என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தோசை, சப்பாத்தி, நாண், புலாவ், இட்லி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 500 கிலோ,
    பட்டை - 1 துண்டு,
    ஏலக்காய் - 3,
    கிராம்பு - 4,
    மிளகு - அரை தேக்காரண்டி,
    வெங்காயம் - 4,
    பச்சைமிளகாய் - 7,
    தக்காளி - 3,
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    தனியா தூள் - கால் டீஸ்பூன்
    மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
    தயிர், புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும மட்டன் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மட்டன் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், தயிர், உப்பு சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து புதினா, கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் சாப்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கற்பூர எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் பண்புகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பவற்றை பார்க்கலாம்.
    உங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் பண்புகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பவற்றை பார்க்கலாம்.

    * பலவீனமான முடிக்கு, முடி மாசுபடுதல், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    1. கற்பூர எண்ணெய்

    2. 1 முட்டை

    எப்படி உபயோகிப்பது?

    முதலாவதாக, ஒரு சுத்தமான கிண்ணத்தில் முழு முட்டையைச் சேர்க்கவும். அடுத்து, கற்பூர எண்ணெயைச் சேர்த்து இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலக்கவும். இதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் பயன்படுத்துவதைத் தொடங்குங்கள். முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசுங்கள் . அது 15-20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். ஒரு லேசான சல்பேட் அற்ற ஷாம்பூ- வால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள். நல்ல முடிவுக்கு வாரம் ஒரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

    * கற்பூர எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    1. கற்பூர எண்ணெய்

    2. தயிர்

    3. முட்டைகள்

    எப்படி உபயோகிப்பது?


    இது முடி வளர்ச்சிக்கு வேகமாக உதவும் நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான முடி மாஸ்க் ஆகும். ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து, கற்பூர எண்ணெய் மற்றும் தயிர் சேர்க்கவும். அடுத்து, 1 முழு முட்டையை கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். உங்கள் முடி மிகவும் நீண்டதாக இருந்தால் நீங்கள் மாஸ்க்கிங்கிற்கு இன்னுமொரு முட்டையைப் பயன்படுத்தலாம். 
    காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் சத்துமாவில் இடியாப்பம் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சத்து மாவு - ஒரு கப்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    சத்து மாவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும்.

    மாவு நன்றாக ஆறியதும் இதனுடன் எண்ணெய், உப்பு, வெந்நீர் விட்டு இடியாப்ப மாவு போல பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இதனை, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து இனிப்பாகவோ அல்லது வெங்காயம், காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து சேர்த்து காரமாகவோ சாப்பிடலாம். ஹெல்தியான இந்த இடியாப்பம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் மாதவிடாய் நிற்கும் பருவத்தை எட்டிய உடன் அவளது காம உணர்வுகள் அனைத்தும் மனதின் ஆழத்தில் புதைத்துக் கொண்டு ஒரு யோகியைப் போல வாழ்பவள் என்ற கருத்தாக்கத்தை அவளது மனதில் திணிக்கிறது.
    பெண்கள் ரொம்பவும் ரொமான்டிக்கானவர்கள். காமத்தில் சின்னச் சின்ன விஷயங்களையும் ரசனையோடு மனதில் பதிந்து நினைவுகளால் மீட்டி மகிழும் தன்மை பெண்களுக்கே உண்டு. சின்ன கோபத்தால், செல்லச் சீண்டல்களால் அலாதி இன்பத்தை உணரும் தன்மையும் பெண்களுக்கே உண்டு.

    Premenopause காலகட்டத்தில் அவள் மனம் அடையும் மாற்றங்கள் அதிகமானவை. ஹார்மோன் மாற்றங்களால் உடல், மனம் இரண்டும் இனம் புரியாத துன்பங்களை சந்திக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அவள் சாய்ந்து கொள்ளத் தோள் தேடுகிறாள். சின்னச் சின்ன ரொமான்ஸ் விளையாட்டுகள் அவளின் மனக்குழப்பத்துக்கு ஆறுதலாகிறது.

