என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
இன்றைக்கு பெருகிவரும் மணவிலக்குகளுக்கு சமூக வலைத்தளங்களும் பெரும்பங்கு ஆற்றுகிறது என்பது வேதனையான ஒன்று. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்கள் இன்று பெரும்பான்மையான மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத அங்கமாக மாறிவருகின்றன. மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகமாக கொண்ட நம்முடைய நாட்டில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி இன்னும் கூடுதலானது.
நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக சமூகவலைத்தளங்கள் திகழ்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கையடக்க கணினி மற்றும் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவருகிறது.
சமூக வலைத்தளம் என்பது பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்றவைகளாகும். ரெயிலிலும், பஸ்களிலும் ஒருவரையொருவர் பார்த்தால், புன்முறுவல் செய்ய நேரம் இல்லாத அளவுக்கு ஒவ்வொருவரும் தத்தம் செல்போன்களில் மூழ்கிவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக செல்போனில் சமூக வலைத்தளங்களை தான் எந்நேரமும் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டில் நன்மைகளும், தீமைகளும் கலந்தே இருக்கின்றன. இதன் நன்மைகளை நாம் எப்படி நமது வாழ்வுக்கும், தொழிலுக்கும் பயன்படுத்திக்கொள்வது என்கின்ற பார்வை மட்டுமே நம்மை முன்னோக்கி நகர்த்தும்.
உலகின் எங்கோ ஒரு பகுதியில் வசிப்பவர் உலகெங்கும் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன. புதிய உறவுகளையும், நட்புகளையும் உருவாக்கிக்கொள்ளவும் பழயனவைகளை புதுப்பித்துக்கொள்ளவும், தக்கவைத்துக்கொள்ளவும் சமூக வலைத்தளங்கள் பெரும் பயனளிக்கின்றன.
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் இன்றைக்கு ஆளுக்கு வெவ்வேறு ஊர்களில் வாழலாம். மீண்டும் தங்கள் நட்பை தொடர இனிமையான இளமைக்கால நாட்களை திரும்பப்பெற சமூக வலைத்தளம் வழிவகுக்கிறது.
மேலும், தனி மனிதரோ, நிறுவனமோ தங்கள் வியாபாரத்தினை பெருக்கிக்கொள்ள சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன. சுந்தரி என்ற சாமானிய பெண், சென்னை மெரினா கடற்கரையில் மீன், இறால் என்று சுவையாக கடல் உணவுகளை விற்பவர். தற்போது, இவர் சமூக வலைத்தளங்களின் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
லட்சக்கணக்கான நபர்கள் வலைத்தளம் மூலம் இவரின் செயல்பாட்டினை அறிகிறார்கள். இதனால் இவரின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. இவருடைய கடையில் வரிசையில் நின்று மக்கள் சாப்பிடுவது அன்றாட காட்சியாகிவிட்டது.

தரமான பொருட்களை, சேவைகளை சிறிய வட்டத்தைத் தாண்டி மற்றவர்கள் அறிய செய்வது சமீப காலங்கள் வரை எளிமையான காரியம் அல்ல. அதற்காக விளம்பர செலவுகள் லட்சக்கணக்கில் செலவிட வேண்டும். ஆனால் காசு செலவு இல்லாமல் மக்களை எளிதில் சென்றடைய சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன.
இப்பொழுது உடனுக்கு உடன் செய்திகளையும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஒவ்வொருவரும், இதில் செய்தி சேகரிப்பவராகவும் செய்தியினை கொண்டு செல்பவராகவும் செயல்படுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம் பெரும் எழுச்சியோடு நடந்ததற்கும், அதில் நாம் வெற்றி பெற்றதற்கும் சமூக வலைத்தளங்களின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்தது.
சில பாதகமான விஷயங்களும் சமூகவலைத்தளங்களால் ஏற்படுவது உண்டு. குறிப்பாக, ஆதாரமற்ற, மேம்போக்கான தவறான தகவல்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. அவற்றை உண்மை என்று நம்பிவிடும் அபாயமும் உள்ளது. மேலும் எளிதில் யார் மீதும் அவதூறு பரப்பும் செயலுக்கும் சமூக வலைத்தளங்கள் அடிபணிகின்றன.
அதைப்போலவே, பேஸ்புக் புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வாய்ப்புகள் அளித்தாலும், சில நேரங்களில் கூடா நட்பு கேடாய் முடியும் விபரீதமும் அரங்கேற வாய்ப்புண்டு. குறிப்பாக, பெண்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்படும் செய்திகளை நாம் பார்க்கிறோம். தவறான நபர்கள் மூலம் உண்டாகும் நட்புகள் குடும்ப வாழ்க்கையையே சிதைத்துவிடும்.
