என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4-ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6-ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 8-ம் நாளான நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார்.
இரவு 7.15 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 7.30 மணிக்கு எழுந்தருளினார். பின்னர் குளத்தின் மைய மண்டபத்தை 3 முறை வலம் வந்து இரவு 9 மணி வரை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். பின்னர் இரவு 9.15 மணிக்கு மையமண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
9-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு காலை 8 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் குறிக்கும் நேரம் நிச்சயம் நல்லமுகூர்த்தமாக அமையும்.
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, பங்குனி மாதங்களில் திருமணம் செய்வது நல்லது. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கடைசி 3 நாட்கள் விலக்கப்பட வேண்டும். இயன்ற வரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.
முகூர்த்த லக்கினத்துக்கு 1,7 2, 8-ம் இடங்களில் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும். முகூர்த்த லக்னத்தில் ராகு-கேது, குளிகன் அமரக் கூடாது. முகூர்த்த லக்னத்திற்கு முன், பின் ராசிகளில் பாவ கிரகங்கள் நிற்க கூடாது.
ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் திருமணம் செய்யக்கூடாது. பல சுப முகூர்த்த கால அட்டவணையில் குளிகை நேரத்தில் முகூர்த்தம் குறிக்கப்பட்டு இருப்பதை காணலாம். பஞ்சகம் கூடிய, லக்ன சுத்தமான முகூர்த்த நாளாக இருந்தால் கூட குளிகை நேரத்தை தவிர்க்க வேண்டும். குளிகை நேரத்தில் செய்யும் செயல்கள் திரும்ப திரும்ப நடைபெறும் சாத்தியக் கூறுகள் அதிகம். ஒரு மனிதனுக்கு திருமணம் வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடைபெற வேண்டும்.
சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் நாளிலும் அதற்கு முன், பின் 7 நாட்களிலும் திருமணத்தை தவிர்க்க வேண்டும். கிரகணம் நடந்த நட்சத்திரத்தில் திருமணம் நடத்தக் கூடாது.
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியம். மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 10, 14, 19, 22, 27, வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக் கூடாது. ஜென்ம, அனு ஜென்ம, திரி ஜென்ம நட்சத்திரங்களில் திருமணம் செய்யக் கூடாது. தாராபலம், சந்திரபலம் உள்ள நாட்கள் சிறந்த பலன் தரும். கரிநாளாக இருக்க கூடாது.
திருமணம் நிகழ்த்தப்பட வேண்டியவரின் நட்சத்திரப் பட்சியும், முகூர்த்த நட்சத்திரப் பட்சியும் அன்றைய தினம் படு பட்சியாகவோ அல்லது முகூர்த்த நேரத்தில் அப்பட்சிகள் துயில், சாவு பணிகளை மேற்கொள்வதாகவோ இருக்கக்கூடாது. கவுரி பஞ்சாங்கப்படி சுபகோரை, சுபவேளையாக இருக்க வேண்டும். மணமகள் மாதவிலக்காக இருக்கும் நாட்களில் திருமணம் செய்யக் கூடாது.
அஷ்டமச் சனியின் பிடியில் இருக்கும் பொழுது ஜாதகரீதியாக சனியினுடைய தசையோ புத்தியோ நடைபெறும் போது திருமணம் செய்யக்கூடாது. ஆனால் ஏழரை சனி வரும் காலத்தில் திருமணம் கட்டாயம் நடைபெறும் என்பது நிதர்சனமான உண்மை. சனி என்பவர் திருமணத்தை முடித்துக் கொடுக்கும் கர்மகாரகன்.
எண் கணித ஜோதிடத்தில் எட்டு என்பது மோசமான எண். திருமண தேதி எட்டாக இருக்கக் கூடாது. அதேபோல் 4, 5, 7 எண்கள் வரும் தேதிகளிலும் திருமணத்தை நடத்தக் கூடாது.
குரு பலமும், சந்திரன் பலமும், தசா புத்திகளும் சரியாக அமையாதவர்கள் திருமண முகூர்த்தம் நாட்களைத் தள்ளிப்போடலாம். சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் லக்னத்திற்கு 11-ல் சூரியன் இருக்கும் நேரத்தை பயன் படுத்தலாம்.
முகூர்த்த நேரம் என்பது ஒன்றரை மணி நேரமாகும். அந்த காலத்தில் நாழிகை கணக்கு வழக்கில் இருந்தது. ஒரு நாழிகை 24 நிமிடம். சுபநிகழ்ச்சிக்கான கால அளவு மூன்றே முக்கால் நாழிகை. மேலே கூறிய இந்த வழிமுறைகளின்படி சுபமுகூர்த்த நாள் கிடைக்குமா? என்று வாசகர்கள் கேட்பது புரிகிறது.