    மெனோபாஸ் காலகட்டத்திலும் கணவன் மனைவிக்கான தனிமைகள் அவசியம். இந்த காலகட்டத்திலும் மகிழ்ச்சியான தாம்பத்யம் கொண்டாட முடியும். ஆண், பெண் இருவருக்குமே அந்த காலகட்டத்தில் ஏற்படும் சோர்வைப் போக்கி மனதை உற்சாகமான நிலையில் வைத்துக் கொள்ள தாம்பத்யம் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    மெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். தொடர்ந்து 12 மாதவிடாய் வராமலிருந்தால் அந்தப் பெண் மெனோபாஸ் அடைந்துவிட்டாள் என்று அர்த்தம். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால்பெண்ணுடலில் பூப்பு நிற்றல் நிகழ்கிறது. இத்துடன் பெண்ணின் இனப்பெருக்கம் முடிவுக்கு வருகிறது. பெண்ணின் 45 வயது முதல் 52 வயதுக்குள் நிகழும் இதையும் சுப நிகழ்வாகவே கொள்ளலாம்.



    பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் நிகழ்வில் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது சில மாதம் முன்பும், பின்பும் பல உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் பெண்ணுக்குள் நிகழ்கின்றன. இவை அவர்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உணவுப் பழக்கங்கள், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணங்களால் அவை மாறுபடுகின்றன.

    வேறு சில உடல் நலக்காரணங்களாலும் பெண்களுக்கு மாதவிடாய் மாற்றங்கள் ஏற்படலாம். சில நோய்நிலைகள், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல் பருமன், நரம்புத்தளர்ச்சி, நோய் ஆகியவற்றாலும் மாதவிடாய் வராமலிருக்கலாம். இதனைப் பூப்பு முடிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது. பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதால் உடலுறவின்போது வலி ஏற்படலாம். ஹார்மோன் சிகிச்சை, நெய்ப்புத் தன்மையுள்ள கிரீம்களை உபயோகித்து தாம்பத்யத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கலாம்.

    மெனோபாஸ் வந்துவிட்டால் உடல் ஒத்துழைக்காது, செக்ஸ் உணர்வுகள் வற்றிப்போய்விடும் என்பதெல்லாம் கற்பனையே. கூர்ந்து கவனித்தால் மாதவிடாய்க்கு முந்தைய காலம், மாதவிடாய் முடிந்த பின்னர் என பெண் மனதில் தாம்பத்ய உறவுக்கான வேட்கை இருக்கும். பெண்ணின் மன நிலையை ஆண்கள் புரிந்து கொண்டு ரொமான்டிக்காகவே இருங்கள். தனக்கு செக்ஸ் உணர்வு வராது, குழந்தைகள் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் தேவையா என்ற எண்ணங்கள் பெண்களை இறுக்கமான மனநிலைக்குத் தள்ளுகிறது.

    இதனால் உடலுறவின் போது வலியை அனுபவிக்கின்றனர். வழக்கமான உற்சாகத்தைப் பெண்கள் இழக்கின்றனர். இது பொதுவாக மூட நம்பிக்கையே. வயதானாலும், ஹார்மோன் கண்ணாமூச்சியாடினாலும் ரொமான்டிக்காக உணருங்கள். காதலில், காமத்தில் பேரன்பை பகிருங்கள். மெனோபாஸ் ஒருபோதும் மகிழ்ச்சிக்கான ஸ்பீட்பிரேக்கர் கிடையாது.

    தொடைப் பெருத்து இருப்பது அழகை மட்டுமல்ல; ஆளுமையைக் குறைக்கும் விஷயமாக இருக்கிறது. தொடையை ஃபிட்டாக வைத்திருக்க வீட்டிலேயே செய்யவேண்டிய பயிற்சிகளை பார்க்கலாம்.
    தற்போதுள்ள காலகட்டத்தில் முறையற்ற உணவுமுறை, வேலை முறையின் காரணமாக இளம் வயதிலேயே பலருக்கும் தொடைப் பெருத்து இருப்பதுதான் பெரும் பிரச்னை. இது, அழகை மட்டுமல்ல; ஆளுமையைக் குறைக்கும் விஷயமாக இருக்கிறது. தொடையை ஃபிட்டாக வைத்திருக்க வீட்டிலேயே செய்யவேண்டிய பயிற்சிகளை பார்க்கலாம்.

