என் மலர்
பீகார்
- பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
- 2025 சட்டசபை தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என அறிவிப்பு.
தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.
பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ஜன் சூராஜ் கட்சி என பெயர் சூட்டியுள்ளார்.
அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் தனது அமைப்பான ஜன் சூராஜ் அபியான் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "புதிய கட்சி வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கப்படும். தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும். கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி இருக்கும். புதிய கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும்.
இந்தக் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் அல்லது சமூகத்துக்குள் நின்றுவிடாது. இது பீகார் மக்களின் கூட்டு முயற்சி" என்றார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை இன்று தொடங்கினார்.
மேலும், 2025 சட்டசபை தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
- ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.
பீகாரின் சீதாமர்ஹி என்ற பகுதியில் ராணுவத்தின் இலகு ரக ஹெலிகாப்டர் வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச்சென்றபோது ஹெலிகாப்டர் வெள்ளத்தில் இறங்கியது.
ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.
மேலும், மீட்பு பணி வராததால் பொது மக்கள் உதவியுடன் ஹெலிகாப்டரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
- 'ஜிவித்புத்ரிகா' என்பது பீகாரில் உள்ள மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்.
- பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.
பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் பண்டிகையில் 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தின் 15 மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் பக்தர்கள் புனித நீராடும் போது இந்த துயர சம்பவம் நடந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
'ஜிவித்புத்ரிகா' என்பது பீகாரில் உள்ள மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். இதில் பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து தங்கள் குழந்தைகளுடன் நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
- பாகல்பூரில் கங்கை கரையோரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
- கங்கையை ஒட்டிய சுமார் 12 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் தொடர் மழை காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாகல்பூரில் கங்கை கரையோரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
கங்கையை ஒட்டிய சுமார் 12 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாட்னா, பாகல்பூர், பக்சர், போஜ்பூர், சரண், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசராய், லக்கிசராய், கதிஹார், ககாரியா மற்றும் முங்கர் ஆகிய 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் உள்ள 13.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 376 கிராம பஞ்சாயத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன, பல குடியிருப்பாளர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகள் கங்கையில் மூழ்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
- தொட்டியில் காட்சிக்கு மிதக்கவிடப்பட்டிருந்த மீன்களுக்கு நிதிஷ் குமார் உணவளித்து மகிழ்ந்தார்.
- நாங்கள் மீன் பிடிக்கத்தான் வந்தோம் நிதிஷ் குமாரை பார்க்க வரவில்லை
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் கண்காட்சி ஒன்றை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து சென்ற அடுத்த கணமே தொட்டியில் இருந்த மீன்களை மக்கள் திருடிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. நேற்றைய தினம் சஹர்சா பகுதியில் மா விஸ்ஹாரி கோவில் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அமரப்பூரில் அரசு சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது பையோப்ளோக் [biofloc] தொட்டியில் காட்சிக்கு மிதக்கவிடப்பட்டிருந்த மீன்களுக்கு உணவளித்து மகிழ்ந்த நிதிஷ் குமார் கண்காட்சியில் இருந்து கிளம்பினார். அவர் கிளம்பிய கண நேரத்திலேயே தொட்டியில் இருந்த மீன்களை பிடிக்க மக்கள் தள்ளுமுள்ளுப்பட்டுள்ளனர்.
காவலுக்கு யாரும் இல்லாமல் மீன்களை மக்கள் அள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நாங்கள் மீன் பிடிக்கத்தான் வந்தோம் நிதிஷ் குமாரை பார்க்க வரவில்லை என்று இளைஞர்கள் கத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
- 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீசில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
- ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மனோஜ் சிங் என்பவர் மித்லேஷ் மாஜி என்ற 18 வயது இளைஞரிடம் 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் போலீசில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய இளைஞர் தனது தாய்மாமாவிடம் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை கடனாக வாங்கி மனோஜ் சிங்கிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் மனோஜ் சிங் அவரது உடல் அளவீடுகளை எடுத்து அடுத்த நாள் அவரை அழைத்து, ஐபிஎஸ் உடை, பேட்ஜ் மற்றும் துப்பாக்கியை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ஆன மகிழ்ச்சியில் ஐபிஎஸ் சீருடையை அணிந்து கொண்டு இடுப்பில் துப்பாக்கியுடன் தாயை சந்தித்து ஆசி பெற சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மனோஜ் சிங்கை சந்தித்து மீதமுள்ள பணத்தை கொடுக்க அவர் புறப்பட்டுள்ளார். அப்போது அவரைப் பார்க்க கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 'போலி ஐபிஎஸ் அதிகாரி'யை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது 'நான் ஒரு ஐபிஎஸ்' என்று அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த இளைஞரிடம் இருந்து சீருடை மற்றும் துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மின்வாரிய ஊழியர்ளை பிணைக் கைதிகளாகப் பிடித்து, மின்சாரத்தைத் துண்டித்து ஆர்ப்பாட்டாம்.
- அரசுக்கு ரூ.1.46 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் என்கிற கிராமத்தில் கழுதை ஒன்று உயிரிழந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மழை பெய்துகொண்டிருந்தபோது மின்கம்பம் அருகே சென்ற கழுதை, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
இதற்காக கிராம மக்கள், மின்வாரிய ஊழியர்ளை பிணைக் கைதிகளாகப் பிடித்து, மின்சாரத்தைத் துண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சுமார் 2.5 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இவர்களின் செயலால் அரசுக்கு ரூ.1.46 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மின்சாரத்தை துண்டித்ததற்காகவும், அரசு ஊழியர்களை கடத்தியதற்காகவும் கிராம மக்கள் 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இந்தக் கொடூரச் சம்பவம், பீகாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று
- இந்த விவகாரம் தொடர்பாக 15 பேர் கைது
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள 2 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக நில தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலத்தகராறு தொடர்பாக மஞ்ஹி தோலா எனப்படும் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள 21 குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் இத்தகைய அராஜகங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் நடக்கின்றன. இந்தக் கொடூரச் சம்பவம், பீகாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
தலித்துகளின் குடிசை எரிக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடினார். இதைப் பற்றி யாராவது பேசியதுண்டா?
- எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் விலகி நேரிட்டது.
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி எனது கேப்டன்சியின் கீழ் கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்று பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு பேசியுள்ளார்.
ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய தேஜஸ்வி யாதவ், "நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தேன். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடினார். இதைப் பற்றி யாராவது பேசியதுண்டா? நான் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறேன். எனது இரண்டு தசைநார்களில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் விலகி நேரிட்டது" என்று தெரிவித்தார்.
தேஜஸ்வி யாதவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலியும் தேஜஸ்வி யாதவும் ஜூனியர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக பல ஆட்டங்களில் ஒன்றாக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வயல் வெளியில் நிற்கும் ரெயிலை சூழ்ந்து அதிசயமான கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளார்.
- ரெயிலைக் கொண்டு வயலை உழுது பண்படுத்தும் அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கிண்டலடித்து வருகிறனர்.
பீகாரில் வயல்வெளிக்குள் சம்பந்தமே இல்லாமல் கட்டப்பட்ட பாலம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பீகாரின் கயா மாவட்டத்தில் ரகுநாத்பூர் கிராமத்தின் அருகே உள்ள வயல்வெளியில் ரெயில் இன்ஜின் பெட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை எந்த சம்பந்தமும் இல்லாமல் தனிமரமாகக் நின்று கொண்டிருத்தத்தை பார்த்து கிராமவாசிகள் திகைத்துள்ளனர்.
வயல் வெளியில் நிற்கும் ரெயிலை சூழ்ந்து அதிசயமான நிகழ்வாக கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் ரெயிலைக் கொண்டு வயலை உழுது பண்படுத்தும் அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கிண்டலடித்து வருகிறனர்.
வாசிர்கஞ் ரெயில் நிலையத்தில் இருந்து எந்த பெட்டிகளும் இல்லாமல் வந்த ரெயில் இன்ஜின் கயா நோக்கி செல்லும் வழியில் தடம் புரண்டு வயல்வெளிக்குள் சென்றுள்ளதாக பின்னர் தெரிவியவந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரெயில் அதிகாரிகள் தரப்பில் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.
- வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று கட்சியை தொடங்க உள்ளார் பிரசாந்த் கிஷோர்
- மற்ற அரசியல்வாதிகளை போல் பெண்களின் ஒட்டு கிடைக்காதே என்று பயந்து மதுவிலக்குக்கு எதிராக பேச தயங்க மாட்டேன்.
2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கிய பங்காற்றியவர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். அதுவரை குஜராத் மக்களிடையேயும், அரசியல் களத்தில் மட்டுமே பிரபலமாக இருந்த மோடியை தேசிய பிம்பமாக கட்டமைத்ததில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பங்கு உண்டு. தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிராண்டிகிங் ஆலோசனைகளுக்காக பிரசாந்த் கிசோரை நாடத் தொடங்கின.
பீகார் மாநிலத்தவரான பிரசாந்த் கிஷோர் தற்போது அங்கு ஜன ஜன் சுராஜ் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அடுத்த வருடம் நடக்க உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் களம் காண உள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று கட்சியை தொடங்க உள்ள பிரசாந்த் கிஷோர், தாங்கள் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்துக்குள் அம்மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டத்திலிருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயல்பாடுகளையும், பிராதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பிரசாந்த் கிஷோர்.
இந்த நிலையில்தான் தற்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரசாந்த் கிஷோர், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் கண்துடைப்பு வேலை. தற்போதுள்ள மதுவிலக்கால் எந்த பிரயோஜனமும் இல்லை. சட்டவிரோதமாக மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்யப்படுகிறன. அதேவேளை மதுவிலக்கால் மாநிலத்துக்கு ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சட்டவிரோத மது விற்பனையால் பயனடைகின்றனர். நான் நடைமுறைக்கு பயனளிக்கும் அரசியலை நம்புபவன். மற்ற அரசியல்வாதிகளை போல் பெண்களின் ஒட்டு கிடைக்காதே என்று பயந்து மதுவிலக்குக்கு எதிராக பேச தயங்க மாட்டேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மதுவிலக்கு துடைத்தெறியப்படும் என்று தெரிவித்துள்ளார். 2016 ஏப்ரல் 1 முதல் பீகாரில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மருத்துவர் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார்.
- மருத்துவமனையில் இருந்த மருத்துவர் மற்றும் இருவரை கைது செய்தனர்.
பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த கங்காபூரில் ஆர்பிஎஸ் ஹெல்த் கேர் சென்டர் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. முஸ்ரிகராரி காவல் நிலைய வட்டத்திற்குள் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அரங்கேறிய கூட்டு பாலியல் வன்புறவு முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்தின் போது மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியரை மருத்துவர் குமார், மற்றும் அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த சுனில் குமார் குப்தா மற்றும் அவதேஷ் குமார் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க செவிலியர் தன் கையில் கிடைத்த பிளேடு கொண்டு மருத்துவர் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார்.
இதையடுத்து, மூவரிடம் இருந்து தப்பிய செவிலியர் மருத்துவமனையில் மறைந்திருந்து காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் மற்றும் இருவரை கைது செய்தனர். விசாரணையில் மருத்துவர் உள்பட மூவரும் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
"ஆபத்தான காலக்கட்டத்தில் செவிலியரின் செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது," என காவல் துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் பாண்டே தெரிவித்தார்.