எனக்கு நன்கு அறிமுகமான குடும்பம் ஒன்றில் பெண்மணி ஒருவர் கணவன், குழந்தைகள் வெளியே சென்றவுடன் பொழுது போக்கிற்கு பேஸ்புக்கில் நேரம் செலவழிப்பார். அதில் அறிமுகமான ஒரு ஆணுடன் உரையாடத் தொடங்கினார். நெருங்கிய நண்பர்களானார்கள். ஒருகட்டத்தில் அந்த ஆண், பெண்மணியை மிரட்டி பணம் கேட்கும் அளவிற்கு போய்விட்டது. தக்க சமயத்தில் கணவரிடம் நடந்ததை கூறியதால் பிரச்சினையின்றி சிக்கலிலிருந்து மீள முடிந்தது.
இன்றைக்கு பெருகிவரும் மணவிலக்குகளுக்கு சமூக வலைத்தளங்களும் பெரும்பங்கு ஆற்றுகிறது என்பது வேதனையான ஒன்று. புதிய கண்டுபிடிப்புகளால் ஒரு பக்கம் நன்மை இருந்தாலும் இன்னொரு பக்கம் பாதகமும் இருக்கத்தான் செய்கிறது.
மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும் இதே நிலைதான். ஒரு பக்கம் பயணம் எளிதானாலும் இன்னொருப் பக்கம் விபத்துகள் அதிகரித்தன. அதற்காக நாம் அவைகளை பயன்படுத்தாமல் இருப்பதில்லையே. எதிலும் எச்சரிக்கையோடும் கவனத்துடனும் செயல்படும்போது எத்தகைய புதிய கண்டுபிடிப்புகளையும் நாம் எளிதில் ஆட்கொள்ளமுடியும்.
மாற்றங்கள் மட்டுமே மாறாதவை. மற்றவையெல்லாம் மாறிக்கொண்டே இருப்பவை. நமக்காக உலகம் காத்திருப்பதில்லை. உலகோடு ஒட்டி வாழ வேண்டுமெனில் சமூக வலைத்தளங்கள் அளிக்கும் நன்மைகளையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வதும் விபரீதங்களில் இருந்து விலகி நிற்பதும் அவசியம்.
தகவல் தொழில்நுட்ப நிபுணர், கணபதி.ம

குழந்தைகள் மட்டன் லிவரை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் மட்டன் லிவரில் டிக்கா செய்து டூத்பிக்கில் வைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
மட்டன் ஈரல் - 200 கிராம்,
வெங்காயம் - 2,
பூண்டு - 6 பல்,
தக்காளி - 2
இஞ்சி - 20 கிராம்,
பச்சை மிளகாய் - 1,
குடை மிளகாய் - 1,
சோம்பு - ¼ டீஸ்பூன்,
மிளகு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்,
தனியாத்தூள் - ½ டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
டூத்பிக் (Tooth pick) - தேவைப்படும் எண்ணிக்கையில்.

செய்முறை :
மட்டன் ஈரலில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
தக்காளி (விதையை எடுத்து விட்டு), குடை மிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கழுவிய மட்டன் ஈரலில் சிறிது தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக விடவும்.
1 வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்த மட்டன் ஈரலை சேர்த்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். சுருள வதங்கியவுடன் இறக்கி விடவும்.
தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சதுர வடிவில் கட் செய்த தக்காளி, வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து இரண்டு பக்கமும் லேசாக வேக விடவும்.
டூத்பிக் குச்சியில் ஒரு தக்காளி துண்டு, லிவர், வெங்காயத்துண்டு, குடை மிளகாய் துண்டு என்ற முறையில் சொருகி வைத்து பரிமாறவும்.
சூப்பரான மட்டன் லிவர் டிக்கா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சரும வறட்சி, கருமையான தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள திராட்சைப்பழத்தை கூழாக்கி மசாஜ் செய்து வரலாம்.
வெப்பமும், சுற்றுச்சூழல் மாசுபாடும் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சரும வறட்சி, ஈரப்பதம் இழப்பு, கருமையான தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகள் தோன்றும். இந்த பிரச்சினைகளில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள திராட்சைப்பழத்தை கூழாக்கி மசாஜ் செய்து வரலாம். திராட்சையை பயன்படுத்தி சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் விதம் குறித்து பார்ப்போம்.
சரும வறட்சி பிரச்சினைகளுக்குள்ளானவர்கள் திராட்சை பழத்துடன் ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து சரும நலனை காக்கலாம். நான்கைந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை துண்டுகளாக வெட்டி, அதனுடன் சிறிதளவு திராட்சை பழங்களை சேர்த்து கூழாக்கிக்கொள்ள வேண்டும். ஒப்பனை செய்ய பயன்படுத்தும் பிரஸ் மூலம் கூழை முகத்தில் அழுத்தமாக தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.

எண்ணெய் பசை கொண்ட சருமத்தினர் திராட்சைப்பழத்துடன் முல்தானி மெட்டியை கலந்து உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். முதலில் திராட்சை பழங்களை கூழாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் முல்தானி மெட்டி, ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து நன்கு பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் சருமம் ஜொலிக்கும்.
தோல் சுருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தக்காளியும், திராட்சையும் துணைபுரியும். அகலமான கிண்ணத்தில் ஒரு தக்காளி பழம் மற்றும் 10 திராட்சை பழங்களை போட்டு நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். பிரஸ் மூலம் கருவளையங்கள் உள்ள பகுதியில் கலவையை அழுத்தமாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் இந்த மசாஜ் செய்து வரலாம். சருமம் பளிச்சென்று காட்சி தரும்.

