என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு கல்விரீதியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்தும், குழந்தையிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.
    ‘திருமணம் செய்துகொண்டால் அழகு போய்விடும். ஆற்றலும் குறைந்துவிடும். சுதந்திரம் பறிபோய், சாதிக்கும் துடிப்பும் மங்கிவிடும்’ என்று திருமணத்தை தள்ளிப்போடும் பெண்கள் சொல்வதுண்டு. அவர்களுக்கு சவால்விடும் விதத்தில் அழகைப் பேணி, ஆற்றலை மேம்படுத்தி, துடிப்போடு சாதனை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள், திருமணமான பெண்கள். மேடைகளில் அரங்கேறும் அவர்களது திறமைகளை பார்த்து, திருமணமாகாத பெண்களே ஆச்சரியப்பட்டு அசந்து போகிறார்கள்.

    ‘திருமணம் ஒருபோதும் பெண்களின் திறமைக்கு தடையில்லை’ என்பதை நிரூபிக்க களம் அமைத்துத் தருகிறது, ‘மிஸஸ் சென்னை’ எனப்படும் திருமதி சென்னை திறன்மிகு போட்டி.

    வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு கல்விரீதியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்தும், குழந்தையிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. குழந்தையை வளர்ப்பது என்பது நமக்கு கடினமான வேலையில்லை. நமது குழந்தை எப்படி வளரவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே நாம் வாழ்ந்து காட்டவேண்டும்.

    திருமணமான பெண்கள் தாய்மையடைந்து பிரசவித்ததும் இயல்பாகவே அவர்களது உடல் எடை அதிகரித்து விடுகிறது. அதை சுட்டிக்காட்டிதான், திருமணத்திற்கு பின்பு பெண்களின் அழகு குலைந்துவிடுவதாக சொல்கிறார்கள். தொடர்ந்து முறையான உடற்பயிற்சிகளை செய்துவந்தால், உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.

    மணமான பெண்கள் இப்போது உடல்வலுவோடுதான் இருக்கிறார்கள். ஆனால் செக்குமாடு மாதிரி ஒரே வேலையை செய்தும், ஒரே மாதிரியான சிந்தனையில் உழன்றும் மனஅழுத்தத்தில் சிக்கி மனபலம் இல்லாதவர்களாக காட்சியளி்க்கிறார்கள். இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ளும்போது அவர்கள் சிந்தனை, செயல் எல்லாவற்றிலுமே மாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உருவாகும். 40 வயதுகளில் நிற்கும் அம்மாக்கள் அனைவருமே உடல் நலத்தோடு, மனநலத்தையும் பாதுகாத்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதற்கான முயற்சிகளை பெண்கள் முழுமனதோடு மேற்கொள்ளவேண்டும்.

    மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் உயிரோட்டமான புன்னகை இருந்துகொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்கவேண்டும். மனநிறைவு பெறவேண்டுமானால் இருப்பதைக் கொண்டு திருப்தியடையவேண்டும். மகிழ்ச்சியாக இருக்கும் பெண்ணால், அவளது குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும். மகிழ்ச்சியும், மனதில் கருணையும் இருந்தால், நம்மால் பேரழகியாக வலம்வர முடியும்.

    வெறும் வயிற்றில் ஒரு சில விஷயங்களை செய்தாலும், அல்லது சாப்பிட்டாலும் உறுப்புகளின் செயல்திறன் மாறுதல் அடையும். அந்த பொருட்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    வெறும் வயிற்றில் ஒரு சில விஷயங்களை செய்தாலும், அல்லது சாப்பிட்டாலும் உறுப்புகளின் செயல்திறன் மாறுதல் அடையும். காலையில் வெறும் வயிற்றில் இந்த பொருட்களை சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் இவற்றை குடித்தால், அமில தன்மை வயிற்றில் அதிகரித்து செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், வாந்தி ஆகிய பின் விளைவுகளை ஏற்படும். எனவே, இதற்கு பதிலாக டீ அல்லது காபியுடன் ஏதேனும் சேர்த்து சாப்பிடுவது சற்று நல்லது.

    * உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் செய்வதால் உடல் எடை சட்டென குறைந்து விடும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்த பயிற்சி கொழுப்புகளை குறைக்காமல் தசைகளையே குறைக்கும். ஆதலால், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாமல் ஏதேனும் சிறிய அளவில் சாப்பிட்டு விட்டு பயிற்சியை தொடங்குங்கள்.

