என் மலர்
அரியானா
- விவசாயிகள் போராட்டம் நடத்தும் முறையில் எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது.
- டிராக்டர் என்பது போக்குவரத்து முறை இல்லை. அவர்கள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் செல்ல முடியும்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்தொடர்ச்சியாக அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் (பிப்ரவரி 13-ந்தேதி) புறப்பட்டனர்.
விவசாயிகள் 6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் டீசல் உடன் புறப்பட்டனர். இதனால் டெல்லி எல்லையில் கடந்த 2020-2021-ல் ஏற்படுத்தியது போன்று இடையூறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கருதி அரியானா அரசு விவசாயிகள் டிராக்டரில் செல்லாத வண்ணம் சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் போராட்டம் குறித்து அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது:-
கோரிக்கைகளை எழுப்புவதற்கும், டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்களின் நோக்கத்தை பார்க்க வேண்டும். கடந்த வருடம் என்ன நடந்தது என்பதை நான் அனைவரும் பார்த்தோம். விவசாயிகள் பல்வேறு எல்லைகளை ஆக்கிரமித்து பிரச்சனையை ஏற்படுத்தினார்கள்.

அவர்கள் போராட்டம் நடத்தும் முறையில் எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது. டிராக்டர் என்பது போக்குவரத்து முறை இல்லை. அவர்கள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் செல்ல முடியும். விவாதம் ஜனநாயக முறையில் நடைபெற்று தீர்வு காணப்பட வேண்டும்.
இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
- டெல்லியில் பேரணி நடத்த அரியானாவில் இருந்து விவசாயிகள் புறப்பட்டுள்ளனர்.
- அரியானா-பஞ்சாப் எல்லை மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் பேரணி நடத்த அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்ட வண்ணம் உள்ளனர். அரியானாவில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு செல்ல முடியாத வகையில் பல்வேறு தடுப்புகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
நேற்று அரியானா- பஞ்சாப் மாநில எல்லையில் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் தடுப்புகளை அகற்றி முன்னேற முயன்றனர். அப்போது அரியானா போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்றும் விவசாயிகள் பேரணியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள். இதனால் அசாதாரண நிலை உருவாகியுள்ளது. இதனால் அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசர், ஃபடேஹாபாத், சிர்சா மாவட்டங்களில் மொபைல் இணைய தள சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்பவும் தடைவிதிக்கப்படுகிறது.
வாய்ஸ் கால் தவிர்த்து அனைத்து நெட்வொர்க் தொடர்பான சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை வரை இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்த நிலையில் டெல்லியில் தடைஉத்தரவு பிறக்கப்பட்டது.
- சண்டிகரில் மத்திய அரசு விவசாயிகள் சங்கங்களுடன் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தின.
தங்களுடைய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன.

இதனால் முன்னெச்சரிக்கையாக டெல்லி-அரியானா, டெல்லி- பஞ்சாப் மாநில எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விவசாயிகளுடன் நேற்று மத்திய அமைச்சர்கள் சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதனால் இன்று காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் டெல்லியை சுற்றி கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்ல இருப்பதாக தகவல்.
- 2020 பேரணியின்போது விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை நோக்கி சென்றதால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த பேரணி வருகிற செவ்வாய்க்கிழமை (நாளைமறுதினம்) நடக்கிறது.
விவசாயிகள் பேரணி அரியானாவில் இருந்து பஞ்சாப் வழியாக டெல்லிக்கு செல்ல இருக்கிறது. இதனால் அரியானாவில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் பஞ்சாப் செல்ல முடியாத அளவிற்கு ஹரியானா அரசு சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
சாலையின் குறுக்கே பெரிய கான்கிரீட் தடுப்பு கற்களை வைத்துள்ளனர். மேலும், கான்கிரீட் கலவை போட்டு சாலையை மறித்துள்ளனர். அத்துடன் பெரியபெரிய ஆணிகளை சாலையில் வைத்துள்ளனர். அத்துடன் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. குரூப்பாக மெசேஜ் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.
