என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கண்கள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தினை எளிதாய் வெளிப்படுத்தி விடும். கண்களின் ஆரோக்கியத்தினை அறிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
    உங்கள் கண்கள் உங்களுக்கு சொல்வது என்ன? கண்கள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தினை எளிதாய் வெளிப்படுத்தி விடும்.

    * கண்ணில் இரைப்பையின் முடிகாலில் வரும் கட்டி மிகவும் வலி கொடுக்கும். சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை கூட இருக்கக்கூடும். பொதுவில் உடனடி மருத்துவ உதவி பெறுவதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் தொடர்ந்து ஒரே இடத்தில் வருவது, நீண்ட கால தொந்தரவு இவைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.

    * புருவ முடி சிலருக்கு சீக்கிரமாகவே மெலிந்து வரும். வயது, சக்தியின்மை, ஸ்ட்ரெஸ் இவையெல்லாம் ஒரு காரணம் என்றாலும் தலையில் வழுக்கை ஏற்படுவது போல புருவ முடியிலும் ஏற்படலாம். தைராய்டு குறைபாடு காரணமாக இருக்கலாம். உரிய கவனம் கொள்ளுங்கள்.

    இன்றைய கால கட்டத்தில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து காலை முதல் இரவு வரை வேலை செய்வதே வழக்கமாகி விட்டது. கம்ப்யூட்டர் முன்னேற்றம் உலகையே உங்களிடம் அழைத்து வந்துவிடும் என்றாலும் கண்களுக்கு ஏற்படும் அதிக உழைப்பு பற்றி கண்டிப்பாக கண் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    * கண்கள் சற்று வெளிவந்தது போல் இருந்தாலும் தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம்.

    * கண் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் இருந்தால் அனைவரும் அறிந்ததே. மஞ்சள்காமாலைக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * சர்க்கரை நோய் பலவித கண் பிரச்சினைகளை கொடுக்கலாம். வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * திடீரென கண் பார்வை மங்குதல், சரியான பார்வை இன்மை போன்றவை உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை.
    குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர், புதினா சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்
    பன்னீர் - 200 கிராம்
    புதினா - 1 கட்டு
    கிராம்பு - 4
    பட்டை - 1 இன்ச்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 4 கப்



    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

    தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விசித்திர குணம் கொண்ட ஆண்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்களை தைரியமாகவும், சமயோசிதமாகவும் கையாள எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
    நாம் கற்பனைசெய்து பார்க்க இயலாத விசித்திரங்கள் மனித வாழ்க்கையில் நடக்கக் கூடும். அவைகளை விஞ்ஞானபூர்வமாக அலசி ஆராய்ந்தால்தான், அதன் உண்மைத்தன்மைகளை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். நம்மிடையே அன்றாடம் விசித்திர சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை பற்றி அலசுவோம்!

    இப்போது பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வாடகை வாகனங்களில்தான் செல்கிறார்கள். ஒரு ஆட்டோவில் பத்து குழந்தைகள்கூட ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நெருக்கடி நிறைந்த ஆட்டோ ஒன்றில் தினமும் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிக்கு 8 வயது. துறுதுறுப்பான அவள், படிப்பு, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் என்று பள்ளியில் நடக்கும் அனைத்திலும் பங்குபெற்று, பரிசோடுதான் வீடு திரும்புவாள். திடீரென்று அவளிடம் அதிரடியான மாற்றங்கள். படிப்பில் பின்தங்கினாள். போட்டிகளில் பங்குபெறுவதை தவிர்த்து தனிமையை நாடினாள். நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்து, அழத் தொடங்கினாள்.

    இரண்டு, மூன்று மாதங்களாக மகளிடம் இத்தகைய மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்திருந்த தாயாரின் கவனத்தில் மகளின் புத்தகப்பை தென்பட்டிருக்கிறது. விடுமுறை நாள் ஒன்றில் அவளது புத்தகப்பை நோக்கி ஏராளமான எறும்புகள் படையெடுப்பதை பார்த்திருக்கிறார். என்னவென்று பார்ப்பதற்காக பையை திறந்திருக்கிறார். உள்ளே நிறைய சாக்லேட் இருந்திருக்கிறது.