    * பலருக்கு ஜீவிங்கம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனை மற்ற நேரத்தில் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்பை விட, வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் தான் அதிகம். வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் வாயு கோளாறு, அமில தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றான வர தொடங்கும்.



    * வெறும் வயிற்றில் சோடாக்கள் நிறைந்த பானங்களையோ, உணவுகளையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை குடல் பகுதியில் அதிக எரிச்சல், வாந்தியை ஏற்படுத்தும். பல நாட்கள் இது தொடர்ந்தால் குடல் புண், உடல் எடை கூடுதல், பசியின்மை போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படும்.

    * காலையில் எழுந்ததும் உணவின் மீது உள்ள காதலால் காரசாரமான உணவுகளை சாப்பிடாதீர்கள். காலை உணவில் காரசாரமான உணவுகளை சாப்பிட்டால் வயிற்றில் அமில தன்மை அதிகரிக்க கூடும். பிறகு குடல் புண்கள் ஏற்பட்டு அதிக வலியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    * நீங்கள் வெறும் வயிற்றில் பாராசிட்டமால், ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை எடுத்து கொள்ள கூடாது. இவ்வாறு செய்வதால் இவற்றின் வீரியம் அதிகரிக்க கூடும். இவை மலத்தில் இரத்த போக்கை ஏற்படுத்தி பல வித பாதிப்புகளை தருமாம். ஆதலால், மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளாதீர்கள்.

    * நவீன நாகரீகம் என்கிற பெயரில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மது அருந்தும் பழக்கம் இப்போதெல்லாம் பரவலாக எல்லோரிடமும் தொற்றி வருகின்ற ஒரு கலாச்சாரமாக உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் மது அருந்தினால் கல்லீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் சிதைவடையும். 
    தயிர் சாதம், சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு பொடிமாஸ். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 200 கிராம்
    மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
    துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
    எலுமிச்சம்பழம் - 1
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    பொடிப்பதற்கு :

    மிளகாய் வற்றல் - 4
    உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
    பெருங்காயம் - 1 துண்டு

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
    கடலைபருப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு வேக வைத்துக் கொள்ளவேண்டும். வெந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    பொடிப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மூன்றையும் சிறிது எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் மசித்த உருளைக்கிழங்கை சிறிது மஞ்சள்தூள் உப்புடன் சேர்த்து பிரட்ட வேண்டும்.

    அடுத்து அதில் துருவிய இஞ்சி, பொடித்து வைத்துள்ள பொடி இரண்டையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்தபின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.

    கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.

    உருளைக்கிழங்கு பொடிமாஸை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.. பொரியலாகவும் பயன்படுத்தலாம்.

    அதனுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ருசிக்கலாம்.

    அருமையான பருத்தி பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நன்றாக சாப்பிடும் குழந்தைகள் எடை அதிகரிக்காமல் ஒல்லியாகவே இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    நன்றாக சாப்பிடும் குழந்தைகள் எடை அதிகரிக்காமல் ஒல்லியாகவே இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குழந்தையை பத்திரமாகப் பெற்றெடுப்பதில் இருந்து அதன் பின் அவர்களைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ப்பது என அவர்களின் கவலைகள் நீண்டு கொண்டே செல்லும்.

    அம்மாக்களுக்கு இருக்கும் முக்கியமான கவலைகளில் ஒன்று குழந்தைகளின் எடை பற்றியது தான். ஏனெனில் குறைவான எடை அவர்களின் ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறி ஆகும்.  நீங்கள் என்ன தான் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தாலும் குழந்தைகளின் எடை அதிகரிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    குழந்தைகள் எடை அதிகரிக்காமல் இருக்க முக்கியக் காரணம் போதுமான அளவு கலோரிகள் எடுத்துக் கொள்ளாதது தான். குழந்தைகள் பல்வேறு காரணங்களால் சாப்பாடு மீது வெறுப்பு காட்டுவதாலும், பெற்றோர்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதனாலும் குழந்தைகளுக்குத் தேவையான கலோரிகள் கிடைப்பதில்லை. குறிப்பாகக் குழந்தைகள் தாய்ப்பால் சரியாகக் குடிக்காமல் இருப்பது தான் முக்கிய காரணம்.

