என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்த உதவும்.
    • மாங்காயில் இருக்கும் அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

    பழுத்த மாம்பழங்களை விட மாங்காயில் வைட்டமின் சி மற்றும் அமிலத்தன்மை அதிகம் இருக்கிறது. அத்துடன் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. செரிமான ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதற்கும், குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டுக்கும் நார்ச்சத்து அவசியமானது.

    வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்த உதவும். மேலும் மாங்காயில் இருக்கும் அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் மற்றும் இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் அவை கொண்டிருக்கின்றன.

    • செரிமானம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் மாங்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
    • இனிப்பு பண்டங்களை விருப்ப தேர்வாக கொண்டவர்களுக்கு மாற்றுத்தேர்வாகவும் இது அமையும்.

    * பழுத்த மாம்பழங்களை விட மாங்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்கள் உணவில் மாங்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

    * பழுத்த மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளின் அளவு அதிகம் இருப்பதால் அதிக நன்மை பயக்கும். அதனால் ஆன்டி ஆக்சிடென்டுகள் சார்ந்த குறைபாடு கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிடுவது சிறந்தது.

    * மாங்காய் மற்றும் மாம்பழம் இரண்டிலுமே நார்ச்சத்து இருக்கிறது. இருப்பினும் செரிமான ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் தன்மை மாங்காயில்தான் அதிகம் இருக்கிறது. அதனால் செரிமானம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் மாங்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

    * சுவையை விரும்புபவர்களுக்கு மாம்பழங்கள் சிறந்த தேர்வாக அமையும். இனிப்பு பண்டங்களை விருப்ப தேர்வாக கொண்டவர்களுக்கு மாற்றுத்தேர்வாகவும் இது அமையும்.

    மாம்பழம், மாங்காய் இரண்டுமே உடலுக்கு நன்மை சேர்க்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. எனினும் நீரிழிவு உள்ளிட்ட இணை நோய் கொண்டவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்படி இவற்றை உட்கொள்வது நல்லது.

    • உடலுக்கு அசவுகரியத்தை கொடுக்கும் விதமாக நடக்கவும் கூடாது.
    • மதியம் சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடப்பதை அன்றாட வழக்கமாக்கிக்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும்.

    மதியம் சாப்பிட்டதும் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி காலையில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியை போன்று அமைந்துவிடக்கூடாது. ஒருபோதும் வேகமாக நடக்ககூடாது. இயல்பாக நடக்க வேண்டும். ஒவ்வொரு காலடியையும் வேகமாகவோ, அதிகமாகவோ எடுத்துவைக்கக்கூடாது.

    உடலுக்கு அசவுகரியத்தை கொடுக்கும் விதமாக நடக்கவும் கூடாது. சுற்றுப்புற பகுதிகளை ரசித்தபடி மெதுவாக நடக்க வேண்டும். இயற்கை சூழ்ந்த இடங்கள், அருகில் உள்ள பூங்காவில் உலவலாம்.

    மதியம் சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடப்பதை அன்றாட வழக்கமாக்கிக்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும். இந்த சிறிய பழக்கம் செரிமானம், ரத்த சர்க்கரை அளவு, இதய ஆரோக்கியம் உள்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிக்கும்.

    • மாம்பழத்தில் உள்ள அமிலேஸ் மற்றும் புரோட்டீஸ் போன்ற நொதிகள் செரிமானத்தை ஊக்குவிக்கின்றன.
    • மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது. கண்களை ஆரோக்கியமாக பராமரிக்கிறது.

    இது மாம்பழ சீசன். அதன் தனித்துவமான சுவை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ருசிக்க வைத்துவிடுகிறது. மாம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன.

    மாம்பழத்தை அப்படியே சாப்பிடத்தான் பலரும் விரும்புவார்கள். மாங்காயை சமையலில் சேர்த்து பல்வேறு ரெசிபிகள் தயாரித்து உட்கொள்பவர்களும் இருக்கிறார்கள். எதனை சாப்பிடுவது சிறந்தது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது.

    பழுத்த மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் போன்ற சில ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை மாம்பழத்திற்கு ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தை அளிக்கின்றன. அத்துடன் ஆன்டிஆக்சிடென்டுகள் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் ஆபத்தையும் குறைக்கின்றன. கரோட்டினாய்டுகள் வயது தொடர்பான தசை சிதைவை கட்டுப்படுத்துகின்றன.

    * மாம்பழத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் நார்ச்சத்து அதிகம். நார்ச்சத்து உடலை முழுமையாகவும் திருப்தியாகவும் உணர வைக்கும். அதனால் அதிகமாக சாப்பிடும் வாய்ப்பை குறைத்து உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

    * மாம்பழத்தில் உள்ள அமிலேஸ் மற்றும் புரோட்டீஸ் போன்ற நொதிகள் செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கின்றன.