    “நாங்கள் அவளுக்கு எல்லாவிதமான இனிப்பு வகைகளையும் வாங்கிக்கொடுப்போம். ஆனால் பற்கள் கெட்டுப்போய்விடும் என்பதற்காக சாக்லேட் மட்டும் வாங்கிக்கொடுக்க மாட்டோம். ஆனால் இவளுக்கு சாக்லேட் மீது ரொம்ப ஆசை இருந்தது..” என்றார் தாயார். முதலில் அவர் மட்டுமே கவுன்சலிங்குக்கு வந்திருந்தார்.

    “அப்படியானால் அதை புரிந்துகொண்டு யாரோ இவளுக்கு நிறைய சாக்லேட் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவள் அதனை சாப்பிடாமல் வைத்திருக்கிறாளே ஏன்? அப்படியானால் இந்த சாக்லேட்டுடன்தான் இவளுக்கு ஏதோ பிரச்சினையும் சேர்ந்து வந்திருக்கிறது. அதை பற்றி விசாரியுங்கள்..” என்றேன்.

    தாயார் விசாரித்து சொன்ன சம்பவம் விசித்திரமாக இருந்தது. அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு 55 வயது. இந்த மாணவியின் வீட்டில் இருந்து பள்ளியை சென்றடைய, முக்கால் மணி நேரம் ஆட்டோவில் பயணிக்கவேண்டும். அதில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் இவள் மட்டுமே ஆட்டோவில் இருப்பாள். அப்போது பெரும்பகுதி நேரம் ஆள்அரவமற்ற பகுதியை ஆட்டோ கடந்து செல்லும். பள்ளியை நெருங்கும் நேரத்தில்தான் நிறைய மாணவிகள் ஏறுவார்களாம். தனியாக பயணிக்கும்போது அவளிடம் பேசிக்கொண்டே செல்லும் அவர், அவளது சாக்லேட் ஆசையை எப்படியோ தெரிந்துகொண்டு விலை உயர்ந்த சாக்லேட்களை நிறைய வாங்கிக்கொடுத்திருக்கிறார். இவளும் ஆர்வமாக சாப்பிட்டிருக்கிறாள்.



    அதை வீட்டில் சொல்லக்கூடாது என்றிருக்கிறார். இவளும் சொல்லவில்லை. அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நம்பிய பின்பு தனது விசித்திர சுபாவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது ஆட்டோவில் இவள் மட்டும் இருக்கும் தனிமை நேரத்தில் அவர் தனது இடுப்புக்கு கீழ் பகுதி ஆடையை கீழே இறக்கிவிட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுவாராம். இது தொடர்ந்து நடந்திருக்கிறது. பின்பு நகரப் பகுதிக்குள் ஆட்டோ சென்றதும், தனது உடையை சரிசெய்துகொள்வாராம்.

    அவரது செயலை பார்த்த அவள் முதலில், ‘அவர் உடையை சரிசெய்ய மறந்துவிட்டார்’ என்று எளிதாக எடுத்திருக்கிறாள். பின்பு விளையாட்டுத்தனமாக கருதியிருக்கிறாள். தான் ஆட்டோவில் ஏறிய பின்பு, ஆட்கள் இல்லாத பகுதியில் அந்த செயலை செய்யத்தொடங்கியதும் அது தவறானதாகவும், பின்பு விபரீதமாகவும் அவளுக்கு புரிந்திருக்கிறது. அப்போது அவள், ‘ஒழுங்காக உடையை அணிந்துகொண்டு ஆட்டோ ஓட்டுங்கள்’ என்று கூறி இருக்கிறாள். உடனே அவரது சுபாவம் மாறியிருக்கிறது. அவளை மிரட்டியிருக்கிறார்.

    அவர் தன்னை மிரட்டியதை வீட்டில் சொன்னால், தான் வெகு நாட்களாக அவரிடமிருந்து விலை உயர்ந்த சாக்லேட் வகைகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்ததையும் சொல்ல வேண்டியிருக்குமே என்று அவள் குழம்பி, அச்சமடைந்திருக்கிறாள். அதுவே அவள் கல்வியிலும், இயல்பான நடவடிக்கைகளிலும் பெரும் மாற்றங்களை உருவாக்கிவிட்டது. உண்மை தெரிந்த பின்பு அவளது பெற்றோரே அதற்கு சரியான தீர்வை தேடிக்கொண்டார்கள்.

