என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்...
    நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்...

    தங்கத்தின் சுத்தம் கேரட் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. பொதுவாக 24 கேரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம் என்பதையும், நாம் வாங்கும் ஆபரணத் தங்கம் 91.6 சதவீதம் சுத்தமான தங்கம் என்பதையும் உணர வேண்டும்.

    அது மட்டும் இல்லாமல் 18 கேரட், 14 கேரட் தூய்மை அளவிலும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் வெள்ளி, தாமிரம், துத்தநாகம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கும்.

    24 கேரட் தங்கத்தால் ஆபரணங்கள் செய்ய முடியாது. பொதுவாக நகைக் கடைகளில் 22 கேரட் தங்க நகை ஆபரணங்கள்தான் விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் 14 மற்றும் 18 கேரட் தங்கம் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் விலை கூடுதல் என்பதைப் போல, அடமானம் வைக்கும்போது அல்லது விற்கும்போது அதிகம் பணம் கிடைக்கும். 14 அல்லது 18 கேரட் என்றால் அவற்றின் தரத்திற்கு ஏற்றார் போல் விலை குறையும்.

    ஆபரணத் தங்கம் வாங்கும்போது செய்கூலியும் அதன் விலையில் அடங்கும். அது பொதுவாக நிலையாக இருக்கும். சில நகைக் கடைக்காரர்கள் சலுகை என்ற பெயரில் செய்கூலி சதவீதத்தை கூட்டவும் குறைக்கவும் செய்வார்கள். எனவே தங்கம் வாங்கும்போது செய்கூலி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    தங்க நகை வாங்கும்போது அது கையால் செய்யப்பட்டது என்றால் செய்கூலி விலை அதிகமாக இருக்கும். அதுவே எந்திரத்தின் வடிவமைப்பு என்றால் செய்கூலி குறைவாக இருக்கும்.



    ஆபரணத் தங்கம் எடை அளவினால்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையில் வாங்கும்போது அதிகச் செலவாகும். சில நேரங்களில் வைரம், எமரால்டு போன்றவையும் தங்கத்தில் அலங்காரம் செய்யப்பட்டு விலையை உயர்த்தும்.

    பழைய நகையை மாற்றிப் புதிய நகை வாங்கப் பல நகைக் கடைகள் அனுமதி அளிக்கின்றன. நகையின் வடிவம் மற்றும் டிரெண்ட் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அதன் மதிப்பு ஒன்றுதான் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

    நம் நாட்டில் லட்சக்கணக்கான நகைக் கடைகள் உள்ளன. பெயர் தெரியாத சிறு கடைகளில் நகை வாங்கும்போது அதில் கலப்படங்கள் அதிகமாகித் தங்கத்தின் அளவு குறைவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எனவே நம்பிக்கை வாய்ந்த, உள்ளூரில், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற கடைகளில் நகையை வாங்குவது நல்லது.

    இந்திய தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஹால்மார்க் உள்ள நகைகளை மட்டுமே வாங்க வேண்டும். இந்த பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் சர்வதேச அளவில் செல்லும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

    இவற்றை எல்லாம் மனதில் கொண்டு தங்க நகை வாங்கினால், அதன் சந்தோஷம் என்றும் நம் மனதில் தங்கும். 
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மா இஞ்சி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய் இஞ்சி - 1 கப்
    பச்சை மிளகாய் - 3
    எலுமிச்சம்பழம் - 1
    கடுகு - 1 தேக்கரண்டி
    உப்பு, எண்ணய் - தேவையான அளவு



    செய்முறை :

    மாங்காய் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாங்காய் இஞ்சி துண்டுகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    எலுமிச்சம்பழத்தை அதில் பிழிந்து நன்றாக கலக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளித்து அதில் மங்காய் இஞ்சிக் கலவையை சேர்த்து கிளறவும்.

    முப்பது நிமிடங்கள் வரை நன்றாக கிளறிய பின்னர் பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.

    மா இஞ்சி ஊறுகாய் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆண்களுக்கு உடலில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் பின் விளைவுகள் அதிகம் ஏற்படும். எனவே 30 வயதை நெருங்கும் ஆண்கள் சில பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
    பொதுவாகவே நமக்கு வயசு கூட கூட உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிக அளவில் ஏற்படும். இந்த ஹார்மோன்கள் தான் நமது உடலின் ஒவ்வொரு செயலையும் பெரும்பாலும் நிர்ணயிக்கிறது. ஆண்களுக்கு இதில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் பின் விளைவுகள் அதிகம்.

    30 வயதை கடந்த ஆண்கள் அனைவரும் முதலில் இந்த ரத்த அணுக்களின் எண்ணிக்கை எந்த அளவில் உடலில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும். அதற்கு Complete Blood Count டெஸ்ட் மிக முக்கியமாகும். இந்த டெஸ்ட் உங்களை கல்லீரல் புற்றுநோய் முதல் தொற்று நோய்கள் போன்ற பலவித நோய்களை கண்டறிந்து விடும்.

    புற்றுநோய்கள் ஆணுறுப்பில் வருவது இப்போதெல்லாம் அதிகமாகி விட்டது. இதன் வீரியமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. Prostate-specific Antigen blood test என்பது ஆணுறுப்பில் புற்றுநோய் செல்கள் உள்ளதா என்பதை பரிசோதிக்கும் முறையாகும். ஆண்கள் இந்த பரிசோதனையை நிச்சயம் எடுக்க வேண்டும்.