2020-ல் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். பஞ்சாப்- டெல்லி எல்லையில் உள்ள அம்பாலா இடத்தில் போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளி டெல்லி நோக்கி புறப்பட்டனர். விவசாயிகள் சுமார் ஒரு வடத்திற்கு மேல் போராட்டம் நடத்திய நிலையில் மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 சட்டத்தை திரும்பப் பெற்றது.
ஷம்புவில் உள்ள அரியானா-பஞ்சாப் எல்லையில் வாகன போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதான் அம்பாலா மற்றும் டெல்லிக்கு செல்லும் முக்கிய எல்லையாகும்.
தங்களது விவசாய பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலையை உறுதி வகையில் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பேரணியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- ஹரியானாவில் நடைபெற்ற ராமாயணம் நாடகத்தின்போது இந்த சோகமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெரும்பாலான மாநிலங்களில் ராமாயாணம் நாடகம் நடத்தப்பட்டது. கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஹரியானா மாநிலம் பிவானியில் ராமாயணம் நாடகம் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தில் ஹரிஷ் மேத்தா என்பவர் ஹனுமான் வேடம் ஏற்றிருந்தார். நாடகத்தின்படி அவர் பகவான் ராமரின் காலை தொட்டு வணங்க வேண்டும். அத்துடன் அவரது கதாபாத்திரம் முடிவடையும்.
நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென ஹரிஷ் மேத்தா திடீரென சரிந்து விழுந்தார். நாடகத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தவர்கள் நாடகத்தின் ஒரு பகுதியாக அவர் கீழே விழுந்திருப்பதாக நினைத்தனர். ஒருசில நிமிடம் அப்படியே விழுந்து கிடந்ததால், அவருக்கு ஏதோ நிகழ்ந்துள்ளது எனத் தெரியவந்தது. இதனால் நாடகம் நடைபெற்ற பகுதி பரபரப்பானதாக மாறியது.
உடனடியாக அவரை தூக்கிக்கொண்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவவர்கள், ஹரிஷ் மேத்தா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
ராமர் கண்திறந்த நாளில், அவருக்கு உறுதுணையாக இருந்த ஹனுமானின் வேடம் ஏற்று நடித்த ஒருவர மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஹரிஸ் மேத்தா மின்சாரத்துறையில் ஜூனியர் பொறியாளராக வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் ஒரு நாடக நடிகர். ஹனுமானாக கடந்த 25 வருடங்களாக வேடமிட்டு நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தங்களுக்கு புது வாழ்க்கை கிடைத்துள்ளதாக கவுதம், குப்தா இருவரும் கூறினர்
- நுட்பமான இந்த அறுவை சிகிச்சைகள் இந்திய மருத்துவ சாதனையாகும்
அரியானா மாநில ஃபரிதாபாத் நகரில் உள்ளது அம்ரிதா மருத்துவமனை (Amrita Hospital).
10 வருடங்களுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் டெல்லியை சேர்ந்த 65 வயதான கவுதம் டயால் (Gautam Tayal).
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தொழிற்சாலை விபத்தில் கவுதம் இடது கரத்தை இழந்தார்.
சிகிச்சைக்காக அம்ரிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கவுதமிற்கு, தானே (Thane) நகரில் தலையில் காயம் பட்டு "மூளைச் சாவு" அடைந்த 40 வயதான ஒருவரின் கையை மருத்துவர்கள் பொருத்தினர்.
வட இந்தியாவில் நடந்த முதல் "கை மாற்று" அறுவை சிகிச்சை இதுதான்.
அது மட்டுமின்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவருக்கு கை மாற்று சிகிச்சை நடைபெறுவதும் இதுதான் நாட்டிலேயே முதல்முறை.
மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். மோஹித் ஷர்மா (Dr. Mohit Sharma), "இது ஒரு அரிய சாதனை. அவரது கர அசைவுகள் படிப்படியாக செயல்பட தொடங்கி விட்டது. ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை முடிவடைந்து கவுதம் சீராக உடல்நலம் தேறி வருகிறார்.