    (மூடிவைக்க வேண்டிய தனது உறுப்புகளை வெளியே காட்டுவதன் மூலம் தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்பவர்கள் ‘எக்ஸிபிஷனிஸ்டுகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களது பாலியல் மனநோய்க்கு எக்ஸிபிஷனிஸம் (Exhibitionism) என்று பெயர். இப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்பது சிரமம். உடை விஷயத்தில் கவனம் இல்லாததுபோல் காட்டிக்கொண்டு, மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பார்கள். ‘வயதில் பெரியவர். தெரியாமல் ஏதோ நடந்துகொள்கிறார்’ என்று கருதாமல், தொடக்கத்திலே நாம் விழிப்படைந்து, ‘உடையை சரிசெய்யுங்கள்’ என்று சத்தமாக சொல்லவேண்டும். அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் ‘இவர்களிடம் நமது கதை எடு படாது’ என்று கருதி ஒழுங்காக நடந்துகொள்ள முயற்சிப்பார்கள்).

    ஊரில் மரியாதைக்குரிய குடும்பத்தை சேர்ந்த அந்த நபருக்கு 30 வயது. கவுரவமான பதவியில் இருக்கிறார். திருமணமான புதிதில், நள்ளிரவில் மனைவி அசந்து தூங்கும் நேரத்தில் இவர் வெளியே கிளம்பிச்சென்றிருக்கிறார். பின்பு அதிகாலை நேரத்தில் திரும்பி வந்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் அவள் கண்டுபிடித்து காரணம் கேட்டபோது ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.

    அடுத்த சில நாட்களில் நள்ளிரவில் அடி உதை வாங்கி சட்டை எல்லாம் கிழிந்த நிலையில் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அப்போதுதான் அவரிடம் இருந்த ‘விசித்திர சுபாவம்’ மனைவிக்கு தெரிந் திருக்கிறது.



    அதாவது சிறுவயதில் இருந்தே அவர் வெளியூரில் உள்ள பிரபலமான கான்வென்ட் ஒன்றில் தங்கிப் படித்திருக்கிறார். அப்போது 15, 16 வயதுவாக்கில் இரவில் வெளியே சென்று, மாணவிகளின் விடுதி அறைகளுக்குள் எட்டிப்பார்க்கும் பழக்கம் தோன்றியிருக்கிறது. அப்போதே சில நாட்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார். கல்லூரி காலத்திலும் ஆஸ்டல் வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்து அதே விசித்திர பழக்கத்துடன் வாழ்ந்திருக்கிறார். திருமணத்திற்கு பின்பும் அந்த பழக்கம் தொடர்ந்திருக்கிறது. நள்ளிரவில் பக்கத்து வீடுகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார்.

    (இந்த விசித்திர மனோபாவத்திற்கு ‘வாய்யூரிஸம்’ (Voyeurism) என்று பெயர். இவர்கள் இரவு நேரங்களில் ஆக்டிவ்வாக செயல்படுவார்கள். காலை நேரங்களில் சோர்ந்துபோய் காணப்படுவார்கள். எதிர்பாலினத்தை சேர்ந்த இன்னொருவரின் படுக்கை அறையை எட்டிப்பார்த்தால்தான், இவர்களுக்கு திருப்தியும், தூக்கமும் வரும். இந்த இயல்பு இருப்பவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்து இதில் இருந்து விடுபட முன்வரவேண்டும். இவர்களுக்கு மனநல சிகிச்சைகள் தேவைப்படும்)

    நெரிசல் மிகுந்த பஸ், ரெயில், திரு விழாக் கூட்டங்களில் பெண்களை குறிவைத்து, நீந்திச்செல்வதுபோல் சில ஆண்கள் முன்னும், பின்னுமாக நடப்பார்கள். உரசுவது, வருடுவது போன்ற செய்கைகளில் ஈடுபடுவார்கள். மக்கள் நெரிசல் நிறைந்த பகுதிகளில் இப்படி நடமாடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

