search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண் பெண்"

    ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.
    பருவ வயதுப் பெண்கள் `பாய்பிரண்ட்’ உடன் சுற்றித் திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகாரமாக அனேக பெண்கள் நினைக்கிறார்கள். பாய் பிரண்ட் இல்லையென்று வருத்தப்படும் பெண்களும் உண்டு.

    பாய்பிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினைப்பும் பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோருக்குள் எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    `ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது` என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது. பள்ளி - கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

    ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள்.

    வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும்.

    அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
    தற்போது மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களைவிட குறைவான வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் ஆண்கள் தங்களைவிட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.
    நம்முடைய முன்னோர்கள் காலத்தில் திருமணத்தில் பெண்கள் வயது குறைந்தவர்களாகவும் ஆண்கள் வயதில் பெரியவர்களாகவும் இருந்தார்கள். அதற்குப் பல்வேறு அறிவியல் காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் தற்போது மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களைவிட குறைவான வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் ஆண்கள் தங்களைவிட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    இந்திய தாம்பத்ய வாழ்வியல் கலாசாரப்படி திருமணத் தம்பதிகளில் பெண்ணிற்கு வயது குறைவாகவும், ஆணிற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. தன்னோடு வாழ்க்கையில் இணையும் பெண்ணை ஆண்தான் வழிநடத்தவேண்டும் என்பதாலும், உலக அனுபவம் ஆண்களுக்கு அதிகம் என்பதாலும் கணவர், மனைவியைவிட வயதில் சற்று அதிகமானவராக இருக்கவேண்டும் என்ற நியதி வகுக்கப்பட்டிருக்கிறது.

    பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அப்போதும் பெண்கள் சிந்திக்கும் திறன் படைத்தவர்களாகவே இருந்தபோதிலும் அவர்களின் சிந்தனையை அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்பதை தடுத்தார்கள். எப்போதும் அடங்கி நடக்கவேண்டும் என்றார்கள். அதனால் வயதிலும் தன்னைவிட பெண் குறைவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதற்காகத்தான் தங்களைவிட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்தார்கள் என்ற கருத்தொன்று உண்டு.  

    உடல்ரீதியாக பார்த்தால் ஆண்கள் அதிக காலம் இளமையாக இருப்பார்கள். பெண்கள் பிரசவத்திற்கு பிறகு இளமைப் பொலிவை சற்று இழக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் உடற்கட்டு குலையும். ஆகவே நிகரான ஜோடியாக திகழ மனைவி, கணவரைவிட வயது குறைந்தவராக இருக்கவேண்டும் என்றார்கள். ‘பெண்கள் குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மையடையவேண்டும். ஆண்களுக்கு அப்படி எந்த வரம்பும் இல்லை. அதனால்தான் பெண்ணுக்கு, ஆணைவிட குறைந்த வயதிலே திருமணம் செய்துவைக்கப்படுகிறது’ என்ற கருத்தும் உண்டு.

    இப்படி சொல்லப்பட்ட காரணங்களை எல்லாம் இன்றைய சமூகம் குப்பையில் தூக்கிப்போட்டுவிட்டது. இப்போது வயது ஒரு பொருட்டில்லை. தன்னை விட வயதில் மூத்த பெண்ணாக இருந்தாலும் விரும்பி மனம் ஒத்து திருமணம் செய்துகொண்டு ஆண்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

    காலம் மாறிவிட்டது. அதனால் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுவிட்டன. காலத்திற்கேற்ப மனிதர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது என்கிற குரல் ஒலிக்கத்தொடங்கிவிட்டது.

    பெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்றாகும்.
    பெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்று. ஆண்கள் நன்கு சுத்தமாக, ஹேண்ட்சம்மாக இருந்தால், பெண்கள் அவர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவார்கள். ஏனெனில் பெண்கள் எதிலும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதுமட்டுமின்றி, ஒருவரின் சுகாதாரம் மற்றவர்களின் முன் நல்ல மரியாதையையும் வழங்கும். சரி, இப்போது பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

    உடல் முழுவதும் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் உடலில் துர்நாற்றம் வீசாமல் இருக்காது. அளவுக்கு அதிகமான பெர்ப்யூம் அருகில் வருவோருக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தும். ஆகவே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நீங்கள் பெர்ப்யூம் அடித்தால் போதும். அதிலும் காதுகளுக்கு பின், மணிக்கட்டு மற்றும் கழுத்து போன்ற இடங்களில் மட்டும் ஆண்கள் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் போதும். அதுவே அவர்கள் மீது அளவாக நல்ல நறுமணத்தை வீசும்.

    சில பெண்கள் ஆண்களின் முடியால் மயங்குவார்கள். அதற்காக ஆண்களின் முடியை அடிக்கடி வருடிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உங்கள் காதலி அல்லது மனைவி உங்கள் முடியை அதிகம் தொட்டுப் பேசும் போது, தலையில் பொடுகு இருந்தால் எப்படி இருக்கும். ஆகவே தினமும் மைல்டு ஷாம்பு போட்டு குளித்து உங்கள் முடியை சுத்தமாக வைத்திருங்கள்.



    ஆண்களின் உதடுகளைப் பார்த்தால் முத்தம் கொடுக்க தோன்ற வேண்டும். அதைவிட்டு உலர்ந்து காணப்பட்டால், யாருக்கு தான் பிடிக்கும். ஆகவே உதடுகளை எப்போதும் வறட்சியின்றி நீர்ப்பசையுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வேஸ்லினை உதடுகளுக்கு தடவி வாருங்கள்.

    பற்கள் காலையில் காபி குடிப்பதில் இருந்து சிகரெட் மற்றும் இதர குளிர் பானங்களைக் குடிப்பதால், முத்துப் போன்ற பற்கள் மஞ்சள் நிறத்தில் அழுகிப் போன பற்கள் போன்றாகிவிட்டன. மஞ்சள் நிறத்தில் பற்கள் இருந்தால், எந்த ஒரு பெண்ணும் அருகில் கூட ஏன் பேச கூடமாட்டாள். ஆகவே தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட்டில் சிறிது உப்பு தூவி துலக்குங்கள். அல்லது வேறு ஏதேனும் இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றி பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குங்கள்.

    வயதாக ஆக உடலின் பல பகுதிகளில் தேவையற்ற முடிகள் அதிகம் வளர ஆரம்பிக்கும். ஆனால், சில ஆண்களுக்கு இளமையிலேயே மூக்குகளில் வளரும் முடியானது வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும். அப்படி மூக்குகளில் முடி நீட்டிக் கொண்டிருந்தால், அது மோசமான தோற்றத்தை வெளிக்காட்டும். ஆகவே அவ்வப்போது மூக்கில் வளரும் முடியை வெட்டிவிடுங்கள்.
    ×