என் மலர்
இந்தியா
- சுனிலின் மனைவி குழந்தையை கையில் ஏந்தியபடி கெஞ்சிய போதிலும், டாக்டர் பூபேஷ் எழுந்திருக்கவில்லை.
- பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படாததால் சுனில் குமார் இரத்தப்போக்கால் ஸ்ட்ரெச்சரிலேயே இறந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூற்றுப்படி, மீரட்டில் திங்கள்கிழமை நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் சுனில் குமார் என்ற நபர் படுகாயமடைந்தார். சுனில் குமாரை அவரது உறவினர்கள் உள்ளூர் லாலா லஜ்பத் ராய் நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை ஸ்ட்ரெச்சரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு டாக்டர் பூபேஷ் ராய், ஏசியை ஆன் செய்து நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்தார். சுனில் குமாரின் மனைவி மருத்துவரிடம் சென்று அவரை எழுப்ப முயன்றார்.
சுனிலின் மனைவி குழந்தையை கையில் ஏந்தியபடி கெஞ்சிய போதிலும், டாக்டர் பூபேஷ் எழுந்திருக்கவில்லை.
பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படாததால் சுனில் குமார் இரத்தப்போக்கால் ஸ்ட்ரெச்சரிலேயே இறந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் டாக்டர் பூபேஷ் தூங்குவதையும், சுனில் குமாரின் மனைவி கெஞ்சுவதையும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ வைரலானதும் மருத்துவமனை நிர்வாகத்தால் டாக்டர் பூபேஷ் ராய் இடைநீக்கம் செய்யப்பட்டு, சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
- கன்வார் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக கங்கை நீர் கொண்டு வர சன்னி பைக்கில் ஹரித்வாருக்குச் சென்றார்.
- அங்குள்ள மருத்துவர்கள் அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்நாத்தில் கண்டேரா கிராமத்தைச் சேர்ந்த சன்னி குமார், கடந்த ஆண்டு கர்ஹி கங்க்ரான் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதாவை மணந்தார். ஆனால் அங்கிதா, அய்யூப் அகமது என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த மாதம் 22 ஆம் தேதி, கன்வார் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக கங்கை நீர் கொண்டு வர சன்னி பைக்கில் ஹரித்வாருக்குச் சென்றார்.
இருப்பினும், காங்க்ரான் கிராம சாலை அருகே சன்னியின் பைக்கை நான்கு பேர் நிறுத்தி அவரைத் தாக்கினர்.
பின்னர், அவர் அங்கிதாவின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சன்னி பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டார். பலத்த காயமடைந்த சன்னி உள்ளுர்வாசிகளால் மீட்கப்பட்டு மீரட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்குள்ள மருத்துவர்கள் அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.அங்கு சன்னி சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.
சன்னியின் தந்தை வேத்பாலின் புகாரின் அடிப்படையில், அங்கிதா, அய்யூப், பேபி மற்றும் சுஷில் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஒட்டுமொத்த தேசத்திற்கும் சீனா பாகிஸ்தானுக்கு அனைத்து வகையிலும் உதவியது தெரியும்.
- பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் தங்கள் உரைகளில் எங்கும் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை.
பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து இன்று மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
ராணுவ நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி விளக்கம் கொடுத்தார். பின்னர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
கூட்டம் முடித்து பாராளுமன்ற அவை வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் தனது உரையில் சீனா பற்றி ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.
ஒட்டுமொத்த தேசத்திற்கும் சீனா பாகிஸ்தானுக்கு அனைத்து வகையிலும் உதவியது தெரியும். ஆனால் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் தங்கள் உரைகளில் எங்கும் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய கூற்றை பிரதமர் மோடி நேரடியாக மறுக்கவில்லை என்பதையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
"டிரம்ப் பொய் சொல்கிறார் என்று அவர் (மோடி) ஒருபோதும் தெளிவாகக் கூறவில்லை" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீனாவின் பங்கு குறித்து அரசு கவனிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
- உ.பி.யில் நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்தார்.
- இதற்குமுன் இந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
இதையடுத்து, கடந்த 2022-ல் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.க. இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல் மந்திரியானார்.