    சில சமயம் குழந்தைகள் அதிகப்படியான வாந்தி பிரச்சினையால் போதுமான உணவை எடுத்துக் கொள்வதில்லை. இதற்குக் காரணம் குழந்தைகளுக்கு ஏற்படும் அமிலப் பிரச்சினைகள் ஆகும். இது குழந்தைகளின் தசைகளை பலவீனமாக்குவதோடு அவர்கள் எடையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    கணையச் செயல்பாடு சரியாக இல்லாத குழந்தைகளின் எடை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. இது போன்ற சிக்கல்களால் தளர்வான தசைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சில நோய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பதைத் தடுக்கின்றன. செலியாக் அல்லது க்ரோன் போன்ற குடல் நோய்கள் குழந்தைக்கு இருக்கும் போது அது எடை அதிகரிப்பைத் தடுக்கும்.

    சில குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதே அவர்கள் எடை அதிகரிப்பைத் தடுக்கும். கலோரிகள் அதிகம் எரிக்கப்படும் போது குழந்தை களின் எடை அதிகரிக்காது.

    ஹைப்பர் ஆக்டிவ் ஆக இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஒல்லியாகத் தான் இருப்பார்கள்.

    சில சமயம் சிறுநீரகக் கோளாறுகள் கூட குழந்தையின் எடையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

    சிறுநீரகக் கற்கள் மற்றும் கோளாறுகளால், எடை மட்டுமின்றி குழந்தைகளின் மற்ற வளர்ச்சி களிலும் தடங்கல் ஏற்படும்.

    குழந்தைகளின் மரபணுக்களும் அவர்களின் எடையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர்களின் மரபணுக்களில் உள்ள சில மூலக்கூறுகள் அவர்களின் எடை அதிகரிப்பைத் தடுக்கக் கூடும்.
    பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி மாறுதல்கள் ஏற்படும். மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
    பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்தியாசப்படும். பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

    அறிகுறிகள்

    * மெனோபாஸ் நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.

    * இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.

    * இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.

    * வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.



    உடல்ரீதியான மாற்றங்கள்

    1. வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இது சில நிமிடங்களில் மறையலாம், இல்லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இது தொடரலாம்.

    இதற்கு நிவாரணம் - ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

    2. இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும். நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும்.

    3. யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ தன்மையையும் இழந்து விடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்று நோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த  சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்து விடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.

    4. தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடை கூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் என்ற எலும்பு நோய் தோன்றலாம்.

    5. உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள். மறதி, அடிக்கடி மனநிலை மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் போவது,  இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.

    சுலபமாக செய்யக்கூடிய மிகவும் ருசியான பருத்தி பால் உடல் நலத்திற்கும் ஏற்றது, (சர்க்கரை நோயாளிகளை தவிர). இன்று இந்த பருத்தி பாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பருத்தி விதை - அரை கப்
    பச்சரிசி - கால் கப்
    சுக்குத்தூள் - சிறிதளவு
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    தூளாக்கப்பட்ட வெல்லம் - தேவைக்கு



    செய்முறை:

    பருத்தி விதையை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    அதுபோல் பச்சரிசியையும் ஊறவைக்க வேண்டும்.

    விதைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து பருத்தி பால் எடுத்துக்கொள்ளவும்.

    பச்சரிசியையும் மிக்சியில் அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் பருத்தி பால் மற்றும் பச்சரிசி மாவை கொட்டி கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் வெல்லத்தை சேர்த்து கிளறிவிடவும்.

    அதனுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ருசிக்கலாம்.

    அருமையான பருத்தி பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்றுச் சதைகளை வலிமையாக மாற்றுகிறது. தொப்பையை குறைக்க உதவுகிறது. சீராக செய்து வந்தால் வயிற்றில் காணப்படும் தேவையற்ற சதைகள் காணாமல் போய் விடும். உடலில் காற்று உபாதைகளை நீக்கி விடும்.
    உத்தீத என்றால் மேல் என்று பொருள். பத்மம் என்றால் தாமரை. மேல் உயர்த்திய தாமரை நிலை என்பது தான் உத்தீய பத்மாசனம் என்பதன் அர்த்தம் ஆகும்.

    செய்முறை

    விரிப்பில் முதலில் பத்மாசனம் நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் உள்ளங்கை இரண்டையும் கால்களில் பக்கத்தில் தரையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.

    கைகளை பலமாக தரையில் ஊன்றிக் கொண்டு மெதுவாக படத்தில் உள்ளது போன்று உடலை மேலே தூக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது தள்ளாட்டமோ, உதறுதலோ இல்லாத அளவுக்கு உடல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். சாதாரண மூச்சில் செய்தால் போதுமானது. இதுவே உத்தீத பத்மாசனம் ஆகும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

    இதன் பயன்கள்…..