பெண்கள் சந்தோஷமாக குழந்தையை பெற்றெடுத்த பின்பு, வேலைக்கு போகும் பெண்கள் என்றால் சரியான நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்துப்போகிறார்கள்.
பெண்கள் அனைவருமே தாய்மைக்கு ஏங்குகிறார்கள். கர்ப்பிணியாகி, பிரசவித்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வளர்க்கவும் விரும்புகிறார்கள். ஆனால் சந்தோஷமாக குழந்தையை பெற்றெடுத்த பின்பு, அவர்கள் வேலைக்கு போகும் பெண்கள் என்றால் சரியான நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்துப்போகிறார்கள்.
அதனால் வேலையை விட்டுவிட தயாராகிறார்கள். வேலையை ராஜினாமா செய்துவிட்டு குழந்தையை பராமரிக்கும் அவர்கள், குழந்தை வளர்ந்த பின்பு மீண்டும் வேலை தேடத் தொடங்குகிறார்கள். அப்போது அவர்கள் எதிர்பார்த்த வேலை அமைவதில்லை. அதனால் தங்கள் பணிரீதியான வாழ்க்கையை அவர்கள் மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்கவேண்டியதிருக்கிறது. இது அவர்களை கவலைக்குள்ளாக்குகிறது.
தாய்மையடைவது என்பது இப்போது சிரமமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் தாய்மையடையாவிட்டால், அதற்கான சிகிச்சைகளுக்காக அலைய வேண்டியதாகிவிடும். கர்ப்பமாக தாமதமானால் பலருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டிய திருக்கும். ஆனால் கர்ப்பிணியாகி குழந்தை பெற்றுவிட்டால், தாய் மட்டும் செய்ய வேண்டிய சில பராமரிப்புகள் இருக்கின்றன.
அதில் குறிப்பிடத்தக்கது தாய்ப்பால் புகட்டுவது. முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். பின்பும் தாய்ப்பால் கொடுத்தபடியே, வேறு மென்மையான உணவுகளையும் வழங்கவேண்டும். முதல் ஆறு மாதங்கள் முழுநேர உணவாக தாய்ப்பால் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்போதுதான் பெண்கள் முடிவெடுக்க முடியாமல் திணறி வேலையை விட்டுவிடுகிறார்கள். 50 சதவீத பெண்கள், தாய்ப்பால் புகட்டும் காலத்தில் வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார்கள் என்று சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆனதும் வேலைக்கு செல்ல முன்வருகிறார்கள். ஆனால் பணியிடத்தில் அவர்களால் நிம்மதியாக வேலைபார்க்க முடிவதில்லை. குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் குற்றஉணர்வாக மாறிவிடுகிறது. பால் தேங்கி அதுவாக சுரக்கும் நிலையும் உருவாகிறது. துணி நனைந்து போவதும் அவர்களுக்கு பணி இடத்தில் நெருக்கடியை உருவாக்குகிறது. அதனால் அவர்களால் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்ய முடியாத நிலை தோன்றுகிறது.

பிரசவகால விடுமுறை முடிந்து வேலைக்கு செல்லும் தாய்மார்கள் அங்கே பாலை எடுத்து பாதுகாக்கலாம். பிரெஸ்ட் பம்ப் உதவி யோடு இதை எளிதாக செய்யலாம். அம்மா அருகில் இல்லாவிட்டாலும் இதன் மூலம் குழந்தைக்கு பால் கிடைக்கும். பிரிட்ஜில்வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு தேவையான பாட்டில்கள் மெடிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கும். இதனை வாங்கி பயன்படுத்தும் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பும் சுத்தமும் நிறைந்த அறையும், பிரிஜ்ஜும் இருந்தால் அதற்கு போதுமானது.
எல்லா நாட்டு சட்டங்களும் இப்போது தாய்மைக்கு தனி மரியாதை அளிக்கின்றன. அமெரிக்காவில், 12 மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் பிரெஸ்ட் பம்ப் மூலம் பாலை சேகரிக்க, அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்களே சுகாதாரமான தனி அறை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்ற சட்டம் உள்ளது. தாய்மார்கள் காலை முதல் மாலை வரை தாய்ப்பாலை வெளியேற்றாமலே இருந்தால், அது சுரக்கும் அளவு காலப்போக்கில் குறைந்துபோய்விடும்.
அதனால் காலையில் பால் கொடுத்துவிட்டு, பின்பு மாலையில் போய் கொடுத்தால் போதும் என்று தாய்மார்கள் நினைத்தால் இயல்பாகவே பாலின் அளவு குறைந்திடும். ஆகவே பிரெஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து சேகரித்து, குழந்தைக்கு வழங்குவது சரியான நடை முறையாகும். வேலைக்குப் போகும் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்கு பால்புகட்ட வசதியாக அந்த நிறுவனங்களே நேரம் ஒதுக்கி, ‘நர்சிங் பிரேக்’ வழங்கவேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.