    * மாம்பழத்தில் ப்ரீபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக செயல்படுகிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் வித்திடுகிறது.

    * மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சரும நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

    * மாம்பழங்களில் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. அது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.

    * மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது. கண்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும், வயது மூப்பு தொடர்பான பார்வை பிரச்சனைகளைத் தடுக்கவும் இது அவசியமானது.

    * மாம்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலமும் உள்ளது. இது செரோடோனின் அளவை அதிகரிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.

    * மாம்பழத்தில் குர்செடின், ஐசோகுவர்சிட்ரின் மற்றும் அஸ்ட்ராகலின் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்ற உதவுகின்றன. உடல் எடை குறைவதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றன.

    • கர்ப்பிணிப் பெண்களிடையே ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை குமட்டல்.
    • எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது.

    கர்ப்பிணிப் பெண்களிடையே ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை குமட்டல். குமட்டலுக்கு எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை போக்க எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    குமட்டலைத் தணிக்க மக்கள் பொதுவாக எலுமிச்சையைப் பயன்படுத்துகிறார்கள். இது மற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. கர்ப்பமாக இருக்கும்போது லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

    எலுமிச்சை தேநீர் ஆரோக்கியமான செரிமான செயல்முறைக்கு பங்களிக்கிறது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். எலுமிச்சை தேநீர் கர்ப்ப காலத்தில் செரிமானத்திற்கு கணிசமாக உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.

    எலுமிச்சை தேநீரில் முகப்பரு, பருக்கள் மற்றும் அரிக்கும் தோலழற்சி மற்றும் பிற தோல் நோய்களைத் தடுக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

    கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்ளும்போது பல் நோய்களால் எளிதில் பாதிக்கப்படலாம்.

    எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது சில கர்ப்பிணிப் பெண்களுக்கு நெஞ்செரிச்சல் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

    கர்ப்ப காலத்தில், லெமன் டீயில் அதிகளவு காஃபின் இல்லாத வரை, சிறிதளவு லெமன் டீயை உட்கொள்வது பொதுவாக பாதுகாப்பானது.

    கர்ப்ப காலத்தில் சர்க்கரை பானங்களை அடிக்கடி உட்கொள்வது கர்ப்பகால நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும். 

    • நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட ஒரு உணவாகும்.
    • நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

    நூடுல்ஸ் என்பது குழந்தைகள் அதிகமாக விரும்பி உண்ணும் உணவாகும்.

    நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட ஒரு உணவாகும். இதில் நார்ச்சத்துக்களும் புரோட்டீன்களும் குறைவாக இருப்பதால் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

    நூடுல்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உருவாக்கும். மேலும் இதய நோய்க்கு வழிவகுக்கும்.

    நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் மலக்குடல் புற்றுநோய் வர வழிவகுக்கும். நூடுல்ஸில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது, இது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

    நூடுல்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அவை விரைவாக செரிமானமாகி பசியை அதிகரிக்கும். நூடுல்ஸில் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்.

    • காய்கறி-பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
    • பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பாதுகாக்கும்.

    பரபரப்பான வாழ்க்கை சூழலால் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. கவலை வேண்டாம், காய்கறி-பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது பப்பாளி.

    வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ரிபோபிளோவின் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் ஒரு 'ஆல் ரவுண்டர்' பழம் பப்பாளி. உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக்கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும். பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பாதுகாக்கும். எனவே உங்கள் டயட்டில் பப்பாளியை `மிஸ்' பண்ண வேண்டாம்.

    • சீலியாயிக், சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்க வல்லது.
    • அரிசியில் கஞ்சி வைத்து கொடுத்துவர, சுகப்பிரசவத்துக்கு உதவும்.

    தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பிரபலமான பழங்கால பழுப்பு அரிசி இந்த பூங்கார் அரிசி. இது மாப்பிள்ளை சம்பா அரிசி தோற்றத்தில் இருக்கும்.

    பூங்கார் கைகுத்தல் அரிசி தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று. பெண்களுக்கான பிரத்யேக அரிசி. கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து இந்த அரிசியில் கஞ்சி வைத்து கொடுத்துவர, சுகப்பிரசவத்துக்கு உதவும்.

    எலும்புகளை வலுப்படுத்தும். இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது.

    சீலியாயிக், சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்க வல்லது. உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்க உதவும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    இந்த வகை அரிசியை கொண்டு இட்லி செய்தால் மென்மையான இருக்கும். மேலும் தோசை, சாதம் வகைகள் செய்யலாம்.

    சிறப்புகள்:

    பூங்கார் அரிசியில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் மோலேபிடினம் ஆகிய தாதுக்கள் உள்ளன.