    கை எலும்புகள், மணிக்கட்டு பகுதிகளை வலுப்பெற வைக்க இந்த ஆசனம் பயன் தருகிறது. வயிற்றுச் சதைகளை வலிமையாக மாற்றுகிறது. தொப்பையை குறைக்க உதவுகிறது. சீராக செய்து வந்தால் வயிற்றில் காணப்படும் தேவையற்ற சதைகள் காணாமல் போய் விடும். உடலில் காற்று உபாதைகளை நீக்கி விடும். அஜீரணத்தை போக்கும். செரிமான சக்தியை அதிகமாக்கும்.
    ஒருமாதம் கடந்த பின்பும் டாட்டூ பதித்த இடத்தில் வலி, வீக்கம், சொறி, ரத்த ஒழுக்கு போன்றவை ஏற்பட்டால் சரும டாக்டரிடம் ஆலோசனை பெற்று தீர்வு காணவேண்டும்.
    பெரும்பாலான ‘டாட்டூ’ ஸ்டூடியோக்களில், டாட்டூ பொறித்ததும் ‘டெர்மலைசர்’ மூலம் அதை பொதிந்துவிடுவார்கள். 24 முதல் 48 மணி நேரம் வரை அதை அசைக்காமல் இருக்கவேண்டும். பின்பு இதமான சுடுநீரில் கழுவி அதை உரித்தெடுக்க வேண்டும். சாதாரண ‘கிளியர் பிலிம்’ ஒட்டியிருந்தால், இரண்டுமணி நேரம் கழித்ததும் அதை உரித்து எடுத்துவிட்டு சுத்தமான நீரால் கழுவிவிடலாம். லேசான ரத்த கறையும் ‘இங்க்’ பிசிறும் இருக்கும். அதை எல்லாம் கழுவி விட்டு, ‘டவல்’ கொண்டு துடைக்க வேண்டும். பொறித்த இடத்திற்கு மேல் பூசுவதற்கு ‘டாட்டூ வேக்ஸ்’ தருவார்கள். அதை பூசிக்கொள்ள வேண்டும். அவர்கள் தராவிட்டால், ‘பேபி ஆயில்’ அல்லது மோய்ஸ்சரசரை 7 நாட்கள் வரை அந்த இடத்தில் பூசிக்கொள்ளலாம். பத்து நாட்களுக்குள் காயங்கள் ஆறி, சருமம் இறுகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

    டாட்டூ பதித்த பத்து நாட்கள் வரை அந்த இடத்தில் நேரடியாக சூரிய ஒளி படக்கூடாது. அதுபோல் அந்த பகுதியில் தூசு படியாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சி, எடைதூக்கும் ஜிம் பயிற்சி, வியர்க்கும் அளவுக்கு வேலை செய்தல் போன்றவைகளையும் தவிர்க்கவேண்டும். ஒருமாதம் கடந்த பின்பும் டாட்டூ பதித்த இடத்தில் வலி, வீக்கம், சொறி, ரத்த ஒழுக்கு போன்றவை ஏற்பட்டால் சரும டாக்டரிடம் ஆலோசனை பெற்று தீர்வு காணவேண்டும்.

    தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சிலர், ஏற்கனவே பதித்த டாட்டூவை அழிக்க முன்வருவார்கள். அதை எப்படி அழிக்கலாம் என்று அனுபவமற்றவர்களிடம் ஆலோசனை கேட்டால், ‘அதன் மீது உப்புத் தண்ணீரை ஊற்றி தேய்த்துக்கொண்டே இருந்தால், அழிந்துபோய்விடும்’ என்று சிலர் சொல்வார்கள். அந்த மாதிரியான முயற்சிகளில் ஈடுபடுவது தவறு. அது சருமத்திற்கு பாதிப்பை உருவாக்கும்.



    பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அதை நீக்கும் முறையும் மக்களிடம் அதிக வரவேற்பை பெறவில்லை. லேசரை பயன்படுத்தி அழிக்கும் முறையே பெரும் பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் லேசர் மூலம் உடனடியாக முழுமையாக அழித்துவிட முடியாது. பதிக்கப்பட்டிருக்கும் டாட்டூவின் அளவு, சருமத்தின் தன்மை, பதிக்கப்பட்ட டாட்டூவின் ஆழம் போன்றவைகளை பொறுத்ததுதான் அதை அழிப்பது பற்றி தீர்மானிக்க முடியும். சிலருக்கு இரண்டு, மூன்று முறை கூட லேசரை பயன்படுத்த வேண்டியதிருக்கும்.

