என் மலர்
வழிபாடு

63 நாயன்மார்கள் வீதி உலா
கும்பகோணத்தில் மழை காரணமாக 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து
கும்பகோணத்தில் பெய்த மழை காரணமாக 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கும்பகோணத்தில் உள்ள மகாமகத்்தை தொடர்புடைய சைவ மற்றும் வைணவ கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி மக திருவிழா சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசி மக விழா கடந்த 8-ந் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் தினமும் காலை, மாலை ே்நரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மூர்க்கநாயனார், மெய்பொருள்நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களும் இரட்டை வீதி உலாவாக கும்பேஸ்வரர் கோவில் மற்றும் நாகேஸ்வரர் கோவில் வீதிகளுக்கு செல்வது வழக்கம்.
ஆனால் நேற்று காலை பெய்த மழையின் காரணமாக 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கும் ