என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • பம்பில் இருந்து டீசல் நிரப்பப்பட்ட பிறகு முதல்வரின் வாகனங்கள் பழுதடைந்தன.
    • சம்மந்தப்பட்ட பெட்ரோல் பம்ப் இழுத்து மூடப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் 19 வாகனங்கள் டீசலில் தண்ணீர் கலந்ததால் பழுதடைந்து சாலையில் சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. பம்பில் இருந்து டீசல் நிரப்பப்பட்ட பிறகு வாகனங்கள் பழுதடைந்தன. கான்வாயின் பல வாகனங்கள் பாதி வழியில் சாலையில் பழுதடைந்து நின்றன.

    ரட்லாவில் நடைபெற்ற பிராந்திய தொழில் திறன் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்க மோகன் யாதவ் நேற்று சென்றிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டது.

    முதல்வர் கான்வாயில் உள்ள ஒரு வாகனத்தின் ஓட்டுநர், இந்தூரில் இருந்து முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் டீசலில் தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தாசில்தார் ஆஷிஷ் உபாத்யாய் தெரிவித்தார். இதையடுத்து சம்மந்தப்பட்ட பெட்ரோல் பம்ப் இழுத்து மூடப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்துள்ளது. அதில், "கனமழை காரணமாக ரத்லமில் உள்ள பெட்ரோல் பம்பில் உள்ள எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெட்ரோல் பம்பிலிருந்து எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பம்பில் இருந்து டீசல் நிரப்பப்பட்ட பிறகு வாகனங்கள் பழுதடைந்தன.
    • சம்மந்தப்பட்ட பெட்ரோல் பம்ப் இழுத்து மூடப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் 19 வாகனங்கள் டீசலில் தண்ணீர் கலந்ததால் பழுதடைந்து சாலையில் சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. பம்பில் இருந்து டீசல் நிரப்பப்பட்ட பிறகு வாகனங்கள் பழுதடைந்தன. கான்வாயின் பல வாகனங்கள் பாதி வழியில் சாலையில் பழுதடைந்து நின்றன.

    ரட்லாவில் நடைபெற்ற பிராந்திய தொழில் திறன் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்க மோகன் யாதவ் நேற்று சென்றிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டது.

    முதல்வர் கான்வாயில் உள்ள ஒரு வாகனத்தின் ஓட்டுநர், இந்தூரில் இருந்து முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் டீசலில் தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தாசில்தார் ஆஷிஷ் உபாத்யாய் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட பெட்ரோல் பம்ப் இழுத்து மூடப்பட்டுள்ளது.  

    • போலீசிடம் அளித்த புகாரில் தனது கணவர் ஒரு சூதாட்டக்காரர் என்றார்.
    • சூதாட்டப் பழக்கத்தால் அவரது கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    போபால்:

    மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள கன்வான் காவல்நிலையப் பகுதியில் வசித்து வருபவரின் மனைவி இந்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இந்தூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு போலீசார் அதை 'பூஜ்ய' எப்.ஐ.ஆர் ஆக பதிவுசெய்து தார் காவல்துறைக்கு அனுப்பினர்.

    அந்தப் புகாரில், தனது கணவர் ஒரு சூதாட்டக்காரர். சூதாட்டப் பழக்கத்தால் அவரது கடன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடனில் மூழ்கிய கணவர் தனக்கு பணம் கொடுத்த தனது நண்பர்களில் ஒருவருடன் உடல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கணவர் ஒருவர் தனது மனைவியை ரூ.50,000 கடனை அடைக்க தனது நண்பருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. அதன்பின், அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

    • துப்பறியும் நிறுவனங்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
    • கல்லூரி நட்புகள், ஆன்லைன் நடத்தை, அழைப்பு பதிவுகள், முன்னாள் காதலர்களின் குற்றப்பதிவுகளும் விசாரிக்கப்படுகிறது.

    மேகாலயாவில் நடைபெற்ற தேனிலவு கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியுடனான திருமணத்தில் விருப்பம் இல்லாத சோனம் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தார். இதில் தொடர்புடைய கூலிப்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இதேபோன்று ஜார்க்கண்ட், ஆந்திராவில் கூலிப்படையை ஏவி கணவனை மனைவி தீர்த்து கட்டிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் மணப்பெண்கள் பற்றிய விவரங்களை கண்டறிவதற்காக மணமகன் குடும்பத்தினர்கள் துப்பறியும் நிறுவனங்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாக துப்பறியும் நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மத்தியபிரதேசத்தை சேர்ந்த துப்பறியும் நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி ராஜேஷ் பாண்டே கூறியதாவது:-

    சோனம்-ரகுவன்ஷி வழக்குக்கு பிறகு பெண்களை விசாரிக்க வைக்கும் கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது. அவர்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா?, குற்றப்பின்னணி உள்ளதா? என எல்லாவற்றையும் அறிய விரும்புகிறார்கள்.