    (இத்தகைய மனோபாவ குறைபாடு ‘ப்ரோட்டரிஸம்’ (frotteurism) என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்களை பெண்களால் எளிதாக அடையாளம் காண இயலும். தங்களை அப்பாவிபோல் அடையாளங்காட்டிக்கொண்டு, எதேச்சையாக நடப்பதுபோல் தொடுவார்கள். முறைத்துப்பார்ப்பது, அதட்டுவது போன்ற செயல்பாடுகளை இவர்களிடம் வெளிப்படுத்தவேண்டும்)

    பெண்களின் உள் ஆடைகளை மட்டும் திருடி சுகம் காண்பவர்களும் உண்டு. இத்தகைய விசித்திர சுபாவங்கள் கொண்டவர்கள் தவறு செய்பவர்களாகவே இருந்தாலும், இவர்கள் ஒருவகையில் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்கள் மனஊனம் கொண்டவர்கள். பிறப்பிலே அப்படிப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதில்லை. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அவர்களை இத்தகைய மனோபாவத்திற்கு மாற்றுகிறது. தேவையில்லாதவற்றை தொடர்ச்சியாக பார்ப்பதும், கேட்பதும்கூட அவர்களை இந்த நிலைக்கு மாற்றிவிடும். சிலர் சிறுவர்களாக இருக்கும்போது அத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகி யிருப்பார்கள். தான் வளர்ந்து பெரியவர் ஆன பின்பு, தான் பாதிக்கப்பட்ட அதே வழியில் மற்றவர்களை ஈர்க்கப் பார்ப்பார்கள். தமது நண்பர்களோடு சேர்ந்து இத்தகைய விசித்திர சுபாவங்களுக்கு அடிமையாகிறவர்களும் உண்டு.

    பொதுவாக இத்தகைய விசித்திர குணாதிசயம் கொண்டவர்கள் சமூக பயம் கொண்டவர்களாக இருப்பார்கள். தனிமை விரும்பிகளாகவும், நான்கு பேர் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். பெண்களை நினைத்து அச்சப்படுவார்கள். அவர்களது முகத்திற்கு நேராக பார்த்து பேசும் தைரியம்கூட இருக்காது. பெண்கள் முறைத்துப் பார்த்தாலே அந்த பகுதியில் இருந்து நகர்ந்துவிடுவார்கள். திருமணமானவர்களாக இருந்தாலும், இவர்களது பாலியல் வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். இப்படிப்பட்ட விசித்திர குணம் கொண்டவர்கள் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்களை தைரியமாகவும், சமயோசிதமாகவும் கையாள எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.

    -விஜயலட்சுமி பந்தையன்.
    பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது. இயற்கை உணவுகள் மூலம் மட்டும் ஆரோக்கியத்தையும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்ய முடியும்.
    பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது. ஹீமோகுளோபின் என்பது நமது ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஒரு வகை புரதம் ஆகும். ஹீமோகுளோபின் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    நெஞ்செரிச்சல், தலைவலி, உடல் சோர்வு, மயக்கம், நகம் உடைத்தல், உடலில் வலு இல்லாதது போல உணர்வது இப்படி பல அறிகுறிகள் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும். இதில் அனைத்து அறிகுறிகளும் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில அறிகுறிகள் சிலருக்கு இருக்கும்.

    ஹீமோகுளோபின் குறைய காரணம்:

    சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும். பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்கும் இயற்கை உணவுகள்!

    இயற்கை உணவுகள் மூலம் மட்டும் ஆரோக்கியத்தையும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்ய முடியும். அப்படி சில உணவுகளை ரத்த விருத்திக்காகவே பிரத்யேகமாக சாப்பிட்டு, ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள்.

    முருங்கைக் கீரையைக் மூன்று கைப்பிடி அளவு எடுத்து, ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து இறக்கும் முன் ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.



    பொன்னாங்கன்னிக்கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும்.

    புதினாக் கீரையை ஆய்ந்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிக்கட்டி காலை, மாலை அரை டம்ளர் வீதம் எடுத்து அரை டம்ளர் பசுவின் பால் கலந்து, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும் (நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை தவிர்க்கவும்)

    அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும்.

