என் மலர்
டெல்லி
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
- இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.122.50 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.122.50 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.39.95 கோடி வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெறும் லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட் விலையை ஐசிசி அறிவித்துள்ளது.
முதல் கட்ட விற்பனையில் டிக்கெட்டின் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினமே டிக்கெட்களை பெற விரும்பும் ரசிகர்கள் பதிவுசெய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தேசிய நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் ஜாமாகி நின்றன.
- இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்க ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆனது.
தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சமீபத்தில், குருகிராமில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தபோது தேசிய நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் ஜாமாகி நின்றன.
இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்க ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் சலித்துக்கொண்டனர்.
இந்த சூழலில், மணிக்கணக்கில் போக்குவரத்தில் சிக்கி காத்திருந்த இளைஞர் ஒருவர் சோர்வடைந்து தனது பைக்கை தலையில் சுமந்து சென்றார்.
அவருடன் மற்றொரு இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒத்தாசையாக நடந்து சென்றார். அவர் பைக்கை சுமந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
- இதுபோன்ற வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி மற்றும் கூடுதல் செஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 28 சதவீத IGST விதிக்கப்படும்.
- தற்போது, ஜனாதிபதி முர்மு பயணங்களுக்கு Mercedes-Benz S600 Pullman Guard Limousine பயன்படுத்தப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது
இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக வாங்கும் புதிய BMW காருக்கு வரிகளில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.3.66 கோடி மதிப்புள்ள இந்த குண்டு துளைக்காத வாகனத்தின் மீது IGST மற்றும் இழப்பீட்டு செஸ் வரியை தள்ளுபடி செய்ய GST கவுன்சில் முடிவெடுத்தது.
வழக்கமாக, இதுபோன்ற வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி மற்றும் கூடுதல் செஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 28 சதவீத IGST விதிக்கப்படும்.
இருப்பினும், இந்த வாகனம் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என்று கருதிய GST கவுன்சில், ஜனாதிபதியின் வாகனம் ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல, மாறாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு காரணத்தின் அடிப்படையில் விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது.
இதன் மூலம், ஜனாதிபதியின் செயலகம் இந்த வாகனத்தை எந்த வரி சுமையும் இல்லாமல் வாங்கும்.
தற்போது, ஜனாதிபதி முர்மு பயணங்களுக்கு Mercedes-Benz S600 Pullman Guard Limousine பயன்படுத்தப்படுகிறது. இப்போது அந்த இடத்தை BMW செடான் நிரப்ப உள்ளது.
- நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 அன்று ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்படுத்தப்படும்.
- இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்துப் பொருட்களின் விலை குறையும்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:
உரிய காலத்தில் மாற்றங்கள் செய்யாமல் தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டை சரியான இடத்தில் நிலைநிறுத்த முடியாது.
ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையில் உரையாற்றும்போது இந்தியாவை தன்னிறைவு பெறுவதற்காக, அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தேன். இந்த தீபாவளி மற்றும் சாத் பண்டிகைக்கு மக்களுக்கு இரட்டிப்பு பரிசு கிடைக்கும் என உறுதியளித்து இருந்தேன்.
தற்போது ஜிஎஸ்டி இன்னும் எளிதாக மாறி உள்ளது. நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 அன்று அடுத்த தலைமுறைக்கான இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்படும். இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்துப் பொருட்களின் விலையும் குறையும்.
மக்களுக்கு ஆதரவான கொள்கையே எங்களது நோக்கம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யும். நாட்டின் தேவை குறித்து ஒவ்வொரு மாணவரும் அடுத்த தலைமுறையினரும் சிந்திக்க வேண்டும்.
8 ஆண்டுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, பல ஆண்டு கனவு நனவானது. ஜிஎஸ்டிக்கான விவாதம் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கவில்லை. அதற்கு முன்னரே விவாதம் நடந்தது. ஆனால், அதற்கான பணிகளில் யாரும் ஈடுபடவில்லை
ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன், நுகர்வு அதிகரித்து நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனால் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்கு ஊக்கம் கிடைக்கும். வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான கூட்டாட்சி ஒத்துழைப்பை இது பலப்படுத்தும். ஏழைகள், நடுத்தர வகுப்பினர், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் அனைவரும் பயன்பெறுவர் என தெரிவித்தார்.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது.