தாய்ப்பால், குழந்தைகளுக்கு மிகுந்த பலனளிப்பது என்பது எல்லோருக்கும் தெரியும். கூடவே தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களுக்கும் நிறைந்த பலனைத் தருகிறது. பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அவர்கள் சரியாக, தொடர்ச்சியாக பாலூட்டிவந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். அதோடு அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழல் குறையும். கருப்பை புற்று நோய், சர்க்கரை நோய், எலும்பு தேய்மானம் போன்றவைகள் ஏற்படு்ம் சூழ்நிலையும் குறையும். அதோடு தாய்ப்பால் புகட்டுதல் ஒரு கருத்தடை முறைபோன்றும் செயல்படும். அடுத்து கர்ப்பிணியாவதும் தள்ளிப்போகும்.

சத்துநிறைந்த பீட்ரூட்டை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. இன்று பீட்ரூட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - 400 கிராம்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
வினிகர் - 3/4 டீஸ்பூன்
பூண்டு பல் - 2
ஸ்பிரிங் ஆனியன் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
ஸ்பிரிங் ஆனியன், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு 25 முதல் 30 நிமிடம் வரை வேக விடவும்.
வெந்தவுடன் பீட்ரூட்டை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஆலிவ் ஆயில், வினிகர், பொடியாக நறுக்கிய பூண்டு, ஸ்பிரிங் ஆனியன், உப்பு முதலியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு நன்கு குலுக்கி, வேக வைத்து நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டில் ஊற்றி நன்கு கிளறி பரிமாறவும்.
சூப்பரான பீட்ரூட் - பூண்டு சாலட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பீட்ரூட் - 400 கிராம்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
வினிகர் - 3/4 டீஸ்பூன்
பூண்டு பல் - 2
ஸ்பிரிங் ஆனியன் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
ஸ்பிரிங் ஆனியன், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு 25 முதல் 30 நிமிடம் வரை வேக விடவும்.
வெந்தவுடன் பீட்ரூட்டை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஆலிவ் ஆயில், வினிகர், பொடியாக நறுக்கிய பூண்டு, ஸ்பிரிங் ஆனியன், உப்பு முதலியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு நன்கு குலுக்கி, வேக வைத்து நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டில் ஊற்றி நன்கு கிளறி பரிமாறவும்.
சூப்பரான பீட்ரூட் - பூண்டு சாலட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது செல்போனை உபயோகப்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் கழுத்துவலி, தோள்பட்டை வலியை உருவாக்கும்.
நடைபயிற்சிக்கு இப்போது மவுசு அதிகரித்துவிட்டது. உடல் நலன் கருதி வீட்டுக்கு வீடு இப்போது எல்லோரும் நடக்கிறார்கள். ஆனால் மேலோட்டமாக நடப்பது முக்கியமல்ல, சரியான முறையில் நடந்து, நடைப்பயிற்சியை மேற்கொள்வதே முக்கியம்.
சரியான நடைப் பயிற்சிக்கு எப்படி நடக்கவேண்டும்?
தலை நிமிர்ந்த நிலையில் கம்பீரமாக நடக்க வேண்டும்.
அப்போது தோள்களை நெகிழ்வாக வைத்திருக்க வேண்டும். தோள்கள் விரைப்பாக இருக்கக்கூடாது.
ஆண்கள் ஒரு மணி நேரத்தில் 7192 ஸ்டெப்கள் வைக்கும் அளவுக்கு வேகமாக, இரண்டு கைகளையும் வீசிக்கொண்டு நடக்க வேண்டும்.
நடக்கும்போது இரண்டு கால்களும் பரஸ்பரம் ஒரே வேகத்தில் இயங்கவேண்டும்.
நடைப் பயிற்சிக்கு காலணிகள் முக்கியம். பாதங்களை முழுவதுமாக மூடி யிருக்கும் காலணிகளை அணிந்துகொண்டு நடந்து செல்லுங்கள்.
சமமான தரைப்பரப்பில், நேராக பார்த்து நடந்துசெல்லவேண்டு்ம். அப்போது பார்வை குறைந்தது 15 அடி தூரத்தில் விழவேண்டும்.
முடிந்த அளவு வயிற்றுப் பகுதி தசைகளை மென்மையாக உள் இழுத்தபடி நடையை தொடருங்கள்.
பெண்கள் தினமும் 45 நிமிடங்கள் வரை நடக்கலாம். அப்போது அவர்கள் 5400 ஸ்டெப்கள் வரை வைக்கலாம். பெண்கள் தினமும் நடக்கவேண்டும். பத்து நிமிடங்களில் 1200 ஸ்டெப்களுக்கு குறையாத அளவுக்கு அவர்கள் நடந்துசெல்ல முயற்சிக்கவேண்டும்.
சைக்கிள் மிதிப்பது மிக சிறந்த பயிற்சி. 150 ஸ்டெப்கள் நடப்பதற்கு பதில், ஒரு நிமிடம் சைக்கிள் மிதித்தால்போதும். ஒரு நிமிடம் ரோலர் ஸ்கேட்டிங் செய்வது 200 ஸ்டெப்கள் நடப்பதற்கு சமமானது.