    தினமும் உலர்ந்த திராட்சையோ அல்லது பச்சை திராட்சையோ சாப்பிட்டு வர ரத்தம் தூய்மை பெறும். தினசரி 20 கிராம் பப்பாளிப் பழத்தைத் சாப்பிட்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை குடித்து வந்தால், புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

    அத்திப்பழம் இரத்த விருத்திக்கு முழுப்பலன் அளிக்க வல்லது, “ஹீமோகுளோபின்” குறைவு காரணமாக உடம்பு வெளுத்து, சுறுசுறுப்பின்றி சோர்வாக இருப்பவர்கள், தினசரி சீமை அத்திப்பழம் (நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும்) சாப்பிட்டு வருவது நல்லது.

    தினசரி 3 பழங்கள் எடுத்து, காய்ச்சிய பசும்பாலில் போட்டு வேகவைத்து தேன் 1 ஸ்பூன் கலந்து தினம் 1 வேளை பருகிவர, 2 மாதத்தில் உடம்பில் இரத்தம் ஓட்டம் பெருகிப் பருத்துப் பூரித்துக் காணும். உடல் வெப்பம் தணித்து மலக்குடல் தூய்மை ஆகி, உடம்பெங்கும் புத்துணர்வு மலரும்.
    வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். இன்று வெந்தயக்கீரையை சேர்த்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயக்கீரை - 2 சிறுகட்டு,
    துவரம்பருப்பு - ஒரு கப்,
    புளி - எலுமிச்சைப் பழ அளவு,
    சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    துவரம்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.

    வாணலியில் கரைத்த புளியை ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிடவும்.

    அடுத்து அதில் வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான வெந்தயக்கீரை சாம்பார் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகுத் தண்டு பலம் பெறும். உடலில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பெற்று புத்துணர்ச்சி பெறும்.
    செய்முறை : இவ்வாசனத்தை அர்த்த (பாதி) சக்கராசனம் எனக் கூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளைய வேண்டும். கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.

    பலன்கள்: முதுகுத் தண்டு பலம் பெறும். இளமை மேலிடும். உடலில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பெற்று புத்துணர்ச்சி பெறும். சோம்பல் ஒழிந்து சுறுசுறுப்பு உண்டாகும். கூன் முதுகு நிமிரும். நெஞ்சுக் கூடு விரிந்து நுரையீரல், சுவாச உறுப்புகள் பலம் பெறும்.
    தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
    கழுத்தில் மூச்சுக்குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

    தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர்.

    இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.

    சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.

    அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.



    தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

    50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும்.

    மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.

    டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.

    ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
    சிறுதானியங்களில் பனிவரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனிவரகில் சத்தான கார அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனிவரகு - 1 கப்.
    கடலைப்பருப்பு - கால் கப்.
    துவரம் பருப்பு - அரை கப்.
    காய்ந்த மிளகாய் - 8.
    உப்பு - தேவையான அளவு.
    சோம்பு - 2 ஸ்பூன்.
    பெருங்காயம் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    வெங்காயம் - 2.
    கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - அரை கப்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பனிவரகு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    ஊற வைத்த பொருட்களை மிளகாய், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    பின்னர் அந்த மாவு கலவையில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்

    சத்தான பனிவரகுக் கார அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருமையான, நீளமான கூந்தலை விரும்பாத பெண்ளே இருக்க முடியாது. கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்கான வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.
    கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்…

    * நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

    * இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.

    * தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

    * விளக்கெண்ணெயைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

    * கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.



    * அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.

    * தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.

    * பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

    * தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.

    * தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

    தேர்வு சமயத்தில் மாணவர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெறவும் உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்...
    மார்ச் தேர்வுகளின் மாதமாக விளங்குகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு முதல் தேதியிலேயே தேர்வு தொடங்குகிறது. 6-ந் தேதியில் பிளஸ்-1 வகுப்புக்கும், இரண்டாவது வாரத்தில் 10-ம் வகுப்புக்கும் தேர்வு தொடங்குகிறது. தேர்வு சமயத்தில் மாணவர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதுவே வெற்றிவாய்ப்பை எளிமையாக்கும். தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெறவும் உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்...

    ‘தேர்வு’ பற்றிய பயத்தை கைவிடுங்கள். நீங்கள் ஆண்டு முழுவதும் படித்த பாடத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போகின்றன. இதில் பயம் கொள்ள என்ன இருக்கிறது? நிதானமாக, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

    தேர்வுக்கு சில நாட்களே இருப்பதால் இனி புதிய பாடங்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. ஏற்கனவே படித்த பாடங்களையும், முக்கியமானவற்றை மட்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பழகுங்கள்.

