என் மலர்
டெல்லி
- கல்லூரி மாணவி ஒருதலைக் காதலை ஏற்க மறுத்தார்.
- இதனால் அந்த மாணவி மீது திராவகம் வீசப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் அவர் நேற்று காலை கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தினர்.
அப்போது அந்த மாணவி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்து அவர் விலகி செல்ல முயன்றார்.
அப்போது நொடிப்பொழுதில் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் முகத்தை நோக்கி வீசினார்.
அப்போது தனது முகத்தை அந்த இளம்பெண் தனது கைகளால் மறைத்துக் கொண்டார். இதில் அவருடைய கைகள் வெந்து கருகின. இதனால் வலியில் அலறி துடித்த அந்த மாணவி சாலையில் சரிந்தார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர்கள் தப்பிச் சென்றனர்.
படுகாயம் அடைந்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் மாணவியுடன் அதே கல்லூரியில் படித்து வரும் ஜிதேந்தர் என்பவர்தான் திராவகத்தை வீசியது தெரிந்தது. ஜிதேந்தர் அந்த மாணவியை கடந்த 7 மாதமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் அவரை எப்படியாவது காதலில் விழ வைக்க வேண்டும் என்னும் முயற்சி தோல்வியில் முடிய இந்த பயங்கரமான சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
தலைமறைவான ஜிதேந்தர், அவருடைய நண்பர்கள் அர்மான், இஷான் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- ஆசியான் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், 21ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு என தெரிவித்தார்.
புதுடெல்லி:
மலேசியாவில் ஆசியான் மாநாடு நடக்கிறது. அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஆசியான் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு வாழ்த்துகள். இந்த அமைப்பில் புதிதாக இணைந்துள்ள திமோர் நாட்டை வரவேற்கிறேன்.
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பு நாடுகளில் தான் வசிக்கின்றனர். நாம் வர்த்தக உறவை மட்டும் பகிரவில்லை. கலாசார உறவுகளையும் பகிர்கிறோம்.
இந்தியாவின் தெற்கு நோக்கிய கொள்கையில் ஆசியான் அமைப்பு முக்கிய தூணாக திகழ்கிறது. சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக நமது வலுவான கூட்டாண்மை உருவாகி வருகிறது.
இந்தியா எப்போதும் ஆசியான் கூட்டாளிகளுடன் துணை நின்று வருகிறது. மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணி, கடலோர பாதுகாப்பு மற்றும் கடல், கடல்சார் வளங்கள் அடிப்படையிலான பொருளாதாரம் ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது.
2026 ம் ஆண்டை ஆசியான் - இந்தியா கடலோர பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஆண்டு என அறிவித்துள்ளோம்.
கல்வி, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுவாக ஊக்குவித்து வருகிறோம்.
21-ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு. இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு. ஆசியான் அமைப்பின் சமூக தொலைநோக்கு கொள்கை 2045 மற்றும் வளர்ந்த பாரதம் 2047 ஆகியவற்றின் நோக்கம், முழு மனித குலத்துக்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குமென நம்புகிறேன் என தெரிவித்தார்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. தற்போது பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த மினி குவாலிபையர் சுற்று போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே தெலுங்கு டைட்டன்ஸ் அணி சிறப்பாக ஆடியது.
இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-32 என்ற புள்ளிக் கணக்கில் வென்று எலிமினேட்டர் 3 சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் 2 சுற்றில் பாட்னா அணி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நேற்று ஆரம்பித்தன.
இன்று நடந்த எலிமினேட்டர் 1 சுற்று போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தது.
இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 48-32 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி எலிமினேட்டர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் 2 சுற்றில் பாட்னா அணி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது.
- பீகாரில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் நடைபெற இருக்கிறது.
- அடுத்த வருடம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
என்றாலும், நடைமுறைப்படுத்தி அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நாடு தழுவிய SIR குறித்து அறிவிக்க, நாளை மாலை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது விரிவான விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களுடன் 10 முதல் 15 மாநிலங்களில் முதற்கட்டமாக SIR பணியை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- வலதுசாரி மையக் கட்சியான Fine Gael-ஐ சேர்ந்த ஹீதர் ஹம்ப்ரீஸ் 29% வாக்குகள் மட்டுமே பெற்றார்.
- அயர்லாந்தில் நிலவும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய பிரசனைகளை முன்னிறுத்தி இளைஞர்ளை ஈர்த்தார்.
அயர்லாந்தின் அடுத்த அதிபராக இடதுசாரி சுயேச்சை வேட்பாளரான கேத்தரின் கொனோலி பதவியேற்க உள்ளார்.
நேற்று முன் தினம் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட முடிவுகளின்படி கொனோலி 63% வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி மையக் கட்சியான Fine Gael-ஐ சேர்ந்த ஹீதர் ஹம்ப்ரீஸ் 29% வாக்குகளும் பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.
ஆரம்பகட்ட முடிவுகளின்படி அதிக வித்தியாசத்தில் பின்தங்கியதால் ஹீதர் ஹம்ப்ரீஸ் தோல்வியை ஒப்புக்கொண்டு கொன்னோலிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால் கொன்னோலி அடுத்த அதிபராவது உறுதியாகி உள்ளது.