    இப்போதெல்லாம் ஆண்களுக்கு இந்த சிறுநீரக கோளாறுகள் அதிகமாக ஏற்படுகிறது என ஆய்வுகள் சொல்கிறது. கிரியடினின் அளவு சரியாக இருந்தால் கிட்னியில் கோளாறுகள் உருவாகாது. சராசரியாக 0.6-1.2 அளவு கிரியடினின் இருக்க வேண்டும். இல்லையெனில் கிட்னி முழுமையாக பாதிக்கப்பட்டு மரணம் கூட ஏற்படலாம்.

    நமது உடலில் முக்கிய உறுப்பான கல்லீரலில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அவ்வளவுதான். எனவே, கல்லீரல் சரியாக வேலை செய்கிறதா..? என்பதை பரிசோதிக்க கல்லீரல் டெஸ்ட் எடுப்பது சிறந்தது. குறிப்பாக மது அருந்துபவர்கள், கொழுப்பு கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் எடுக்க வேண்டும்.

    பலருக்கு ஒரு சில நோய்கள் வந்தவுடன் அதை தொடர்ந்து இதய நோய்களும் உருவாக தொடங்கும். அவ்வாறு இருக்கும் போது நீங்கள் கட்டாயம் ECG டெஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் இதை வருடத்திற்கு 1 முறையாவது பரிசோதிப்பது நல்லது.

    ஹார்மோன்களில் மிக முக்கியமானது இந்த தைராய்டு தான். இவற்றின் அளவு சரியாக இல்லையெனில் உங்களுக்கு தான் விளைவுகள் அதிகம். இதனால் உடல் பருமன் முதல் மன அழுத்தம் வரை பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, தைராய்டு பரிசோதனை அவசியம் நண்பர்களே.

    பல ஆண்கள் 30 வயதை கடந்த பிறகே திருமணம் செய்து கொள்கின்றனர். இது சில முக்கிய விளைவுகளை அவர்களின் தாம்பத்திய வாழ்வில் ஏற்படுத்துகிறது. குறிப்பாக அவர்களின் தாம்பத்திய வாழ்வில் அவர்கள் நிம்மதியின்றி இருக்கின்றனர். இது போன்ற பிரச்சினைகளை சரி செய்ய விந்தணுக்களின் எண்ணிக்கையை பரிசோதிப்பது அவசியம்.

    30 வயதை நெருக்கும் போதே நீங்கள் நிச்சயம் உடலில் உள்ள சர்க்கரை அளவு என்ன என்பதை பரிசோதிக்க வேண்டும். சர்க்கரை நோய் வந்து விட்டால் பிறகு இதய நோய், பித்தப்பை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை வர தொடங்கி விடும்.

    ஆண்கள் வெளி உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகாமாக இருக்க கூடும். எனவே, இந்த பரிசோதனையையும் கூடுதலாக எடுக்க வேண்டும்.
    ஒருவரது குடும்ப பரம்பரையில் யாரேனும் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருந்திருக்குமானால், அவருக்கும் மார்பக புற்றுநோய் உருவாவதற்குரிய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    மார்பக புற்றுநோய் உடைய ஒரு குடும்ப வரலாறு இருக்கும் பெண்கள், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக இடர் வாய்ப்பு பிரிவில் இருக்கின்றனர் என்றாலும், மார்பக புற்றுநோய் உள்ள அநேக பெண்களுக்கு அவர்களது குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு இல்லை.

    புள்ளிவிவர ரீதியாக மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களில் ஏறக்குறைய 5 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு உள்ளது. மார்பக புற்றுநோய் இருந்த ஒரு முதல் டிகிரி உறவினர், இரண்டாம் டிகிரி உறவினர் அல்லது குடும்பத்தின் ஒரே தரப்பில் பல தலைமுறைகள் உங்களுக்கு இருப்பார்களானால், உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான இடர்வாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும்.



    * மார்பக புற்றுநோய் தொற்றக்கூடியது அல்ல.

    * மரபணு மாற்றம் BRCA1 அல்லது BRCA2 ஒருவரது DNAவில் கண்டறியப்படுமானால், அவருக்கு நிச்சயமாக மார்பக புற்றுநோய் உருவாகக்கூடும்.

    * BRCA1 அல்லது BRCA2-ஐ கொண்டிருப்பதாக அறியப்படும் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் தீங்கு விளைவிக்கக்கூடிய BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வை தனது உடலில் கொண்டிருப்பதில்லை மற்றும் அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும் இந்த மரபணுக்களில் ஒன்றில் உள்ள தீங்குவிளைவிக்கக்கூடிய மரபணு பிறழ்வுடன் தொடர்புடையதல்ல. மேலும், BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக மற்றும்  கருப்பைப்புற்றுநோய் உருவாவதில்லை. ஆனால், BRCA 1 அல்லது BRCA 2-ல் மரபு வழியில் மரபணு பிறழ்வுள்ள ஒரு பெண்ணுக்கு, அதுபோன்ற மரபணு பிறழ்வில்லாத ஒரு பெண்ணைவிட மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

    * வியர்வை அடக்கிகள் (Antiperspirants) மற்றும் துர்நாற்றம் போக்கிகள் (Deodorants) மார்பக புற்றுநோயை விளைவிப்பதில்லை. 
    கேரளாவில் இந்த வாழை இலை மீன் மசாலா மிகவும் பிரபலம். இன்று இந்த வாழை இலை மீன் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    மீன் துண்டுகள் - 6,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 3,
    தக்காளி - 1,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
    மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.
    நல்லெண்ணெய் - 100 மிலி,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    வாழை இலை - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மீனில் சிறிது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறிய மீனை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழை இலையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு போட்டுக் கிளறவும்.

    நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும்.

    வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான வாழை இலை மீன் மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தற்போது நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து உணவை வீட்டுக்கே வரவழைக்கிறோம். இந்த வீடு தேடி வரும் உணவுகளால் மக்களுக்கு லாபமா? நஷ்டமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
    கடந்த காலங்களில் தந்தை தான் கற்று வந்த விஷயங்களை எல்லாம் தனது பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பார். எது நல்லது, எது கெட்டது என்பதனை தந்தை தனது அனுபவத்தில் உணர்ந்திருப்பார். நல்ல விஷயங்களை பிள்ளைக்கு போதிப்பார். கெட்ட விஷயத்தை புறக்கணித்து விடுவார். ஆனால் இது தகவல் தொழில் நுட்ப காலம். இங்கு பிள்ளைகளும், தந்தையும் ஒரு சேர கற்றுக்கொள்கிறார்கள். எனவே அதில் நல்லது? கெட்டது என்பதனை தந்தை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தந்தை அதனை கற்றுணர்ந்து இது தவறு என்று சொல்வதற்குள், அவரது பிள்ளை அதற்கு அடிமையாகி விடுகிறது.

    கடந்த காலங்களில் தந்தை தான் கற்று வந்த விஷயங்களை எல்லாம் தனது பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பார். எது நல்லது, எது கெட்டது என்பதனை தந்தை தனது அனுபவத்தில் உணர்ந்திருப்பார். நல்ல விஷயங்களை பிள்ளைக்கு போதிப்பார். கெட்ட விஷயத்தை புறக்கணித்து விடுவார். ஆனால் இது தகவல் தொழில் நுட்ப காலம். இங்கு பிள்ளைகளும், தந்தையும் ஒரு சேர கற்றுக்கொள்கிறார்கள். எனவே அதில் நல்லது? கெட்டது என்பதனை தந்தை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தந்தை அதனை கற்றுணர்ந்து இது தவறு என்று சொல்வதற்குள், அவரது பிள்ளை அதற்கு அடிமையாகி விடுகிறது.

    அந்த தகவல் தொழில் நுட்ப அடிமைத்தளத்தில் இருந்து மீண்டு வருவது என்பது இயலாத காரியம் ஆகி விட்டது. மது, மாது ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி விட்டு, தகவல் தொழில் நுட்பம் மனிதனுக்கு மிகப்பெரிய போதையாகி விட்டது.

    செம்மறி ஆடுகள்

    மந்தையாக செல்லும் செம்மறி ஆடுகளில், முன்னே செல்லும் ஒரு ஆடு கிணற்றில் விழுந்தாலும், அதனை பின்தொடரும் அத்தனை ஆடுகளும் கிணற்றில் விழுந்து விடும். அது போல தகவல்தொழில் நுட்பம் என்ற ஒற்றை பாதைக்கு பின்னால் ஒட்டுமொத்த சமூகமும் செம்மறி ஆடுகள் போல் சென்று கொண்டு இருக்கிறது.

    பேசுவதற்காக, கண்டுபிடிக்கப்பட்ட செல்போனில் எதையும் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது. பல சாதனங்கள் செய்து கொண்டு இருந்த வேலைகளை எல்லாம் செல்போன் ஒன்றே செய்கிறது. செல்போனிலே வீட்டுக்கு தேவைக்கான சாமான்களை வாங்க தொடங்கினோம். கார், ஆட்டோக்களை முன்பதிவு செய்து வரவழைக்கிறோம். தற்போது நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து உணவை வீட்டுக்கே வரவழைக்கிறோம். இது வளர்ச்சிக்குள் இருக்கும் வீழ்ச்சி என்பதனை யாரும் அறிவதில்லை.



    சலுகை

    வீட்டுக்கு வந்து உணவு தரும் சேவையை பல நிறுவனங்கள் மக்களுக்கு அளித்து வருகிறது. இவர்களது செயலி மூலம் நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து விரும்பும் உணவுகளை ஆர்டர் செய்யலாம். அவர்கள் அதனை நமது வீட்டுக்கு அரை மணி நேரத்தில் டெலிவரி செய்கிறார்கள். மேலும் இந்த நிறுவனங்கள் அளிக்கும் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளால் கவர்ந்திழுக்கப்படும் மக்கள் இதற்கு அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த வீடு தேடி வரும் உணவுகளால் மக்களுக்கு லாபமா? நஷ்டமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

    நேர விரயம்

    லாபம் இருக்கிறது என்று சொன்னவர்களின் கருத்துக்கள் வருமாறு:-

    நகர வாழ்க்கையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. நான்கு பேர் இருக்கும் வீட்டில் மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு செல்ல முடியாது. ஆட்டோவில் செல்ல வேண்டும். அதற்கு கூடுதல் செலவு ஆகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் ஓட்டலுக்கு சென்று வர நேரம் விரயம் ஆகிறது. ஆனால் ஆன்லைனில் பதிவு செய்து விட்டால் போதும். சலுகை விலையில் வீட்டுக்கே வந்து உணவு தருகிறார்கள். விரும்பும் நேரத்தில், விரும்பும் உணவுகளை சாப்பிடலாம். இதை விட என்ன வேண்டும் என்று என்கிறார்கள்.

