விரைவில் ஓய்வு பெறும் பி.ஆர்.கவாய்.. அடுத்தது யார்? - தலைமை நீதிபதியை தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம்

உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார்.அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார்.
விரைவில் ஓய்வு பெறும் பி.ஆர்.கவாய்.. அடுத்தது யார்? -  தலைமை நீதிபதியை தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம்
Published on

உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு நீதிபதி கவாயிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய சீனியாரிட்டியின்படி, நீதிபதி சூர்யா காந்த் அடுத்த தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

 நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com