என் மலர்
இந்தியா

CAA சட்டத்தில் மாற்றம்.. இந்த 3 நாடுகளின் சிறுபான்மையினருக்கு சலுகை வழங்கிய மத்திய அரசு
- பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்து தஞ்சம் புகுந்த சிறுபான்மையினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
- இப்போது அது 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2024 வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தக்க சட்டம் (CAA) மற்றும் புதிதாக செயல்படுத்தப்பட்ட வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின்கீழ் குடியுரிமை விதிமுறைகளை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 31, 2024 க்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள் மற்றும் பார்சிகள், பாஸ்போர்ட் அல்லது பிற ஆவணங்கள் இல்லாவிட்டாலும் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் இங்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
முன்னதாக CAA-வில், இந்த வரம்பு டிசம்பர் 31, 2014 வரை நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் இப்போது அது 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2024 வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத ரீதியான தாக்குதல்கள் காரணமாக இந்தியாவிற்கு வந்து இதுவரை தங்கள் எதிர்காலம் குறித்து குழப்பத்தில் இருந்த அகதிகளுக்கு இதன் மூலம் நேரடி பலன் கிடைக்கும்.






