என் மலர்
நீங்கள் தேடியது "8th Pay"
- மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டது.
- 8-வது ஊதியக்குழுவுக்கு 3 உறுப்பினர்களை நியமித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
புதுடெல்லி:
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மேம்படுத்துவதற்காக 8-வது ஊதியக் குழுவை அமைக்க ஜனவரி 16, 2025 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த ஒப்புதலின்படி, ஊதியக் குழு தலைவர், உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இந்த ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள், ஓய்வூதியங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும்.
இந்நிலையில், 8-வது ஊதியக்குழுவுக்கு 3 உறுப்பினர்களை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
8வது ஊதியக் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8வது ஊதியக் குழு செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கஜ் ஜெயின் நியமனம் செய்யப்பட்டார்.
பகுதிநேர உறுப்பினராக ஐ.ஐ.எம். பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் நியமிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் கூட்டு ஆலோசனைக் குழு (JCM) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகு ஊதியக் குழுவின் செயல்பாட்டிற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டது.
இந்தக் குழு தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
- பென்ஷனர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்
- வனத்த சின்னப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராகவேந்திரன் சிறப்புரை யாற்றினார். ஜெயராஜ் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை பென்ஷனர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு மாநாடு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். நமச்சிவாயம், இளங்கோ, பாலசுந்தரம், ராமஜெயம், ஜீவதாஸ், சாமுவேல், குணசேகரன், பெரியான் முன்னிலை வகித்தனர். முனீந்திரபாபு வரவேற்றார். ஜூலியானா பெர்னாண்டஸ், நடராஜன், பிரகாஷ், கொளஞ்சியப்பன், பிரேமதாசன், ராதா கிருஷ்ணன், செல்வராஜ், விட்டோபாய், ஜெயராமன், அசோகன், அந்துவான், ராமநாதன், வனத்த சின்னப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராகவேந்திரன் சிறப்புரை யாற்றினார். ஜெயராஜ் நன்றி கூறினார்.
மாநாட்டில் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 8-வது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை உடனே வழங்க வேண்டும்.
நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.