    டாட்டூ கலைஞர்கள் சிலர் கொள்கைரீதியாக சில முடிவுகளை எடுத்து பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் காதல் தரும் வேகத்தில் தங்கள் காதலன் பெயரை டாட்டூவாக பதித்துக்கொள்கிறார்கள். ‘நீ என் உயிரைப் போன்றவன்’ என்று கூறி தனது காதலனிடம் அதை காட்டி பெருமைப்படவும் விரும்புகிறார்கள். ஆனால் டாட்டூ பதித்த அடுத்த மாதத்திலோ அல்லது ஆறு மாதங்களிலோ காதல் முறிந்துபோய்விட, அந்த பெயர் அவர்களுக்கு அருவறுப்பை ஏற்படுத்துகிறது.

    அதனால் ‘டாட்டூ’ பதித்த கலைஞரையே தேடிவந்து, அந்த டாட்டூவை எப்படியாவது உடனே அழித்துவிட வேண்டும் என்று மன்றாடுகிறார்கள். இந்த நெருக்கடிக்கு இடம் கொடுக்காத கலைஞர்கள் சிலர் முதலிலே ‘தாங்கள் காதலர்கள் பெயர்களை பெண்களின் உடலில் பதிப்பதில்லை’ என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதுபோல் டாட்டூ பதிக்க வருபவர்களிடம் அவர்களுக்கு எந்த அளவுக்கு தைரியம் இருக்கிறது என்பதையும் பரீட்சித்து பார்க்கிறார்கள். ஏன்என்றால் சிலர், மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொள்வதற்கே அலறும் ரகமாக இருப்பார்கள்.

    அவரைப் போன்றவர்கள் முதலில் பச்சைக்கிளி ஒன்றை தங்கள் தோளில் டாட்டூ செய்யும்படி கூறுவார்கள். டாட்டூ பதிக்கத் தொடங்கியதும் முதலில் சிறிது நேரம் வலியை பொறுத்துக்கொள்வார்கள். பின்பு அழுதுவிடுவார்கள். கிளியின் ஒரு சிறகை பதித்ததும் ‘அதற்கு மேல் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. விட்டுவிடுங்கள்’ என்று கூறி விட்டு கிளம்பிவிடுவார்கள். இப்படி சிலர் அரை குறை ‘டாட்டூ’ வுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள். கேட்டால், அதுதான் இப்போதைய பேஷன் என்பார்கள்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை. என் மனம்போல் சாப்பிடுவேன், மது அருந்துவேன், படுக்கையை விட்டு எழ மாட்டேன் எனச்சொல்லி அந்த வாரம் முழுவதும் ஒழுங்காக வாழ்ந்த முறையினை கெடுத்துக் கொள்ளக்கூடாது.
    உங்களுக்கு இதுதான் சரியான உணவு முறை என்பதனை நன்கு தெரிந்துகொண்டு அதனை பின்பற்றுங்கள்.

    காலை வெய்யிலில் குறைந்தது 7 நிமிடமாவது நடங்கள்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை. என் மனம்போல் சாப்பிடுவேன், மது அருந்துவேன், படுக்கையை விட்டு எழ மாட்டேன் எனச்சொல்லி அந்த வாரம் முழுவதும் ஒழுங்காக வாழ்ந்த முறையினை கெடுத்துக் கொள்ளக்கூடாது.

    24 மணிநேரமும் ‘பிஸி’ என்ற வார்த்தை வேண்டாம். தினமும் ஒரு மணிநேரம் உங்களுக்காக ஓய்வாக மன மாறுதலாக எடுத்துக் கொள்வோம்.
    உடற்பயிற்சியோ, யோகாவோ புதிய பயிற்சி ஒன்றினை கற்றுக் கொள்வோமே.

    நல்ல திறமைதான். இருப்பினும் நம் மீது நமக்கே நம்பிக்கை இல்லாது ‘நான் எடை அதிகம்’ எனக்கு எதுவும் திறமையாக செய்ய இயலாது’ போன்ற தன்னம்பிக்கை அற்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்னம்பிக்கை உடையவராக மாறுவோம். மனஉளைச்சல் இன்றி இருப்போம்.