இந்நிலையில், உ.பி. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நேற்றுடன் 8 ஆண்டு மற்றும் 130 நாளை நிறைவு செய்தார்.
இதன்மூலம் அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல் மந்திரியாக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்குமுன் இந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த். உத்தர பிரதேசத்தின் (சுதந்திரத்துக்கு பிறகு) முதல் முதல் மந்திரியான அவர் 8 ஆண்டு 127 நாள் தொடர்ந்து முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது.
- பாகிஸ்தானின் அணு ஆயுத பிளாக்மெயில் பலனளிக்கவில்லை என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் வன்முறைகளைப் பரப்புவதற்கான சதி திட்டமே இது. அந்த சதித்திட்டம், ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டு உள்ளது என்பதற்காக நான் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏப்ரல் 22-ம் தேதி நான் வெளிநாட்டில் இருந்தேன். உடனடியாக நான் நாடு திரும்பினேன். திரும்பி வந்ததும், கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தினேன். அப்போது, இது நம்முடைய தேசம் தொடர்பான விசயம். பயங்கரவாதத்திற்கு சரியான பதிலடி தரப்பட வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தினேன்.
பாகிஸ்தான் நாட்டின் தொலைதூர பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்திற்கு முழு அளவில் சுதந்திரம் அளிக்கப்பட்டது. எந்த பகுதியில், எப்போது, எப்படி பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என ராணுவமே முடிவு செய்தது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டிரோன்கள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. முப்படைகளும் கூட்டாக இணைந்து திட்டமிட்டு செயல்பட்டன. அந்நாட்டின் விமான தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது. அந்த மிரட்டல் இனி எடுபடாது. இந்தியா ஒருபோதும் பயப்படாது.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் எந்த நாட்டு தலைவரும் தலையிடவில்லை.
மே 9-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் மைக் வின்ஸ் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தேன் என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி இன்று பதிலளித்துள்ளார்.
- மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
- பாகிஸ்தானின் அணு ஆயுத பிளாக்மெயில் பலனளிக்கவில்லை என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பதிலளித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்தியாவின் வலிமையை பறைசாற்றிய நடவடிக்கை.
140 கோடி மக்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்கவே பாராளுமன்றம் வந்துள்ளேன்.
நான் அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் நிறைவேற்றி உள்ளேன்.
பஹல்காமில் மதத்தின் பெயரால் அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனத்தின் உருவகம்.
நமது ஒற்றுமை எதிர்களின் திட்டங்களை தவிடு பொடியாக்கி விட்டது.
இந்திய படைகளின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடினர்.
ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர்கள் பின்னால் நின்றோம்.
பயங்கரவாதிகளின் தலைமை இடங்களை இந்திய ராணுவ வீரர்கள் தகர்த்தனர்.
பாகிஸ்தானின் அணு ஆயுத பிளாக்மெயில் பலனளிக்கவில்லை என தெரிவித்தார்.
- மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
- வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றார் ராகுல் காந்தி.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பஹல்காமில் அப்பாவி மக்கள் சிறிதும் இரக்கமின்றி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை எனக்கு நேர்ந்ததாக உணர்ந்தேன்.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்பே அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கு முழு ஆதரவு அளித்தன.
மத்திய அரசு ராணுவத்தினரை சுதந்திரமாக செயல்படவில்லை. அதனால் நாம் நமது போர் விமானங்களை இழந்தோம்.
ஆபரேஷன் சிந்தூர் நடக்கும்போதே பாகிஸ்தானை தொடர்புகொண்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என பாகிஸ்தானிடமே அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை தாக்க வேண்டாம் எனக் கூறியது மிகப்பெரிய தவறு.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஒரு நாடு கூட பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. இந்தியாவையும் பாகிஸ்தானையும் உலக நாடுகள் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கின்றன.
போர் நிறுத்தத்துக்கு காரணம் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 29 முறை கூறியுள்ளார். அதை எதிர்த்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மறுத்து ஒரு வார்த்தை கூறவில்லையே?