    எலிப்பொறி

    நஷ்டம் தான் என்று சொன்னவர்கள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    கடந்த காலங்களில் வெளியூர் பயணங்களின் போது தான் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவது வழக்கம். ஆனால் தற்போது சுவைக்காகவும், சோம்பேறித்தனத்தாலும் ஓட்டலில் சென்று சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது. வீட்டு சாப்பாடு தான் உடலுக்கு ஆரோக்கியம். ஆனால் ஓட்டல் சாப்பாட்டை வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவது சரியாகுமா? அதில் சலுகை என்பதே எலிப்பொறியில் வைக்கும் தேங்காய் போன்றது. அதில் நாம் சிக்க தான் செய்வோம். நம்மை ஏமாற்றி வியாபாரம் செய்வதற்கான உத்தி அது. ஒரு முறை வீட்டிற்கு உணவுகளை வரவழைத்து சாப்பிட்டு விட்டால், அதற்கு அடிமையாகி மீண்டும், மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில் குடியேறி விடும் என்கிறார்கள். 
    குழந்தைகளின் முதுகு வலியின் பின்னணியில் உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கலாம். அதிலும் 4 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு முதுகு வலி வந்தால் அதிக கவனம் அவசியம்.
    குழந்தைகளுக்கு வரும் முதுகு வலி என்பது பெரியவர்களுக்கு வரும் வலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. குழந்தைகளின் முதுகு வலியின் பின்னணியில் உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கலாம். அதிலும் 4 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு முதுகு வலி வந்தால் அதிக கவனம் அவசியம்.

    முதுகு வலியுடன் கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள். காய்ச்சல் மற்றும் எடை குறைவது, சோர்வு, மரத்துப் போகிற உணர்வு, வலியானது ஒரு காலிலோ அல்லது இரண்டு காலிலோ பரவுவது, சிறுநீரகம் சம்பந்தபட்ட கோளாறுகள், தூக்கமின்மை.

    குழந்தைகளின் முதுகுவலியை உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வேறு விளைவுகளை உண்டாக்கிவிடும் அபாயம் உண்டு. எனவே, உங்கள் குழந்தைக்கு 3 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தாலோ அல்லது வலி அதிகமானாலோ உடனே மருத்துவரைப் பாருங்கள்.

    காரணங்கள்

    குழந்தை விளையாடும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் அடிபட்டதன் காரணமாகவும் முதுகு வலி வரலாம். பெரும்பாலான குழந்தைகள் தசைகளில் ஏற்படும் வலியையே முதுகு வலியாக உணர்கிறார்கள். போதுமான அளவு ஓய்வெடுப்பதன் மூலமே இந்த வலி சரியாகிவிடும். அரிதாக சில சமயங்களில் Osteoid osteoma என்கிற கட்டியின் காரணமாகவும் குழந்தைகளுக்கு முதுகில் வலி வரலாம்.

    இந்தக் கட்டியானது நடு முதுகு அல்லது அடி முதுகில் தான் வரும். வலி ஒரே மாதிரியாக இருந்துவிட்டு நாளாக ஆக அதிகரிக்கும். இதற்கு தாமதமில்லாத மருத்துவ சிகிச்சை அவசியம்.முதுகு பகுதியில் ஏதேனும் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டிருந்தாலும் வலி வரலாம். முதுகுப் பகுதியில் வீக்கம், சிவந்து போவது போன்றவையும் இருந்தால் இன்ஃபெக்‌ஷனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும். அது உறுதி செய்யப்பட்டால் ஆன்டி பாக்டீரியா அல்லது ஆன்டி வைரல் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
    சாமை அரிசியுடன் காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியத்தையும் அளிக்கும் சாதம் செய்தால் சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 2 கப்
    பீன்ஸ், கேரட், அவரை - 1 கப்
    பச்சை பட்டாணி - கால் கப்
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    ப.மிளகாய் - 4
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
    உப்பு - சுவைக்கு



    செய்முறை :

    சாமை அரிசியில் நன்றாக கழுவி சுத்தம் செய்து 30 மணிநேரம் ஊற விடவும்.

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    அதோடு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய்கறிகளை வேக விடவும்.

    காய்கறிகள்  வெந்தவுடன் அதில் ஊறவைத்த சாமை அரிசியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

    மீண்டும் மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சாமை காய்கறி சாதம் ரெடி.

    உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தியானமும், யோகாவும் செய்ய.... செய்ய நமது உடல் பற்றியும், நம்மை பற்றியும் நமக்கு தெரியத் தொடங்கி விடும். மனம் ஒருமுகப்பட்டு விடும். மனதை கட்டுப்படுத்தும்பட்சத்தில் உலகில் உள்ள அனைத்தையும் நாம் கட்டுப்படுத்தலாம்.
    பணம் சம்பாதிப்பது மட்டுமே இப்போது வாழ்க்கையாகி விட்டது. பணமே பிரதானம் என்று நம்மில் பெரும்பாலானவர்கள் மூச்சு விடக் கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் பணம் தேடி ஓடி.... உழைத்து... ஓய்ந்த பிறகுதான், உண்மையான இன்பம் பணத்தில் இல்லை என்ற யதார்த்தம் அவர்களுக்குத் தெரிய வரும். வசதி, வாய்ப்புகள் எல்லாம் இருக்கும், ஆனால் நிம்மதி இருக்காது. அதாவது மனதில் அமைதி இருக்காது. ஒருவித விரக்தி ஏற்பட்டு விடும். அப்போது மனது அலைபாயும். அதாவது மனம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது.

