என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    எலுமிச்சை, மாங்காய், வடுமாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அசைவ பிரியர்களுக்கு விருப்பமான இறால் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இறால் - கால் கிலோ
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 200 கிராம்
    வினிகர் - 1/2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி

    றுத்து பொடிக்க

    கடுகு - 1 ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 ஸ்பூன்



    செய்முறை

    இறாலை சுத்தமாக கழுவி கொள்ளவும்.

    நன்றாக கழுவிய இறாலில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு பிசறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறலை போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுத்து ஆற வைக்கவும்.

    இறாலை பொரித்த எண்ணெயுடன் மீதி எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    அடுத்து பொரித்த இறால் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 5 நிமிடம் கிளறி விடவும்.

    பின்பு அதில் வினிகர், உப்பு சேர்த்து இறக்கி விடவும்.

    கடைசியாக அதன் மேல் வறுத்து பொடித்த பொடியை போட்டு நன்றாக கிளறி ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    ஊறுகாய்க்கு மேலே 1 இஞ்ச் உயரத்திற்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

    பாட்டிலின் வாயை வெள்ளை துணியால் மூடி மூன்று நாள் கழித்து உபயோகப்படுத்தலாம். உப்பு காரம், புளிப்பு போன்றவை அவரவர் ருசிக்கேற்ப்ப சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஊறுகாய் 2 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

    சூப்பரான இறால் ஊறுகாய் ரெடி.
     
    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு, அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை மூலம் மரபுவழியாக பரவலாம் என்பது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, கருவுற்ற தாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்து விடுகிறது. ஆனால், ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம், கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு, அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை மூலம் மரபுவழியாக பரவலாம் என்பது பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, கருவுற்ற தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் இயற்கையிலேயே சுரக்கும் சில ஹார்மோன்கள் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்திவிடுகிறது.

    அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, கருவுற்ற தாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்து விடுகிறது. ஆனால், ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம், கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை.

    இதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இதுவே கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பெண்களோடு ஒப்பிடும்போது, இந்திய பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 11% அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மரபணுக்கூறுகள் மற்றும் குறைந்து வரும் உடல் உழைப்பு ஆகிய இரண்டு காரணிகள் பெண்கள் மத்தியில் கர்ப்பகால நீரிழிவை தூண்டுவதாகவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தையும் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்கிறது.

    கோடையில் குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு என்னென்ன பழங்கள் கொடுத்தால் நன்மை தரும் என்பதை பற்றி பார்ப்போம்..
    கோடைக்காலத்தில் தான் குழந்தைகளுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்சனைகளும், உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். எனவே, கோடையில் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். கோடையில் குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு என்னென்ன பழங்கள் கொடுத்தால் நன்மை தரும் என்பதை பற்றி பார்ப்போம்..

    ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி மாதுளம் பழத்திற்கு உண்டு. இது, குழந்தைகளின் இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகிறது.

    கோடைக்காலத்தில் தர்பூசணியை குழந்தைகளுக்கு பழச்சாறாக தராமல், பழமாகவே சாப்பிட கொடுக்கவும். ஏனெனில், உடலில் நீர் வற்றிப்போகாமல் இருக்கப் பெரிதும் உதவும்.

    கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்சூடு காரணமாக, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தடுக்கும் சக்தி கொண்டது, சப்போட்டா பழம். இந்த பழம் ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

    பெரிய நெல்லிக்காயை குழந்தைகளுக்கு அப்படியே கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள். அதனால் சிறிது உப்பு, மஞ்சள் கலந்து வேகவைத்துக் கொடுக்கவும். இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.



    வெயில் காலத்தில் பச்சை, கருப்பு, உலர்ந்த திராட்சை என எல்லா வகைகளையும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இது வெயில் காலத்தில் குழந்தைகளை எளிதில் சோர்வடைய விடாமல் பாதுகாக்கும்.

    கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண கோளாறுகளை நீக்க வல்லது. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் அடைவதற்கும் உதவுகிறது.

    வெயில்கால மதிய வேளைகளில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு துளி எலுமிச்சை சாற்றை கலந்து தருவது நன்மை தரும்.

