என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 100981"

    தைராய்டு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 25-ந் தேதி ‘உலக தைராய்டு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
    உலகம் முழுவதும் பலரை பாதித்துள்ள தைராய்டு பிரச்சினை, ஆண்-பெண் இருபாலருக்கும் வரக்கூடியது. இது தைராய்டு சுரப்பியின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகிறது. தைராய்டு சுரப்பி, கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இதில் இருந்து வளர்சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் தைராக்ஸின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது.

    இது உடலில் உள்ள செல்கள் எவ்வளவு சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. தைராக்ஸின் அதிகப்படியாக சுரக்கும்போது ஹைப்பர் தைராய்டு பிரச்சினையும், குறைவாக சுரக்கும்போது ஹைப்போ தைராய்டு பிரச்சினையும் உண்டாகிறது. ஆண்களை விட, பெண்களுக்கு பத்து மடங்கு அதிகமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 25-ந் தேதி 'உலக தைராய்டு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. உடல் எடை திடீரென குறைதல் மற்றும் அதிகரித்தல், அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, ஞாபக மறதி, எரிச்சல், படபடப்பு, உடல் தசைகளில் பலவீனம், நடுக்கம், தூக்கமின்மை, தைராய்டு சுரப்பி வீங்குதல், முடி உதிர்வு, கைகால் மரத்துப்போதல், மூட்டுவலி மற்றும் கண் எரிச்சல் போன்றவை தைராய்டு நோயின் அறிகுறிகள்.

    இந்த ஆண்டின் கருப்பொருளான 'நம் உலகம் நம் ஆரோக்கியம்' என்பதற்கிணங்க, அறிகுறிகள் இருக்கும்போதே தைராய்டு நோய்க்கான பரிசோதனை மேற்கொண்டு, தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்நோயின் பிடியிலிருந்து மீளலாம்.
    பெண்கள் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் இப்போதைய பரபரப்பான வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள்.
    நம் உடலில் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும். உடலில் தைராய்டு சுரப்புக்குறை எற்படுவதால், எந்நேரமும் தூக்கம், மறதி, உடல் தைராய்டு சுரப்புக்குறை ஆகியன மக்கள் தொகையில் மூன்று சதவீதம் பேருக்கு இருக்கின்றது. தைராய்டு, பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால் ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெல்லிக்காய் அளவில் கழுத்தில் ஒரு வீக்கம் தெரிகிறதா? கொஞ்சமாக சாப்பிட்டும்கூட எடை கூடிக்கொண்டே இருக்கிறதா? உற்சாகமின்றி அடிக்கடி களைப்புடன் காணப்படுகிறீர்களா?

    இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்குப் பதில், ஆமாம் என்றால் கூட உங்களுக்கு தைராய்டு தொடர்பான சிக்கல் உண்டாகியிருக்க வாய்ப்பு உண்டு. கழுத்தின் முன்பக்கமாக இருக்கிறது தைராய்டு சுரப்பி. அங்கே புடைத்துக்கொண்டிருக்கும் பகுதியை ஆடம்ஸ் ஆப்பிள் என்பார்கள். அதற்கு கொஞ்சம் கீழே இருக்கிறது தைராய்டு. சுவாசக்குழாய்க்கு முன்புறமும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக விரிந்திருக்க, நடுவே சுருங்கி இருக்கிறது இந்த சுரப்பி. ஒரு பட்டாம்பூச்சிபோல் தோற்றம் அளிக்கிறது இது. தைராய்டு சுரப்பி, தைராக்ஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது உடலின் பல வேலைபாடுகளுக்கு அடிப்படையாகிறது. முக்கியமாக உடலில் மெடபாலிஸத்துக்கு.

