என் மலர்
இந்தியா

103 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டி வீடியோ வெளியிட்ட வாலிபர்
- இனி யாராலும் தடுக்க முடியாது என்று கூறிக்கொண்டே அவர் தனது காரின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தும் காட்சிகள் வீடியோவில் உள்ளது.
- வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி 8.4 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும், 1.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது.
புனேயில் சிறுவன் வேகமாக கார் ஓட்டி 2 பேரை பலி கொண்ட விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளைஞர் ஒருவர் தனது காரில் அதிவேகமாக செல்வதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்று அந்த இளைஞர் குறிப்பிடுகிறார். வீடியோவில் உள்ள நபர் மணிக்கு 80 முதல் 103 கிலோ மீட்டர் வேகத்தில் தனது காரை ஓட்டுகிறார். அதோடு அவரது பதிவில், எப்படியும் ஓட்டலாம், மேலும் கார் ஓட்டும் போதே 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை தயார் செய்து வைத்துள்ளேன். இனி யாராலும் தடுக்க முடியாது என்று கூறிக்கொண்டே அவர் தனது காரின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தும் காட்சிகள் வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி 8.4 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும், 1.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது.