    சாத்துக்குடியில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். பல், ஈறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

    கோடைக்காலத்தில் முலாம் பழத்தை துண்டுகளாக்கி சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது உடல்சூட்டையும் குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்னையை தடுக்கும்.

    கோடைக்காலத்தில் குளிர்ச்சியை தரக்கூடிய பழங்களில் ஒன்று வெள்ளரி. இது குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணித்து, உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
    செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி வைத்து ரசம் செய்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இன்று இந்த ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளி - ஒரு கோலிக்குண்டு அளவு
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    பெருங்காயம் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    துவரம் பருப்பு - 1 கப் (வேக வைத்தது)
    உப்பு - தேவையான அளவு

    வறுத்து அரைக்க :

    கண்டந்திப்பிலி - 4
    மிளகு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி

    தாளிக்க :

    நெய் - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    வேக வைத்த பருப்பை நன்றாக மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கண்டந்திப்பிலி, மிளகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

    இவை அனைத்து நன்றாக சிவந்ததும் சீரகம் சேர்த்து இறக்கவும். இவை ஆறியவுடன் இந்த கலவையை பொடி செய்து வைத்து கொள்ளவும்.

    புளியை வென்னீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து புளிக்கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு, பொடித்து வைத்த ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

    புளியின் வாசனை மாறிய பிறகு வேக வைத்த பருப்பை நீர் விட்டு கலக்கி ரசத்துடன் சேர்த்து கொதிக்க விடவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, சீரகம் சேர்த்து அது வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான கண்டந்திப்பிலி ரசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    சன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை...

    எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதைத் தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.

    * நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க....

    * சன்ஸ்கிரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்’ (SPF - Sun Protection Factor) 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்’ 15 உள்ள சன்ஸ்கிரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 spf யூஸ் பண்ணுங்க

    * முகத்துக்கு மட்டும் இல்லைங்க வெயில்படும் எல்லா இடங்களையும்(கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் அப்ளை செய்யுங்க.

    * சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு தான் நீங்க வெளியில போகணும்.

    * என்னதான் நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலைவதைத் தவிர்க்க பாருங்க. தொடர்ந்து வெயிலில் இருந்தால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவி மீண்டும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

    தரமான பிராண்டட் சன்ஸ்கிரீன்களையே பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் எனப் பரிசோதித்து வாங்குங்கள்.
    இந்த ஆசனம் செய்யும் போது வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் நன்கு வலிமை அடைந்து சீராக வேலை செய்யும். இடுப்பு, முதுகின் கீழ்ப் பகுதி, கால்கள் வலிமை பெறும்.
    பெயர் விளக்கம்: “உத்தித” என்றால் மேலே தூக்கிய சாய்வான என்று பொருள். “ஏகை கபாதாசனம்” என்றால் தூக்கியகால்களில் ஒன்றை மேலேயும், ஒன்றை கீழேயும் வைப்பது என்று பொருள். இந்த ஆசனத்தில் இரண்டு கால்களையும் மாற்றி, மாற்றி வைத்து செய்வதால் இப்பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை: முதலில் சவாசனம் செய்து இரு குதிகால்களையும் சேர்த்து வைக்கவும். இருகைகளையும் உடலோடு ஒட்டியபடி நீட்டிவைக்கவும். உள்ளங்கைகள் கீழ் நோக்கியபடி இருக்கட்டும். மூச்சை உள்ளுக்கு இழுத்து தரை விரிப்பில் இருந்து கால்களை சிறிதளவு மேலே எழுப்பி மூச்சை வெளியேவிடவும். தரை மட்டத்திலிருந்து ஒரு காலை மேலே 30 டிகிரி கோண அளவிலும், மற்றொரு காலை 60 டிகிரி கோண அளவிலும் நிறுத்தவும்.

    இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் சில வினாடிகள் இருந்து 30 டிகிரி கோணத்தில் இருக்கும் காலை 60 டிகிரிக்கும், 60 டிகிரி கோணத்தில் இருக்கும் காலை 30 டிகிரிக்கும் மாற்றவும். இப்படி 3 முதல் 4 முறை காலை மாற்றிச் செய்யவும். முழங்கால்களை மடக்கக் கூடாது. பிறகு கால்கள் இரண்டையும் 30 டிகிரி கோண அளவில் ஒன்றாக இணைத்து மூச்சை உள்ளுக்கு இழுத்து, நிதானமாக கால்களை தரை விரிப்பின் மேல் இறக்கி மூச்சை வெளியேவிடவும். இந்த ஆசனத்தில் கால்கள் இரண்டையும் மாற்றும் போது மூச்சை வெளியே விடவும். ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் இருக்கவும். இந்தஆசனத்தை 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடி வயிற்றின் மீதும். மணிப்பூரச் சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: ஆரம்ப பயிற்சியில் தரை விரிப்பில் இருந்து கால்களை மேலே தூக்கி மாற்றி செய்ய முடியாதவர்கள் முதலில் படுத்த நிலையில் பிருட்சடத்தைமேலே தூக்கி, பிருட்சடத்தின் கீழே இரு கை விரல்களையும் இணைத்து வைக்கவும். உள்ளங்கைகள் கீழ் நோக்கியபடி இருக்கட்டும். கை விரல்களின் மேல் பிருட்சடத்தை வைத்து சில நாட்கள் பயிற்சி செய்து வரலாம்.

    தடைக் குறிப்பு: இடுப்பு வலி, இடம் விலகிப் போன டிஸ்க் தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    பயன்கள்: வயிற்றில் சேர்ந்திருக்கும் தேவையற்ற ஊளைச்சதைகள் நீங்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் நன்கு வலிமை அடைந்து சீராக வேலை செய்யும். இடுப்பு, முதுகின் கீழ்ப் பகுதி, கால்கள் வலிமை பெறும். நீரிழிவுற்கு பயனுள்ளது.
    நீரழிவு நோய், கண்கள் சோர்வு, ஜீரணக்கோளாறு, ரத்தக்கொதிப்பு என்று எல்லா வகையான நோய்களுக்கும் உணவுப் பட்டியல் உண்டு.
    உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் ஜப்பானியர்கள், 2003-ம் ஆண்டுக்கு பிறகு உடல்நலத்தை பேண இன்னும் அதிகமாக சிந்திக்கிறார்கள். இதன்காரணமாக சரியான விகிதத்தில் ஆரோக்கிய உணவுக்கடைகள் அங்கு அதிகரித்துள்ளன. டோக்கியோவின் மெகுரோ பகுதியில் உள்ள ‘நேச்சுரல் லாசன்’ என்ற ஆரோக்கிய உணவு அங்காடியில் சிறந்த உணவுப் பழக்கங்களை அறிமுகப்படுத்தும் உணவுகள், ஆலோசனைகள் கிடைக்கின்றன.

    இவர்கள் பண்ணையில், ரசாயன உரங்கள் சேர்க்காத காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்து அவற்றை பறித்த அன்றே விற்பனை செய்கின்றனர். உடல்நலத்திற்காக காய்கறி, பழச்சாறு வகைகளை உடனே தயாரித்தும் தருகின்றனர். இந்த ஆரோக்கிய உணவு அங்காடியில் நமக்குத் தேவையான சரியான உணவைத் தேர்வு செய்ய பட்டியல் தரப்படுகிறது. நீரழிவு நோய், கண்கள் சோர்வு, ஜீரணக்கோளாறு, ரத்தக்கொதிப்பு என்று எல்லா வகையான நோய்களுக்கும் உணவுப் பட்டியல் உண்டு. அந்த உணவுகளால் என்ன பயன்? என்னென்ன மூலப்பொருட்கள் உணவில் சேர்க்கப்பட்டு உள்ளன என்ற விவரம் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

    தயாரிக்கப்பட்ட உணவாக இல்லாமல், தனியாக பழங்கள், காய்கறிகளை உடனே வாங்க வசதி உண்டு. கைக்குத்தல் அரிசியில் தயாரிக்கப்பட்ட சோற்று உருண்டை பாக்கெட்டுகளும் உள்ளன. இதில் வைட்டமின், நார்ச்சத்து, உலோக உப்புகள் ஆகியவை தேவையான அளவு கிடைக்கின்றன. இந்த உருண்டைகளுக்கு ‘நிக்ர’ என்று பெயர். குறைந்த கலோரி கொண்ட நான்கு வகையான காய்கறி சூப்பும் கிடைக்கிறது.