    சமீபத்தில் இதுபோன்ற 18 வழக்குகள் எங்களுக்கு வந்துள்ளன. அதில் பெரும்பாலானவை இதுபோன்ற இலக்கு சரிபார்ப்பை மட்டுமே விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    துப்பறியும் சேவைகளின் மண்டல தலைவரான சுபாஷ் சவுத்திரி கூறுகையில், தற்போது பெண்ணின் வாழ்க்கை ஆழமான, தனிப்பட்ட அம்சங்களுக்காக திரும்பி உள்ளது. கல்லூரி நட்புகள், ஆன்லைன் நடத்தை, அழைப்பு பதிவுகள், முன்னாள் காதலர்களின் குற்றப்பதிவுகளும் விசாரிக்கப்படுகிறது.

    முன்பெல்லாம் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே துப்பறியும் நபர்களை பணியமர்த்துவார்கள். ஆனால் தற்போது ஒவ்வொரு மாதமும் 70 முதல் 80 விசாரணைகளை பார்க்கிறோம். இன்றைய காலத்தில் சில குடும்பங்களுக்கு துப்பறியும் நபர் முக்கியமானவராக திகழ்கிறார் என்றார்.

    இதுபோன்ற வழக்குகளில் துப்பறியும் நிறுவனங்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

    இதன் மூலம் கண்காணிப்பு, டிஜிட்டல் தடயவியல் மற்றும் பின்னணி சோதனைகள் ஆகியவற்றின் தகவல்களை துப்பறியும் நிறுவனங்கள் வழங்குகின்றன. 

    • மத்திய பிரதேசத்தில் விஷப்பாம்பு ஒன்று இளைஞரை கடித்துள்ளது.
    • அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாம்பு உயிரிழந்து போனது.

    போபால்:

    பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பிடம் இருக்கும் விஷமே அதற்கு காரணம். விஷமுள்ள பாம்பு மனிதன் ஒருவனை தீண்டினால் அவனது உயிர் போய்விடும். இதனாலேயே, பாம்பைக் கண்டால் அனைவரும் அலறி ஓடி விடுகின்றனர்.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தில் இளைஞரை கடித்த பாம்பு ஒன்று இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குட்சோடி கிராமத்தில் வசித்து வரும் சச்சின் நாக்பூரே (25), என்ற இளைஞர், தற்செயலாக பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அப்போது, விஷப் பாம்பு அவரைக் கடித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாம்பு இறந்து போனது.

    பாம்புக் கடியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சச்சின் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது அரிதிலும் அரிதான நிகழ்வு என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மனிதனை கடித்து பாம்பு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

    • 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

    மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

    இந்த மேம்பாலத்தை காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் இந்த பிரச்சினையை குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.

    இந்நிலையில், விமர்சனத்திற்கு உள்ளான 90 டிகிரி L வடிவ ரயில்வே மேம்பாலம், மாற்றியமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது

    • இதுபோன்ற கருத்துக்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம்.
    • கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்று கூறியதை அமித் ஷா குறிப்பிட்டார்.

    சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் பாஜக தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுபோன்ற கருத்துக்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம் என்றும், சில சமயங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும் அமித் ஷா அட்வைஸ் செய்துள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினருக்கான பயிற்சி முகாமில் அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார்.

    சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்று கூறியதை அமித் ஷா குறிப்பிட்டார்.

    "தவறுகள் நடக்கலாம். ஆனால் அவை ஒருபோதும் மீண்டும் நிகழக்கூடாது. அவர்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது மூத்தவர்களாகவோ இருந்தாலும், அவர்கள் எப்போதும் ஒரு மாணவரைப் போல இருக்க வேண்டும்" என்று அமித் ஷா நினைவுபடுத்தினார்.

    • இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
    • இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

    மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த மேம்பாலத்தை காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் இந்த பிரச்சினையை குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.

    • கணவரிடம் விவாரத்து பெற்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன.
    • ஏற்கனவே அந்த பெண் இருவரை திருமணம் செய்துள்ளார்.

    மத்திய பிரதேசம் ராட்லாமில் 35 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயது மகளும் மற்றும் 9 வயது மகனும் உள்ளனர். இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக 10ஆம் வகுப்பு மாணவனிடம், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

    அந்த பெண்ணிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில்தான் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனிடம், கடந்த ஒருவருடமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார். தனது வீட்டிற்கு அழைத்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து வற்புறுத்தியதால், மாணவன் ஒரு கட்டத்தில் தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தந்தை போலீசில் புகார் அளிக்க, போலீசார் அந்த பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

    • கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார்.
    • கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார்.

    மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த சோனம் (வயது25) என்ற புதுப்பெண் தனது கணவர் ராஜாரகுவன்ஷியை (28) மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்று கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தொழில் அதிபரின் மகளான சோனத்துக்கு கடந்த மே 11-ந்தேதி ராஜாரகுவன்ஷியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு அவருக்கு தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை பார்த்த தந்தையுடன் 3 வயது குறைவான ராஜ்குஷ்வாகாவுடன் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் மனம் இன்றி ராஜாரகுவன்ஷியை திருமணம் செய்த சோனத்துக்கு அவருடன் வாழப்பிடிக்கவில்லை.