50 வயதைத் தொடுகிறவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் நடந்தால்போதும். தினமும் காலையிலோ, மாலையிலோ 30 முதல் 45 நிமிடங்கள் நடக்கவேண்டும். வேகமாக நடக்கிறவர்கள் அரை மணி நேரத்திற்குள் நடந்தாலும்போதும்.
முதலில் ‘வார்மிங் டைம்’ என்ற தொடக்க நடையை 5 முதல் 10 நிமிடங்கள் வரை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். அதன் பின்பு வேகத்தை அதிகரித்து முடிந்த அளவுக்கு வேகமாக 15 நிமிடங்கள் வரை நடக்கவேண்டும். பின்பு வேகத்தைக் குறைத்து பத்து நிமிடங்களில் முடித்துக்கொள்ளவேண்டும்.
நடைக்கு பிறகு உடல் சோர்வாகத் தெரிந்தால் சிறிது நேரம் காற்றோட்டமுள்ள திறந்த வெளியில் ஓய்வெடுங்கள். அப்போது நிறைய தண்ணீர் பருகுங்கள். அதன் மூலம் உடலுக்கு தேவையான பிராணவாயு கிடைக்கும்.
நடக்கும்போது நெஞ்சுவலி, கழுத்து வலி, தலைசுற்றல், மூச்சுவிட சிரமம், கண் இருண்டுபோதல், கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் போன்ற ஏதாவது ஏற்பட்டால் உடனே நடைப்பயிற்சியை நிறுத்திவிட்டு, டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும்.
இரவில் நிம்மதியாக தூங்கி எழுந்து, உடல் புத்துணர்ச்சியோடு இருக்கும் அதிகாலை நேரம் நடைப் பயிற்சிக்கு மிகவும் பொருத்தமானது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் டீ அல்லது காபி பருகி, அரை மணி நேரம் கழித்து நடைப் பயிற்சியை தொடங்கவேண்டும். அவ்வாறு செய்தால் ரத்தத்தில் போதுமான அளவு சர்க்கரை இருக்கும். அதன் மூலம் ‘லோ சுகர்’ ஆவதை தவிர்க்கலாம்.

மாணவர் பருவத்தில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவது வெற்றிக்கு வித்திடும். வெற்றியைத் தரும் அந்த பழக்கவழக்கங்களின் பட்டியலை பார்க்கலாம்.
வெறும் பள்ளிப்பாடங்கள் மட்டும் வெற்றியைத் தந்துவிடுவதில்லை. நாம் நாள்தோறும் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களே நமக்கு அடையாளத்தையும், வெற்றியையும் தேடித் தருகின்றன. மாணவர் பருவத்தில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவது வெற்றிக்கு வித்திடும். வெற்றியைத் தரும் அந்த பழக்கவழக்கங்களின் பட்டியல் இதோ...
சுறுசுறுப்பு :
வெற்றியின் அடிப்படையே சுறுசுறுப்பான இயக்கத்தில்தான் உள்ளது. சோம்பேறிகளால் சாதிக்க முடிவதில்லை. சுறுசுறுப்பை வளர்த்துக் கொண்டால் அவர்களால் அடைய முடியாத இலக்கு இல்லை. பலருக்குள்ளும் சோம்பேறித் தனம் எனும் பூதம் ஒளிந்து கொண்டிருக்கும். ஆனால் வெற்றியாளர்களிடம் மட்டுமே சுறுசுறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனிக்காமல் இருப்பது, படிக்கும் நேரத்தில் அரட்டையடித்து பொழுதுபோக்குவது, விளையாடி மகிழ்வது, தேவையற்ற சிந்தனையில், செயல்களில் நேரத்தை வீணடிப்பது எல்லாமே சோம்பேறித்தனமும், அசட்டை எண்ணத்தின் வெளிப்பாடும்தான். கடும் முயற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தை ஒழிக்க முடியாது. சோம்பல் ஒழிந்தால் சுறுசுறுப்பு தானே பிறந்துவிடும். வெற்றியும் துளிர்விடத் தொடங்கிவிடும்.
ஒழுங்குபடுத்தல் :
எதற்கும் ஒரு திட்டம் வகுத்து, சீரான ஒழுங்குடன் செயல்படுவது வெற்றி மாணவர்களின் அடையாளம். பாடத்திட்டங்களை சீராக தினமும் படிப்பவர்கள், தேர்வில் உயர் மதிப்பெண் பெறுவதுபோல, எதிலும் திட்டமிட்டு செயல்படுபவர்கள் வெற்றியை எட்டுவது திண்ணம்.
பிரித்து செயல்படுங்கள் :
பல பாடங்கள் படிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு செயல்களை செய்ய முடியாது. எனவே ஒன்றை திறம்பட செய்து முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்வது முக்கியமாகும். எனவே எத்தனை பாடங்கள், திட்டங்கள் இருந்தாலும் அவற்றை பகுதி, பகுதியாக பிரித்து செயல்படுத்துவது வெற்றியை எளிதாகப் பெற துணை செய்யும்.

