என் மலர்
இந்தியா

அமெரிக்காவின் 50% வரி விதிப்புதான் GST சீர்திருத்தத்திற்கு காரணமா? - நிர்மலா சீதாராமன் விளக்கம்
- ரஷியாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50% வரிவிதித்தார்
- பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்ய டிரம்பின் 50% வரிவிதிப்பு தான் காரணம் என்று என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், " அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம்" என்று தெரிவித்தார்.