    வார்ம்அப் பயிற்சி ஃப்ரீ ஸ்குவாட்ஸ் (Free Squats):


    கால்களைத் தோள்பட்டையின் அகலத்துக்கு அகட்டி, இரு கைகளையும் தோள்பட்டையின் உயரத்துக்கு முன் பக்கமாக நீட்டியபடி நிற்க வேண்டும். இப்போது, நம் முன் ஒரு நாற்காலி போடப்பட்டுள்ளதாகக் கற்பனை செய்துகொண்டு, அந்த நாற்காலியில் உட்காருவதுபோல் 45 டிகிரிக்கு உட்கார்ந்து எழ வேண்டும். தொடர்ந்து 10 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இது போல் ஒரு நாளைக்கு 15 விநாடி இடைவெளியில் மூன்று செட் செய்ய வேண்டும்.

    லண்ஜெஸ்  (Lunges):


    நடப்பதைப்போல வலது காலை முன் பக்கமாகவும், இடது காலை பின்புறமாகவும் வைக்க வேண்டும். இரு கால்களுக்கான இடைவெளி மூன்று அடி என்ற அளவில் இருக்கட்டும். இப்போது முன்புற கால்களில் உடலைத் தாங்கியபடி மடித்து, பின்புறம் உள்ள காலை முட்டி போடுவது போல மடிக்க வேண்டும். ஒரு சில விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று இடது காலை முன்புறமாக வைத்தும், வலது காலை பின்புறமாக வைத்தும் செய்ய வேண்டும். இப்படி 10 முறை செய்வது ஒரு செட். 15 முதல் 30 விநாடி இடைவெளியில் மூன்று செட் செய்ய வேண்டும்.



    ஸ்டாண்டிங் சைடு லெக் ரைஸ் (Standing side leg raise):

    இடது கையை அருகில் உள்ள சுவர் அல்லது நாற்காலியில் பிடித்தபடி நிற்க வேண்டும். இடது கை உடலை ஒட்டியபடி இருக்க வேண்டும். இப்போது வலது காலை பக்கவாட்டில் முடிந்த வரை உயர்த்த வேண்டும். ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல் கையை மாற்றி இடது காலுக்கும் பயிற்சியை செய்யவேண்டும். இது ஒரு செட். இதுபோல் மூன்று செட் செய்ய வேண்டும்.

    க்ளூட் கிக் பேக்   (Glute kick back):

    தரையில் முட்டிபோட்டு உடலைத் தாங்கும்படி கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். கால்களைச் சற்று அகட்டி வைக்க வேண்டும். முதலில் இடது காலை முன் பக்கமாக அடிவயிறு தொடும் வரையில் கொண்டுவர வேண்டும். முன்வயிறைத் தொட்ட பிறகு காலை பின்னோக்கித் தள்ளி முடிந்தவரை மேலே உயர்த்த வேண்டும். ஓரிரு விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று இரு கால்களுக்கும் முறையே மூன்று செட் செய்ய வேண்டும்.

    உள் தொடை  (Inner Thighs):

    இது பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி. இடது கையால் தலையைத் தாங்கியபடி ஒருக்களித்து தரையில் படுக்க வேண்டும். வலது கையை மடித்து முன் பக்கமாக விரல்கள் தலையைப் பார்த்தபடி வைக்க வேண்டும். வலது காலை மடித்து இடுப்புப் பகுதிக்கு அருகே வைக்க வேண்டும். இப்போது இடது காலை மேலே உயர்த்திச் சில விநாடிகள் நிறுத்தி, பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி 10 முறை செய்வது ஒரு செட். இதேபோன்று மற்றொரு காலுக்கும் சேர்த்து முறையே மூன்று செட் செய்ய வேண்டும்.
    பல வைட்டமின் குறைபாடுகள் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். ஆயினும் சில உடல் நலமின்மை வெளிப்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.
    வைட்டமின்களும், தாது உப்புகளும் உடல் நலத்திற்கு மிக மிக அவசியமானவை இதன் குறைபாடு பலரிடம் காணப்படுவதன் காரணம் பழங்கள், காய்கறிகள் இவற்றினை நாம் இன்னமும் நன்கு பயன்படுத்த முன்வராதது தான் காரணம். பலருக்கு பொருளாதார பிரச்சினை காரணமாக முறையான உணவு முறையினை பின்பற்ற முடிவதில்லை. மிகச் சாதாரணமாக நாம் காணும் சத்து குறைபாடுகளானது இரும்பு, வைட்டமின் டி, கால்ஷியம் குறைபாடுகள் ஆகும்.

