என் மலர்
இந்தியா

ரகசிய வீடியோக்களை அழிக்க மறுப்பு: முன்னாள் காதலன் ஆதரவுடன் லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்த இளம்பெண்
- ரகசிய வீடியோக்களை அழிக்காததால் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
- முன்னாள் காதலர், மேலும் ஒருவரை சேர்த்துக் கொண்டு, எரித்து கொலை செய்துள்ளார்.
டெல்லி திமர்பூரில் உள்ள காந்தி விஹாரில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படித்து வந்த 32 வயதான நபர், தனது பிளாட்டில் கடந்த 6ஆம் தேதி தீயில் கருகியபடி இறந்த கிடந்தார். அடுக்குமாடி குடியிருப்பின் 4ஆவது மாடியில் கண்டெடுக்கப்பட்ட உடல் ராம் கேஷ் மீனா என்பவர் எனத் தெரியவந்தது. ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகித்தனர்.
ஆனால் ராம் கேஷ் மீனாவின் பெற்றோர், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, ராம் கேஷ் மீனாவுடன் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்த 21 வயது இளம் பெண்தான், அவரை தீர்த்துக்கட்டி, தீ விபத்தில் உயிரிழந்தது போன்று நாடகமாட முடிவு செய்தது தெரியவந்தது.
ராம் கேஷ் மீனாவை அந்த பெண் கடந்த வருடம் சந்தித்துள்ளார். சந்தித்த உடனே இருவரும் தொடர்பை நீடிக்க தொடங்கினர். அதன்பிறகு இருவரும் லிவ்-இன் பார்ட்னராக வாழத் தொடங்கினர். அப்போது ராம் கேஷ், அந்த இளம் பெண்ணை மோசமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது. மேலும் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கில் அதை சேமித்து வைத்துள்ளார். இதை அறிந்த அந்த பெண், அந்த வீடியோக்களை அழிக்க கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், லிவ்-இன் பார்ட்னர் அதை அழிக்க மறுத்துவிட்டார்.
இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி தனது பழைய காதலனிடம் உதவி கேட்டுள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். இருவரும் மற்றொருவரை துணைக்கு சேர்த்துக் கொண்டனர்.
மூன்று பேரும் ராம் கேஷ் மீனா தங்கியிருந்த பிளாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை கொலை செய்து, ரூமிற்கு தீ வைத்துள்ளனர். பின்னர் ஏதும் தெரியாதது போல் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
அந்த கட்டிடத்திற்கு முதலில் இருவர் வெளியில் இருந்து சென்றுள்ளனர். பின்னர், ஒருவர் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் இருவர் வெளியேறியுள்ளனர். சிசிடிவி-யில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த பெண் தனது போனை ஸ்விட்-ஆஃப் செய்துவிட்டார். பின்னர் தீவிர தேடுதலுக்குக்குப் பிறகு போலீசார் கடந்த 18ஆம் தேதி அவரை பிடித்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி மேலும் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.






