என் மலர்tooltip icon

    இந்தியா

    வர்த்தக ஒப்பந்தத்தின் மிக அருகில் இந்தியா- அமெரிக்கா: அதிகாரிகள் தகவல்
    X

    வர்த்தக ஒப்பந்தத்தின் மிக அருகில் இந்தியா- அமெரிக்கா: அதிகாரிகள் தகவல்

    • ஒப்பந்தம் தெடர்பான பேச்சுவார்த்தையில் தடங்களுக்கான எந்த பிரச்சினையும் இல்லை.
    • பெரும்பாலான பிரச்சினையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செல்கிறது.

    இந்தியா- அமெரிக்கா இடையே பரிந்துரை செய்யப்பட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாத்திற்குள் முடிக்க வேண்டும் இருநாட்டு தலைவர்களும் அவரவர் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    இதனால் இருநாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்டத்திற்கான 5 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளன.

    இந்த நிலையில் இந்தியா- அமெரிக்கா, இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் மிக அருகில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், தற்போதைய தீர்மானத்திற்காக மிகப்பெரிய அளவில் வேறுபாடு இல்லை. ஒப்பந்தம் தெடர்பான பேச்சுவார்த்தையில் தடங்களுக்கான எந்த பிரச்சினையும் இல்லை. பெரும்பாலான பிரச்சினையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செல்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் "ஒப்பந்தத்திற்கான அவசரம் காட்டமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×