    அதாவது மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவற்றின் செரிமானத்தை இது கட்டுபடுத்துகிறது. தசை வளர்ச்சி எலும்புகளின் உருட்கி ஆகியவற்றுக்கு தைராய்டு முக்கியச் காரணமாக அமைகிறது. தைராக்ஸின் குறைவாகவோ, அதிகமாகவோ, சுரக்கும்போது பிரச்னைகள் உண்டாகின்றன. தைராக்ஸின் போதிய அளவில் சுரக்க வேண்டும் என்றால் அதற்கு அயோடின் சத்து தேவை. அயோடின்தான் தைராக்ஸின் சுரப்பதற்கு தூண்டுகோலாக இருக்கிறது. பொதுவாக நாம் பயன்படுத்தும் தண்ணீரிலேயே நம் உடம்புக்கு இந்த அயோடின் சத்து கிடைத்துவிடுகிறது என்றாலும் மலைப்பகுதியில் வாழ்பவர்களுக்கு அங்குள்ள தண்ணீரிலும், உப்பிலும் வழக்கத்தைவிட குறைவான அயோடினே இருப்பதால் தைராக்ஸின் குறைவாகச் சுரந்து சிக்கல்களை உண்டாக வாய்ப்பு அதிகம்.

    நகரங்களில் வசிப்பவர்களுக்கும் தைராக்ஸின் குறைபாடு ஏற்படுவது உண்டு. அதுவும் இப்போதெல்லாம் தைராய்டு பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சிலருக்கு பிறவியிலேயே இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கிறது. பிரசவம், பூப்பெய்தல், மாதவிலக்கு போன்ற சமயங்களில் உடலிலும், மனத்திலும் உண்டாகும் இறுக்கங்கள் காரணமாகவும் தைராய்டு பிரச்னைகள் உண்டாகலாம். அப்போது உடலுக்கு தைராக்ஸின் தேவை அதிகமாக ஏற்படலாம். அந்த அளவுக்கு இந்த ஹார்மோன் சுரக்காதபோது, தைராய்டு சுரப்பி தன்னை பெரிதாகிக்கொள்ளும். அப்படியாவது தைராக்ஸின் அதிகம் சுரக்கட்டும் என்பதற்காக இயற்கை செய்யும் விந்தை இது. ஆனால் அப்போதும் போதிய தைராக்ஸின் கிடைக்காமல் போகலாம்.

    நாளடைவில் உடலுக்கு தேவையான அளவு தைராக்ஹினை இந்த சுரப்பியால் சுரக்கமுடிந்தால் பெரிதான சுரப்பி தானாகவே பழைய நிலையை அடையக்கூடும். அப்படி இல்லையென்றால் வீக்கம் தொடர்ந்து பெரிதாகும். மிக அதிக அளவில் பெண்கள்தான் தைராய்டு பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இப்போதைய பரபரப்பான வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள். முதலில் பட்டாணி அளவுக்குதான் இந்த சுரப்பி வீங்கும். அதற்கு பிறகு, பெரிய நெல்லிக்காய் அளவில் விரிவடையும். பின்னர் மேலும் பெரிதாகும். சிலருக்கு தொடக்கத்திலேயே தொண்டைப் பகுதியில் இரண்டு மூன்று கட்டிகள் தோன்றலாம்.

    இவை ஒவ்வொன்றும் பெரிதாகும் போது நாளடைவில் பார்க்கவே விகாரமாக இருக்கும். அதேசமயம் பார்வைக்கு விகாரமாக இருக்கக்கூடாது என்பது மட்டுமே இதில் ஏற்படும் பிரச்னை அல்ல. பெரும்பாலும் பெரிதாக வளர்ந்துவிட்ட தைராய்டு சுரப்பி மீண்டும் பழைய நிலையை அடைவதில்லை. உள்ளுக்குள் ரத்தக்கசிவும் ஏற்படலாம். அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்க வாய்ப்பு மிக அதிகம். மருந்தினால் இதை குணப்படுத்திவிட முடியாது. அறுவை சிகிச்சையின் மூலம் வீக்கப்பகுதியை நீக்கிவிடுவார்கள். தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தால் கழுத்துப்பகுதியில் வீக்கம் கட்டாயம் தோன்றுமா? என்றால், அவசியமில்லை. வீக்கம் இல்லாமல் கூட தைராக்ஸின் மிகக் குறைவாக சுரக்கலாம்.