இந்திரா காந்திக்கு இருக்கும் துணிச்சலில் 50 சதவீதமாவது இருந்தால் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அதிபர் டிரம்ப் ஏன் விருந்தளித்தார்?
சீனா- பாகிஸ்தானின் உறவு நிலை குறித்து நான் எச்சரித்ததை புறக்கணித்து விட்டீர்கள்.
வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என காட்டமாக தெரிவித்தார்.
- காலாண்டு, அரையாண்டு தேர்வு: அட்டவணைகளை வெளியிட்ட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
- பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
சென்னை:
2025 – 26-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18ல் தொடங்கி 26ம் தேதியில் காலாண்டுத் தேர்வு முடிவடைகிறது. செப்டம்பர் 27 முதல் 30-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15-ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 – 26-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின் (2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என பதிவிட்டுள்ளார்.
- பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
- பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது.
புவனேஷ்வர்:
இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைககளைப் பரிசோதனை செய்யும் பணிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, பிரளய் ஏவுகணை இன்று சோதித்துப் பார்க்கப்பட்டது.
பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. 150 முதல் 500 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
இந்த பிரளய் ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
- மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
- மக்களின் பாதுகாப்பில் உள்துறை அமைச்சகம் தோல்வி அடைந்துள்ளது என்றார் பிரியங்கா.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான பிரியங்கா காந்தி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இன்று மத்திய உள்துறை மந்திரி நேருவும் இந்திரா காந்தியும் என்ன செய்தார்கள் என்பது பற்றிப் பேசினார். என் தாயின் கண்ணீரைப் பற்றியும் அவர் பேசினார். ஆனால், போர் நிறுத்தம் ஏன் அறிவிக்கப்பட்டது என்று அவர் ஒருபோதும் பதிலளிக்கவில்லை.
மத்திய உள்துறை மந்திரி இன்று என் தாயின் கண்ணீரைப் பற்றிப் பேசினார். இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன்.
பயங்கரவாதிகள் என் தந்தையைக் கொன்றபோது என் தாயின் கண்ணீர் சிந்தியது. இன்று, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அந்த 26 பேரைப் பற்றி நான் பேசும்போது, அவர்களின் வலியை நான் உணர்ந்துள்ளேன்.
இந்த அரசாங்கம் எப்போதும் கேள்விகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. அவர்களுக்கு நாட்டின் குடிமக்கள் மீது பொறுப்புணர்வு இல்லை. உண்மை என்னவென்றால், அவர்களின் இதயத்தில் பொதுமக்களுக்கு இடமில்லை. அவர்களுக்கு எல்லாமே அரசியல், விளம்பரம்.
இன்று இந்த அவையில் அமர்ந்திருக்கும் பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்று பஹல்காமில், 26 பேர் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டனர்.
மக்களின் பாதுகாப்பில் உள்துறை அமைச்சகம் தோல்வி அடைந்துள்ளது. அன்று பைசரன் பள்ளத்தாக்கில் இருந்த அனைவருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. நீங்கள் எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், உண்மையை மறைக்க முடியாது என காட்டமாகப் பேசினார்.
- போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.
- பெருந்துறையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சேலம்:
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 இடங்களில் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.
எனவே தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பிளாண்டுகளில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் லாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் செந்தில் செல்வன் கூறும்போது:-
இது சம்பந்தமாக பெருந்துறையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாதால் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது என்றார்.
- காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
- மத்திய அரசின் பேச்சை நம்பிச் சென்றவர்கள் கொல்லப்பட்டதுதான் மிச்சம்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது இந்தியாவின் முப்படைகளின் தீரத்திற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
* காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக மத்திய அரசு கூறியது.
* காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
* காஷ்மீரில் தீவிரவாதம், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியதை நம்பியே மக்கள் சுற்றுலா சென்றனர்.
* மத்திய அரசின் பேச்சை நம்பிச் சென்றவர்கள் கொல்லப்பட்டதுதான் மிச்சம்.
* குடிமக்களின் பாதுகாப்பு பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பல்லவா?
இவ்வாறு அவர் கூறினார்.