நடப்பதை பதிவு செய்யுங்கள் :
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துவததை குறிப்பெடுப்பதுபோல, இலக்கை நோக்கிய பயணத்தையும் குறிப்பெடுப்பதும், நடப்பதை பதிவு செய்வதும் முக்கியமாகும். இதுதான் ஏற்ற இறக்கங்களை அறிந்து அடுத்த கட்ட திட்டமிடலுக்கு உதவும்.
ஆராய்ந்து செயல்படுங்கள் :
வெற்றித் திட்டத்தை அவ்வப்போது ஆராயுங்கள். இப்போதைக்கு கல்விதான் இலக்கு என்றால் படிக்கும் இடம், படிக்கும் நேரம், உடன்படிக்கும் மாணவர் குழு ஆகியவற்றை தீர்மானிப்பதும், இந்த செயல்பாடு வெற்றிக்கு உதவுகிறதா? என்பதை ஆராய்வதும் முக்கியமாகும்.
கேள்வி கேளுங்கள் :
கேள்வி ஞானம் எப்போதுமே வெற்றிக்கு அவசியமாகும். பாடங்கள் படிக்கும்போதும், ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போதும் ஏன், எதற்கு, எப்படி, எங்கே, யார் என பலவிதமான கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது இலக்கை அடைய உதவும்.
ஓய்வு முக்கியம் :
வெற்றிக்கு செயல்பாடுமட்டுமல்ல, போதிய ஓய்வும் அவசியம். நமது உள்ளம் ஓய்வின்றி செயல்படலாம். ஆனால் உடல் ஓய்வின்றி செயல்படாது. எனவே உடலுக்கு போதிய ஓய்வு எடுத்துக் கொண்டு செயல்பட்டால் உள்ளம் மேலும் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வெற்றியை துரிதப்படுத்தும்.
படிக்கும்போது வேண்டாத பழக்கங்களை பின்பற்றுபவர்களின் எதிர்காலம் பாழகிவிடுகிறது. மேற்கண்ட நற்பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறுவது நிச்சயம்!

தூக்கத்துக்கு உதவுவதற்கு என்றே மருத்துவமனைகள்கூட உருவாகிவிட்டன. இந்நிலையில், சில எண்கள் வாயிலாக உறக்கத்தின் முக்கியத்துவம், கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்...
இயல்பாக நடைபெற்றுவந்த விஷயங்கள் எல்லாம் தற்போது முயற்சி மேற்கொண்டு செய்யவேண்டியவை ஆகிவிட்டன. அதற்கு உதாரணம், உறக்கம்.
உறக்கம் ஓடிவரவில்லை என்று மருத்துவ உதவியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தூக்கத்துக்கு உதவுவதற்கு என்றே மருத்துவமனைகள்கூட உருவாகிவிட்டன.
இந்நிலையில், சில எண்கள் வாயிலாக உறக்கத்தின் முக்கியத்துவம், கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்...
* உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தினமும் 7 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குகிறார்கள். ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியம். உறக்கக் குறைவு, இதயநோய், மனஅழுத்தம், சர்க்கரை வியாதி, உடல் பருமன் என்று பல பிரச்சினைகளை கைப்பற்றி அழைத்துவரும்.
தினமும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் உறங்குவதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு படுக்கைக்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திடுங்கள். ஞாயிற்றுக்கிழமையும் அந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம். அப்போது உங்கள் உடம்பு அந்த வழக்கத்துக்குப் பழகிக்கொள்ளும்.
* ஒவ்வொரு மாதமும் சராசரியாக 7 முறை இரவுத் தூக்கம், கவலைகளால் பாதிக்கப்படுகிறது. இரவில் நம்மை விழித்திருக்க வைத்திருப்பதில், பணப் பிரச்சினை, ஆரோக்கிய அச்சம், வேலையை பற்றிய கவலைகள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. கவலையால் உறக்கத்தை இழந்திருப்பது தமது அன்றாட நலத்தைப் பாதிப்பதை உணர்வதாக 10-ல் 7 பேர் கூறுகின்றனர்.
* மெத்தை சரியில்லாவிட்டாலும் தூக்கம் பாதிக்கப்படும். சிறந்த மெத்தைகூட 7 ஆண்டு உபயோகத்துக்குப் பின் மோசமாகிவிடுகிறது. சுமார் 20 ஆயிரம் மணி நேர உறக்கத்துக்குப் பின் எந்த நல்ல படுக்கையும் முன்பைப் போல வசதியாக இருப்பதில்லை என்பது உறக்கவியல் ஆலோசனை மையத்தினரின் ஆய்வுக் கருத்து.
நாம் தினமும் இரவில் எத்தனை முறை கண் விழிக்கிறோம்? அதற்கு படுக்கை வசதிக் குறைவு காரணமாக இருக்கிறதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்போது தோன்றும் பதில்களைப் பொறுத்து, படுக்கையை மாற்றுங்கள்.

* படுக்கையறையின் வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பதுதான் சரியானது. ஏன்? இயல்பாகவே இரவில் நம் உடல் வெப்பநிலை தணிகிறது. இந்நிலையில், படுக்கையறையின் குளுமை, நமது உடல் வெப்பநிலை யுடன் இணைந்து நல்ல உறக்கத்துக்கு உதவும்.
