என் மலர்
மகாராஷ்டிரா
- விதர்பா முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- 4-வது நாள் முடிவில் விதர்பா 2வது இன்னிங்சில் 248 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை:
ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவருகிறது. இதில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 46 ரன்னும், லால்வாணி 37 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா சார்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார்.
மும்பை சார்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷீர் கான் 136 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னும், ரகானே 73 ரன்னும், ஷம்ஸ் முலானி 50 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. 4வது நாள் ஆட்டத்தில் விதர்பா அணி நிதானமாக ஆடியது.
அதர்வா டைட் 32 ரன்னும், துருவ் ஷோரே 28 ரன்னும், அமன் மொகாடே 32 ரன்னும், யாஷ் ரதோட் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
5வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன், அக்ஷய் வடேகர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 90 ரன்கள் சேர்த்த நிலையில் கருண் நாயர் 74 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து ஆடிய வடேகர் அரை சதமடித்தார்.
நான்காம் நாள் முடிவில் விதர்பா 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. வடேகர் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கடைசி நாளான நாளை 290 ரன்களை எடுத்து விதர்பா வெற்றி பெறுமா அல்லது மீதமுள்ள 5 விக்கெட்டுகளை எடுத்து மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- மகாராஷ்டிராவில் காங்கிரஸ் சார்பில் மகளிர் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
- அப்போது பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியது.
மும்பை:
வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் கவனத்தை ஈர்க்க பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றன. அதன்படி, காங்கிரஸ் கட்சியும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்குறுதிகளை வழங்கி வருகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் இன்று நடந்த மகளிர் பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வழங்கினார். அதன் விவரம் வருமாறு:
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.
ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவு திட்ட பெண் ஊழியர்களுக்காக, மத்திய பட்ஜெட்டில் நிதி இரு மடங்காக உயர்த்தப்படும்.
பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து வழிகாட்டுவதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது.
- எங்களின் 2-வது இந்திய ஒற்றுமை யாத்திரையில் நியாய என்ற புதிய வார்த்தையைச் சேர்த்துள்ளோம் என்றார்.
மும்பை:
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் துலே பகுதியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
எங்களின் இரண்டாவது இந்திய ஒற்றுமை யாத்திரையில் நியாய என்ற புதிய வார்த்தையைச் சேர்த்துள்ளோம்.
ஏனென்றால் எங்களின் முதல் யாத்திரையில் விவசாயிகள், இளைஞர்கள் அல்லது பெண் யாராக இருந்தாலும், வன்முறைக்கும் வெறுப்புக்கும் காரணம் சொன்னது அநீதிதான்.
90 சதவீதம் இந்தியர்கள் அநீதியை எதிர்கொள்கிறார்கள் தினமும்.
இது உங்களுக்கெல்லாம் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் உள்ள 22 பேரின் சொத்து, 70 முக்கிய நபர்களின் சொத்துக்கு சமம் என தெரிவித்தார்.
#WATCH | Dhule, Maharashtra: During his address at Bharat Jodo Nyay Yatra, Congress leader Rahul Gandhi says, "..In our second Bharat Jodo Yatra, we have added a new word 'Nyay' because in our first yatra whoever we met whether farmers, youth or female, said the reason for… pic.twitter.com/j0hKTyCqHk
— ANI (@ANI) March 13, 2024
- பிரியாணியின் மேல் வெள்ளை வலை போன்ற வடிவங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது.
- ஹீனா கவுசத் ஏற்கனவே பார்பி நிறத்தில் உணவுகளை தயாரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருந்தவர் ஆவார்.
உணவு பிரியர்களை கவருவதற்காகவே சமூக வலைதளங்களில் புதிய வகை உணவு தயாரிப்பு குறித்து வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் மும்பையை சேர்ந்த ஹீனா கவுசர் ராத் என்ற பெண் தயாரித்த 'ஸ்பைடர் மேன் பிரியாணி' குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் நீல நிற பிரியாணி நிறப்பப்பட்ட பாத்திரம் உள்ளது. அதில் பிரியாணியின் மேல் வெள்ளை வலை போன்ற வடிவங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது. ஹீனா, பிரியாணியின் பகுதிகளை வெளியே எடுக்கும்போது வலைகள் முழுவதுமாக சாப்பிடும் வகையில் இருப்பதாக விளக்குகிறார். அவர் சுவைக்காக அதில் மேலும் சில கலவைகளை சேர்க்கிறார்.