    பூங்கார் அரிசியில் உள்ள அத்ரோசயானின் ஒரு சிறந்த ஆண்டிஆக்சிடெண்ட் ஆகும்.

    மற்ற நவீன அரிசிகளை விட பூங்கார் அரிசியில் சற்று அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது.

    உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்ந்தால் அது ரத்த ஓட்டத்தை தடை செய்து இறுதியில் மாரடைப்புக்கு வழிவகுக்கும். பூங்கார் அரிசியில் நார்ச்சத்து இருப்பதால் கொழுப்பின் ஒட்டுமொத்த அளவை குறைக்க உதவுகிறது. இதனால் இதநோய் அபாயத்தை குறக்கிறது.

    பூங்கார் அரிசியில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்கி செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கலை தடுக்கிறது.

    பூங்கார் அரிசி ஹார்மோன் அளவை பராமரிப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் உதவுகிறது. இதனால் பெண்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

    மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்கவும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் பூங்கார் அரிசி பெரிதும் பயன்படுகிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் அதிக அளவில் ஊறும். 

    பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்.

    • அரிசியையே நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினர் தமிழர்கள்.
    • தமிழர்கள் கண்டறிந்த நாட்டு அரிசி ரகங்கள் 1000-க்கும் மேற்பட்டவை.

    உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்கள் உணவு கலாசாரமாக இருந்தது. தமிழர்களின் முதன்மை உணவாக இருந்துவரும் அரிசியில் வெவ்வேறு ரகங்களை உருவாக்கி, அரிசியையே நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினர்.

    தமிழர்கள் கண்டறிந்த நாட்டு அரிசி ரகங்கள் 1000-க்கும் மேற்பட்டவை, என்கிறார்கள் வேளாண் ஆய்வாளர்கள். அந்த அரிசி ரகங்களில் ஒன்றான இலுப்பைப்பூ சம்பா, தனித்துவமான மருத்துவ குணம் கொண்டது. மேலும் இது, அரிதான அரிசி ரகம் ஆகும்.

    இலுப்பைப்பூவின் நறுமணம் இந்த அரிசியிலும் வெளிப்படுவதன் காரணமாக இந்த அரிசிக்கு அதன் பெயர் வந்தது. இலுப்பைப்பூ சம்பா சாப்பிட மிகவும் மென்மையானது.

    பக்கவாத பாதிப்பை தடுக்க முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனராம். மூட்டு வலி, முடக்குவாத நோய்களை போக்கும். நோயால் பலவீனமானவர்களுக்கு இலுப்பைப்பூ சம்பா அரிசி கஞ்சியை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் பலவீனம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

    இந்த அரிசி உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். முடக்குவாதத்தை தடுக்கிறது. உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.

    மிகக்குறைவான குளுக்கோஸ் அளவை கொண்டதால் நீரிழிவு நோயாளிகள் இலுப்பைப்பூ சம்பா அரிசியை தாராளமாக உட்கொள்ளலாம்.

    மேலும், உடலில் எலும்புகள் பலவீனம் அடைவதை தடுத்து வலுப்படுத்தும் குணம் இந்த அரிசிக்கு உண்டு.

    இதனால், வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கவும், வளரும் குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் உருவாகவும் இலுப்பைப்பூ சம்பா கஞ்சியை தரலாம்.

    இலுப்பை பூ சம்பா அரிசியின் நன்மைகள்:

    இலுப்பை பூ சம்பா அரிசி வீக்கம், மூட்டு பிரச்சனைகள், செயலிழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கஞ்சி, சிகிச்சை பெறும் அனைவருக்கும், வயதானவர்கள் அல்லது குழந்தைகளுக்கு ஆற்றலை கொடுக்கிறது.

    இந்த அரிசி ஒரு இயற்கை தோட்டத்தில் பயிரிடப்பட்டு அரைக்கப்படுகிறது. இதன் விளைவாக, விவசாயத்தில் செயற்கை அல்லது களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    காலப்போக்கில் அடிக்கடி உட்கொண்டால், உடலில் உள்ள கலவை அல்லது களைக்கொல்லி எச்சத்தின் தாக்கங்களை மாற்றுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

    கரிம உணவு பொதுவாக மிகவும் சுவையாக இருக்கும், உங்கள் பசியை அதிகரிக்கிறது மற்றும் போதுமான ஊட்டச்சத்தை பாதுகாக்க அல்லது மேம்படுத்த உதவுகிறது.

    இந்த அரிசியில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பக்கவாதத்தைத் தடுக்கிறது மற்றும் கீல்வாதம், மூட்டு சேதம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    • நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
    • தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.

    நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.

    குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று.

