என் மலர்tooltip icon

    டெல்லி

    • டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.
    • டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டம்

    தீபாவளி பண்டிகையன்று டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.

    காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

    அவ்வகையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைக்க உத்தரபிரதேசத்தின் கான்பூரிலிருந்து விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டது.
    • 8-வது ஊதியக்குழுவுக்கு 3 உறுப்பினர்களை நியமித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மேம்படுத்துவதற்காக 8-வது ஊதியக் குழுவை அமைக்க ஜனவரி 16, 2025 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த ஒப்புதலின்படி, ஊதியக் குழு தலைவர், உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இந்த ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள், ஓய்வூதியங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும்.

    இந்நிலையில், 8-வது ஊதியக்குழுவுக்கு 3 உறுப்பினர்களை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

    8வது ஊதியக் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    8வது ஊதியக் குழு செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கஜ் ஜெயின் நியமனம் செய்யப்பட்டார்.

    பகுதிநேர உறுப்பினராக ஐ.ஐ.எம். பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் நியமிக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக, மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் கூட்டு ஆலோசனைக் குழு (JCM) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகு ஊதியக் குழுவின் செயல்பாட்டிற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டது.

    இந்தக் குழு தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

    • பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
    • பாட்டிலில் தண்ணீரை பிடித்து குடிக்கும் வகையில் ரீல்ஸ் பதிவு செய்தார்.

    வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் ஒன்று சாத் பூஜை. சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டின் சாத் பூஜை கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. சாத் பூஜையையொட்டி யமுனா நதியில் பொதுமக்கள் நீராடவுள்ளனர். யமுனை ஆற்றின் நீர் கடுமையாக மாசடைந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அந்த சமயத்தில் யமுனை ஆற்றின் தூய்மை குறித்து எடுத்துரைக்க ஆற்றுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ. பாட்டிலில் தண்ணீரை பிடித்து குடிக்கும் வகையில் தூய்மையானது என சொல்லியவாறு ரீல்ஸ் பதிவு செய்தார்.

    அப்போது, ஆற்றின் கரையோரம் நின்றுகொண்டிருந்த பாஜக எம்.எல்.ஏ. திடீரென நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் உடனடியாக அவரை ஆற்றில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • SJ 100 விமானம் 98 பயணிகள் வரை பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
    • மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமானம் தயாரிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    சுகோய் சூப்பர் ஜெட் SJ 100 என்பது ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஒரு இரட்டை எஞ்சின் கொண்ட குறுகிய தூர பயணிகள் விமானம்.

    இது முன்னர் 'சுகோய் சூப்பர்ஜெட் 100' (SSJ100) என அழைக்கப்பட்டது.

    தற்போது பொருளாதாரத் தடைகள் காரணமாக SJ-100 பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய SJ-100 விமானம் 98 பயணிகள் வரை பயணிக்கலாம்.

    இந்நிலையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஹெச்.ஏ.எல். நிறுவனம் ரஷியாவின் யுனைடெட் ஏர் கிராப்ட் நிறுவனமும் இணைந்து SJ 100 பயணிகள் விமானங்களை தயாரிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட உள்ள இந்த பயணிகள் விமானம் உள்நாட்டு பயணத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகிறது.

    • தீப்பிடித்த பேருந்து விமானத்தில் இருந்து சில அங்குல தொலைவில் நின்று கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

    புதுடெல்லி:

    டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது..

    தீப்பிடித்து எரிந்த பேருந்து ஒரு விமானத்திலிருந்து சில அங்குலங்கள் தொலைவில் நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை.

    அங்கிருந்த தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

    இந்த திடீர் தீவிபத்தால் அருகிலுள்ள விமானங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த ஆண்டின் சாத் பூஜை கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது.
    • சாத் பூஜையையொட்டி யமுனா நதியில் பொதுமக்கள் நீராடவுள்ளனர்.

    வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் ஒன்று சாத் பூஜை. சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டின் சாத் பூஜை கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுகின்றனர். சாத் பூஜையையொட்டி யமுனா நதியில் பொதுமக்கள் நீராடவுள்ளனர்.

    இந்நிலையில், யமுனை ஆற்றில் அருகே பிரதமர் மோடி நீராடுவதற்கு பிரத்யேக குளம் தயார் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    யமுனை ஆற்றில் மக்கள் குளிக்கும் நீர் கருப்பு நிறத்தில் குளிப்பதற்கு தகுதியில்லாத நிலையில் உள்ளதும் பிரதமர் மோடி குளிக்கும் குளத்தின் நீர் நல்ல தரத்தில் இருப்பதும் பிபிசி வெளியிட்டுள்ள வீடியோவில் அம்பலமாகியுள்ளது.

    பிரதமர் மோடி நீராடுவதற்கு பிரத்யேக குளம் தயார் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • ரகசிய வீடியோக்களை அழிக்காததால் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
    • முன்னாள் காதலர், மேலும் ஒருவரை சேர்த்துக் கொண்டு, எரித்து கொலை செய்துள்ளார்.