மனிதர்கள் அனைவரும் வினைகளை அனுபவிக்க வந்திருக்கிறோம் என்பதால் பரிபூரண சுப நேரம் என்பது ஒரு விநாடி அளவு கூட இல்லை என்பதே உண்மை. மேலே கூறிய நிலைகளில் ஒரளவு பொருந்தி வந்தாலே மிகச் சிறப்பான முகூர்த்தமாக கருத வேண்டும்.
ஒரு சுப காரியம் நிகழ்த்தும் நாள், திதி, நட்சத்திரம் மற்றும் முகூர்த்த நேர லக்ன சுத்தம் அமைந்தாலே ஒரு சுபகாரியம் பரிபூரண சுபத்தன்மை பெறும். குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் குறிக்கும் நேரம் நிச்சயம் நல்லமுகூர்த்தமாக அமையும்.

திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நாளை (13-ந்தேதி) தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி மாட வீதிகளில் வீதிஉலா வருகிறார்.
5-ம் நாளான நேற்று மங்களகிரியின் மீது வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் முக்கிய வீதிகளிலும் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நாளை (13-ந் தேதி) தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்ய உள்ளனர். தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம், ஆலத்தூர் வழியாக வரும் வாகனங்கள் கிரிவல பாதை வழியாக காலவாக்கம் சென்று ஓ.எம்.ஆர் சாலையில் இணைந்து செல்லலாம். செங்கல்பட்டு, ஆலத்தூர் வழியாக செல்லும் பஸ்கள் நகருக்கு வெளியே நிறுத்தி இயக்கப்படும்.
சென்னையில் இருந்து கேளம்பாக்கம் வழியாக ஓ.எம்.ஆர்.சாலையில் கோயிலுக்கு வரும் வாகனங்கள் நகருக்கு வெளியே புதிய புறவழிச் சாலை மூலம் கோவிலுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக ஆன்லைனில் தொடர்ந்து இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டில் தினமும் 10,000 பக்தர்களும், இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட டிக்கெட்டுகள் மூலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் கடந்த மாதம் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டது. இதில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ந்தேதி வரை மட்டுமே ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
வரும் 16-ந்தேதி முதல் திருப்பதியில் அலிபிரி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸ் இப்படம் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுமென தேவஸ்தானம் அறிவித்தது.
இந்த நிலையில் ஆன்லைனில் தொடர்ந்து இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வரும் 17-ந்தேதி திருமலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மீண்டும் ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் இலவச தரிசனத்திற்கு பக்தர்களை எப்படி அனுமதிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 30,609 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,359 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஓடைத் தெருவின் தென் பகுதியில் உள்ள ஆவுடைப் பொய்கைத் தெப்பத்தில் தெப்பத்தேரோட்டம் நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஓடைத் தெருவின் தென் பகுதியில் உள்ள ஆவுடைப் பொய்கைத் தெப்பத்தில் சங்கர நாராயணசுவாமி கோவிலில் இருந்து ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று தெப்பத் தேரோட்டத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான தெப்பத்தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சங்கர லிங்க சுவாமி மற்றும் பிரியா விடை, கோமதிஅம்பாள் ஆவுடைப்பொய்கை தெப்பத்திற்கு எதிரேயுள்ள மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடந்தது. பூஜைகளை ரவிபட்டர் தலைமையிலான பட்டர்கள் செய்தனர்.
தொடர்ந்து சுவாமி அம்பாள் இருவரும் தெப்பத் தேருக்கு எழுந்தருளினர்.
இதையடுத்து தெப்பத் தேரோட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. சுவாமி, அம்பாள் தெப்பத்திற்குள் 11 முறை தேரில் சுற்றி வந்தனர்.
இதனைக் காண சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் தெப்பத்தைச் சுற்றிலும் நின்று சுவாமி, அம்பாளை தரிசித்தனர்.
இதில் அறநிலையத்துறை இணைஆணையர் அன்பு மணி, துணை ஆணையர் அருணாசலம் உதவி ஆணையர் சங்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி. ஜாகிர் உசேன் ஆலோசனைப்படி டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாசன் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.
முன்னதாக இந்த ஆண்டு நல்லமழை பெய்ததால் தெப்பத்தில் தண்ணீர் நிறைந்து பாசி படிந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் அய்யப்ப சேவா சங்கம் மற்றும் செந்திலாண்டவன் திருச்சபை உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் பெய்த மழை காரணமாக 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கும்பகோணத்தில் உள்ள மகாமகத்்தை தொடர்புடைய சைவ மற்றும் வைணவ கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி மக திருவிழா சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசி மக விழா கடந்த 8-ந் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் தினமும் காலை, மாலை ே்நரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மூர்க்கநாயனார், மெய்பொருள்நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களும் இரட்டை வீதி உலாவாக கும்பேஸ்வரர் கோவில் மற்றும் நாகேஸ்வரர் கோவில் வீதிகளுக்கு செல்வது வழக்கம்.