டெல்லியை சேர்ந்த 19 வயது இளைஞர் தேவான்ஷ் குப்தா (Devansh Gupta).
3 வருடங்களுக்கு முன் குப்தா ஒரு ரெயில் விபத்தில் இரு கரங்களையும், வலது காலையும் இழந்தார்.
மூளைச்சாவு அடைந்த சூரத் நகரை சேர்ந்த ஒரு 33 வயது நபரிடமிருந்து இரு கரங்கள், உறுப்பு தானத்தில் பெறப்பட்டு, குப்தாவிற்கு மருத்துவர்கள் பொருத்தினர்.
நுட்பமான இந்த அறுவை சிகிச்சை குறித்து உறுப்பு மாற்று சிகிச்சை துறையின் மூத்த ஆலோசகர், டாக்டர் அனில் முரார்கா (Dr. Anil Murarka), "குப்தாவின் வலக்கரம், மேல் பகுதி வரை மாற்றி பொருத்தி இணைக்கப்பட்டது. இடக்கரம், முழங்கை வரை பொருத்தி இணைக்கப்பட்டது. இது சிக்கலான அறுவை சிகிச்சை. ஆனால், வெற்றிகரமாக நடந்தது" என தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை முடிந்து குப்தா, சீராக உடல்நலம் தேறி வருகிறார்.
மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ள கவுதம் மற்றும் குப்தா இருவரும், "இந்த மாற்று அறுவை சிகிச்சை எங்கள் வாழ்வில் ஒரு மறுவாய்ப்பையும், புதிய நம்பிக்கைகளையும் அளித்துள்ளது" என தெரிவித்தனர்.

ஃபரிதாபாத் நகரின் செக்டார் 88 பகுதியில், 130 ஏக்கரில் பல்துறை சிறப்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனைகளில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது அம்ரிதா மருத்துவமனை.
2600 படுக்கை வசதிகளுடன் அதி நவீன அறுவை சிகிச்சைகளில் அனைத்து உயர் தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட இதனை 2022ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் மீண்டும் உயிர் பெற்றார்
ஹரியானா-வை சேர்ந்த 80 வயதான முதியவர் தர்ஷன் சிங் பிரார். உடல் நலம் சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து கர்னால் அருகே உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது இல்லத்தில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் கைதலில் உள்ள தண்ட் கிராமத்திற்கு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, பள்ளத்தில் சிக்கியது. அதன் பின்னர் நடந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தர்ஷன் சிங் பிராரின் கைகளில் அசைவு ஏற்பட்டது. அதனை கவனித்த குடும்பத்தினர், அருகில் உள்ள ராவல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் சிங் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர்.
உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தர்ஷன் சிங்-ன் பேரனான பல்வான் சின் கூறுகையில், "உடல் நலம் சரியில்லாத நிலையில் தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அவர் நான்கு நாட்களாக வெண்டிலேட்டரில் இருந்தார். பின்னர் இதய துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார். உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதனைதொடர்ந்து "தாத்தா இப்போது உயிருடன் இருப்பது ஒரு அதிசயம், அவர் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.
இதுகுறித்து ராவல் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது, "நோயாளி இறந்துவிட்டார் என சொல்ல முடியாது. அவரை எங்களிடம் கொண்டு வந்த போது, அவருக்கு மூச்சு திணறல் இருந்தது, இரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு இருந்தது. மற்ற மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது என்றும், தொழில்நுட்ப பிழை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறினர்
- நண்பர் அண்மையில் வாங்கிய புதிய டி.வி.யை அந்த நிறுவனத்தின் பணியாளர் சேதப்படுத்தி விட்டார்.
- பதிவு வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டனர்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டி.வி. ஒன்றை ஆகாஷ்ஜெய்னி என்ற வாடிக்கையாளர் வாங்கி இருந்தார். அவர் அந்த டி.வி.யை பொருத்துவதற்கு வாடிக்கையாளர் சேவை மைய உதவியை தொடர்பு கொண்டு பேசினார். அதன் அடிப்படையில் நிறுவனத்தில் இருந்து வந்த பணியாளர் டி.வி.யை பொருத்தும் போது அதனை சேதப்படுத்தி விட்டார்.