- வரும் 9-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி 28-ம் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் டி20 போட்டி முறையில் நடக்கிறது.
இந்நிலையில், ஆசியக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு குல்தீப் யாதவ் விளையாடுவது முக்கியம் என முன்னாள் வீரர் மதன்லால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதன்லால் கூறியதாவது:
திறமையான அணியாக இருப்பதால் இந்தியா ஒரு வலுவான அணியாக உள்ளது. இருப்பினும் கணிக்க முடியாத டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைப் பொறுத்து இந்தியா கோப்பையை வெல்வது அமையும்.
ஆப்கானிஸ்தான் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அனைத்தும் வலுவான போட்டியாளர்கள்.
குல்தீப் யாதவ் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். அவரது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைலை டி20 கிரிக்கெட்டில் எதிரணிகள் அடித்து நொறுக்குவது கடினமாக இருக்கும். அவரது தேர்வு பற்றிய இறுதி முடிவு ஆடுகளம் மற்றும் கால சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும்.
துபாயில் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும். இந்திய அணி தன்னுடைய திறன் காரணமாக கோப்பையை வெல்வதற்கு வலுவான அணியாக இருக்கிறது என தெரிவித்தார்.
- இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
- இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல.
புதுடெல்லி:
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக இந்தியாவில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
- அமித் மிஸ்ரா 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.
- இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா (42), அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களும் அடித்துள்ளார்.
அமித் மிஸ்ரா கடந்த 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இவர் கடைசியாக 2017-ல் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விளையாடினார். ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார்.
அமித் மிஸ்ரா ஓய்வு குறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விளையாட்டு எனது முதல் காதல், எனது ஆசான், எனது மிகப்பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்தது. பிசிசிஐ, அரியானா கிரிக்கெட் அமைப்பு, எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் எனக்கு வலிமை அளித்த ரசிகர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
எனது உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் உறுதியாக என் பக்கம் நின்றதற்கு எனது குடும்பத்தினற்கும் நன்றி. கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது என பதிவிட்டுள்ளார்.
- ரஷியாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50% வரிவிதித்தார்
- பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்ய டிரம்பின் 50% வரிவிதிப்பு தான் காரணம் என்று என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், " அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம்" என்று தெரிவித்தார்.
- பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்து தஞ்சம் புகுந்த சிறுபான்மையினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
- இப்போது அது 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2024 வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தக்க சட்டம் (CAA) மற்றும் புதிதாக செயல்படுத்தப்பட்ட வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின்கீழ் குடியுரிமை விதிமுறைகளை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 31, 2024 க்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள் மற்றும் பார்சிகள், பாஸ்போர்ட் அல்லது பிற ஆவணங்கள் இல்லாவிட்டாலும் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் இங்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
முன்னதாக CAA-வில், இந்த வரம்பு டிசம்பர் 31, 2014 வரை நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் இப்போது அது 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2024 வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத ரீதியான தாக்குதல்கள் காரணமாக இந்தியாவிற்கு வந்து இதுவரை தங்கள் எதிர்காலம் குறித்து குழப்பத்தில் இருந்த அகதிகளுக்கு இதன் மூலம் நேரடி பலன் கிடைக்கும்.
- பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன.
- 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 உயிர்களை பலிகொண்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது.
இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன.
1971 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கூட்டாக பாகிஸ்தானுடன் மோதியது இதுவே முதல் முறை.
பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் புதிய வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்படுவது பதிவாகி உள்ளது.
- புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
- 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:
உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டது.
மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் நீக்கப்பட்டது.
தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:
வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படுள்ளது.
ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நொறுக்குதீனிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வரி உயர்த்தப்பட்ட பொருட்கள்:
சிகரெட், பான்மசாலா, கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

- புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
- குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனது சுதந்திர தின உரையின் போது, ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எங்கள் நோக்கம் குறித்து நான் பேசியிருந்தேன்.
சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருந்தது.
மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய அரசு சமர்ப்பித்த ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது.
இது சாமானியர், விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நமது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் மற்றும் அனைவருக்கும், குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.