    தினமும் 20 நிமிட தியானம் நாம் பழகிவிட்டோமா! இல்லையெனில் பழகிக்கொள்வோம், எந்த ஒரு விஷயத்திலும் அதிகபட்சம் 5 நிமிடத்திற்குள் நம் டென்ஷனை கட்டுப்படுத்தி இயல்பாய் செயல்படுவோம். சின்ன எடைதூக்கும் (2கி) பயிற்சியினை தகுந்த அறிவுரையோடு மேற்கொள்வோமா!

    வீட்டினை ஆரோக்கியமாய் வைக்க மேலும் ஒரு முயற்சியினை செய்வோம். மூங்கில் செடி, சோற்றுகற்றாழை செடி வளர்ப்போம்.

    நம்மை விடாதிருக்கும் ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து உறுதியாய் முனைந்து வெளிவந்து விடுவோமே, (உ.ம்) அதிக காபி, மது, கடுமையான வார்த்தைகள்.
    வீட்டில் காய்கறிகள், பழம், பொருட்கள், சமைத்த உணவு வீணாவதினை தவிர்ப்போம்.

    வீட்டில் இருப்பவர்களை நன்கு கவனித்து தன்னை மெழுகுவர்த்தியாக மாற்றிக்கொள்வது தேவையற்றது. நம்மையும், நம் உடல்நலனையும் நன்கு கவனித்துக் கொள்வோம்.

    உங்கள் நேரம் மற்றவர் முன்னேற்றத்திற்காக, உங்கள் அன்றாட முழு நேரத்தினையும் தானம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. ஆகவே தன்னையும் காத்து, பிறருக்கும் உதவியாய் இருப்பவரே சரியான பாதையில் செல்பவர். நாம் சரியான பாதையில் செல்வோமே.

    எப்பொழுதும் செல்போனில் பேசுவதும், படிப்பதும் என இருப்பவர்களின் ஆரோக்கியம் கெடுகின்றது என கூறுகின்றனர். இந்த பழக்கம் நமக்கு வேண்டாமே.
    மட்டன் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் மண்டி பிரியாணியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிதாக வெட்டிய மட்டன் - அரை கிலோ,
    வெங்காயம் - 4
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 7,
    இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
    வெண்ணெய் எண்ணெய் - தேவையான அளவு,
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ,
    கொத்தமல்லி, புதினா, உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா சிறிதளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சிறிது, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மட்டன் முக்கால் பாகம் வெந்தவுடன் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சீரக சம்பா அரிசி, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன்  அதில் வறுத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு பின்பு பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எத்தனை பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் இந்த அறிகுறிகள் இருந்தால் நாம் கல்லீரலைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
    கல்லீரல் சுமார் 500 விதமான வேலைகளை செய்கின்றது. அப்படிப்பட்ட கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எத்தனை பாதிப்புகள் ஏற்படும். ஆக ஒவ்வொருவரும் கல்லீரலை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நாம் கல்லீரலைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    * நீண்ட கால சோர்வு, எப்பொழுதும் மெத்தனமாக இருத்தல்
    * தலைவலி, மூட்டுகளின் வலி, தசைகளில் வலி
    * அதிக வியர்வை, அஜீரணம், வயிற்றுவலி
    * மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மனஉளைச்சல்
    * வாய் துர்நாற்றம், அதிக எடை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனைப்பெறவும்.
    ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
    வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பதை தாண்டி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பயன்படக்கூடிய அத்தியாவசியமான ஒன்றாக கைபேசிகள் உருவெடுத்துள்ள அதே வேளையில், இதுவரை நாம் அறியாத பிரச்சனைகளின் பிறப்பிடமாகவும் கைபேசிகள் உள்ளன.

    குறிப்பாக, உங்களது கைபேசியில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆஃப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள் தானே? என்றாவது நீங்கள் பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.

    உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும் என்கிறது. ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.

    இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜிபிஎஸ், நெட்ஒர்க் செயல்பாடு, வைஃபை, மற்ற ஆஃப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் & முடக்குதல், ஐஎம்இஐ எண், கைபேசியை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற/ நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.



    உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.

    கைபேசி செயலிகளை போன்றே ஃபேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள்.

    இதுபோன்ற செயலிகள், சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான காணொளிகள்/ புகைப்படங்கள்/ இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன.

    ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் ‘அக்சஃப்ட்’ கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது.

    மேற்கண்ட தகவல்களை ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள். 
    ×