அயர்லாந்தில் நிலவும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய பிரசனைகளை முன்னிறுத்தி களம் கண்ட கொனோலி இளைஞர்களின் வாக்குகளை அதிகம் ஈர்த்தார். மேலும் Sinn Fein, தொழிலாளர் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஆதரவையும் அவர் பெற்றிருந்தார்.
முன்னாள் பாரிஸ்டரான கொனோலி, 2016 முதல் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். காசா போர் தொடர்பாக இஸ்ரேலைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
உக்ரைன் போர் தொடர்பாக நேட்டோ கூட்டமைப்பின் செயல்பாடுகளையும் விமர்சித்து வந்தார். ஐரோப்பிய ஒன்றியம் சமூக நலனை புறக்கணித்து ராணுவமயமாக்களில் கவனம் செலுத்துவதாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பித்தன.
இன்று நடந்த முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின.
இறுதியில் ஜெய்ப்பூர் அணி 30-27 என்ற புள்ளிக் கணக்கில் வென்று எலிமினேட்டர் 1 சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும், யு மும்பா அணியும் மோதின. ஆரம்பம் முதலே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளைக் குவித்தது.
இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 40-31 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி எலிமினேட்டர் 1 சுற்றுக்கு முன்னேறியது. மும்பையிடம் லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு பாட்னா இன்று பழிதீர்த்துக் கொண்டது.
தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் 1 சுற்றில் ஜெய்ப்பூர், பாட்னா அணிகள் மோதுகின்றன.
- LIC இன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
- அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதி முதலீடு.
அதானி குழுமத்தின் நலனுக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோதானி (மோடி + அதானி) கூட்டு முயற்சியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் (LIC) அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
2025 மே மாதத்தில் பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதியை முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் வரைவு செய்து செயல்படுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் இலக்குகளாக அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது" மற்றும் "மற்ற முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது ஆகியவை அறிவிக்கப்பட்டன.
இந்த மோதானி மெகா மோசடி முழுமையையும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது வருகிறது. இது தொடர்பாக 100 கேள்விகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.
நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் யாருடைய அழுத்தத்தின் கீழ், நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனத்தை பிணை எடுப்பது என்று முடிவு செய்தனர்?
2024 செப்டம்பர் 21, அன்று அமெரிக்காவில் கவுதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் நான்கு மணி நேர வர்த்தகத்தில் 7,850 கோடி ரூபாய் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.
முதல் கட்டமாக, குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC), LIC எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
- பணிக்கு வரவும் பணி முடித்து திரும்பவும் போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும்.
பெண்கள் இரவுப் பணி செய்ய அனுமதித்து டெல்லி தொழிலாளர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் இரவுப் பணிகளில் ஈடுபடுத்த நிறுவனங்கள் பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் பெற வேண்டும்.
பணிக்கு வரவும் பணி முடித்து திரும்பவும் போக்குவரத்து வசதி மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு உட்பட போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனங்கள் செய்ய வேண்டும். மேலும் மதுபான கடைகளில் பெண்கள் இரவுப் பணி செய்வதற்கு மட்டும் தடை நீடிக்கும்.
பெண்கள் இரவுப் பணியில் ஒரு நாளைக்கு 9 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஜூலையில் அறிவித்த இந்தச் சீர்திருத்தம், 1954 டெல்லி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளை திருத்தியதன் மூலம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே பெண்கள் இரவு நேரப் பணி செய்ய அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒப்பந்தம் தெடர்பான பேச்சுவார்த்தையில் தடங்களுக்கான எந்த பிரச்சினையும் இல்லை.
- பெரும்பாலான பிரச்சினையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செல்கிறது.
இந்தியா- அமெரிக்கா இடையே பரிந்துரை செய்யப்பட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாத்திற்குள் முடிக்க வேண்டும் இருநாட்டு தலைவர்களும் அவரவர் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் இருநாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்டத்திற்கான 5 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் இந்தியா- அமெரிக்கா, இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் மிக அருகில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய தீர்மானத்திற்காக மிகப்பெரிய அளவில் வேறுபாடு இல்லை. ஒப்பந்தம் தெடர்பான பேச்சுவார்த்தையில் தடங்களுக்கான எந்த பிரச்சினையும் இல்லை. பெரும்பாலான பிரச்சினையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செல்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் "ஒப்பந்தத்திற்கான அவசரம் காட்டமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார்.
- அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார்.
உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு நீதிபதி கவாயிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய சீனியாரிட்டியின்படி, நீதிபதி சூர்யா காந்த் அடுத்த தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும்.
- இருவருக்கும் சர்வதேச அளவிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பது அம்பலமானது.
- கைதான 2 பேரும் தற்கொலை தாக்குதல் பயிற்சி எடுத்தவர்கள் என தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் அட்னான் உள்பட 2 பேரை பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இருவருக்கும் சர்வதேச அளவிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பது அம்பலமானது. மேலும் கைதான 2 பேரும் தற்கொலை தாக்குதல் பயிற்சி எடுத்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் டெல்லியில் குண்டு வைக்கவும் அவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.