ஆனால் நேற்று காலை பெய்த மழையின் காரணமாக 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கும் ஆதிகும்பேஸ்வரர் கோவில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, படிச்சட்டத்தில் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை நாட்களில் நடை திறக்கப்படும்.
அதன்படி மாசி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. மற்ற சிறப்பு பூஜைகள் அன்றைய நாளில் நடைபெறாது. பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது. பின்னர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகளை நிறைவேற்றுவார். நாளை முதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், கலசபூஜை, அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜை வழிபாடுகள் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 17-ந் தேதி இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜையை தொடர்ந்து அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருவதால், சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.
தரிசனத்திற்கு முன் பதிவு செய்த பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசனத்திற்கு 72 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். மற்றவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல் உடனடி முன்பதிவு தரிசனமும் கிடையாது. நடை திறக்கப்படுவதை யொட்டி பக்தர்களின் வசதிக்காக, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் உள்பட மாவட்ட தலைநகரங்களில் இருந்து நிலக்கல்-பம்பைக்கு கேரள போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள், சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்
மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||
இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும். ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் தெப்போற்சவத்தின் 3-வது நாளான இன்று (சனிக்கிழமை) உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில் உள்ளே வலம் வந்து அருள்பாலிக்கிறார்கள்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை ருக்மணி, சத்தியபாமா சமேத பார்த்தசாரதிசாமி கோவில் உள்ளேயே திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து அருள்பாலித்தனர்.
முன்னதாக காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
தெப்போற்சவத்தின் 3-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில் உள்ளே வலம் வந்து அருள்பாலிக்கிறார்கள்.
விழாவில் கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு, உதவி அதிகாரி ரவிக்குமார்ரெட்டி, கோவில் தலைமை அர்ச்சகர் ஏ.பி.சீனிவாச தீட்சிதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை உற்சவர் சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்திலும், இரவு அஸ்தமானகிரி விமான வாகனத்திலும் உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணியளவில் நடைபெறுகிறது.
இதற்காக தேர் மராமத்து மற்றும் வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. தேர் செல்ல ஏதுவாக மாடவீதிகளில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் மற்றொரு முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 15-ந்தேதி நடக்கிறது. 17-ந் தேதி இரவில் தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவம் மற்றும் 18 திருநடனத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா 17-ந் தேதி நடக்கிறது. இப்போது கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் 1500 பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் பொது நிகழ்ச்சிகள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அரசு கட்டுப்பாடுகள் விதித்தது.
தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 16 ஆயிரத்து 12 பேர் மட்டுமே தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ள னர்.
நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மாநில அரசு, கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இன்று அங்கன்வாடி மையங்களும் திறக்கப்பட்டது.
இதுபோல வழிபாட்டு மையங்களுக்கு கூடுதல் பக்தர்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கும் கூடுதல் பக்தர்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பொங்கல் விழா, கடந்த 9-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் கோவிலுக்கு 200 பக்தர்கள் மட்டுமே செல்லலாம் எனக்கூறப்பட்டது. இப்போது கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் 1500 பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இக்கோவிலில் பொங்கல் விழாவையொட்டி நடைபெறும் சிறுமிகளின் தாலப்பொலி, சிறுவர்களின் குத்தியோட்டம் ஆகியவை விமர்சியையாக நடைபெறும். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சிகளையும் கொரோனா விதிகளை கடைபிடித்து நடத்தி கொள்ளலாம் எனக் கூறப் பட்டு உள்ளது.
பொங்கல் வழிபாடு 17-ந் தேதி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் விதிகளுக்கு உட்பட்டு பெண்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு நடந்த பொங்கல் விழாக்களில் லட்சக்கணக்கில் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு உள்ளனர். அது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்...வேண்டுதல்களை நிறைவேற்றும் ஆலத்தூர் காருடைய அய்யனார்- வீரனார் கோவில்

வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த திருவிழா 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
திருவிழாவையொட்டி வியாழக்கிழமை புனித செபஸ்தியார் தத்துக்கிராம நற்செய்தி பணித்திட்டம் சார்பில் நற்செய்தி கூட்டம் நடந்தது.
நேற்று மாலை பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு ஜெரால்டு பால்ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கான திருமுழுக்கு வழங்குதல், மாலை 5 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.
14-ந் தேதி கத்தோலிக்க சேவா சங்கம் சிறப்பிக்கும் பவளவிழா கொண்டாடும் திருப்பலியும், 17-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறும். 18 -ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.
19-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும், வாணவேடிக்கையும் நடக்கிறது.
20-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு குடும்பவிழாவான திருவிழா நிறைவு முதல் திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜி.ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை அ.அஜின் ஜோஸ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், துணைத்தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.