    மனம்... அது போன போக்கில் போனால் கடைசியில் உடல் கெட்டு நோய்கள் வந்து விடும். ஆக... மனதில் திடம் இல்லாமல் போய் விடும்.
    மனதில் திடத்தை ஏற்படுத்தினால் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டி விடலாம். மனதில் எப்படி திடத்தை ஏற்படுத்துவது? அதற்கு மனதை கட்டுப்படுத்த வேண்டும்.

    மனதை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு சித்தர்கள் வழிகாட்டி உள்ளனர். மனதை ஒருமுகப்படுத்த தியானமும், உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள யோகாவும் செய்யுங்கள் என்று சித்தப்புருஷர்கள் வழிகாட்டியுள்ளனர். தியானமும், யோகாவும் செய்ய.... செய்ய நமது உடல் பற்றியும், நம்மை பற்றியும் நமக்கு தெரியத் தொடங்கி விடும். மனம் ஒருமுகப்பட்டு விடும். மனதை கட்டுப்படுத்தும்பட்சத்தில் உலகில் உள்ள அனைத்தையும் நாம் கட்டுப்படுத்தலாம்.

    நம் நாட்டு சித்தப்புருஷர்கள் இந்த உலகுக்கு அளித்துள்ள மிகப்பெரிய பரிசு ‘‘அஷ்டாங்க யோகம்’’ எனப்படும் யோகக் கலையாகும். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அந்த 8 படிகளையும் நாம் சரியாக செய்தால் உடல், மனம், ஆத்மா மூன்றும் தூய்மையாகி விடும்.

    அது இறைவனுடன் நாம் லயிக்க வழிகாட்டும். அதாவது பிறவாமை எனும் உயர்ந்த நிலைக்கு செல்ல உதவும். எனவே முதலில் உடலையும் மனதையும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நம் உடம்பு 72 ஆயிரம் நாடிகளால் பிண்ணப்பட்டிருப்பதாக சித்தர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நாடிகள் அனைத்தும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்கினை, துரியம் ஆகிய 7 சக்கரங்களில் இணைக்கப்பட்டு இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளனர்.

    இந்த 7 சக்கரங்களும் நமது உடம்பின் பின்புறத்தில் முள்ளந்தண்டு வடத்தில் உள்ளன. இந்த 7 சக்கரங்களும் சீராக இருந்தால்தான் உடலும், மனமும் சீராக இருக்கும். முதுகுத் தண்டு வடத்தின் கீழே உள்ள மூலாதார சக்கரத்தில் இறை சக்தியான ‘‘குண்டலினி’’ இருக்கிறது. இந்த குண்டலியானது நமக்குள் புதைந்திருக்கும் ஆற்றலாகக் கருதப்படுகிறது.

    தியானத்தின் மூலம் நாம் இந்த குண்டலினியைத் தூண்டி விட்டால், நமக்கு அளவிட முடியாத அளவுக்கு ஆற்றல்கள் கிடைக்கும். சித்தர்கள் அந்த ஆற்றலை பெற்றதன் மூலம்தான் சித்தாடல்கள் செய்தனர். உலக மக்களுக்கு சேவை செய்ய, அந்த ஆற்றலை பயன்படுத்தி அற்புதங்கள் நிகழ்த்தினார்கள். எனவே குண்டலினியை தூண்டி விட்டு ஆற்றலை பெற வேண்டும். குண்டலினியைத் தூண்டும் போது அது மூலாதாரத்தில் இருந்து புறப்பட்டு, ஒவ்வொரு சக்கரமாக கடந்து உச்சந்தலையில் உள்ள துரியம் வரை வரும்.

    அப்படி கொண்டு வந்து விட்டால்.... நீங்களும் மகான் ஆகி விடுவீர்கள். ஆனால் குண்டலினியை தட்டி எழுப்புவது என்பது அவ்வளவு சாதாரண விசயமல்ல.
    நமது மூலாதாரத்தில் அது பாம்பு போல மூன்றரை சுருளாக சுருண்டு புதைந்திருப்பதாக சித்தர்கள் எழுதி வைத்துள்ளனர். பாம்பை சீண்டினால் சீறும் அல்லவா? அது போல பாம்பு போல இருக்கும் குண்டலினியை தூண்டினால் அது ஊர்ந்து மேலே வரும்.

    அப்படி வரும் போது நமது சாதாரண உணர்வு நிலை, பரபிரம்ம உணர்வு நிலைக்கு உயரும். தெய்வீக ரகசியங்கள் கூட தெரியத் தொடங்கும். பொதுவாக நமது உச்சந்தலையில் உள்ள அம்சத்தை சிவ அம்சம் என்பார்கள். குண்டலினியை சக்தி அம்சம் என்பார்கள். இரண்டும் சேரும் போது பேரின்பம் கிடைக்கும்.

