகாா் தவறானது.
அந்த கால கட்டத்தில் வெறும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே 50,000-க்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டனா். எனவே, 47 தொகுதிகளில் மகாயுதி கூட்டணி பெற்ற வெற்றியின் மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்.
அதுபோல, வாக்காளா் பட்டியலில் இருந்து வழக்கத்துக்கு மாறான வாக்காளா் நீக்கமும் மேற்கொள்ளப்படவில்லை. இறப்பு, முகவரி மாற்றம் காரணமாக இரு இடங்களில் பதிவு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் சராசரியாக தொகுதிக்கு 2,779 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். வாக்காளா் நீக்கம் செய்யும் பணியிலும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இடம் பெற்றனா்.
இவ்வாறு தோ்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.






