என் மலர்
கர்நாடகா
- சுதந்திரத்திற்குப் பிறகு துணை சபாநாயகர் பதவியை யாரும் காலியாக வைத்திருக்கவில்லை.
- ஆனால் அவர் அந்தப் பதவியை காலியாக வைத்திருக்கிறார். இந்தச் செயல் சட்டவிரோதமானது.
பெங்களூரு:
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இன்று கலபுரகி வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி எப்போதும் ஜனநாயகம், ஜனநாயகம் என்றுதான் சொல்வார். சுதந்திரத்திற்குப் பிறகு, எந்தப் பிரதமரும் துணை சபாநாயகர் பதவியை காலியாக வைத்திருக்கவில்லை, ஆனால் அவர் அந்தப் பதவியை காலியாக வைத்திருக்கிறார். மோடியின் இந்தச் செயல் சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமானது.
துணை சபாநாயகர் பதவியை, ஒரு சிறிய பதவியைக் கூட அவர் கொடுக்க விரும்பவில்லை. இது அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் அரசியலமைப்பின் படி அது வழங்கப்பட வேண்டும் என நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த நாட்டில் அரசாங்கம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.
கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால் ஒரு பிரதமர் இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை நான் பார்த்ததில்லை. அவர் எல்லாவற்றிலும் பொய் சொல்கிறார். அவர் ஒருபோதும் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை.
முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பு (உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் திட்டம்) பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, அங்கும் வடகிழக்கு பகுதிக்கும் அதிகபட்ச நிதியை வழங்கினேன். நாங்கள் செய்யும் பணிகளுக்கு அவர் (பிரதமர் மோடி) அதை முன்னெடுத்துச் சென்று திறந்து வைக்கிறார் என தெரிவித்தார்.
- கொலை செய்யப்பட்டவர் ஹரிணி (33), இரண்டு குழந்தைகளின் தாய்.
- யஷாஸ் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு, கத்தியுடன் வந்துள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பெங்களூரில் பயங்கரம்: ஓட்டல் அறையில் காதலியை 17 முறை கத்தியால் குத்திக் கொன்ற ஐ.டி ஊழியர்
அறையில், ஐடி ஊழியர் ஒருவர் தனது காதலியை கத்தியால் கொடூரமாக குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கெங்கேரி பகுதியில் உள்ள பூர்ணா பிரக்யா லேஅவுட்டில் வெள்ளிக்கிழமை இரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இரண்டு நாட்களுக்குப் பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்படி, கொலை செய்யப்பட்டவர் ஹரிணி (33), இரண்டு குழந்தைகளின் தாய். கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஹரிணி, கெங்கேரியைச் சேர்ந்த தனது காதலனான யஷாஸ் (25) என்ற ஐடி ஊழியருடன் OYO வில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த யஷாஸ், ஹரிணியை கத்தியால் தொடர்ச்சியாக 17 முறை குத்தியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் ஹரிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குடும்ப அழுத்தம் காரணமாக ஹரிணியஷாஸுக்கும் இருந்த தொடர்பை முடித்துக் கொள்ள முயன்றபோது, யஷாஸ் அவளைக் கொலை செய்துள்ளார். யஷாஸ் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு, கத்தியுடன் வந்துள்ளார்.
கொலைக்குப் பிறகு தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட யஷாஸ், வீட்டுக்கு திரும்பி, போலீசுக்குத் தகவல் அளித்தார். பின் போலீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை விசாரணைக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- மனைவி தனுஜாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கார்த்திக் துன்புறுத்தியுள்ளார்.
- கார்த்திக் நாயக், மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் நாயக் என்பவர் 4 ஆண்டுகளுக்கு மும்பு தனுஜா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
மனைவி தனுஜாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கார்த்திக் நாயக், மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
இந்த தகவலறிந்து மண்டபத்துக்கு வந்த மனைவி, அனைவர் முன்பும் கணவனை செருப்பால் அடித்து திருமணத்தை நிறுத்தினார்.
- ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது.
- சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
- எந்த அரசாங்கத்தின் கீழும் இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடக்கக்கூடாது.
- தனிப்பட்ட முறையில் இச்சம்பவம் என்னையும் அரசாங்கத்தையும் காயப்படுத்தியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும்.
எந்த அரசாங்கத்தின் கீழும் இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில், இந்த சம்பவம் என்னையும் அரசாங்கத்தையும் காயப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் 5 காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறைத் தலைவரும் முதல்வரின் அரசியல் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும் இந்தச் சம்பவம் வருத்தமளிக்கிறது. இந்த வழக்கில் அரசு எந்தத் தவறான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு அவமானம் என்ற கேள்விக்கே இடமில்லை.
கும்பமேளாவின்போது மக்கள் இறந்தபோது உத்தர பிரதேச முதல்வர் ராஜினாமா செய்தாரா? பாஜக மற்றும் ஜேடிஎஸ் உத்தரபிரதேச முதல் மந்திரியை ராஜினாமா செய்ய ஏன் கோரவில்லை? என கேள்வி எழுப்பினார்.
- ஆர்.சி.பி. அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது.
- சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்துக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை கண்டித்து, இன்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர். அங்குள்ள மகாத்மா காந்தி சிலையின் படிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
- மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
- இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு:
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியது.