    நம் உடல்நலம் பற்றி சொன்னால், அதற்கு ஏற்ற உணவுப் பட்டியலையும், ஆலோசனைகளையும் தர சத்துணவு நிபுணர்களும், இந்த ஆரோக்கிய உணவு அங்காடியில் உள்ளனர். தங்கள் உடல்நலத்திற்கென்றே இந்த ஆரோக்கிய உணவுகளை வாங்கிச் செல்ல நீண்ட தொலைவில் இருந்தும் பலர் தினமும் வருகின்றனர். இதுபோன்று ஆரோக்கியத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆரோக்கிய உணவு அங்காடிகள் ஆங்காங்கே வேகமாக திறக்கப்பட்டு வருகின்றன.

    நாமோ புற்றுநோயை உண்டாக்கும் துரித உணவகங்களில் தயாராகும் உணவுகளை சாப்பிடுவதில் தான் ஆர்வமாக உள்ளோம். எப்போதுதான் மாறுவோமோ?

    -மு.பெரியசாமி, திருத்துறைப்பூண்டி 
    இனிப்பு போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான கார போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 10
    உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
    முந்திரி பருப்பு - 10
    மைதா மாவு - 2 கப்
    பச்சை மிளகாய் - 2
    கடுகு - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லியிலை - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்யை தனித்தனியா கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய பச்சை மிளகாய், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு வதக்கி அதனுடன் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள், பொடி செய்த தூள் கலந்து கிளறி இறக்கி வைக்கவும்.

    மைதா மாவில் உப்புடன் சிறிது எண்ணெய், தண்ணீர் சேர்த்து போளிக்கு பிசைந்து கொள்வதுபோல் பிசைந்து கொள்ளவும்.

    மாவில் இருந்து ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து அதனை தட்டி நடுவில் பூரணத்தை வைத்து மீண்டும் கைகளால் தட்டி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும தட்டி வைத்த போளியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு போளி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலரை அலுவலகம் அல்லது நண்பர்கள் மத்தியில் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
    பெரும்பாலும் நமது உடல், "போதும்டா சாமி போய் தூங்கு என்னால இதுக்கு மேல முழிச்சிருக்க முடியாது.." என்று சொல்லும் எச்சரிக்கை மணி தான் கொட்டாவி. ஆனால், கொட்டாவி வருவதற்கு தூக்கம் வருவதும், உடல் சோர்வும் மட்டும் காரணம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

    சிலரை அலுவலகம் அல்லது நண்பர்கள் மத்தியில் நீங்கள் கண்டிருக்கலாம், அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். காலை, மதியம், மாலை என இவர்கள் கொட்டாவி விடாத நேரமே இருக்காது. இதற்கு என்ன காரணம்..??

    சில உடல்நல குறைபாடுகளின் அறிகுறிகளாக கூட கொட்டாவி இருக்கிறது. வியப்பாக இருந்தாலும் கூட உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமாக இருக்கலாம்…

    சோர்வின்றி அடிக்கடி உங்களுக்கு கொட்டாவி வந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் கல்லீரல் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரலில் பலவீனம், அல்லது செயல்திறன் குறைபாடு ஏற்பட்டால் கூட கொட்டாவி அடிக்கடி வருமாம்.



    கொட்டாவி வர மற்றுமொரு காரணமாக கருதப்படுவது மூளையின் ஆரோக்கியம். மூளை அலர்ஜி, ஸ்ட்ரோக், போன்றவையின் அறிகுறி தான் அதிகமாக வரும் கொட்டாவி என்கின்றனர். மூளையின் தண்டில் ஏற்படும் புண்களினால் கூட அதிகம் கொட்டாவி வருமாம்.

    சோர்வின்றி அடிக்கடி கொட்டாவி வருவது கை-கால் வலிப்பு ஏற்படுவதனால் கூட இருக்கலாம். வலிப்பு ஏற்படுவதால் மூளையில் ஏற்படும் எரிச்சல் ஓர் சிக்னலை வெளிப்படுதுமாம், அதனால் கூட அதிகம் கொட்டாவி வரலாம்.

    நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் விளைவால் ஏற்படும் சோர்வு கூட அடிக்கடி கொட்டாவி வர காரணமாக இருக்கலாம். மருந்து மாத்திரைகள் உங்களை தூக்க நிலைக்கு எடுத்து செல்ல கூடியவை. அந்த மயக்க நிலையின் காரணத்தினாலும் கொட்டாவி வருகிறது.

    தூக்கமின்மை போன்ற தூக்க குறைபாடுகளினால் கூட அதிகம் சோர்வின்றி கொட்டாவி வரலாம்.

    பெரும்பாலும் அனைவருக்கும் அதிகம் கொட்டாவி வருவதற்கு காரணமாக இருப்பது உடல் சோர்வும் மன அழுத்தமும் தான். சோர்வின்றி அதிகம் கொட்டாவி வந்தால், எதற்கும் மருத்தவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
    ஆண்கள் பாலியல் இன்பத்தை தனக்கு சக்தி தரும் ஆற்றல் மூலமாகவும், தனது காதலை தெரிவிக்கும் ஒரு கருவியாகவும் கருதுகின்றனர்.
    ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்துகொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.

    இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது காமம்.

    காதலின் உயிரியல் என்ற புத்தகத்தில் ஆர்தர் ஜானோவ் "காதல் என்பது மூளையில் ஏற்படும் ரசாயன எதிர்வினை நிகழ்ச்சி’’ என்கிறார். இந்த ரசாயனங்கள் முதல் பார்வையிலேயே காதல் விளைவை ஏற்படுத்தும். டோபமைன் மற்றும் நார் எபிநெப்ரின், கட்டிப்புடி ஹார்மோன் எனும் ஆக்ஸிடோசின் போன்றவை உடல் ரீதியான மகிழ்ச்சிக்கான உள்ளார்ந்த கிளர்ச்சியை ஏற்படுத்தி பாலியல் இன்பத்தை ஈர்க்கும். டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவை அதற்கு தூண்டுதலாக அமையும்.

    ஆண்களைவிட பெண்கள் அதிக ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோனைக் கொண்டிருப்பதுதான் பெண்கள் எளிதாக காதல்வயப்பட்டு புதிய உறவில் திளைக்க முக்கியக் காரணம். இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் அதிக அளவு சுரக்கும்போது அவர்கள் தங்கள் காதலனோடு மேலும் இணக்கமாகி வலுவான உறவை வளர்க்கிறார்கள்.

    தங்கள் காதலனின் பெயரைக் கேட்கும் போதும், காதலனின் உடல் நறுமணத்தோடு தொடர்புடையவற்றை நுகரும்போதும், காதலனை எண்ணிக் கனவு காணும்போதும், அவர்களுடன் தொடர்புடைய பாடலைக் கேட்கும் போதும் அவளது உடலில் ஆக்ஸிடோசின் அளவு உயர்கிறது. தான் நேசிக்கப்படுகிறவளாகவும், பாராட்டப்படுகிறவளாகவும் உணர்ந்தால் இந்த ஹார்மோன் அவளுடைய கன்னங்களுக்குள் ரத்தத்தை விரைந்து பாய்ந்தோடச் செய்து முகப்பொலிவையும் மினுமினுப்பையும் கொடுக்கிறது. ஆனால் அவள் தான் விரும்பத்தகாதவராகவும், புறக்கணிக்கப்பட்டவராகவும் உணர்ந்தால், அவளது உணர்வுகளை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

    பொதுவாக ஆண்கள் அதிக பாலியல் உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பதற்கு அவர்களின் உடலில் அதிகம் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன்தான் காரணம். ஒரு சாதாரண ஆணின் உடல், ஒரு பெண்ணின் உடலை விட 20 மடங்கு அதிகமாக இந்த ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.



    பாலியல் சார்ந்த விஷயங்களில் ஆண் மற்றும் பெண்களின் உணர்வுகள் வேறுபடுகின்றன. ஆண்களை போன்று பெண்கள் எப்போதும் உடலுறவை விரும்புவதில்லை. தன்னோடு பேசிப்பழகி, அன்றாட விஷயங்களை மகிழ்வுடன் பகிர்ந்து, இன்ப துன்பங்களில் தனக்கு ஆறுதலாகவும், தன்மேல் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கும் நம்பிக்கையான ஆண் மகனை தன்னுடைய காதலனாக தேர்வு செய்கிறாள்.