    10 கிராம் நட்சத்திர பழத்தில் கார்போஹைட்ரேட்ஸ்- 6.73 கிராம், சர்க்கரை- 3.98 கிராம், கொழுப்பு- 0.33 கிராம், புரோட்டீன்- 1.04 கிராம், போலேட்- 12 கிராம், வைட்டமின் சி- 34.4 கிராம், பாஸ்பரஸ்- 12 மி.லி. கிராம், பொட்டாசியம்- 133 மி.லி. கிராம், துத்தநாகம்- 12 மி.லி.கிராம் உள்ளது.

    • மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
    • உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    கோடை காலம் வந்துவிட்டாலே மாம்பழ சீசன் தான் நினைவுக்கு வரும். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு என்னதான் மாம்பழம் பிடித்திருந்தாலும் அதனை சுவைத்து சாப்பிட முடியாது. ஏனென்றால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடும் போது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    எனவே தான் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடுவதற்கு பல முறை யோசிப்பார்கள். மாம்பழம் சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு அதிகமாகாமல் எப்படி தவிர்ப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    ஒரு மாம்பழத்தில் குறிப்பாக 50 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும் போது ஒரு நாளைக்கு அரை மாம்பழம் சாப்பிடுவதால் எந்தவித சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது.

    சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் அதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அதற்காக மாம்பழத்துடன், சியா விதை, வால்நட், ஊறவைத்த பாதாம் அல்லது எலுமிச்சை தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு நடைபயிற்சி செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் மாம்பழத்தை அப்படியே வெட்டி சாப்பிட வேண்டும். ஜூசாகவோ அல்லது ஸ்மூத்தி, ஐஸ்கிரீம், மூஸ் போன்றவையாகவோ சாப்பிடக்கூடாது. இதில் தான் அதிகளவு சர்க்கரை உள்ளது.

    உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் மாம்பழத்தை தவிர்த்து விடுவதே நல்லது. அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

    அதேபோல மாம்பழத்தை உணவுக்கு பிறகு அல்லது இனிப்பாக உட்கொள்ளவோ கூடாது. உணவுக்கு இடையில் ஒரு சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். தயிர், பால், நட்ஸ் போன்ற பாகங்களுடன் இதை சேர்த்து சாப்பிடலாம்.

    மாம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது தான். ஆனாலும் தினமும் மாம்பழச்சாறு குடிக்கக்கூடாது.

    மாம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாம்பழ மில்க்ஷேக் போன்றவற்றை எடுத்துக்கொள்ள கூடாது. இதனால் செரிமான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    இரவில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாம்பழத்தை காலை அல்லது மதியம் சாப்பிடலாம். மாம்பழத்தை தனியாக சப்பிடுவதை விட ஓட்ஸ் அல்லது சாலட்டாக செய்து சாப்பிடலாம்.

    இருப்பினும் மாம்பழம் நமது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. மாம்பழத்தில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம், தயாமின், காப்பர், ஃபோலேட், வைட்டமின் பி6, ரிபோஃப்ளேவின் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. எதனையும் அளவாக எடுத்துக்கொள்வதே சிறந்தது. அதுவும் சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • அன்றாட வாழ்வில் யோகா செய்வதை வழக்கமாக்க வேண்டும்.
    • யோகா உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உதவும்.

    அன்றாட வாழ்வில் யோகா செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். யோகா செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உதவும். இது உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துவதுடன், மனதையும் உடலையும் வளர்ப்பதற்கான முழுமையான அணுகுமுறையாகவும் அமைகிறது. இனி மன ஆரோக்கியத்திற்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்பதை பார்க்கலாம்.

    யோகா செய்வதால் மன அழுத்தம், பதட்டம், மன சோர்வு நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் ஹார்மோன் சமநிலை உணர்வு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம், கவனமான இயக்கத்துடன் பதற்றத்தை விடுத்து மனது தளர்வு நிலையை ஏற்படுத்த உதவுகிறது.

    வழக்கமாக யோகா பயிற்சி செய்வது கவனத்தை கூர்மையாக்கி தெளிவான சிந்தனையை தருகிறது. இது மனக்கூர்மையையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. யோகாவின் அம்சம் கவனச்சிதறல்களை விடுத்து மனதை தெளிவாக்க உதவுகிறது. தினந்தோறும் யோகா செய்வது மனதை தெளிவடையச் செய்து சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க பெரிதும் உதவுகிறது.

    தூக்கம்

    தினமும் யோகா செய்வது ஆழ்ந்த தூக்கம் மற்றும் சீரான தூக்கத்தை ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. இதற்கு யோகா நரம்புமண்டலத்தில் அமைதியான விளைவுகளை தருகிறது. இது உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தி நல்ல இரவு தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

    ×