    100-க்கு 99 பேர் இந்த பேரின்பத்தை உணராமலேயே தங்கள் வாழ்வை பூர்த்தி செய்து விடுகிறார்கள். தியானம், தவம், யோகம் செய்ய முடியாததே அதற்கு காரணமாகும். 
    ‘டாட்டூ’ மீது மோகம் கொண்டிருக்கும் பெண்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் முழுமையாக தெரிந்துகொண்ட பின்பே, அதனை உடலில் தீட்டிக்கொள்ளவேண்டும்.
    ‘டாட்டூ’ மீது மோகம் கொண்டிருக்கும் பெண்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் முழுமையாக தெரிந்துகொண்ட பின்பே, அதனை உடலில் தீட்டிக்கொள்ளவேண்டும். டாட்டூ பதிக்கும்போது வலி ஏற்படும். சுகாதாரமற்ற முறையில் அதை மேற்கொண்டால் தொற்றுவியாதிகள் ஏற்படக்கூடும்.

    விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாரா?

    இன்றைய டீன்ஏஜ் பெண்களுக்கு டாட்டூஸ் ரொம்ப பிடித்தமானதாக இருக்கிறது. ஆனால் அதை பிடிக்காதவர்களும் நிறைய இருக்கிறார்கள். இளம் வயதினர் டாட்டூஸ் பதித்துக்கொள்வதை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ‘பணம் செலவு செய்து இப்படி எல்லாம் படம் வரைந்து உன் உடலை கெடுத்துக்கொள்ள வேண்டுமா?’ என்று சிலர் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பலாம். அதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ‘எனக்கு பிடித்ததால் இதை செய்திருக்கிறேன். நீங்கள் இதை பற்றி கவலைப்படவேண்டாம்’ என்றோ, ‘என் உடலை பற்றிய விஷயத்தில் நான் முடிவெடுக்க அனுமதியுங்கள்’ என்றோ, பதில் சொல்ல நீங்கள் தயாராக இருக்கவேண்டும் அல்லது இப்படிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாதது போல் நடிக்கவாவது தெரிந்திருக்கவேண்டும்.

    டாட்டூ உங்களுக்கு மிக அவசியமா?

    இந்த கேள்வியை உங்களுக்குள்ளே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். பொழுதுபோக்குக்காக அதை நீங்கள் பதித்துக்கொள்ளப்போகிறீர்களா? அல்லது அதற்கு வேறு விசேஷ காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் டாட்டூ பதித்துக்கொள்கிறார்கள். மனதில் இருக்கும் பிரியமானவரின் பெயர், பிடித்தமான வாழ்வியல் தத்துவம், நம்பிக்கைக்குரிய சின்னங்கள்.. போன்ற பலவற்றை பெண்கள் விரும்பி பொறிக்கிறார்கள். அதை பொறிப்பதற்கு முன்னால், ‘காலங்கடந்தும் அது நமக்கு தேவையா?’ என்பதை கவனத்தில் கொண்டு, ஆழ்ந்து யோசித்து முடிவெடுங்கள்.

    தற்காலிக டாட்டூ போதுமானதா?


    சிலர் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒன்றை டாட்டூவாக பதிக்க விரும்புவார்கள். ஆனால் ஆழ்ந்து யோசித்து அது தமக்கு தேவையில்லை என்ற முடிவை அவர்கள் எடுக்கலாம். அல்லது அதை பதித்து, டாட்டூ தரும் சுகத்தை அனுபவிக்கவும் அவர்கள் ஆசைப்படலாம். அப் படிப்பட்ட இருவேறு சிந்தனை கொண்டவர்கள் நிரந்தர டாட்டூவை உடலில் பதித்துக்கொள்ளவேண்டாம். முதலில் தற்காலிக முறையை பரீட்சித்துப்பாருங்கள். ஹென்னா டிசைனிங், டெம்பரரி டாட்டூயிங் போன்றவற்றை தேர்ந்தெடுத்து முதலில் பயன்படுத்தவேண்டும். கால இடைவெளிவிட்டு பின்பு அடுத்தகட்டமாக நிரந்தரம் பற்றி அவர்கள் சிந்திக்கவேண்டும்.

    டாட்டூ மங்கும் என்பது தெரியுமா?

    இவை பொறிக்கும்போது தோன்றுவதுபோல் எப்போதும் ஜொலிக்காது. வருடங்கள் கடக்கும்போது நிறம் மங்கலாம், அதன் ஒரு பகுதி சிதைந்து போகலாம். மிக நுட்பமாக பொறிக்கப்பட்டவை அழிந்தும்போகலாம். அப்படிப்பட்ட தருணங்களில் டாட்டூ கலைஞர் மூலம் ‘ரீடச்’ செய்துகொள்ள வேண்டியதிருக்கும். கறுப்பு நிறம்தான் அதிக காலம் அழியாமல் இருக்கும்.

    அவசர முடிவெடுப்பது சரியா?


    இல்லை. இது பற்றி நிதானமாக முடிவெடுக்கவேண்டும். தோழிகளுக்காக அல்லது இன்னொருவருக்காக அவசரமாக டாட்டூ பதித்துக்கொண்டேன் என்பது சரியல்ல. எதற்காக டாட்டூ பொறிக்கப் போகிறீர்கள்? எந்த கலைஞர் மூலம் அதை பொறிக்கப்போகிறீர்கள்? அதற்காக எடுக்கப்பட்ட முன்னேற் பாடுகள் என்ன? உடலில் எந்த இடத்தில் பொறிக்கப்போகிறீர்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடிவிட்டு, முடிவெடுங்கள்.



    எந்த ‘டிசைன்’ தேவை?

