என் மலர்
இந்தியா

சித்தராமையா, டி.கே.சிவகுமார் தலைமையில் ஆர்.சி.பி. வீரர்களுக்கு பாராட்டு விழா
- ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- விதான் சவுதாவில் ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி முதல் முறையாக ஆர்.சி.பி. அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக சட்டசபை கூட்டம் நடக்கும் விதான் சவுதாவில் ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தாவர்சந்த் கெலாட், கவர்னர் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் உள்பட அணி வீரர்கள் அனைவருக்கும் தலைப்பாகை மற்றும் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, ஆர்.சி.பி. வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக ரசிகர்கள் மைதானத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக திரண்டனர்.
Next Story






