என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு
    X

    கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு

    • இரவு வேலை முடிந்து 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
    • எதிர்பாராத வகையில் கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தும்கூர் நந்திஹள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது தாபஸ் பேட்டை என்ற பகுதியில் உள்ள ஒரு சோலார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்த ராஜேஷ் (25), தனஞ்சய் (27), தனுஷ் (23) ஆகிய 3 பேரும் இரவு வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத வகையில் கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றி தெரியவந்ததும் தும்கூர் போலீஸ் சூப்பிரண்டு அசோக்வெங்கட், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபால் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×