    டெல்லி திமர்பூரில் உள்ள காந்தி விஹாரில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படித்து வந்த 32 வயதான நபர், தனது பிளாட்டில் கடந்த 6ஆம் தேதி தீயில் கருகியபடி இறந்த கிடந்தார். அடுக்குமாடி குடியிருப்பின் 4ஆவது மாடியில் கண்டெடுக்கப்பட்ட உடல் ராம் கேஷ் மீனா என்பவர் எனத் தெரியவந்தது. ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகித்தனர்.

    ஆனால் ராம் கேஷ் மீனாவின் பெற்றோர், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது, ராம் கேஷ் மீனாவுடன் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்த 21 வயது இளம் பெண்தான், அவரை தீர்த்துக்கட்டி, தீ விபத்தில் உயிரிழந்தது போன்று நாடகமாட முடிவு செய்தது தெரியவந்தது.

    ராம் கேஷ் மீனாவை அந்த பெண் கடந்த வருடம் சந்தித்துள்ளார். சந்தித்த உடனே இருவரும் தொடர்பை நீடிக்க தொடங்கினர். அதன்பிறகு இருவரும் லிவ்-இன் பார்ட்னராக வாழத் தொடங்கினர். அப்போது ராம் கேஷ், அந்த இளம் பெண்ணை மோசமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது. மேலும் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கில் அதை சேமித்து வைத்துள்ளார். இதை அறிந்த அந்த பெண், அந்த வீடியோக்களை அழிக்க கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், லிவ்-இன் பார்ட்னர் அதை அழிக்க மறுத்துவிட்டார்.

    இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி தனது பழைய காதலனிடம் உதவி கேட்டுள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். இருவரும் மற்றொருவரை துணைக்கு சேர்த்துக் கொண்டனர்.

    மூன்று பேரும் ராம் கேஷ் மீனா தங்கியிருந்த பிளாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை கொலை செய்து, ரூமிற்கு தீ வைத்துள்ளனர். பின்னர் ஏதும் தெரியாதது போல் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

    அந்த கட்டிடத்திற்கு முதலில் இருவர் வெளியில் இருந்து சென்றுள்ளனர். பின்னர், ஒருவர் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் இருவர் வெளியேறியுள்ளனர். சிசிடிவி-யில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அந்த பெண் தனது போனை ஸ்விட்-ஆஃப் செய்துவிட்டார். பின்னர் தீவிர தேடுதலுக்குக்குப் பிறகு போலீசார் கடந்த 18ஆம் தேதி அவரை பிடித்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி மேலும் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    • தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம்.
    • உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்.

    இந்திய தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படும். நாளை முதல் இந்த பணி தொடங்கும் எனத் தெரிவித்தார்.

    அந்த மாநிலங்கள் விவரம் பின்வருமாறு:-

    தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், லட்சத்தீவு, குஜராத், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் அண்டு நிக்கோபர். மேற்கு வங்கம்.

    ஆதார் கார்டு உள்பட 12 ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். தகுதியற்ற வேட்பாளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது உறுதி செய்யப்படும். எனத் தெரிவித்தார்.

    • தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம்
    • உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்ச் கவனித்தும் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

    அதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், தெருநாய் விவகாரம் குறித்து 2 மாதத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகியவை மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

    இதனையடுத்து 2 மாதம் அவகாசம் வழங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் வரும் 3 ஆம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

    • உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார்.
    • கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு நீதிபதி கவாயிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக நீதிபதி சூர்யகாந்த்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய சட்டத்துறைக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

    நீதிபதி சூர்யகாந்த் தற்போது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியில் உள்ளார்.

    நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும்.

    • ​வாக்குச்சாவடி-நிலை அதிகாரிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
    • பயிற்சிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட 10 முதல் 15 மாநிலங்களில் பீகாரைப் போல முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த பணியின்போது வாக்குச்சாவடி-நிலை அதிகாரிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இந்தப் பயிற்சிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் வாக்குச்சாவடி -நிலை அதிகாரிகளுக்கு கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப உதவுவார்கள், தேவைப்பட்டால் மாற்றாகவும் பணியமர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கல்லூரி மாணவி ஒருதலைக் காதலை ஏற்க மறுத்தார்.
    • இதனால் அந்த மாணவி மீது திராவகம் வீசப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனால் அவர் நேற்று காலை கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அந்த மாணவி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்து அவர் விலகி செல்ல முயன்றார்.

    அப்போது நொடிப்பொழுதில் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் முகத்தை நோக்கி வீசினார்.

    அப்போது தனது முகத்தை அந்த இளம்பெண் தனது கைகளால் மறைத்துக் கொண்டார். இதில் அவருடைய கைகள் வெந்து கருகின. இதனால் வலியில் அலறி துடித்த அந்த மாணவி சாலையில் சரிந்தார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர்கள் தப்பிச் சென்றனர்.

    படுகாயம் அடைந்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    முதல் கட்ட விசாரணையில் மாணவியுடன் அதே கல்லூரியில் படித்து வரும் ஜிதேந்தர் என்பவர்தான் திராவகத்தை வீசியது தெரிந்தது. ஜிதேந்தர் அந்த மாணவியை கடந்த 7 மாதமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் அவரை எப்படியாவது காதலில் விழ வைக்க வேண்டும் என்னும் முயற்சி தோல்வியில் முடிய இந்த பயங்கரமான சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

    தலைமறைவான ஜிதேந்தர், அவருடைய நண்பர்கள் அர்மான், இஷான் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×