    திருமண பந்தத்தில் இணைந்து தனது மனதை கொள்ளை கொண்ட அந்த காதலனோடு மட்டுமே உறவு கொள்ள விரும்புகிறாள். பெண்களை பொறுத்தவரை பாலியல் இன்பம் என்பது மனம் சார்ந்தது, உள்ளார்ந்த உணர்ச்சிப்பூர்வமானது. தனது ஆசைகள், கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவையோடு பின்னிப்பிணைந்தது. பாலியல் இன்பம் என்பதை அவர்களுடைய உணர்வுப்பூர்வமான அர்ப் பணிப்பின் உச்சநிலையாக கருதுகின்றனர்.

    ஆண்களுக்கு பாலியல் இன்பம் என்பது அடிப்படை உடல்சார் தேவையாகவும், உடலில் பாலியல் உணர்ச்சியைத் தொடர்ந்து தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாகவும் அமைகிறது. இந்த உடல்தேவை பூர்த்தியாகும் வரை அவர்கள் எவ்வித அன்பையும், காதலையும் புரிந்து கொள்வதில்லை. பாலியல் இன்பத்திற்கான உள்ளுணர்வூக்கம் காதலால் உண்டானது அல்ல. மாறாக அது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனால் உண்டானது.

    ஆண்கள் பாலியல் இன்பத்தை தனக்கு சக்தி தரும் ஆற்றல் மூலமாகவும், தனது காதலை தெரிவிக்கும் ஒரு கருவியாகவும் கருதுகின்றனர். பெண் தன்னோடு உடலுறவு வைத்துக்கொள்ளும் போது மட்டுமே, தான் நேசிக்கப்படுவதாக ஆண் உணர்கிறான்; பெண், தான் உண்மையாக நேசிக்கப்படுவதாக உணரும்போது மட்டுமே, உடலுறவு வைத்துக் கொள்கிறாள். காமமின்றி காதல் இல்லை என்பது ஆண்களின் எண்ணம். காதலுக்காகவே காமம் என்பது பெண்களின் நிலைப்பாடு.

    ஓர் ஆண், தான் பாலியல் இன்பம் அனுபவிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய விதையை பரப்பி ஒரு குழந்தைக்குத் தந்தையாக இயலும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும். ஆகவே, ஒரு பெண் தன் வாழ்க்கை துணைவனான ஆண்மகனை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். சரியான தேர்வு மூலமே அவளால் சிறந்த சந்ததியை உருவாக்க முடியும்.



    குறைபாடுடைய மரபணுக்களைக் கொண்ட ஆண்களை தேர்ந்தெடுத்த பெண்கள் பலவீனமான சந்ததியை தோற்றுவிக்க நேரிடும். நல்ல வலுவுள்ள மர பணுக்களைக் கொண்ட ஆண்களை தேர்ந்தெடுத்தவர்கள்தான் வலுவான குழந்தைகளை பெற்றெடுப்பர். அக்குழந்தைகள் தங்களது எதிர்கால சந்ததிக்கு தாயின் மரபணுக்களை கடத்துகின்றனர். அதேவேளையில் ஆண்களின் தவறான தேர்வு அந்தளவுக்கு எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

    இந்த காரணங்களால் தான், தனது மனதைக் கவர்ந்திழுக்காத எந்த ஆண்மகனையும் தன்னோடு உறவாட பெண்கள் அனுமதிப்பதில்லை. காதலின் ஆரம்பநிலையில் அவர்கள் தனது மனதினுள் நுழையாத காதலனோடு பாலியல் உறவில் ஈடுபட மறுக்கிறார்கள். அது ஆண்களுக்கு தெரிவதில்லை. காதலர்களுக்கு பாலியல் உள்ளுணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் போது அது வெளிப்படுத்தும் உணர்ச்சி மனதைக்களிப்பூட்டி கிளர்ச்சியடையச் செய்கிறது.

