என் மலர்

  நீங்கள் தேடியது "Menses Problems"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி மாறுதல்கள் ஏற்படும். மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
  பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்தியாசப்படும். பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

  ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

  அறிகுறிகள்

  * மெனோபாஸ் நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.

  * இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.

  * இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.

  * வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.  உடல்ரீதியான மாற்றங்கள்

  1. வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இது சில நிமிடங்களில் மறையலாம், இல்லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இது தொடரலாம்.

  இதற்கு நிவாரணம் - ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

  2. இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும். நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும்.

  3. யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ தன்மையையும் இழந்து விடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்று நோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த  சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்து விடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.

  4. தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடை கூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் என்ற எலும்பு நோய் தோன்றலாம்.

  5. உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள். மறதி, அடிக்கடி மனநிலை மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் போவது,  இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாதவிலக்கு சமயத்தில் பெண்ணின் நலனுக்காக, கர்ப்பப்பையின் ஆரோக்கியத்துக்காக சிலவற்றை செய்வதும், சிலவற்றை செய்யாமல் தவிர்ப்பதும் நல்லது.
  பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் பெரும் பிரச்சனைகளை சந்திப்பார்கள். மாதவிலக்கு சமயத்தில் பெண்ணின் நலனுக்காக, கர்ப்பப்பையின் ஆரோக்கியத்துக்காக சிலவற்றை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். பல பெண்களுக்கு 40 வயது கடந்த பிறகு, மாதவிலக்கு தொடர்பான பிரச்சனை அதிகமாக வருகிறது. இதைத் தவிர்க்க சில விஷயங்களை பின்பற்றுவதும் தவிர்ப்பதும் அவசியம்.

  * மாதவிலக்கான நேரங்களில் பெண்கள் கடுமையான வேலைகளை செய்ய கூடாது. மீறி செய்தால் கருப்பையானது தளர்ந்து கீழிறங்கும் வாய்ப்பு உள்ளது. குதித்து விளையாடினால் கருப்பைத் தசைகள் இறுகி, கர்ப்பப்பையின் மடிப்புகளில் ரத்தம் உறையலாம். கர்ப்பப்பையின் மென் சுவர் விரிந்து, உடைந்து, கட்டிகள், வீக்கம், திசு சிதைவு ஆகியவை ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில், கர்ப்பப்பைக்கு கூடுதலான ரத்த ஓட்டம் அவசியம். இதற்கு, பெண்களின் பிற உறுப்புகளுக்கு ஓய்வு தர வேண்டும். இதனால்தான் மாதவிலக்கானப் பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

  * மாதவிலக்கான பெண்கள் உள்ள வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தூங்கும்போதோ, அமர்ந்திருக்கும் போதோ ரத்தப்போக்கின் வாசத்தை பூச்சிகள் அறிந்து, கடித்துப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

  * பெண்ணின் உடலானது, கருப்பையைக் கருத்தரிப்பதற்கு ஏதுவாக, “என்டோமெட்ரியம்” என்னும் சவ்வை கரைத்து, வளர வைத்து, பக்குவப்படுத்திக் கொள்கிறது.
  மாதவிலக்கு ஏற்படும் போது 35-40 மி.லி ரத்தப்போக்கு ஏற்படுகிறது. நீர்ச்சத்து, புரதம், ரத்தம், சளிச்சவ்வு, உப்புகள், எண்டோமெட்டிரிய திசுக்கள் ஆகியன கலந்த கருஞ்சிவப்பு நிற திரவமாக ரத்தம் வெளியேறும். மன அமைதியுடன் அமர்ந்தோ, படுத்தோ ஓய்வெடுக்கும் பெண்களுக்கு 3-4 நாட்கள் சீரான ரத்தப்போக்கு ஏற்படும். மாதவிலக்கு காலத்தில் ஓய்வெடுத்தால், கர்ப்பப்பை வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களும் நன்கு உற்பத்தியாகின்றன. மாதவிலக்கு காலத்தில் ஓடலாம், குதிக்கலாம், விளையாடலாம், வண்டி ஓட்டலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்படியெல்லாம் செய்தால் ரத்தப்போக்கில் மாறுதல் ஏற்படுவதுடன், கர்ப்பப்பை தசைகள் திடீர் இறக்கத்தால் வீங்கி, கர்ப்பப்பைப் பெரிதாகின்றன.