மறுநாள் பெங்களூரு விதான சவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழாவும், சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இச்சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அறிவித்த இழப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
- வேலைக்கு சென்று திரும்பியபோது மற்றொருவருடன் இருப்பதை கணவன் பார்த்துள்ளார்.
- இது தொடர்பாக அடிக்கடி சண்டை வந்த நிலையில், தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவர் 26 வயது மனைவி மற்றும் கைக்குழந்தையும் ஹீலலிகே என்ற கிராமத்தில் வீடு வாடைக்கு எடுத்து வாழ்ந்து வந்தார்.
கடந்த 3ஆம் தேதி, சங்கர் தனது மனைவியிடம் நான் வேலைக்குச் செல்கிறேன். நாளை காலைதான் திரும்பி வருவேன் எனத் தெரிவித்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
வேலை விரைவாக முடிய, இரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மனைவி மற்றொரு நபருடன் இருந்துள்ளார். இதைப் பார்த்த பயங்கர கோபம் அடைந்துள்ளார். மனைவியுடன் இது தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மனைவியும் இவருடன் சண்டையிட்டுள்ளார்.
பின்னர் வீட்டை விட்டு வெளியேறுவதாக மனைவி கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, அடிக்கடி வீட்டிற்கு வந்து சங்கருடன் தகராறு செய்துள்ளார். இதுபோன்றுதான் நேற்றும் சங்கர் வீட்டில் இருந்தபோது, அவரது மனைவி வந்து தகராறு செய்துள்ளார்.
இதனால் சங்கருக்கு கடுங்கோபம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் அவரது கோபம் தீரவில்லை. மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், மனைவியின் தலையை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்துள்ளார். தனது மனைவியை தலை துண்டித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட பேரணியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
- பெங்களூரு கமிஷனர் உள்பட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருடத்திற்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றதால், ஆர்சிபி அணி வீரர்கள் மிக விமர்சையாக கொண்டாடினர்.
ஆர்சிபி அணிக்கு சட்டசபை அமைந்துள்ள இடத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தைக் காண லட்சகணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் மைதானத்திற்கு நுழைய முற்பட்டதால் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்தா உள்பட பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டது நியாமானது, பகுத்தறிவானது அல்ல என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரண் பேடி கூறியதாவது:-
சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. கமிஷனர் எல்லாவற்றையும் புறக்கணித்தாரா? கமிஷனரை எப்படி நீங்கள் சும்மா குற்றம்சாட்ட செல்ல முடியும்? இது நியாயமற்றது.
அவர் தனிமையில் பணியாற்றவில்லை. பெங்களூரு மக்களுக்கு யார் என்ன பங்கு வகித்தார்கள் என்பது கூட தெரியாது. இந்த நிகழ்வில் அவர் தனியாக இல்லை. அரசியல் தலைவர்களும் இருந்தனர்.
பகுத்தறிவு இல்லாத, நியாயமான, விளக்கப்படாத எந்தவொரு இடைநீக்கமும் அதிகாரிகளுக்கான மன உறுதியைக் குலைப்பதாகும். இது மிகவும் அவசரமாக செய்யப்பட்டது. அவர் தனியாக இல்லை. மொத்த அமைப்பின் ஒரு பகுதிதான் அவர்.
இவ்வாறு கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
- உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளது.
- கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல் மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளது.
இந்நிலையில், கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதனை போலீசார் ஏற்றுக்கொண்டனர். இந்த விவகாரத்தில், முன்பே பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். உடன் சேர்த்து, விசாரணை நடத்த பரிசீலனை செய்யப்படும் என வெங்கடேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- ஒரே நேரத்தில் 3 நிகழ்ச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- கமிஷனர் மறுப்பு தெரிவிக்க 2 நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று முன்தினம் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்துவது. அதன்பின் ஆர்சிபி வீரர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரை ரோடு ஷோ நடத்துவது, அதன்பின் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் என மூன்று நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள வாய்ப்புள்ளதால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படும் என போலீசார் எச்சரித்ததால் பேரணி ரத்து செய்யப்பட்டது.
அதேவேளையில் விதான சவுதாவில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உளவுத்துறை தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்ட நெரிசல் நடைபெற்ற புதன்கிழமை காலை, சித்தராமையா வீட்டில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது போலீஸ் கமிஷனர் மூன்று நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என மறுத்துள்ளார். ஆனால் மூன்று நிகழ்ச்சிகளும் நடைபெற வேண்டும் என சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜ் வலியுறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் போலீஸ் கமிஷனர் பிடிவாதமாக இருக்க, விதான சவுதா மற்றும் சின்னசாமி மைதான நிகழ்ச்சிகளுக்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதனால் கோவிந்தராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
- இரவு வேலை முடிந்து 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
- எதிர்பாராத வகையில் கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தும்கூர் நந்திஹள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது தாபஸ் பேட்டை என்ற பகுதியில் உள்ள ஒரு சோலார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்த ராஜேஷ் (25), தனஞ்சய் (27), தனுஷ் (23) ஆகிய 3 பேரும் இரவு வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத வகையில் கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றி தெரியவந்ததும் தும்கூர் போலீஸ் சூப்பிரண்டு அசோக்வெங்கட், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபால் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.