    இதற்கு ஆயுள் முழுவதும் மாத்திரைகள் உட்கொள்ளவேண்டி இருக்கும். தைராக்ஸின் அதிகமாக சுரப்பதும் சிக்கல்தான். தைராக்ஸின் அதிகமாக சுரக்கும் நபரின் கைகளில் நடுக்கம் இருக்கும். அவர்களால் வெப்பத்தை தாங்க முடியாது. சரியாக தூங்க முடியாது. கண்கள் வீங்கும். எடை குறையும். மருந்துகளின் மூலம் தைராக்ஸின் சுரப்பதைக் குறைக்கலாம்.

    கதிரியக்க அயோடின் சிகிச்சையின் மூலம் தைராய்டு சுரப்பியையே செயலற்றதாக ஆக்க முடியும். அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பியை நீக்குவதும் ஒரு வழிதான். தைராக்ஸின் குறைவாக சுரந்தால் முதல் கட்டமாக மாத்திரைகள் மூலம் இந்த குறைபாட்டை சரிசெய்ய முயற்சிக்கப்படும். வீக்கம் அதிகமாகி பார்வைக்கு உறுத்தலாக இருக்கும் நிலையில், இதை சரிசெய்யத்தான் தைராய்டு சுரப்பியில் வீங்கிய பகுதி அறுவைச்சிகிச்சையின் மூலம் நீக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையின் மூலம் தைராய்டு சுரப்பியின் ஒரு பகுதியையோ அல்லது அதை முழுவதுமாகவோ நீக்கிட்டால் அதற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் தினமும் தைராக்ஸின் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டி இருக்கும்.

    சாப்பிடக் கூடியவை

    தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

    தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மில்லி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்து பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.

    பாதுகாப்பு முறை:

    உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ள கூடாது. உணவில் கல் உப்பு பயன்படுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டை தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
    அனைத்து தைராய்டு வியாதிகளுக்கும் நவீன விஞ்ஞான மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் பூரண குணமடையலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தல் அவசியம்.
    என் குழந்தை பிறந்தது முதல் உடல் வளர்ச்சி சரியாக இல்லை. எங்கள் குழந்தைக்கு மூளை வளர்ச்சி சீராக இல்லை. என் மகள் பூப்பெய்வது தள்ளிப் போகிறது. என்ன செய்வது? என்று பொதுமக்கள் கூறி திகைத்து நிற்கிறார்கள். சில குடும்பத் தலைவிகளோ எனக்கு உடம்பு சோர்வாக உள்ளது. எடை கூடிக்கொண்டே போகிறது. குளிர் தாங்க முடியவில்லை, பேச்சு குளறுகிறது, மாதவிடாய் தள்ளிப் போகிறது என்ன காரணம் என்றே தெரியவில்லை என்று கூறி ஆதங்கப்படுகிறார்கள்.

    இன்னும் சில ஆண்களும், பெண்களும் எனக்கு சமீபத்தில் குரல் மாறிவிட்டது. பேச்சு சரியாக வரவில்லை. படுத்தால் மூச்சு திணறுகிறது. முன் கழுத்தில் கட்டி உள்ளது. அது வளர்ந்து வருகிறது என்ன செய்வது என்றே தெரியவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பல பெண்கள் எனக்கு அடிக்கடி வியர்க்கிறது. நெஞ்சு துடிப்பு அதிகமாக உள்ளது. அடிக்கடி கோபப்படுகிறேன். கோபத்தை அடக்க முடியவில்லை. வயிற்றுப்போக்கு போகிறது, உடல் எடை குறைந்துவிட்டது இதற்கு தீர்வு என்ன? என்று கவலையுடன் கூறினர்.