    பல வைட்டமின் குறைபாடுகள் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். மருத்துவரே உங்கள் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆயினும் சில உடல் நலமின்மை வெளிப்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

    * எப்போதும் சோர்வாக இருப்பது போல் தோன்றினால் வைட்டமின் பி12, வைட்டமின் டி, இரும்பு சத்து குறைபாடு போன்றவை இருக்கக்கூடும்.

    * ஆடு தசையில் ஏற்படும் இறுக்கப் பிடிப்பு மக்னீசயம் குறைபாட்டினைக் குறிக்கலாம்.

    * ஈறுகள் வீக்கம், சிறு காயங்கள் ஆற அதிக நேரம் பிடித்தல் போன்றவை வைட்டமின் ‘சி’ குறைபாடாக இருக்கலாம். அதிக புகை பிடிப்பவர்களுக்கு வைட்டமின் ‘சி’ குறைபாடு அதிகம் காணப்படுகின்றது.

    * இரவில் கண் பார்வை குறைதல் (அ) பொதுவாகவே கண் பார்வை குறை போன்றவற்றுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடும் முக்கிய காரணமாகும்.

    * சிலருக்கு கை, முதுகு லக்கங்களில் கூட பருக்கள் இருக்கலாம்.இதற்கு சரும மருத்துவர் மூலம் சிகிச்சை பெற வேண்டும் எனினும் லிவீஸீநீ குறைபாடு இருக்கின்றதா எனவும் மருத்துவர் மூலம் அறிந்து குறைபாட்டினை சரிசெய்து கொள்ள வேண்டும்.

    * வாயில் சிறு புண்கள், உடலில் வித்தியாசமான சரும பாதிப்புகள் இருந்தால் வைட்டமின் குறைபாடு இருக்கின்றதா என்று அறியவும்.

    * நாக்கில் வெள்ளை படிதல் இருந்தால் சில காரணங்களுடன் முக்கியமான காரணமாக வைட்டமின் ‘பி’ குறைபாடும் இருக்கலாம். இந்த வைட்டமின் உங்கள் நரம்பு மண்டலத்திற்கு அவசியம்.

    சில அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே கவனிக்க வேண்டும் என்பதற்காக சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    * தொடர்ந்து சோர்வாக இருந்தால் உடனடியாக இதற்கு கவனம் செலுத்துங்கள்.

    * உங்கள் முயற்சி இல்லாமல் திடீரென எந்த காரணமும் இன்றி எடை குறைவு ஏற்பட்டால் ஏன் என மருத்துவர் மூலம் அறியுங்கள்.

    * உடலில் ஏதோ ஒரு பகுதியில் விடாது வலி இருப்பதும், சிகிச்சை பலனின்றி வலிப்பதும் அதிக மருத்துவ கவனம் தேவைப்படுவது ஆகும்.

    * உடலில் கட்டி போல் சிறு உருண்டை இருப்பின் உடனடியாக பரிசோதித்து தீர்வு பெறுங்கள்.

    * அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் பாதிப்பிற்கு கூடுதல் மருத்துவ பரிசோதனை தேவை.

    * சருமத்தில் ஏற்படும் திடீர் மச்சம் போன்றவை அல்லது அதில் ஏற்படும் மாறுதல்கள் இருந்தால் அதனை தீர மருத்துவஆய்வு செய்ய வேண்டும்.

    * இருமல் பொதுவாக சளி, காய்ச்சல் இவற்றோடு ஏற்படுவதுதான்.