    பெண்கள் பொதுவாக ஒரு உடை தேர்ந்தெடுக்கவே அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தங்கள் உடலில் டாட்டூ பதிப்பதில் அதிக கவனம் கொள்வார்கள். எந்த டிசைனை பொறிக்கப் போகிறீர்கள் என்பதில் தெளிவான முடிவெடுங்கள். அது பற்றி உங்கள் டாட்டூ கலைஞரிடம் பேசுங்கள். அதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நிரந்தர டாட்டூ பதிப்பவராக இருந்தால், காலம் முழுக்க அது உங்கள் உடலோடு ஒட்டியிருக்கும். அதனால் கவனமாக டிசைனை தேர்ந்தெடுங்கள்.

    சில பெண்கள் தங்கள் தோழிகள் டாட்டூ பொறிப்பதற்கு செல்லும்போது உடன் செல்வார்கள். அங்கு சென்றதும் தங்களுக்கும் டாட்டூ பொறிக்கவேண்டும் என்ற ஆசை வந்துவிடும். சிலர், தானும் இந்த காலத்து பெண்தான் என்பதை காட்டிக்கொள்ள டாட்டூ பொறிப்பார்கள். அப்படி அவசரப்பட்டு செய்துகொண்டால், அடுத்த சில மாதங் களிலே ‘ஏன் இதை பதித்துக்கொண்டோம்’ என்று நினைத்து, அதை எப்படி அழிப்பது என்று ஆலோசனை கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    சரி.. இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் தீர ஆராய்ந்து, டாட்டூ பொறித்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அடுத்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவைகளை தொடர்ந்து படியுங்கள்:

    உங்களுக்குத் தெரிந்த, ஏற்கனவே அதில் அனுபவமுள்ள டாட்டூ மையத்தை தேர்ந்தெடுங்கள். தோழிகள் யாருக்காவது அறிமுகமுள்ள டாட்டூ ஸ்டூடியோவாக இருந்தால் நல்லது.

    அந்த டாட்டூ கலைஞர் எங்கே படித்தார், எத்தனை வருடங்களாக இந்த துறையில் இருக்கிறார் என்பதையும் கண்டறியுங்கள். முறையான பயிற்சியும், அனுபவமும் இல்லாதவர் ஆழமாக ஊசியை பயன்படுத்தி குத்தும்போது தடுமாறிவிடுவார். அது சருமத்தை கடுமையாக பாதிக்கும்.

    அந்த ஸ்டூடியோவில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் எல்லாம் சுகாதாரமாக இருப்பதையும், அங்கே சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் உறுதிசெய்யுங்கள். ஊசி, இங்க், இங்க் கேப், கிளவுஸ், கன் போன்றவை அதில் பயன்படுத்தப்படுகின்றன.

    டாட்டூ செய்வதற்கு முன்னால் சருமமும், உபகரணங்களும் அணுத்தொற்று எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும்.
    ஐம்பூதங்களில் ஒன்றான நிலத்தை ஆதாரமாககொண்டு மண் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பல வகை சிகிச்சை உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஐம்பூதங்களில் ஒன்றான நிலத்தை ஆதாரமாககொண்டு மண் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பல வகை சிகிச்சை உண்டு. அதில் முதலாவது வகையானது, மண்ணை தண்ணீரில் குழைத்து நேரடியாக உடலில் பூசுவது. 2-வது வகை என்பது, குழைத்த மண்ணை ஒரு துணியில்வைத்து மடித்து அதை உடலில் வலி இருக்கும் இடத்தின் மேல் வைப்பது. இதற்கு மண்பட்டி என்று பெயர்.

    3-ம் வகையானது, மண் குளியல். இதில், மண்ணை தண்ணீரில் நன்கு குழைத்து அதை உடல் முழுவதும் பூசிக்கொண்டு சூரியஒளியில் முக்கால் மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை நிற்க வேண்டும். 4-ம் வகை, மண் புதையல் எனப்படுகிறது. இதற்கு கடல் மற்றும் ஆற்றுப்படுகைகளில் கழுத்தளவிற்கு குழி தோண்டி அதன் உள் இறங்கி கழுத்து வெளியே தெரியும்படி நின்றுகொண்டு மண்ணைப் போட்டு மூடி, குறிப்பிட்ட நேரம் வரை நிற்க வேண்டும்.

    5-வது வகைக்கு பதவாடை என்று பெயர். இது சுடுமண்ணில் ஒத்தடம் கொடுக்கும் முறை. இதற்கு மண்ணை ஒரு சட்டியில் போட்டு வறுத்து, அதை ஒரு துணியில் கட்டி இதமான சூட்டில் வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இத்தகைய 5 முறைகளிலும் மண் சிகிச்சை பெறலாம்.

    முதலாவது வகை சிகிச்சை: இது மண்ணை நேரடியாக தண்ணீரில் குழைத்து பூசும் முறை. இதில் கை, கால் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தலைவலி ஆகியவைகளுக்கு, குழைத்த மண்ணை வலி இருக்கும் இடத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இதனால் வலிகள் குறையும். உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். புத்துணர்ச்சி கிடைக்கும்.

    இரண்டாவது வகை: இது மண்பட்டி சிகிச்சை. இந்த சிகிச்சை முறையில் குழைத்த மண்ணை ஒரு துணியில் வைத்து மடித்து அதை தொண்டை மற்றும் கை, கால் உள்பட உடலில் வலி இருக்கும் இடங்களில் வைக்கலாம். காய்ச்சலுக்கு தலை, நெற்றியில் வைக்கலாம். இது உடல் சூட்டை தணிக்கும். அதனால் காய்ச்சல் குறையும்.