    இந்தக் குரல் உலகின் எல்லா நாடுகளிலும் சாதி, மத, இனம் கடந்து பல நூறு ஆண்டுகளாக ஒலித்து வந்தது. மருத்துவ உலகம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக தைராய்டு சுரப்பியில் ஏற்படுகிற பல்வேறு விதமான நோய்கள் இருக்கின்றன என கண்டறிந்து கூறியது. தைராய்டு சுரப்பி நோய்களால் உலகளவில் 150 மில்லியன் மக்களும் இந்திய அளவில் 13 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவரை அணுகுவதில் அதிகமான கால தாமதம் ஏற்பட்டு நோய் பாதிப்பும் கடுமையாக உள்ளது என தெரிவித்தது.

    மேலும் பிறவியிலேயே தைராய்டு செயல்பாடு குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் மூளை பாதிக்கப்படும் என தெரிவித்தது. தைராய்டு சுரப்பி நாளமில்லா சுரப்பிகள் வகையைச் சேர்ந்தது பிட்யூட்டரி சுரப்பி, அட்ரினல் சுரப்பி கணையத்தில் உள்ள வீட்டா லாங்கர்ஹன் சுரப்பி முதலியவை இந்த வகைகளை சேர்ந்தவை. இவற்றின் சுரப்புகள் ஒரு நாளத்தின் துணையில்லாமல் நேரடியாக ரத்தத்தில் கலந்து தங்கள் பணியைச் செய்வதால் இவற்றிக்கு நாளமில்லா சுரப்பிகள் என பெயர் வந்தது.

    பிறந்த குழந்தைக்கு தைராய்டு சுரப்பி சரியாக இயங்குகிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? குழந்தை பிறந்த 3-வது மாதத்தில் தாயின் முகம் பார்க்க வேண்டும். 5 முதல் 6-வது மாதத்தில் தலை ஆட்டம் நிற்க வேண்டும். 8-வது மாதத்தில் தவழ்ந்து, 1 வயதில் நடை பயில தொடங்கி, சின்ன சின்ன வார்த்தைகள் பேசத் தொடங்கினால் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்கிறது எனலாம். இதில் காலதாமதம் ஏற்பட்டால் தைராய்டு சுரப்பியில் கோளாறு இருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

    தைராய்டு சுரப்பி கழுத்தின் முன் கீழ்ப்பகுதியில் சிறகு விரித்த வண்ணத்துப் பூச்சி வடிவில் உள்ளது. இதில் சுரக்கும் தைராக்ஸின் என்னும் ஹார்மோன் உணவில் உள்ள சத்துகளை சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரித்து நாம் வேலை செய்ய தேவையான சக்தியை வழங்குகிறது. இந்த தைராக்ஸின் ஹார்மோன் தயாரிக்க அயோடின் சத்து மிக மிக அவசியமானது. இது நாம் வசிக்கும் மண்ணிலிருந்து நாம் உண்ணும் உணவு, காய்கறிகள், பால், மீன், தண்ணீர் மூலம் அயோடின் உப்பாக உடம்பிற்கு கிடைக்கிறது.



    தைராய்டு சம்பந்தப்பட்ட வியாதிகள் பெரும்பாலும் 5 வகைப்படும். அவை, தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தல், தைராய்டு சுரப்பி அதிகமாக வேலை செய்தல் முன்கழுத்து கழலை தைராய்டைட்டிஸ் என்னும் ஆட்டோ இம்யூன் வியாதி தைராய்டு கேன்சர்.

    இதில் முன் கழுத்து கழலை அதிகமாக பூப்பெய்தும் பருவத்தில் உள்ள பெண் குழந்தைகளைப் பாதிக்கிறது. காரணம் அந்த வயதில் அதிகமாக தேவைப்படும் அளவு அயோடின் சத்து உடலுக்கு கிடைக்காமல் போவதாகும். தைராய்டு நோய்களில் இது தான் அதிகமானவர்களை பாதிக்கிறது. தைராய்டைட்டிஸ் நோய் தைராய்டு திசுக்களுக்கு எதிராக நமது உடம்பில் சில சுரப்புகள் சுரந்து அவற்றை அழிப்பதால் ஏற்படுகிறது.