* உங்கள் கட்டிலின் அகலம் குறைந்தபட்சம் 180 செ.மீ. ஆக இருக்க வேண்டும். நமது உறக்கத்துக்கும் கட்டிலின் அகலத்துக்கும் தொடர்பு உண்டு. பலர் சரியாக உறங்க முடியாமைக்கு, உடன் படுத்திருப்பவரின் தொந்தரவும் காரணம். நாம் தினமும் இரவில் சுமார் 60 முறை வளைந்து நெளிந்து படுக்கிறோம். அதிலும் உடன் படுத்திருப்பவர் ‘சுற்றிச் சுழல்பவர்’ என்றால், சிறிய கட்டிலில் சங்கடம்தான். இருவர் ஒன்றாகப் படுக்க வேண்டிய நிலையில், எதிரெதிர்ப்புறமாக ஒருக்களித்துப் படுக்கலாம்.
* வெறும் 6 நிமிடங்கள் புத்தகம் வாசிப்பது 68 சதவீதம் அளவுக்கு மனஅழுத்தத்தைக் குறைக்கிறது என்கிறது இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வு. எனவே நூல் வாசிப்பு என்பது உறக்கத்துக்கு முன் செய்யக்கூடிய சரியான செயல். அது நம்மைத் தளர்த்துகிறது, நம் உறக்கத்தைப் பாதிக்கும் கவலைகளில் இருந்து திசைதிருப்புகிறது.
* படுக்கைக்குச் செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன் குளிப்பது நல்லது. குளியலுக்குப் பின் உடல் வெப்பநிலை உடனடியாகக் குறைவதால், தூக்கம் உங்களை தாலாட்டத் தொடங்கிவிடும்.
* படுக்கையில் உறக்கத்தை எதிர்நோக்கி, எவ்வளவு நேரம் கண்மூடிக் கிடப்பது? சுமார் 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று கருத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். உறக்கம் உங்களைத் தழுவுவதற்கு அவ்வளவு நேரம் மட்டுமே அனுமதிக்கலாம். அதற்குப் பின்பும் உறக்கம் வரவில்லை எனில், குறைந்த ஒலியில் மெல்லிசை கேட்பது, ஏதாவது புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
* உங்கள் படுக்கையில் உங்களுடைய வியர்வை, எண்ணெய் மட்டுமல்ல, இறந்த சரும செல்களும் படிகின்றன. இந்தச் செல்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளுக்கு நல்ல உணவாகின்றன. இந்த நுண்ணுயிரிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். தேசிய உறக்கவியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, படுக்கை விரிப்பு சுத்தமாக இருக்கும்போது தங்களால் ஆழ்ந்து உறங்கமுடிவதாக 71 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். எனவே, 7 நாட்களுக்கு ஒருமுறை, அதாவது வாரம் ஒருதடவை படுக்கை விரிப்பு, தலையணை உறைகளை துவைத்து உலர்த்திப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருங்கள்.
* 8 காபி, செயற்கைக் குளிர்பானங்கள், டீ, சாக்லேட் ஆகியவற்றின் தாக்கம் முழுமையாக நீங்குவதற்கு சராசரியாக 8 மணி நேரம் ஆகிறது. எனவே நீங்கள் மாலையில் நேரங்கடந்து பருகும் ஒரு காபி, இரவில் உங்கள் தூக்கத்தில் குறுக்கிடக்கூடும். பிற்பகல் 2 மணிக்கு மேல் காபி பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

பலாச்சுளையை அதன் தித்திப்புக்காக வாங்கி உண்போம். ஆனால் பலாவில் இனிப்புடன், ஆரோக்கிய நலன்களை அளிக்கும் பல மருத்துவக் குணங்களும் அடங்கியிருக்கின்றன.

உதாரணமாக, பலாச்சுளையில் வைட்டமின் சி, தாது உப்புகள், நார்ச்சத்து, மாவுச்சத்துகள் நிறைந்திருப்பதால், நல்ல சக்தியைத் தரும்.
பலாமரத்துப் பாலை கட்டிகளின் மீது தடவினால் வீக்கம் குறையும். வேரை பாலிட்டு அரைத்து சொறி, சிரங்குகளுக்குப் பூசலாம்.
பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு, உடலில் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேகவைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாறைக் கலந்து குடித்தால் ஆஸ்துமா தொல்லை அகலும். தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நலம் பயக்கும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகிறது.
குழந்தைகள் பலாப்பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.
பலாச்சுளையில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆக உள்ளது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.
பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது வயிற்றுப்புண், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோயாளிகளுக்கு ஏற்றது.
பலாவில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். சருமத்தை மிருதுவாகவும், வழவழப்பாகவும் ஆக்கும், நரம்புகளுக்கு உறுதி தரும்.
நெய் அல்லது தேன் கலந்த பலாப்பழத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்பெறும்.