அவரது இந்த 'ஸ்பைடர் மேன் பிரியாணி' குறித்த வீடியோயை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஹீனா கவுசத் ஏற்கனவே பார்பி நிறத்தில் உணவுகளை தயாரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருந்தவர் ஆவார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது.
- சுப்ரியா சுலே எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராமதி தொகுதி அஜித் பவார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த மூன்று கட்சிகளும் மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்தன. 48 தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலவியது.
இதனால் சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரியான அமித் ஷா தலையிட்டு இரண்டு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராமதி, ரெய்க்கார், ஷிருர், பார்பனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 13 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது.
பாராமதி தொகுதி பவார் குடும்பத்தின் கோட்டையாக விளங்குகிறது. தற்போது சரத் பவார்- அஜித் பவார் குடும்ப உறுப்பினர்கள் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அவரை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.
- மத்திய மந்திரியாக இருக்கும் நிதின் கட்கரி பெயர் பா.ஜனதாவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
- பா.ஜனதா அவமதித்தால் எங்களுடன் வந்து விடுங்கள் என உத்தவ் தாக்கரே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதின் கட்கரி. இவர் மத்திய மந்திரியாக உள்ளார். தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.
பா.ஜனதா முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மூத்த தலைவர்கள் பலரது பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், நிதின் கட்கரி பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவர் அவமதிக்கப்படுகிறார் என மகாராஷ்டிர மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இது தொடர்பாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, அவமதிக்கப்பட்டால் எங்களுடைய கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், "நீங்கள் பா.ஜனதா கட்சியால் அவமதிக்கப்பட்டால் மகா விகாஷ் அகாதி (உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்) கூட்டணிக்கு வந்து விடுங்கள். இதை இரண்டு நாட்களுக்கு முன்னதாக நிதின் கட்காரியிடம் சொன்னேன். தற்போதும் சொல்கிறேன்.
உங்களுடைய வெற்றியை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் அரசு அமைத்த பிறகு எங்களது அரசாங்கத்தில் உங்களுக்கு மந்திரி பதவி வழங்குவோம். அது அதிகாரமிக்க பதவியாக இருக்கும்" என்றார்.
உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியிருந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் "தெருவில் நிற்கும் ஒருவர் மற்றொருவரை பார்த்து நான் உன்னை அமெரிக்க ஜனாதிபதியாக்குகிறேன் என்று சொல்வது போல் உள்ளது" என கிண்டல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்னும், 2வது இன்னிங்சில் 418 ரன்னும் எடுத்தது.
- விதர்பா முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மும்பை:
89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 46 ரன்னும், லால்வாணி 37 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா சார்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார்.
மும்பை சார்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. முஷீர் கான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு உறுதுணையாக ரகானே அரை சதமடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னில் வெளியேறினார். ஷம்ஸ் முலானி 50 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மூன்றாம் நாள் முடிவில் விதர்பா அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரு நாட்கள் மீதமுள்ள நிலையில் விதர்பா அணி வெற்றிபெற 528 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- சில பயனர்கள், முதியவரின் முயற்சியை பாராட்டி உள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவும் சில வீடியோக்கள் பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் மும்பையில் பஸ் டிரைவர்களுக்கு முதியவர் ஒருவர் பிஸ்கெட் வினியோகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
மினல் படேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், மும்பை ஹியூஸ் சாலையில் செல்லும் பஸ்களை முதியவர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். பின்னர் அவர் டிரைவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்களை வழங்குகிறார். அதனை டிரைவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளும் காட்சிகள் உள்ளது.
20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சில பயனர்கள், முதியவரின் முயற்சியை பாராட்டி உள்ளனர்.
- உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறை இந்தியா வென்று உள்ளது.
- 2024-ம் ஆண்டு உலக அழகி போட்டியில் கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூடியுள்ளார்.