    தைராய்டு வேலைத்திறன் குறைவு நோய் அயோடின் சத்து குறைவு மற்றும் தைராக்ஸினுக்கு எதிரான ஆன்டிபாடிஸ் நம் ரத்தத்தில் இருப்பதால் ஏற்படுகிறது. பிறவியிலேயே அயோடின் சத்து குறைவான தாயாருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தைராய்டு சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இவை தவிர தைராய்டு சுரப்பியில் புற்று நோய்களும் ஏற்படுகின்றன. அது மனிதனுக்கு ஏற்படும் மொத்த புற்றுநோய்களில் 1 சதவீதம் அளவில் உள்ளது.

    இவை அனைத்திலும் முன் கழுத்து கழலை நோயின் தாக்கம் தான் இந்தியாவில் அதிகம். எனவே அதை தடுக்கும் நோக்கில் இந்திய அரசு சமையல் உணவில் அயோடின் உப்புகளை குறிப்பிட்ட அளவில் கலந்து மக்களுக்கு வழங்க சட்டமியற்றியுள்ளது. இதனால் இந்தியாவில் முன் கழுத்து கழலை அதிகமாக இருந்த உத்தரபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முன் கழுத்து கழலை 1,000 பேருக்கு 100 பேர் என்கின்ற நிலை மாறி ஆயிரத்திற்கு 18 பேர் என்ற நிலையை அடைந்துள்ளது.

    மழை மறைவு பிரதேசம் மற்றும் மலை அடிவாரங்களில் வாழும் மக்களுக்கும் வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் அயோடின் கலந்த உப்பு மிக மிக அவசியம். தைராய்டு வியாதியை தடுக்க உணவில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள் வாரம் மூன்று முறை உணவில் கடல் மீன்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். அயோடின் சத்து மிகவும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் திரவ வடிவில் இருக்கும் அயோடின் உப்பை மருத்துவர்களின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் தைராய்டு நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.

    அனைத்து தைராய்டு வியாதிகளுக்கும் நவீன விஞ்ஞான மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் பூரண குணமடையலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தல் அவசியம். எனவே பொதுமக்களிடம் தைராய்டு நோய்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என கருதி அமெரிக்க தைராய்டு சங்கம் மற்றும் ஐரோப்பிய தைராய்டு அசோசியேஷன் இரண்டும் இணைந்து 2008-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி முதல் ஆண்டுதோறும் உலக தைராய்டு தினம் எல்லா நாடுகளிலும் விழிப்புணர்வு நாளாக கொண்டாட அறிவுறுத்தியது. நமது நாட்டிலும் உலக தைராய்டு தினம் மே 25-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் தைராய்டு நோய்கள் தடுப்பு முறைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி நோயற்ற வாழ்வு வாழ விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது தலையாய கடமை.

    டாக்டர் வி.எஸ்.சுரேந்திரன்,
    உதவி தலைவர்,
    தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்.
    தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
    கழுத்தில் மூச்சுக்குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

    தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர்.

    இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.

    சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.

    அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.



    தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

    50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும்.

    மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.

    டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.

    ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
    தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

    தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. அவர்களை மகப்பேறு நிபுணர்கள் முதலில் சோதிப்பது தைராய்டு இருக்கிறதா என்பது தான். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர். இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.

    ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்டு கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.

    சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.
     
    அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். தைராய்டு மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். முடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

    50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்டு பிரச்சினையால் தான். சோர்வு, கவலை என மனநோயாளி போல் ஆகிவிடுவார்கள். மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது விலகி விடும்.

    கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்டு பிரச்சினையை அதிகப்படுத்தும். மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.

    தைராய்டு கட்டிகள் அறுவை சிகிச்சை மூலமாய் குணப்படுத்தலாம். மேலும் லேசர் சிகிச்சை இருக்கிறது. தைராய்டு கட்டிகளில் சில புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் அது மிகவும் அபூர்வமாகவே வரும். இதனை FNAC(Fine Needle Aspiration Citation) மூலம் கண்டுபிடிக்கலாம்.

    டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும், உடற்பயிற்சி செய்வதும், இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகளாகும். 
    ×