என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி கோப்பையை வென்றதை அடுத்து கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பத்திற்கு பலர் கண்டனமும் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்த 11 பேர் பலியானது தொடர்பாக பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.
    • ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

    கோப்பை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதான சவுதாவிலும், ஆர்சிபி அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தவறியதற்காக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட பல்வேறு மூத்த போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும். கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற கர்நாடக ஐகோர்ட் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • சின்னசாமி மைதானம் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 18 வருடத்திற்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் வெற்றி கொண்டாட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் உள்ள விதான சவுதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை வெற்றி பேரணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டது.

    விதான சவுதாவில் ஆர்சிபி அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டனர். பின்னர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கூட்ட நெரிசலுக்கு பாதுகாப்பு குறைபாடுதான் முக்கிய காரணம் என எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கிடையே பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையுடன் கலந்தாலோசிக்கப் படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஆர்சிபி ஏற்பாடு செய்திருந்தது என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.

    இந்தநிலையில் ஆர்சிபி அணிக்கெதிராக கப்பன் பார்க் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆர்சிபி, டிஎன்ஏ (நிகழ்ச்சி மேலாளர்), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நிர்வாக கமிட்டி உள்ளிட்டவை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சின்னசாமி மைதானத்தில் முன் ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மத்தயி அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கூறியதாவது:-

    அதிகாரத்தில் இருந்தவர்கள், விதான சவுதாவில் இருந்தவர்கள் ஒரு தனியார் நிறுவனம் இப்படி ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய அனுமதித்தது ஏன்?.

    ஏன் இது கொண்டாடப்பட்டது? இது ஒரு அரசு நிகழ்ச்சி அல்ல. பிறகு ஏன் கொண்டாடப்பட்டது? இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அரசாங்கம் ஏன் இதைச் செய்தது? அதனால்தான் நான் பொறுப்புக்கூறலைக் கோருகிறேன்.

    முதலில், கொண்டாட்ட நிகழ்ச்சி இலவசம் என்றார்கள். பின்னர், பாஸ் தேவை என்றும், ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கப்பட்டதாகவும் சொன்னார்கள். நுழைவாயில்கள் திறக்கப்படவில்லை. இரண்டு அல்லது மூன்று வாயில்கள் மட்டுமே திறக்கப்பட்டனஃ அந்த வாயில்களுக்கு முன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    உங்கள் சொந்த மாவட்ட துணை கமிஷனர் என்ன மாதிரியான அறிக்கையை வழங்குவார்? அதனால்தான் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க ஒரு பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று நான் கோருகிறேன். டி.கே. சிவகுமார் உடனடியாக ராஜினாமா செய்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

    இவ்வாறு அமைச்சர் ஷோபா தெரிவித்துள்ளார்.

    • சின்னசாமி திடலில் குவிந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
    • விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு விளக்கம்.

    ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக ஆர்சிபி அணி வென்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில்,பெங்களூரு ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

    அப்போது, விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?" ஆகிய கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வரும் 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • காயம் அடைந்தவர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 33 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காயம் அடைந்தவர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா கூறியதாவது:-

    ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காயமடைந்தனர். இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    35000 பேர் அமரக்கூடிய சின்னசாமி மைதானத்தில் 2- 3 லட்சக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    மக்கள் மைதானத்தின் கதவுகளை உடைத்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இவ்வளவு பெரிய கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. மைதானத்திற்கு வெளியே கடல் போல் கூடியிருந்த கூட்டம் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    துயரத்தால் ஏற்பட்ட சோகம் வெற்றிக் கொண்டாட்டத்தை மகிழ்ச்சி இழக்கச் செய்து விட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக பொது மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும்.

    கூட்ட நெரிசல் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த சம்பவத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. எங்கள் அரசு இதில் அரசியல் செய்யாது. நான் ஒரு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளேன். நீதி விசாரணைக்கு பிறகு யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் அணி வீரர்கள் வெற்றி பேரணி நடத்தினர்.
    • சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல் தற்போது வரை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

    18-வது சீசனில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு சின்னசாமி ஸ்டேயத்தில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இதை முன்னிட்டு, பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் அணி வீரர்கள் வெற்றி பேரணி நடத்தினர்.

    இதனை தொடர்ந்து 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. ஆர்சிபி ஆணியை காண வேண்டும் என்ற ஆசையில் மைதானத்தை சுற்றி ஆர்சிபி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்துள்ளனர்.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எம்ஜி ரோடு, ட்ரினிட்டி மெட்ரோ, சின்னசாமி ஸ்டேடியம் உள்பட 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

    • ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
    • விதான் சவுதாவில் ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி முதல் முறையாக ஆர்.சி.பி. அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடக சட்டசபை கூட்டம் நடக்கும் விதான் சவுதாவில் ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் தாவர்சந்த் கெலாட், கவர்னர் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் உள்பட அணி வீரர்கள் அனைவருக்கும் தலைப்பாகை மற்றும் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து, ஆர்.சி.பி. வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக ரசிகர்கள் மைதானத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக திரண்டனர்.

    • 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.
    • 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களை காணும் ஆர்வத்தில் வந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கர்நாடக பாஜக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அம்மாநில துணை முதலமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    மேலும், "பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால்தான் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது" என்றார்.

    • தக் லைஃப் படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
    • கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்று கமல் தெரிவித்தார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றி கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்ற சொல்லிற்காக கன்னட அரசியல் அமைப்பினர் கமல ஹாசனை புறக்கணித்து தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடகூடாது என போராடி வருகின்றனர். அதேப் போல் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    கர்நாடகாவில் 'தக் லைப்' படத்திற்கு தடையை விலக்கக்கோரிய மனு தொடுக்கப்பட்டது. அதன் மீதான விசாரணையில் அம்மாநில உயர் நீதிமன்றம் காட்டமான விமர்சனம் தெரிவித்துள்ளார்.

    கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்? கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா? கன்னடம் குறித்த கமல்ஹாசன் பேச்சால் தற்பொழுது பதற்றம் உருவாகியுள்ளது ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன? என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    கர்நாடகாவில் இருந்து சில கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்றால் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி நாக பிரசன்னா கருத்து கூறியுள்ளார்.

    இந்நிலையில், தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் இதற்காக தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று கமல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் கன்னட வெளியீட்டை தள்ளிவைப்பதாகவும் கமல் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில் கர்நாடக ஃப்லிம் சேம்பர், கர்நாடக அரசு மற்றும் கமல்ஹாசன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
    • 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்.

    ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணிக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.

    இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கர்நாடகா உங்களோடு இருக்கிறார்கள். அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • நாம் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும், வாழ வேண்டும்.
    • மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது.

    கமல்ஹாசனின் கன்னட மொழி பற்றிய கருத்து சர்ச்சையானது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கமல் பேசியதை அரசியலாக்க வேண்டாம். தமிழ்நாடு - கர்நாடகா அண்டை மாநிலங்கள். நாம் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும், வாழ வேண்டும்.

    இங்குள்ள தண்ணீர் தமிழ்நாட்டுக்குச் செல்கிறது. அங்கிருந்து பலர் கர்நாடகாவுக்கு வந்து வேலை செய்கிறார்கள். நாம் எதிரிகள் அல்ல.. நண்பர்கள்.

    மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரம், இந்தப் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×