    * அடிக்கடி சிறுநீர் செல்லுதல், அடிக்கடி வயிற்றுப்போக்கு பின் மலச்சிக்கல் என்ற அறிகுறிகளை உடனடியாக கவனிக்க வேண்டும்.

    * இருமலில் ரத்தம், மேலும் பிறப்புறுப்பு, குடல் வெளியேற்றத்தில் ரத்தம் போன்றவற்றுக்கு சிறிதும் காலம் தாழ்த்தாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * உணவு, திரவ உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் கவனித்து விட வேண்டும்.
    குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை.
    பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதி பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு உடலின் கழிவு நீக்க அமைப்பு மூலம் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இந்த வேதி பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    குழந்தைகளின் உடலை அடையும் வேதிப் பொருட்களின் பாதிப்புகள் உடனடியாக குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டு விடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அவர்களின் வாழ்நாள் நம்மைவிட அதிகம். அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்க குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்தில் இருந்தே தேடவேண்டி உள்ளது.

    குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக் குழு என்ற அமைப்பின் 2005-ம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    நம் வீட்டில் பயன்படுத்தும் நுரை மெத்தை, கணினி, டி.வி. ஆகியவை எளிதில் தீப்பிடிக்காமல் இருக்க தீ தடுப்பான்களான பலபடி புரோமினேற்றம் செய்யப்பட்ட பைபீனைல் ஈதர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவு சங்கிலியில் கலந்து தாயின் உடலை அடைந்து தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் சென்றடைகின்றன. இவை மூளை வளர்ச்சியை பாதிப்பது மட்டுமில்லாமல், தைராய்டு தொடர்பான நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றன.

    வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை. நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாக குழந்தை பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியோ முழு வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக வேதி தாக்குதலின் தீவிரம் குழந்தைகளிடம் அதிகம்.

    குறிப்பாக அவர்களுடைய முதிர்ச்சியடையாத மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியது. குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளேவரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை பாதிப்படைய செய்கின்றன.
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கோதுமை மாவில் ஸ்வீட் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்
    வெல்லம் - 1/2 கப்
    வாழைப்பழம் - 1
    ஏலக்காய் - 2
    ரவை - ஒரு கைப்பிடி
    பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
    உப்பு - 1 சிட்டிகை
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வாழைப்பழம் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அதனுடன் வெல்லம், ஏலக்காய் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த வாழைப்பழ விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கோதுமை மாவு, ரவை, பேக்கிங் சோடா, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    மாவு கையில் எடுக்கும் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை எடுத்து போண்டா போல் போடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான கோதுமை ஸ்வீட் போண்டா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நைட்டு நல்லாதான் தூங்குனேன், ஆனாலும் டயர்டாவே இருக்கு. முதுகு வேற வலிக்குது…” காலையில் அலுவலகத்தில் கம்யூட்டரை ஆன் செய்வதற்கு முன்பாக பக்கத்தில் இருப்பவர்களிடம் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தைகள் இவை. இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    நன்றாக தூங்கி எழுந்தபிறகு, முதுகு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு, நாம் சரியான நிலையில் தூங்காமல் இருப்பதும், சரியான இடத்தில் தலையணை வைத்துத் தூங்காமல் இருப்பதுமே காரணம். தூங்கும் முறையும், தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் ரொம்பவே முக்கியம்.

    கழுத்து மற்றும் முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால்..?


    தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புற முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு பக்கமாக (side lying) அல்லது நேராக(மல்லாந்து) படுத்தால் (Supine lying) வலி குறையும். இப்படிப் படுக்கும்போது, முதுகுத் தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் சென்று, கழுத்துப் பகுதி தளர்வடையும். அதனால் வலி குறையும். வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்கும் தலைக்கும் இடையில் வைத்துத் தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும் .



    முதுகின் கீழ்ப்பகுதியில் வலி இருந்தால்?

    ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தால், முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலி குறையும். ‘நேராகப் படுத்தே பழகிவிட்டேன், ஒரு பக்கமாக படுத்தால் தூக்கம் வராது’ என்பவர்கள் தலையணையை முழங்காலுக்குக் கீழ் வைத்துத் தூங்கலாம். இது ஓரளவுக்குத்தான் பயனளிக்கும். ஒரு பக்கமாக சாய்ந்து தூங்கப் பழகிக் கொள்வது நல்லது.

    முதுகின் கீழ்ப்பகுதியில் வலி உள்ளவர்கள் குப்புறப்படுத்துத் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும். அப்படித் தூங்கினால் வலி அதிகமாகும். தவிர, கழுத்தில் உள்ள தசைகள், நரம்புகளை இறுக்கி வலியை அதிகரிக்கும்.

    முதுகின் நடுவில் ஏற்படும் வலியைக் குறைக்க!

    சேரில் உட்காரும்போது, முன்புறமாக குனிந்து உட்காருவது, வலதுபுறமாகவோ, இடதுபுறமாகவோ சாய்ந்தபடி உட்காருவது, நடக்கும்போது குனிந்தபடியே நடப்பது போன்ற செயல்பாடுகளால் முதுகின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். நேராகவோ அல்லது ஒரு பக்கம் சாய்ந்தவாறோ தூங்கினால் இந்தப் பாதிப்பை ஓரளவுக்குக் குறைக்கலாம்.

    உட்காரும் நிலையை மாற்றினால் மட்டுமே இந்த வலியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து, பின்புறமாக லேசாக சாய்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்கலாம். மேலும், மசாஜ், ஃபோர்ம் ரோலிங், நெஞ்சுப் பகுதிக்கான ஸ்ட்ரெட்ச்சிங், முதுகுப் பகுதிக்கான உடற்பயிற்சிகள் போன்றவை வலியைக் கட்டுப்படுத்தி நன்றாக தூங்க உதவிபுரியும்.
    பிறந்தது முதல் மூன்று வயது வரை, குழந்தை வளர்ப்பில் அவசியம் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை வளர்ப்பை எளிதாகக் கடந்து போனார்கள் சென்ற தலைமுறை அம்மாக்கள். ஆனால், இன்றைய ‘நியூக்ளியர் ஃபேமிலி மம்மி’களுக்கு, குழந்தையைக் குளிப்பாட்டுவதில் இருந்து, சோறூட்டுவது வரை அனைத்திலும் தடுமாற்றங்கள்; இதற்கு என்ன செய்ய வேண்டும், இதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என பல கேள்விகள். பிறந்தது முதல் மூன்று வயது வரை, குழந்தை வளர்ப்பில் அவசியம் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது பற்றி அறிந்து கொள்ளலாம்.

    குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் அதற்கு மிக அவசியம், அது மட்டுமே போதும்… தண்ணீர்கூட தேவையில்லை. குழந்தையின் மூளை வளர்ச்சியில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி வரை, அடித்தளம் அமைப்பது தாய்ப்பாலே! பிறந்த குழந்தைக்கு பவுடர் தேவையில்லை. மிருதுவான பருத்தித் துணிகள் அணிவிக்கலாம்.

    ஆறு மாதங்களுக்குப் பின், இணை உணவுகள் தர ஆரம்பிக்கலாம். அது வீட்டில் தயாரித்ததாக மட்டும் இருக்கட்டும். டப்பா உணவுகள் வேண்டாம்.

    இரவில் மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம், பகலில் அம்மா கொஞ்சம் மெனக்கெட்டு குழந்தை ஈரம் செய்யும் துணிகளை அவ்வப்போது மாற்றினால், டயப்பர் ஈரத்தினால் உண்டாகும் ரேஷஸ், தொடர் டயப்பர் பயன்பாட்டில் மாறிப்போகும் குழந்தையின் நடை போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

    தடுப்பூசிகளை மறக்காமல் போடுவதுடன், குழந்தை நோயுற்ற சமயங்களில் டாக்டர் தரும் மருந்துச் சீட்டுகள், மருத்துவப் பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை ஃபைல் ஆக பராமரித்து வரவும். பீரோவில் இருக்கும் நகையைவிட இது முக்கியம்.