    இதனால் காதலன் ராஜ்குஷ்வாகாவுடன் சேர்ந்து தனது கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கணவர் ராஜாரகுவன்ஷியை மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்ற சோனம் அங்கு காதலனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினரான ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் மூலம் ராஜாரகுவன்ஷியை கொலை செய்துள்ளார்.

    இதற்காக ராஜாரகுவன்ஷியும், சோனமும் தேனிலவுக்கு புறப்பட்ட போதே ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் திருமண தம்பதியை பின் தொடர்ந்துள்ளனர். ஆனால் ராஜ்குஷ்வாகாவால் அங்கு செல்ல முடியவில்லை. எனவே கொலை திட்டத்தை ரத்து செய்துவிடலாம் என அவர் கூறி உள்ளார்.

    ஆனால் கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார். அவர் கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். தொடர்ந்து முன்பணமாக ரூ.4 லட்சத்தையும் வழங்கி உள்ளார்.

    பின்னர் சோனம் வகுத்து கொடுத்த திட்டப்படி மேகாலயா சென்ற கூலிப்படையினரான ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அங்கு ராஜா ரகுவன்ஷியிடம் தங்களை மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று அறிமுகமாகி உள்ளனர்.

    அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றுள்ளார். ஆனால் அவரை சோனம் நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம் என கூறி திருப்பி அனுப்பி உள்ளார்.

    பின்னர் கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களை பின் தொடர்ந்து சென்ற கூலிப்படையினர் ராஜாரகுவன்ஷியை கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளனர். தனது கணவர் கண்முன்னே கொலை செய்யப்படுவதை சோனம் வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் ராஜாரகுவன்ஷி உடலை 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசி உள்ளனர். பின்னர் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். பிறகு ரெயில், பஸ்கள் மூலம் அவரவர் ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.

    சோனம் இந்தூர் சென்று காதலன் ராஜ்குஷ்வாகாவை சந்தித்துள்ளார். பின்னர் 3 நாட்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். தொடர்ந்து அங்கேயே இருந்தால் போலீசில் சிக்கி கொள்வோம் என சோனம் கருதி உள்ளார்.

    சோனத்தின் காதலன் ராஜ்குஷ்வாகா உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். அவர் சோனத்தை உத்தரபிரதேசம் செல்ல ஏற்பாடு செய்து அங்குள்ள தனது நண்பர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார். இதற்கிடையே ராஜாரகுவன்ஷி பற்றி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவல் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

    இதை அறிந்த சோனம் வேறு வழியின்றி தானாக முன்வந்து போலீசில் சரண் அடைந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    ராஜாரகுவன்ஷியை கொலை செய்தபோது அவரிடம் ரூ.15 ஆயிரம் இருந்துள்ளது. அதையும் சோனம் கூலிப்படையினரிடம் எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது. கைதான சோனம் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • சடலத்தை கவ்விக்கொண்டு சென்றதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டார்.
    • மருத்துவமனையின் திறந்திருந்த வாயில்கள் வழியாக நாய்கள் உள்ளே நுழைந்தது.

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அரசு மருத்துவமனையில், பிறந்த ஒரு குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சனிக்கிழமை, மருத்துவமனை கழிப்பறை அருகே ஒரு நாய் குழந்தையின் சடலத்தை கவ்விக்கொண்டு சென்றதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டார். மீட்கும்போது குழந்தையின் உடல் பகுதியளவு சிதைந்திருந்தது.

    சிசிடிவி காட்சிகளின்படி, 17 வயது பெண் ஒருவர் கழிப்பறையில் பிரசவித்துவிட்டு, பின்னர் ஒரு நபருடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

    மருத்துவமனையின் திறந்திருந்த வாயில்கள் வழியாக நாய்கள் உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு ஆவணங்களில் அந்த ஊழியர்களுக்கு பணியாளர் குறியீடு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.
    • ம்பள பணம் எடுக்கப்படாததால் அவர்கள் போலி ஊழியர்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக மோகன் யாதவ் உள்ளார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் சம்பள பணத்தில் ரூ.230 கோடி ஊழல் நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 50 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இந்த 50 ஆயிரம் ஊழியர்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருப்பதாகவும், ஆனால் அவர்களின் சம்பளம் கடந்த டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

    அரசு ஆவணங்களில் அந்த ஊழியர்களுக்கு பணியாளர் குறியீடு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. ஆனால் சம்பளம் வழங்கப்படாததால் இந்த ஊழியர்கள் ஊதியம் பெறாத விடுப்பில் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்களா? என்ற தகவல் இல்லை.

    அதேவேளையில் இவர்கள் போலியாக உருவாக்கப்பட்ட ஊழியர்களா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதன்மூலம் ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் ரூ.230 கோடி மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சம்பள பணம் எடுக்கப்படாததால் அவர்கள் போலி ஊழியர்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இதையடுத்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் யாரும் பணி புரியவில்லை என்பதைச் சான்றளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அரசு ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பெரும் தொகை சம்பளத்தில் போலி பெயர்களைச் சேர்த்து மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×