இவ்வளவு நன்மைகள் நிறைந்திருந்தாலும் பலாப்பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஆயிரம் வகை உணவு இருந்தாலும் உப்புக்கறிக்கு ஈடாகாது. பழைய கஞ்சியை உப்புக்கறியோடு சாப்பிடும்போது சுவையே அலாதியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளாட்டுக்கறி - ஒரு கிலோ
எண்ணெய் - 200 மில்லிகிராம்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 150 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 150 மில்லி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த ஆட்டுக்கறியை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் சீரகம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறிவிடவும்.
தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும்வரை மண்சட்டியை மூடிவைக்கவும்.
சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஆட்டுக்கறியில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும்.
அந்த நேரத்தில், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, இறக்கி சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும்.
சூப்பரான உப்புக்கறி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெள்ளாட்டுக்கறி - ஒரு கிலோ
எண்ணெய் - 200 மில்லிகிராம்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 150 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 150 மில்லி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த ஆட்டுக்கறியை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் சீரகம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறிவிடவும்.
தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும்வரை மண்சட்டியை மூடிவைக்கவும்.
சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஆட்டுக்கறியில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும்.
அந்த நேரத்தில், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, இறக்கி சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும்.
சூப்பரான உப்புக்கறி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாலியல் அத்துமீறல்களை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சனைகள் எப்படிப்பட்டவை என்று பார்க்கலாம்.
இன்றைய சமூக சூழல் பாதிக்கப்படும் பெண்ணுக்கு ஆதரவானதாக மாறிக் கொண்டு வருவது ஆரோக்கியமானது. இதைப் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு அதிகரித்திருக்கிறது என்றாலும் அது இன்னமும் பரவலாக்கப்பட வேண்டும். இன்றைக்கும் இது போன்ற துன்புறுத்தலை, அத்துமீறலை வெளியில் சொல்ல முடியாமல் தனக்குள்ளாகவே வைத்துக் கொள்ளும் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். இது போன்ற வன்முறைகளுக்கு ஆட்படுகிறவர்கள் மன அழுத்தத்துக்கும், குழப்பத்துக்கும் ஆளாவார்கள்.
இந்த வன்முறையை சகித்துக் கொள்வதா அல்லது எதிர்ப்பைத் தெரிவிப்பதா என்கிற குழப்பம் அவர்களுக்கு இருக்கும். முதலில் இது வன்முறைதானா என்பதை அவர்கள் உணரவே சில காலம் தேவைப்படும். இந்த வன்முறையை எதிர்கொள்ள முடியாமல் நிறைய பேர் பணியிலிருந்து விலகி விடுவார்கள். சிலருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. Post Traumatic Stress Disorder என்று சொல்லப்படும் பேரழிவிலிருந்து மீண்டு வந்தவர்களின் மனப் பிரச்னைக்கு நிகராகவும் ஆளாகலாம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்தே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் இது குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அனைவரிடமும் சரியான முறையில் கம்யூனிகேட் செய்ய வேண்டும். வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தால் அதனை துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும்.
தன்னிடம் ஒருவர் இப்படியாக நடந்து கொள்வதைத் தான் விரும்பவில்லையென்றால் அதை அவரிடம் வெளிப்படுத்தி விட வேண்டும். தனி மனிதராக மட்டும் இதனை எதிர்கொள்ள முடியாது. அதற்கு சட்டம் மற்றும் அமைப்புகளின் உதவியும் தேவை. அதற்கான சாத்தியங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. என்பதால் பிரச்னையை வெளிப்படுத்தும் மன நிலைக்கு அனைவரும் தயாராக வேண்டும். தவிர பெண்கள் இச்சட்டத்தை தனிப்பட்ட காழ்ப்புக்காக தவறாக பயன்படுத்தி விடக்கூடாது.

மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோய்களில், நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது, புகைப்பழக்கம் போன்றவை நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. அறுவைசிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலமாக நுரையீரல் புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
கீமோதெரபி முறையில் பொதுவாக மருந்துகளை வாய் மூலமாகவோ, ஊசிகளின் மூலமாகவோ உடலின் உட்செலுத்தி, புற்றுநோயைக் கட்டுப்படுத்தி, அதைக் குணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
நோயின் தன்மைக்கு ஏற்ப கீமோதெரபி மாறுபடும். ஆனால் இம்முறையில் முழுமையாகக் குணம் பெற முடியாது. இந்நிலையில், கீமோதெரபியுடன் இம்யுனோதெரபியையும் இணைத்துச் சிகிச்சை அளித்தால் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இம்யுனோதெரபியின்போது அளிக்கப்படும் பெம்பிராலிசுமா மருந்தை கீமோதெரபி சிகிச்சையுடன் வழங்கும்போது நுரையீரல் புற்றுநோயாளிகள் இறப்பு விகிதத்தை பாதியாகக் குறைக்கிறது. கீமோதெரபி சிகிச்சையை மட்டும் தனியாகச் செய்வதைவிட இது அதிக பலன் அளிக்கிறது. நோயாளிகளை அதிகநாள் வாழ வைக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சை முறை, 616 நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு மேற்கண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகில் உள்ள நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு நல்ல பலன் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.