    அந்த கிளர்ச்சி தான் பெண்களுக்கு காதலாகவும், ஆண்களுக்கு காமமாகவும் உருப்பெற அடித்தளமிடுகிறது. அவ்வாறு, உருப்பெற்ற காதலால் அவனோடு பாலியல் உறவு கொள்ள இணங்குகிறாள், அவனும் தனது காமத்தை தணித்துக் கொள்கிறான். நாளடைவில் சில ஆண்கள் தனதுமேல் கொண்ட அளவில்லா காதலாலும், நம்பிக்கையாலும்தான் தன்னோடு உறவுகொள்ள இணங்கினாள் என்பதை மறந்துவிடுகிறார்கள். வேறு நபர்களை நாட தொடங்கி விடுகிறார்கள். இந்த விஷயத்தில் பெண்கள் அப்படியில்லை.

    தான் நேசித்தவனுடன் உடலளவிலும் மனதளவிலும் இணைந்து அவனை தனது வாழ்க்கையாக எண்ணி வேறு ஓர் ஆண்மகனை மனதில் நினைக்கக்கூட மறுக்கிறாள். பாலியல் உணர்ச்சி என்பது ஆண்களின் தவறல்ல; அது அவர்களின் மரபணுக்களின் வெளிப்பாடு. ஆண்களின் பாலுறவு ஆர்வமும், பெண்களின் பாலுறவு ஆர்வமும் வித்தியாசமானது. இவர்களில் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று எவருமில்லர். ஆனால், இருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள். இதில் சிலர் விதிவிலக்காகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்து கொண்டால்தான், இருவருக்குள்ளும் இணக்கம் அதிகரிக்க வழிவகுக்கும்.

    முனைவர். அருள் லாரன்ஸ்,
    உளவியல் நிபுணர். 
    ஜவ்வரிசி, பருப்பு, சேமியா பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சூப்பரான இளநீர் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கெட்டியான பால் - அரை லிட்டர்,
    இளநீர் வழுக்கைத் துண்டுகள் - ஒரு கப்,
    தேங்காய் பால் - ஒரு கப்,
    சர்க்கரை - ஒரு கப்,
    ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
    முந்திரி - 10,
    நெய் - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    சிறிதளவு இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.

    மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு தேங்காய்பால் சேர்த்து கலந்து இறக்கவும்.

    மேலே இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம்.

    குறிப்பு: புத்துணர்ச்சி தரும். உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் நிறைந்தது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தங்க நகைகள் அணிவதில் அதிக ஆர்வமுடன் திகழும் தற்கால பெண்கள் அதனை தற்கால நவீன வடிவமைப்புகளிலும், தற்கால போக்குக்கு ஏற்ப தேர்வு செய்கின்றனர்.
    தங்க நகைகள் அணிவதில் அதிக ஆர்வமுடன் திகழும் தற்கால பெண்கள் அதனை தற்கால நவீன வடிவமைப்புகளிலும், தற்கால போக்குக்கு ஏற்ப தேர்வு செய்கின்றனர். முந்தைய நாட்கள் போல் கடைக்கு சென்று ஆய்வு செய்யும் பணிகள் இல்லை. நிறைய பேஷன் புத்தகங்கள், இணையதள புத்தகங்கள் போன்றவை நிகழ்கால டிரெண்ட் என்பதை ஆராய்ந்து ஆலோசனை வழங்குகின்றன.

    அதனை கண்காணித்து, தமது உடல் அழகிற்கு பொலிவூட்டும் நகை எது என்பதனை ஆராய்ந்தும் நகைகளை தேர்வு செய்கின்றன. தற்கால பெண்களின் நகை அணியும் முறைகள் என்பது பலபிரபலங்களின் அணிவகுப்பு, புதிய வடிவமைப்பு என்பதுடன். ஆர்வமூட்டும் அழகுடன் உள்ளதா என்பதை பொருத்து அமைகிறது. அந்த வகையில் தற்போது உள்ள நகைகளின் டிரெண்ட் என்பது சற்று மாறுபட்டவாறு உள்ளது. பாரம்பரிய நகை வடிவமைப்புகளை தாண்டி பிரமாண்ட நகை அலங்காரம் என்றவாறு உள்ளது.