மும்பை:
71-வது உலக அழகி போட்டி கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லியில் தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் நடந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை இந்தி திரைப்பட இயக்குனர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் இணைந்து நடத்தினர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 117 பேர் பங்கேற்றனர்.
இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்றனர். இந்தியா, மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, செக் குடியரசு, இந்தோனேசியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்ச்சுகல், லெபனான், போட்ஸ்வானா, கவுதமாலா நாடுகளை சேர்ந்த அழகிகளும் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024-ம் ஆண்டுக்கான 71-வது உலக அழகி பட்டத்தை வென்றார்.
லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2022-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தைச் சூட்டினார்.
இந்தியா சார்பில் பங்கேற்ற சினி ஷெட்டி போட்டியின் முதல் 4 இடங்களுக்குள் வர முடியவில்லை. சினி ஷெட்டி 2022-ம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார். உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறை இந்தியா வென்றுள்ளது.
உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்டினா பிஸ்கோவா சட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை கேபினில் இருந்த சிறுவனை பார்க்காமல் உள் அறைக்குச் சென்றது.
- தகவலறிந்து வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை கூண்டில் ஏற்றிச் சென்றனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், மாலேகான் நகருக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று நம்பூர் சாலையில் உள்ள திருமண மண்டப அலுவலகத்திற்குள் நுழைந்தது. அந்த அலுவலகத்தின் கதவு திறந்து இருந்ததால் வாசல் வழியாக சிறுத்தை உள்ளே நுழைந்த நிலையில், அங்கு அலுவலக கேபினில் மோகித் விஜய் அகிரே (13), என்ற சிறுவன் தனது செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை, கேபினில் இருந்த சிறுவனை பார்க்காமல் நேராக உள் அறைக்குச் சென்றது. சிறுத்தையை பார்த்தும் சிறிதும் அச்சப்படாத அந்த சிறுவன் அலுவலகத்திற்கு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து மூடினான். இந்தச் சம்பவம் காலை 7 மணி அளவில் நடந்துள்ளது.
சிறுத்தை புகுந்தது குறித்து வனத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை கூண்டில் ஏற்றிச்சென்ற பிறகே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
திருமண மண்டபத்தின் அலுவலக அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை அலுவலகத்திற்குள் நுழைவதும், உடனே சிறுவன் அசால்டாக வெளியே சென்று பூட்டு போட்டு பூட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. துணிச்சலாக செயல்பட்ட சிறுவனின் சாதுர்யத்தைப் பாராட்டி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அறிமுகம் செய்தது.
- இதேபோல, சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகமும் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.
மும்பை:
இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கழற்றிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. மும்பை ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தோம் என மும்பை நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இதேபோல், சன்ரைசர்ஸ் நிர்வாகமும் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளனர்.
- திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக கதவைப் பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.
மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் நகரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக மண்டபத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த சிசிடிவி வீடியோவில், 'திருமண மண்டபத்தின் கதவு பக்கத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் மொபைல் போனில் கேம் விளையாடி கொண்டிருக்கிறான். அப்போது கதவின் உள்ளே சிறுத்தை ஒன்று மெதுவாக வருகிறது. அதனை பார்த்த சிறுவன் எந்த பதட்டமும் இல்லாமல் வெளியே சென்று மண்டபத்தின் கதவை பூட்டி விடுவது' பதிவாகியுள்ளது.
பின்னர், அச்சிறுவன் ஊர் மக்களிடம் இதை பற்றி தகவல் சொல்ல, அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.
இன்று காலை 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுவனின் தந்தை அந்த மண்டபத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
महाराष्ट्र के मालेगांव में एक घर में अचानक घुसा तेंदुआ, बच्चे ने समझदारी दिखाते हुए तेंदुए को घर में किया बंद, CCTV में कैद हुई पूरी घटना
— AajTak (@aajtak) March 6, 2024
बच्चे की समझदारी को 10 में से कितने मार्क्स देंगे?#Malegaon #Maharashtra #ViralVideo #Leopard #ATYourSpace pic.twitter.com/gg5SuUuR9H