    நீண்ட நேரம் தொடர்ந்து படிக்காமல் போதிய இடைவெளியுடன் படியுங்கள்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல் நலனை கெடுக்கும் விஷயங்களில் ஈடுபடக்கூடாது. உதாரணமாக நீண்ட நேரம் கண்விழித்து படிப்பது, சாப்பிடாமல் படிப்பது வேண்டாம். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். காயங்கள் உண்டாக்கும் சாகச செயல்களிலும் ஈடுபடாதீர்கள்.

    எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிடுங்கள். சோம்பலாக இருந்தால் சூடான பானம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் இவற்றைப் பருகி புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    வழக்கமாக தூங்கச் செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க கிளம்பிவிடுங்கள். விழித்திருந்து படிப்பதால் உடம்புக்குத்தான் கேடு. அவை நினைவில் தங்குவதும் குறைவுதான். எனவே நேரத்திற்கு தூங்கச் சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து படிக்கலாம்.

    நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவிலேயே தயார்படுத்தி வையுங்கள். பென்சில், பேனா முதல் தேர்வு அட்டை வரை அனைத்தும் இருக்கிறதா? என்பதை வீட்டைவிட்டு கிளம்பும் முன் பரிசோதனை செய்யுங்கள். எதையும் தவற விடாமல் இருக்க ஒரே இடத்தில் வைத்து பராமரியுங்கள். சிறிய பொருட்களை ‘பவுச்’சில் மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.



    தேர்வுக்கு கிளம்பும் முன், காலை உணவை தவிர்க்கக்கூடாது.

    தேர்வுக்கு முந்தைய இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிக்க வேண்டாம். அது தேர்வை திருப்தியாக எழுத முடியாமல் செய்துவிடும்.

    தேர்வு அறைக்குள் நுழையும் கடைசி நிமிடம் வரை படிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். சுமார் அரை மணி நேரம் முன்னதாகவே புத்தகங்களை மூடிவிட்டு, மனதை தேர்வுக்கு தயாராக்குங்கள். முக்கிய பகுதிகளை மனதில் நினைவூட்டிப் பாருங்கள்.

    தேர்வுக்கு நீங்கள் இதுவரை பயன்படுத்திய பேனா, பென்சில்களையே பயன்படுத்துங்கள். புதிய பேனாக்கள் தேவையில்லை. அப்படி புதிதாக வாங்கியிருந்தால் நன்கு எழுதி பயிற்சி செய்து பழக்கப்படுத்திவிடுங்கள்.

    தேர்வு தொடங்கும்போது முதலில் கேள்வித்தாளை நன்கு படித்துப்பாருங்கள். எந்தெந் வினாக்களுக்கு விடையெழுத வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள். யோசித்து விடையளிக்க வேண்டிய வினாக்களை ஒதுக்கிவைத்துவிட்டு தெரிந்தவற்றை வேகமாக எழுதி முடியுங்கள்.

    ஒவ்வொரு வினாவுக்கும் குறித்த நேரத்தில் விடையளியுங்கள். இறுதியில் எல்லாவற்றுக்கும் விடையளித்திருக்கிறீர்களா? முக்கியமான விஷயங்கள், வாய்ப்பாடுகள் எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறீர்களா? என்பதை திருப்பிப் பாருங்கள். அதற்கெனவும் சில நிமிடங்களை ஒதுக்கி வையுங்கள்.

    ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெறுவதற்கான குறிப்புகளை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். எதை தவறவிட்டால் மதிப்பெண் குறையும் என்பதையும் அறிவுறுத்தியிருப்பார்கள். அதைப் பின்பற்றி தேர்ச்சி பெறவும், முழு மதிப்பெண் பெறவும் முயற்சி செய்யுங்கள்.

    பதில்களை ஸ்கெட்ச், ஜிகினா பேனாக்களால் அலங்காரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரம் கிடைத்தால் மட்டும் அனுமதிக்கப்பட்ட பேனாக்களைக் கொண்டு அழகுபடுத்தலாம்.

    அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்து பதற்றம் அடைய வேண்டாம். தேர்வாளரின் நேர அறிவுறுத்தலை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு வேகமாக பதிலளியுங்கள்.

    தேர்வு எழுதி முடித்தபின், அதைப் பற்றி ஆராய வேண்டாம். அடுத்த தேர்வை சிறப்பாக எழுதுவது பற்றி யோசியுங்கள். வெற்றி உங்களுக்கே. வாழ்த்துக்கள்!
    இயற்கை நமது உடலை குளிர்வித்து அதன் மூலம் பல வியாதிகளை தீர்க்கும் அற்புத பானமாக இளநீரை படைத்திருக்கிறது. தினமும் இளநீரை குடித்து வந்தால், உடலில் எந்த நோயும் வராது.
    தமிழர்களாகிய நாம் வெப்ப மண்டல பகுதியில் வாழ்கிறோம். நம் வாழ்வியலில் இயல்பாகவே மோர், இளநீர், நீராகாரம், எலுமிச்சை சாறு முதலான பானங்களையும், பழச்சாறுகளையும் பருகி வருவது வழக்கமாகும். பின்னர் தேயிலை, காபி என வெப்ப பானங்களுக்கு பழக்கப்பட்டு தற்போது இவையும் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாகி விட்டது.

    நமக்கு என்று, நம் பாரம்பரிய மரபு வழி மாற்றுப்பானங்கள் நம் முன்னோர் வைத்துள்ளனர். ஆம்.. இளநீர், மோர், எலுமிச்சை சாறு இன்னும் அதிகமாக நம் பாரம்பரிய குளிர்பானங்கள் உள்ளன. இயற்கை நமது உடலை குளிர்வித்து அதன் மூலம் பல வியாதிகளை தீர்க்கும் அற்புத பானமாக இளநீரை படைத்திருக்கிறது. கிராமப்புறங்களில் சர்வசாதாரணமாக கிடைக்கும் இளநீர், தற்போது நகர்புறங்களில் கிடைக்கிறது. கலப்படம் செய்ய முடியாத ஒரு குளிர்பானம் என்றால் அது இளநீர் தான். இயற்கை கொடுத்த அற்புத சீதனம் இளநீர்.

    இளநீரைப் பொருத்தவரையில், பகல் நேரத்திலும் குடிக்கலாம், இரவு நேரத்திலும் குடிக்கலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்சினையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடல் சூடு தணிக்கப்படுகிறது. இனிமையான இரவு தூக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பு அதிகம் இல்லாமல், இதய துடிப்பை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

    தினமும் இளநீரை குடித்து வந்தால், உடலில் எந்த நோயும் வராது. உடல் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் மேலை நாட்டு மோகம் நம்மை ஆட்டிப்படைக்கிறது. வெளிநாட்டு குளிர்பான பாட்டில்களை நான்கு பேருக்கு மத்தியில் திறந்து குடிப்பதையும், குளிர்பான பாட்டில்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பதையும் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் பாரம்பரிய குளிர்பானங்களை விற்பனை செய்யும் நன்னாரி சர்பத் விற்பனையாளர், இளநீர் விற்பனையாளர்களை இளக்காரமாக நினைக்கிறோம்.

    இளநீர் குடிப்பதை இன்றைய தலைமுறையினர் விரும்புவது இல்லை, இளநீர் விற்பவர்களை குறைத்து மதிப்பீடு செய்யும்போக்கு சமுதாயத்தில் புரையோடி போய் உள்ளது. இயற்கை கொடுத்த அற்புத இளநீர் என்னும் பானத்தை நமக்காக விற்பனை செய்பவர்கள் செல்வந்தர்கள் அல்ல.. குபேரபுரியில் உள்ள மாட மாளிகையில் வாழ்பவர்களும் அல்ல.

    அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு மரபு சார்ந்த இளநீரை விற்பனை செய்யும் அவர்களுக்கு நாம் கைகொடுத்து உதவ வேண்டாமா? 
    பனங்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். இந்த கிழங்கின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம்.

    பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து  கிடைக்கும்.

    பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.  

    பனங்கிழங்கில் நார்சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும் போது,  விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.  

    வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து  மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

    பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.  எனவே இதைச்சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும்.  
    ×