    பெரிய முத்துமாலைகள், அடுக்கடுக்கான நெக்லஸ்கள், பூ வடிவமைப்பிலான பெரிய காதணிகள், ஆடைகளில் சொருகக்கூடிய பெரிய ஆபரண ஊசிகள், மணியமைப்பு காதணிகள் என்றவாறு அனைத்தும் பிரம்மாண்டமான தோற்றத்தடன் கண்கவரும் வகையில் உள்ளன. இந்த நகை அலங்கார அமைப்புதான் பிரபலங்களின் சிவப்பு கம்பள கம்பீர நடையழகை கவுரவிக்கும் விதமாக உள்ளது. இது தற்கால இளம் யுவதியர்களை கவர்ந்து இருப்பதால் அதுவே தற்போதைய டிரெண்ட் என்றவாறு பெரிய வலம் வருகின்றன.

    கற்களும் மணிகளும் நிறைந்த மாலைகள்

    பெரிய பாந்தமான வடிவிலான ஒற்றை கல் பதக்க தொங்கலுடன் மூன்று வரிசையில் தொங்கும் மணிகளான நெக்லஸ்கள். இத்துடன் கழுத்துடன் இறுக்கி பிடிக்கும் அதே கல் அலங்கார சோக்கர் நெக்லஸ் என உச்ச பட்ச பிரமாண்ட நகை அலங்கார அணிவகுப்பு. அதுபோல் முத்துக்கள் மற்றும் தங்க மணி உருளைகள் இணைந்து பெரிய பட்டவடிவ மாலைகள் மற்றும் நெக்லஸ்கள் பெண்களின் மனதை கவர்கின்றன. மணிமாலைகள் என்பது சரசரமாய் கோர்த்து மூன்று அடுக்குகளாய் இணைக்கப்பட்டு உள்ளது.



    ஆடைகளில் சொருகக்கூடிய அலங்கார ஊசிகள்

    ப்ரூசஸ் என்ற இந்த ஆபரண ஊசிகள் ஜாக்கெட் மற்றும் சேலையை இணைக்க சொருக கூடிய வகையில் உள்ளது. இந்த ப்ரூசஸ்கள் கண்கவர் மணிகள், கற்கள் பொருத்தப்பட்ட பெரிய வட்டம் மற்றும் பூக்கள் வடிவமைப்பில் ஆடைகேற்ற வண்ண சாயலுடன் உருவாக்கப்படுகிறது. நவீன யுவதியர் விரும்பி வாங்கும் ப்ரூசஸ் சிறியதும், பெரியதுமாக கிடைக்கின்றன.

    செயின் வடிவ காதணிகள்

    தற்கால பெண்கள் பெரிய பிரமாண்ட கற்கள் மற்றும் முத்து பதித்த காதணிகளை தேர்வு செய்கின்றனர். அதுபோல் நீளமான செயின் அமைப்பில் தொங்கும் தோரண காதணிகளும் பிரபலமாக உள்ளது. இது பிரதானமாக பெரிய ஒற்றை நிற கற்கள் பதித்து சுற்றிலும் சிறியதும் பெரியதுமான பிற நிற கற்கள் பதித்து மணிகள் மற்றும் முத்துக்கள் செயின் அமைப்பில் தொங்குகின்றன. அது போல் சாண்டிலியர் காதணிகளும் பெரிய வளைவுகள் மற்றும் அதிக வேலைபாட்டுடன் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவையாவும் தற்கால பெண்களின் விருப்பமான நகையாக உள்ளன.

    மஞ்சள் நிறத்தில் நகைகள்

    தங்கத்தின் அசல் நிறமான மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் படியான அதிக வேலைப்பாடுகள் கூடிய நகைகள் பிரபலமாக உள்ளன. இதில் கணினி உதவியுடன் மேம்பட்ட டிசைன்கள் மிக துள்ளியமாக மஞ்சள் உலோக பின்னணியில் ஜொலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. நவீன தங்க நகைகள் என்றவாறு பிரபலமடையும் இந்நகைகள் பாரம்பரிய தங்க நகைகளை விட மாறுபட்டது. ஆனால் அணியும் பெண்களை நவீன மங்கையராய் மாற்றும் திறன் கொண்டது. 
    ×