search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "social website"

    • ஊட்டச்சத்து உணவு முகாமில் பங்கேற்ற 50 வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வகைகள், கையேடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • அத்தகைய காலகட்டத்தில் அவர்களை உடல் ரீதியாக பலமானவர்களாக மாற்ற சத்தான உணவுகள் மற்றும் மன ரீதியாக பலமானவர்களாக மாற்ற சரியான வழிகாட்டல்கள் அவசியமாகிறது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டாரம் கடத்தூரில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வேளாங்கண்ணி தலைமை தாங்கி நடத்தினார். முன்னிலை வகித்த வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி வளர் இளம் பெண்களுக்கான தன்சுத்தம் பேணுதல் பற்றி விளக்கினார். சர்வ சிஷ்ய அபியான் சிறப்பாசிரியர் செந்தில்குமார் எதிர்கால வாழ்க்கை என்ற தலைப்பில் மாணவிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நம்பிக்கையூட்டினார்.

    இயற்கையுடனான வாழ்க்கை என்ற தலைப்பில் நெல்சன், பள்ளி தலைமையாசிரியர் போதராஜ் ஆகியோர் பேசினர். மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வேளாங்கண்ணி பேசியதாவது:-

    ஒரு பெண் குழந்தையின் 9 வயதில் தொடங்கி 19 வயது வரையிலான காலகட்டத்தை வளர் இளம்பெண்கள் என்று சொல்கிறோம்.பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்தைக் கடந்து வளர் இளம்பருவத்தை அடையும்போது உடல் மற்றும் உள்ள ரீதியாக பல்வேறு உணர்ச்சிகளை எதிர்கொள்கிறார்கள். உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய் கால தொடக்கம், அதிகரிக்கும் உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என பல மாறுதல்களை சந்திக்கின்றனர். அத்தகைய காலகட்டத்தில் அவர்களை உடல் ரீதியாக பலமானவர்களாக மாற்ற சத்தான உணவுகள் மற்றும் மன ரீதியாக பலமானவர்களாக மாற்ற சரியான வழிகாட்டல்கள் அவசியமாகிறது.

    மேலும் சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் அந்த வயதில் ஏற்படும் தடுமாற்றங்களிலிருந்து வளர் இளம்பெண்களை மீட்டெடுக்க வேண்டிய முதல் கடமை பெற்றோர்களுக்கு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் மற்றும் சமூகத்துக்கும் இந்த கடமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஊட்டச்சத்து உணவு முகாமில் பங்கேற்ற 50 வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வகைகள், கையேடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை குழந்தைகள் மைய பணியாளர்களை ஒருங்கிணைத்து போஷன் அபியான் வட்டார ஒருங்கிணைப்பாளர் கவுதமன் மற்றும் வட்டார திட்ட உதவியாளர் அனுசுயாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரிவிக்கலாம் என்றும், புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கோவை அவினாசி ரோட்டில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களோ, புகைப்படங்களோ வைத்திருப்பவர்களும் கோவை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் அல்லது புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் கொடுப்பவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

    இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையோ, வீடியோ ஆதாரங்களையோ சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாலோ 94884 42993 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம். cb-c-i-d-c-b-e-c-ity@gm-a-il.com என்ற இணையதள முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    பாராளுமன்ற தேர்தல் குறித்து சமூக வலைத்தளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனேயே பொது இடங்கள் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகள் சின்னம் ஆகியவை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மேலும் ஈரோடு கலெக்டர் அலுவலகம், அனைத்து துறை அலுவலகங்களிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அகற்றப்பட்டுவிட்டன.

    நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வீடியோ பார்வை குழுக்கள், கணக்கு குழுக்கள் ஆகிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் தற்போது வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதே போன்று வீடியோ குழுவினர் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்கள் புகார்களை படத்துடன் தெரிவிக்க தனியாக வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதில் புகார் கூற விரும்பும் பொதுமக்கள் படத்துடன் புகார் கூறலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இந்த நிலையில் சமூக வலை தளங்களான வாட்ஸ்- அப், பேஸ்புக் ட்விட்டர் இன்டோஸ்க்ராம் போன்ற சமூக வலைத்தளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தவறான தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். உதாரணமாக ஒரு சிலர் எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்து விடுவதாக விளம்பரம் செய்வார்கள்.

    இவ்வாறு விளம்பரம் செய்வது தண்டனைக்குரியது. இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews

    சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரத்தில் ஒரு அமைப்பு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சிலர் பேசி முழக்கமிட்டனர்.

    சாதிகளை விமர்சிக்கும் வகையிலும் கருத்துக்களை தெரிவித்தனர். இது வாட்ஸ்- அப், மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவந்தது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. திருவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த 4 பேர் இதை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாலமன், அன்பரசு, வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அன்பழகன் என்பவரை தேடி வருகின்றனர். #tamilnews
    ×