    ஏழு, எட்டு மாதத்தில் ‘தாத்தா’, ‘ப்பா’ என்று குழந்தை பேச ஆரம்பிக்கும். அப்போது பெரியவர்களும் குழந்தையோடு நேரடியாக அதிகம் பேச வேண்டும். அதுதான் அவர்களைப் பேச வைப்பதற்கான முதல் படி.

    ஏழு மாதத்துக்குப் பிறகு ‘டாய்லெட் டிரெய்னிங்’ பழக்க ஆரம்பித்து, இரண்டு வயதுக்குள் ‘கக்கா வருது, சுச்சா வருது’ என்று குழந்தைகள் பெற்றோரிடம் தெரிவிக்கும் வகையில் பழக்கிவிட வேண்டும்.

    ஓடிப்பிடித்து விளையாடுவது… எழுத்துகள், எண்களை விளையாட்டாகச் சொல்லிக் கொடுப்பது என அவர்களின் உடலுக்கும், மூளைக்கும் பிடித்த வகையில் வேலை கொடுக்கவும்.

    இரண்டு வயதில் பெரியவர்கள் சாப்பிடும் எல்லா உணவுகளையும் குழந்தையும் சாப்பிடப் பழக்கியிருக்க வேண்டும்.



    வீட்டுக்குள்ளேயே குழந்தைகளைப் பூட்டிவைக்காமல், பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனும், அப்பார்ட்மென்டின் பிளே பார்க் போன்றவற்றிலும் விளையாட வைக்கவும். ‘சோஷியல் பிஹேவியர்’ அப்போதுதான் உருவாகும்.

    ஒரு வயதில் இருந்தே குழந்தைகளின் அடத்துக்கு ‘நோ’ சொல்ல ஆரம்பிக்கவும். இதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பின்பற்றவும்.

    மாட்டுப்பாலில் உள்ள புரதத்தை ஜீரணிக்கும் அளவுக்கு பிறந்த குழந்தையின் உடல் வளர்ச்சி இருக்காது. இந்தப் புரதம் உடலில் படிந்து, பிற்காலத்தில் டயாபடீஸ் போன்ற நோய்க்கு ஆளாக நேரிடும். எனவே, பால் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் புரதம் உடைக்கப்பட்டு குடலுக்கு தீங்கு செய்யாத பவுடர் பாலை உபயோகிக்கலாம்.

    இணை உணவு கொடுக்க ஆரம்பிக்கும்போது, உணவு அதீத தித்திப்பாகவோ, உப்பாகவோ இருக்கக் கூடாது. அது உடலுக்குக் கேடுகளை விளைவிக்கும். இணை உணவை மிக்ஸில் அடித்துக் கொடுக்கக் கூடாது; கை, கரண்டியில் மசித்துக் கொடுக்கலாம்.

    நோய்த்தொற்று காரணத்தால் சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களிடம் இருந்து இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை தள்ளி வைக்கவும்; கூட்டம் அதிகம் நிறைந்த இடங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டாம்.

    தொட்டிலை இறக்கிக் கட்டவும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொட்டிலில் தூங்கும்போது கண்காணிப்பு அவசியம்.

    குழந்தைகள் முன்னிலையில் கெட்ட வார்த்தை, மற்றவர்களை புறணி பேசுவது, பொய் பேசுவது, சண்டை போடுவதெல்லாம் கூடவே கூடாது. பின் அதையேதான் குழந்தையும் செய்யும்.

    தனக்கு நேர்ந்ததை வெளியில் சொல்லத் தெரியாத வயது என்பதால், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை நெருங்கிய உறவுகளிடம்கூட ஐந்து நிமிடங்களுக்கு மேல் தனியாக இருக்கவிட வேண்டாம்.

    டி.வி, போன், கம்ப்யூட்டர் போன்ற ஸ்க்ரீன் சமாசாரங்களை இரண்டு வயது வரை குழந்தைக்கு அனுமதிக்கக் கூடாது. அதற்குப் பிறகும், நேரக் கெடுபடி அவசியம்.

