search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetable Rice"

    சாமை அரிசியுடன் காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியத்தையும் அளிக்கும் சாதம் செய்தால் சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 2 கப்
    பீன்ஸ், கேரட், அவரை - 1 கப்
    பச்சை பட்டாணி - கால் கப்
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    ப.மிளகாய் - 4
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
    உப்பு - சுவைக்கு



    செய்முறை :

    சாமை அரிசியில் நன்றாக கழுவி சுத்தம் செய்து 30 மணிநேரம் ஊற விடவும்.

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    அதோடு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய்கறிகளை வேக விடவும்.

    காய்கறிகள்  வெந்தவுடன் அதில் ஊறவைத்த சாமை அரிசியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

    மீண்டும் மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சாமை காய்கறி சாதம் ரெடி.

    உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×