  * மாதவிலக்கு காலத்தில் சானிடரி நாப்கினை செலவு செய்து வாங்குவதை விட பருத்தி துணியை 8-ஆக மடித்து நாப்கின் போல பயன்படுத்துவது நல்லது. தீவிரமான ரத்தப்போக்கை தவிர்க்க, மாசிக்காய், காசுக்கட்டி, கடுக்காய் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை இடித்து, பொடித்து துணியில் முடிந்து கர்ப்பப்பை வாசலில் வைக்க ரத்தப்போக்கு கட்டுப்படும். மேலும் பிறப்புறுப்பில் தோன்றும் அரிப்பு, வெள்ளைப்படுதல் ஆகியன நிற்கும்.

  * மாதவிலக்கு நாட்களில் தாம்பத்திய உறவு, பகல் தூக்கம், கண்களில் மையிடுதல், வாசனைத் திரவியம் பயன்படுத்துவது, நகம் வெட்டுதல், குதித்தல், ஓடுதல் ஆகியன செய்ய கூடாது. மாதவிலக்கான நாட்களில் குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்தால், ரத்தப்போக்கு நின்றுவிடும் வாய்ப்பு உள்ளதால், மாதவிலக்குக்கு பின் 4-ம் நாளில் இளஞ்சூடான வெந்நீரில் தலைக்கு குளிப்பது நல்லது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சித்த மருத்துவத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.
  இன்றையச் சூழலில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் எங்கு தங்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? தலைக்கு குளிக்கலாமா… குளிக்கக் கூடாதா என்பதில் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

  மாதவிலக்கின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சித்த மருத்துவத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

  குளித்தல் என்பது வெறும் அழுக்கை நீக்குதல் என்பது அல்ல. அவ்வாறு எடுத்துக் கொண்டால் நாம் அனைவரும் இரவு நேரங்களில் தான் குளிக்க வேண்டும். இரவு முழுவதும் சூடாக இருந்த உடலை குளிர்வித்தலான நிகழ்வு குளித்தல். அச்சமயத்தில் நம் உடலில் உள்ள பித்தத்தன்மை மாறி, கபத்தன்மை ஏற்படும்.

  சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஓய்வாக இருந்தனர். அதனால் உடல் சூட்டின் அளவு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. அந்தக் காலத்தில் ஒரு விதமான மரபு பின்பற்றப்பட்டது. இன்றைய பெண்கள் பல்வேறு சூழல்களில் பணிபுரிந்து வருகின்றனர். மாதவிலக்கு நாளில் ஓய்வே இல்லை.  இந்நாட்களில் தலைக்கு குளிக்கவே கூடாது என மொத்தமாக சொல்ல முடியாது.. ஒவ்வொரு பெண்ணின் உடல் சூழலும் மாறும். உடல் சூட்டில் இருந்து தலைக்கு குளிக்கும் போது தும்மல், மூக்கடைப்பு, சளி போன்ற தொந்தரவுகள் வரலாம். இதன் காரணமாகவே அந்த காலத்தில் மாதவிலக்கு நேரத்தில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது.

  ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் உடற்சூடு என்பது பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். அவ்வாறு பிரச்சனைகள் உள்ள பெண்கள் தலைக்கு குளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பெண்கள் தங்கள் உடல் தன்மைக்கு ஏற்ப குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கலாம்’

  இந்த நாட்களில் ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இந்த நாட்களில் உடலானது வழக்கத்தைவிட அதிக சூடாக இருக்கும். தலைக்குக் குளிப்பதால் சிலருக்குச் சளி பிடிக்கலாம்.

  கருப்பை, நரம்புகள் பாதிக்கப்படும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. இந்த நாட்களில் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றிக்கொள்ளுதல், மனதளவில் தயாராக இருத்தல் போன்ற நடைமுறை விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

  தன் சுத்தம், சுகாதாரமான உணவு, நிறை தண்ணீர், இரும்புச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள் இந்த நாட்களிலாவது அவசியம் பருக வேண்டும்.
  ×