    குழந்தை அடம்பிடிக்கும்போது அடிக்காமல், இடம், சூழல், பேச்சு போன்றவற்றை மாற்றி, அவர்களை வேறு ஒரு விஷயத்தில் சுவாரஸ்யம் கொள்ளச் செய்யவும். அடத்துக்குப் பணிந்து அவர்கள் கேட்பதை கொடுக்கவோ, செய்யவோ கூடாது.
    மீனில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூடான சாதத்துடன் சாப்பிட இந்த தொக்க அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    முள் இல்லாத மீன் - 250 கிராம்,
    சோம்பு - சிறிதளவு,
    வெந்தயம் - சிறிதளவு,
    நசுக்கிய பூண்டு - 6
    பெருங்காய பவுடர் - சிறிதளவு,
    தக்காளி - 1
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்,
    சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், பெருங்காய பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதக்கியதும் மீனை அதில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    நன்றாக தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மீன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை பார்க்கலாம்.
    பிரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை பார்க்கலாம்.

    பாலூட்டும் தாய்மார்கள், குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. அம்மாக்கள் சாப்பிடும் உணவு செரித்த பின்னர், அதன் சத்துகள்தாம் தாய்ப்பாலின் மூலமாகக் குழந்தைக்குச் சென்றடையும் என்பதால், குழந்தையின் செரிமானத்துக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பாலூட்டும் பெண்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். மலக்கட்டுப் பிரச்சனையை ஏற்படுத்தும் ஜங்க் ஃபுட்ஸ், பிஸ்கட், பிரெட் போன்ற உணவுகளைப் பிரசவம் முடிந்த முதல் 15 நாள்களுக்குத் தவிர்த்துவிடுவது நல்லது. நிறைய தண்ணீர், பழச்சாறு, சூப் அருந்துவது பால் சுரப்பைச் சீராக வைத்திருக்கும்.

    தளர்வான பருத்தி ஆடைகளே பாலூட்டும் தாய்க்கு நல்லது. வேலைப்பாடுகள்கொண்ட ஆடைகள் குழந்தையைத் தூக்கும்போது, அதன் மென்மையான சருமத்தை உரசிப் பதம்பார்க்கும். ஃபீடிங் நைட்டி, வெளியே செல்லும்போது ஃபீடிங் குர்தி என அணிவது பாலூட்ட வசதியாக இருக்கும்.

    இரவெல்லாம் விழித்திருந்து குழந்தைக்குப் பாலூட்டுவது, தொட்டில் ஆட்டுவது, டயப்பர் மாற்றுவது போன்ற பொறுப்புகளால் தாயின் தூக்கம் பறிபோகும். உறக்கமின்மையால் கோபம், பசியின்மை போன்றவை ஏற்படும். அடுத்தகட்டமாக ஸ்ட்ரெஸ்கூட ஏற்படலாம் என்பதுடன், ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாகப் பால் சுரப்பு குறையலாம். இவற்றையெல்லாம் தவிர்க்க, குழந்தை உறங்கும்போதெல்லாம் தாயும் உறங்கி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையைப் பார்க்க வருபவர்கள் அனைவரும் குழந்தையைத் தூக்குவதை, கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சுவதை, முத்தம் கொடுப்பதை எல்லாம் தவிர்க்கவும். தவிர்க்க முடியாத சூழலில் குழந்தையை ஒருவரின் கைகளில் தர நேர்ந்தால், முன்னதாக அவர் கைகழுவ, ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்த வைக்கவும். வீட்டில் இருக்கும் நேரங்களில் குழந்தைக்கு டயப்பர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். குழந்தையின் உடைகளை நன்கு அலசி, வெயிலில் உலரவைத்துப் பயன்படுத்தவும்.

    பிரசவத்துக்குப் பின்னர் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது டாக்டர் பரிந்துரைத்த கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம். குழந்தை பிறந்த 15 நாள்களுக்குப் பின்னர், மகப்பேறு மருத்துவரிடம் ஒரு செக்கப் செய்துகொள்ளவும். மன அழுத்தத்துக்குள்ளானால், கவுன்சலிங் பெறுவது நல்லது. குறைந்தது இரண்டு மாதங்களுக்கு தாம்பத்யத்தைத் தவிர்க்கவும்.
    ×