    மூன்றாவது வகை: இது மண் குளியல். இந்த வகை சிகிச்சை, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதனால் புத்துணர்ச்சி கிடைக்கும். மன அழுத்தம் குறையும். தோலின் செயல்பாடுகள் அதிகரிக்கும். தோல் வியாதிகள் நீங்கும்.

    நான்காவது வகை: இது மண் புதையல். 3-வது வகையான மண் குளியல் முறையில் கிடைத்த அனைத்து நன்மைகளும் இதிலும் கிடைக்கும்.

    ஐந்தாவது வகை: இது ஒத்தடம் கொடுக்கும் முறை. உடலில் ஆங்காங்கே தோன்றும் வலிகள், வீக்கம், கட்டி இவற்றிற்கு வெதுவெதுப்பான முறையில் இதமாக ஒத்தடம் கொடுக்கலாம். இதுவும் சரியான நிவாரணத்தை தரும்.

    மண்ணை உடலில் பூசும் காட்சி

    பொதுவாக மண் சிகிச்சை அளிப்பதற்கு சாதாரணமாக கிடைக்கும் மண்ணை பயன்படுத்த முடியாது. கழிவுகள் இல்லாத சுத்தமான மண்ணாகவும், மருத்துவ குணம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அந்தவகையில் புற்று மண், களி மண், செம்மண்ணுக்கு மருத்துவ குணம் உள்ளது. அதை நம் முன்னோர்கள் கண்டறிந்து அந்த 3 வகையான மண்ணையும் சிகிச்சைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    மண்ணில் தாமிரம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு, கந்தகம் போன்றவைகளும், உயிர் சத்துக்களும் நிறைந்துள்ளது. மண் சிகிச்சைக்கு தேவைப்படும் மண்ணை, சுத்தமான இடத்தில் 2 முதல் 3 அடி ஆழத்தில் தோண்டி எடுக்கவேண்டும். அதில் இருக்கும் கற்கள், புற்களை அகற்றி வெயிலில் குறைந்தது 6 மணி நேரம் காயவைக்க வேண்டும். பின்பு அந்த மண்ணை நன்கு சலித்து எடுத்து தண்ணீரில் குழைத்து, 8 மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண் டும். அதன்பிறகு அந்த மண்ணை சிகிச்சைக்கு பயன் படுத்தலாம்.

    ஒரு முறை பயன்படுத்திய மண்ணை மீண்டும் சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டுமென்றால் மீண்டும் 6 முதல் 8 மணி நேரம் அந்த மண்ணை வெயிலில் காயவைக்கவேண்டும். தோல் வியாதிக்கு சிகிச்சை அளித்த மண்ணை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    மண் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதனால் ஜீரண மண்டலத்தின் வேலை அதிகரித்து மலச்சிக்கலை போக்கும். உடலின் பெரிய உறுப்பான தோல், உடலின் முக்கிய கழிவு மண்டலமாகவும் திகழ்கிறது. அந்த கழிவு மண்டலத்தின் குறைகள் மண் சிகிச்சையால் சரிசெய்யப்படுவதால், உடல் இயக்கம் சீராகும். சிறுநீரக பாதிப்பும் குறையும். மேலும் ஜீரண மண்டலம் சீராக்கப்படுவதால் இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதனால் மிகுந்த பயன் கிட்டும். தோலில் அதிக எண்ணெய் பசை உள்ளவர்களும் மண் சிகிச்சை எடுக்கலாம். இதனால் முகப்பொலிவு கிடைக்கும்.

    மாதவிடாய் காலத்தில்

    அனைத்து பாலினத்தவர்களும் மண் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு இருப்பதுண்டு. அப்போது அடி வயிற்றில் மண்பட்டி சிகிச்சை எடுக்கலாம். இதனால் உதிரப்போக்கு நிற்கும். சினைப்பையில் கட்டிகள் உருவாவது தடுக்கப்படும். புற்றுநோயாளிகளும், வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களும் தாராளமாக மண் சிகிச்சை எடுக்கலாம். ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மண் சிகிச்சை எடுக்க வேண்டும். சர்க்கரை, உயர்ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளும் மண் சிகிச்சை எடுப்பது நலம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு பாத எரிச்சல் குறையும்.

    விளக்கம் : டாக்டர் கல்யாணி,

    யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு, அரசு மருத்துவமனை திண்டுக்கல்.
    பன்னீரில் டிக்கா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பன்னீர் டிக்கா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை நாண், சப்பாத்தி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பனீர் துண்டுகள் - 250 கிராம்
    தயிர் - 1/4 கப்
    துருவிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி
    தனியா தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கிரேவிக்கு :

    தக்காளி - 3
    பச்சைமிளகாய் - 4
    மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
    தனியா தூள் 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    தயிர் - 3 மேசைக்கரண்டி
    சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளியையும் பச்சைமிளகாயையும் மிக்சியில் நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

    ஒரு  பாத்திரத்திரத்தில் பன்னீர் துண்டுகள், தயிர், துருவிய இஞ்சி, தனியா தூள், மிளகாய் தூள் சிறிது உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த பன்னீர் மசாலா துண்டுகளை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதினை சேர்த்து கிளறவேண்டும்.

    அடுத்து அதனுடன் மஞ்சள்தூள், தனியா தூள், கரம்மசாலா, பெருங்காயத்தூள், சீரகம், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.

    கடைசியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவேண்டும்.

    இறக்கிய பின் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்க்க கலந்து பரிமாறவும்.

    சூப்பரான பன்னீர் டிக்கா மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×