என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொழி போர்"

    • நாம் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும், வாழ வேண்டும்.
    • மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது.

    கமல்ஹாசனின் கன்னட மொழி பற்றிய கருத்து சர்ச்சையானது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கமல் பேசியதை அரசியலாக்க வேண்டாம். தமிழ்நாடு - கர்நாடகா அண்டை மாநிலங்கள். நாம் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும், வாழ வேண்டும்.

    இங்குள்ள தண்ணீர் தமிழ்நாட்டுக்குச் செல்கிறது. அங்கிருந்து பலர் கர்நாடகாவுக்கு வந்து வேலை செய்கிறார்கள். நாம் எதிரிகள் அல்ல.. நண்பர்கள்.

    மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரம், இந்தப் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக் லைஃப் பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கமல்ஹாசன் பேசும் போது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக பேசினார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    கமல்ஹாசனை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கன்னட அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    மேலும், தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கிடையே கர்நாடக கலாச்சாரஅமைச்சர் சிவராஜ் தங்கட்சி கூறியதாவது:-

    கன்னட நிலம், நீர், மற்றும் மொழி பிரச்சினையில் ஈடுபட்டுள்ள எந்த வொரு பெரிய நபரையும் பொறுத்து கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. கமல்ஹாசன் உடனடியாக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது அனைத்து படங்களும் மாநிலத்தில் தடை செய்யப்படும்.

    நடிப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் நம் மொழி தேவை. இப்போது விளம்பரத்துக்காக இதைப்பற்றி பேசுகிறீர்களா? முன்னதாக சோனுநிகம் கன்னடர்களை பற்றி இதே போல் பேசினார். பின்னர் மன்னிப்பு கேட்டார். அவர்கள் அனைவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

    கமல்ஹாசன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ஒரு மூத்த நடிகர் இது போன்ற அறிக்கையை வெளியிடுவது சரியல்ல. அவரது படங்கள் வெளியிடுவதை தடை செய்ய திரைப்பட வர்த்தக சபைக்கும் கடிதம் எழுதப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் அசோகா கூறுகையில்," கன்னட மொழியை அவமதித்த கமலின் புதிய அல்லது பழைய படங்களை திரையிட கன்னடர்கள் அனுமதிக்கக்கூடாது.

    அரசாங்கமும், கன்னட ஆதரவு அமைப்புகளும் இந்த படங்களை புறக்கணிக்க வேண்டும். கமல்ஹாசன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் பல தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்துள்ளார்.

    கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களின் கடனை அடைக்க அவர் நியாயமாக பேசியிருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர் கன்னடத்தை அவமதித்துள்ளார். அவரது செயல் சகிக்க முடியாதது" என்றார்.

    • கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில் உள்ளன.
    • கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கைகோர்த்து கமலை விமர்சித்து வருகின்றன.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.

    அந்தவகையில் சென்னையில் நடந்த தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.

    இதில் பேசிய கமல், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார்.

    கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில் உள்ளன. இந்த விஷயத்தில் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கைகோர்த்து கமலை விமர்சித்து வருகின்றன.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசன், அவருக்கு அது தெரியாது" என்று தெரிவித்தார்.

    இந்த விஷயம் பூதாகரமாக வெடித்த நிலையில், கமல்ஹாசன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    கேரளாவில் நடக்கும் தக் லைஃப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    தமிழ்நாடு அனைவருக்குமானது. இது பிற மாநிலங்களிலும் இருக்கலாம், நான் இல்லையென சொல்லவில்லை. ஆனால் எங்களுக்கு மேனனும், ரெட்டியும், கன்னட ஐயங்காரும் பலரும் முதல்வராக இருந்திருக்கிறார்கள்.

    கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோதுகூட, 'எங்கும் செல்லாதீர்கள், இங்கே வாருங்கள்' என்று கன்னடர்கள் என்னிடம் சொன்னார்கள்.

    வடக்கிலிருந்து பார்த்தால், அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் தென் குமரியிலிருந்து பார்த்தால், நான் சொல்வதே சரி. இதற்கு இன்னொரு கோணமும் இருக்கும். அதை வல்லுநர்களே சொல்ல வேண்டும்.

    குடும்பத்தோடு இருக்கும் முடிவை எடுக்க வேண்டுமா, அல்லது வடக்கிலிருந்து வந்த மொழியை ஏற்க வேண்டுமா என்பதை அவர்கள் சொல்லட்டும்.

    இந்த விவகாரத்தில், எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றையே நான் சொன்னேன். இந்த பிரச்னையையும் தக் லைஃப்பையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள். ஏனெனில் அவர்களுக்கு இதுபற்றிய போதிய படிப்பினை இல்லை. இது எனக்கும் பொருந்தும்.

    எனவே இப்பிரச்னை பற்றிய ஆழமான கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் நிபுணர்களிடம் விட்டுவிடுவோம். இது என் பதில் அல்ல, விளக்கம். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது. மொழி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழை புறக்கணித்து இந்தியை பாஜக திணிக்கிறது.
    • நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    சென்னை அமைந்தகரையில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மொழிப்போர் தியாகிகள் நாளான இன்று, திருச்சியில் கருணாநிதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சிலை திறந்துள்ளார்.

    மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன். மொழிப்போர் களத்தில் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் முன்நின்றனர்.

    தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.

    இந்தி திணிப்பை எதிர்த்து 12 வயதில் களத்தில் நின்றவர் கருணாநிதி. உலகில் வேறெங்கும் மொழிக்காக இப்படி ஒரு போராட்டம் நடைபெற்றது இல்லை.

    மொழிப் போராட்டத்திற்கு பிறகு தான் திமுக ஆட்சிக்கு வந்தது. மொழியின் பழம்பெருமையை பேசுவது மட்டுமே மொழிப்பற்று அல்ல.

    மொழியை கல்வியறிவின் வாயிலாக வளர்த்தோம், அதனால் தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

    தமிழை புறக்கணித்து இந்தியை பாஜக திணிக்கிறது. இந்தி பேசும் மக்களை ஏமாற்றவே, பாஜக இந்தி மொழியை கையில் எடுத்துள்ளது.

    கொரோனாவை விட கொடியவர்கள் பாஜக அரசு. பாஜகவின் தோல்வி பட்டியில் மிக நீளமானது.

    பாஜக ஆட்சியில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை பெரிதும் உயர்ந்துள்ளது. பாஜகவுக்கு நேற்று வரை ஆமாம் சாமி போட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. இந்தியா கூட்டணி ஆட்சி, உண்மையான கூட்டாட்சியாக அமையும்.

    ராமர் கோவிலை காண்பித்து வடமாநில மக்களை திசை திருப்பி வருகிறது பாஜக. ஆனால், இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக தோல்வியை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×