இதுகுறித்து ஆகாஷ்ஜெய்னி சேவை மையத்தை தொடர்பு கொண்டு பேசிய போது, ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.க்கு வெறும் ரூ.10 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு ஆகாஷ்ஜெய்னி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவரது நண்பர் திவ்யான்ஷூ தேம்பி, என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எனது நண்பர் அண்மையில் வாங்கிய புதிய டி.வி.யை அந்த நிறுவனத்தின் பணியாளர் சேதப்படுத்தி விட்டார்.
ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.க்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும் என நீங்கள் கூறுவது நகைச்சுவையாக இல்லையா? முழுத்தொகையும் இழப்பீடாக வழங்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் இழப்பீடு தொகையை ரூ.20 ஆயிரமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
- யமுனா நகர், சோனிபட், மொகலி பரிதாபாத், சண்டிகார் உள்ளிட்ட நகரங்களில் சோதனை.
- சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல்.
அரியானா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் பன்வார் மற்றும் முன்னாள் ஐ.என்.எல்.டி. சட்டமன்ற உறுப்பினர் தில்பாக் சிங் உள்ளிட்டோருக்கு தொடர்பான சுமார் 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
In Haryana illegal mining case, the Enforcement Directorate is carrying out searches at premises linked to Congress leader Surender Panwar and former INLD legislator Dilbag Singh. Raids are underway at 20 locations in Yamuna Nagar, Sonipat, Mohali Faridabad, Chandigarh and Karnal… pic.twitter.com/N6ukp1yZT2
— ANI (@ANI) January 4, 2024
இந்த சோதனை யமுனா நகர், சோனிபட், மொகலி பரிதாபாத், சண்டிகார் மற்றும் கர்னால் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய அளவிலான சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
- தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை அவர் பிரதமருக்கு திருப்பி அளித்தார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை என்னால் ஏற்கமுடியாது. எனவே மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதேபோல், 2019-ம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா திருப்பி அளித்தார்.

இந்நிலையில், அரியானாவில் உள்ள மல்யுத்த வீரரான வீரேந்தர் ஆர்யா அகாரா வீட்டுக்கு ராகுல் காந்தி இன்று சென்றார்.
அங்கிருந்த மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்திக்கு மல்யுத்தம் செய்வது குறித்து பஜ்ரங் புனியா பயிற்சி அளித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- கோயிலில் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் சிக்கினர்.
- மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி.
ஹரியானாவில் உள்ள கோயிலின் சுவர் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சிக்கியுள்ளதாகவ தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஜெகநாதர் கோயில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது.
இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் சிக்கினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், முதற்கட்டமாக ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 4 பேரையும் மீட்பு குழுவினர் மீட்டனர். இந்த 5 பேரில், 4 பேர் நலமுடன் உள்ளதாகவும், ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- அரியானாவின் குருஷேத்ராவில் ஆண்டுதோறும் பகவத் கீதை மகா உற்சவம் நடைபெற்று வருகிறது.
- இதில் பங்கேற்ற உள்துறை மந்திரி பகவத் கீதை மகா உற்சவம் அதன் நோக்கங்களை நிறைவேற்றி உள்ளது என்றார்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தின் குருஷேத்ராவில் ஒவ்வொரு ஆண்டும் பகவத் கீதை மகா உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் சர்வதேச பகவத் கீதை மகா உற்சவம் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்த விழா வரும் 24-ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், பகவத் கீதை மகா உற்சவ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
வருடாந்திர சர்வதேச பகவத் கீதை மகா உற்சவம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். அதனை கடந்த 2016 முதல் அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் நிறைவேற்றிக் காட்டி வருகிறார்.
பகவத் கீதையின் போதனைகள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும், உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைய வேண்டும்.
கடந்த 2016 முதல் பகவத் கீதை மகா உற்சவம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பகவத் கீதை மகா உற்சவம் அதன் நோக்கங்களை நிறைவேற்றி உள்ளது என தெரிவித்தார்.






