search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    30 வயதை தொடும் ஆண்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
    X

    30 வயதை தொடும் ஆண்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

    ஆண்களுக்கு உடலில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் பின் விளைவுகள் அதிகம் ஏற்படும். எனவே 30 வயதை நெருங்கும் ஆண்கள் சில பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
    பொதுவாகவே நமக்கு வயசு கூட கூட உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிக அளவில் ஏற்படும். இந்த ஹார்மோன்கள் தான் நமது உடலின் ஒவ்வொரு செயலையும் பெரும்பாலும் நிர்ணயிக்கிறது. ஆண்களுக்கு இதில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் பின் விளைவுகள் அதிகம்.

    30 வயதை கடந்த ஆண்கள் அனைவரும் முதலில் இந்த ரத்த அணுக்களின் எண்ணிக்கை எந்த அளவில் உடலில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும். அதற்கு Complete Blood Count டெஸ்ட் மிக முக்கியமாகும். இந்த டெஸ்ட் உங்களை கல்லீரல் புற்றுநோய் முதல் தொற்று நோய்கள் போன்ற பலவித நோய்களை கண்டறிந்து விடும்.

    புற்றுநோய்கள் ஆணுறுப்பில் வருவது இப்போதெல்லாம் அதிகமாகி விட்டது. இதன் வீரியமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. Prostate-specific Antigen blood test என்பது ஆணுறுப்பில் புற்றுநோய் செல்கள் உள்ளதா என்பதை பரிசோதிக்கும் முறையாகும். ஆண்கள் இந்த பரிசோதனையை நிச்சயம் எடுக்க வேண்டும்.

    இப்போதெல்லாம் ஆண்களுக்கு இந்த சிறுநீரக கோளாறுகள் அதிகமாக ஏற்படுகிறது என ஆய்வுகள் சொல்கிறது. கிரியடினின் அளவு சரியாக இருந்தால் கிட்னியில் கோளாறுகள் உருவாகாது. சராசரியாக 0.6-1.2 அளவு கிரியடினின் இருக்க வேண்டும். இல்லையெனில் கிட்னி முழுமையாக பாதிக்கப்பட்டு மரணம் கூட ஏற்படலாம்.

    நமது உடலில் முக்கிய உறுப்பான கல்லீரலில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அவ்வளவுதான். எனவே, கல்லீரல் சரியாக வேலை செய்கிறதா..? என்பதை பரிசோதிக்க கல்லீரல் டெஸ்ட் எடுப்பது சிறந்தது. குறிப்பாக மது அருந்துபவர்கள், கொழுப்பு கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் எடுக்க வேண்டும்.

    பலருக்கு ஒரு சில நோய்கள் வந்தவுடன் அதை தொடர்ந்து இதய நோய்களும் உருவாக தொடங்கும். அவ்வாறு இருக்கும் போது நீங்கள் கட்டாயம் ECG டெஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் இதை வருடத்திற்கு 1 முறையாவது பரிசோதிப்பது நல்லது.

    ஹார்மோன்களில் மிக முக்கியமானது இந்த தைராய்டு தான். இவற்றின் அளவு சரியாக இல்லையெனில் உங்களுக்கு தான் விளைவுகள் அதிகம். இதனால் உடல் பருமன் முதல் மன அழுத்தம் வரை பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, தைராய்டு பரிசோதனை அவசியம் நண்பர்களே.

    பல ஆண்கள் 30 வயதை கடந்த பிறகே திருமணம் செய்து கொள்கின்றனர். இது சில முக்கிய விளைவுகளை அவர்களின் தாம்பத்திய வாழ்வில் ஏற்படுத்துகிறது. குறிப்பாக அவர்களின் தாம்பத்திய வாழ்வில் அவர்கள் நிம்மதியின்றி இருக்கின்றனர். இது போன்ற பிரச்சினைகளை சரி செய்ய விந்தணுக்களின் எண்ணிக்கையை பரிசோதிப்பது அவசியம்.

    30 வயதை நெருக்கும் போதே நீங்கள் நிச்சயம் உடலில் உள்ள சர்க்கரை அளவு என்ன என்பதை பரிசோதிக்க வேண்டும். சர்க்கரை நோய் வந்து விட்டால் பிறகு இதய நோய், பித்தப்பை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை வர தொடங்கி விடும்.

    ஆண்கள் வெளி உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகாமாக இருக்க கூடும். எனவே, இந்த பரிசோதனையையும் கூடுதலாக எடுக்க வேண்டும்.
    Next Story
    ×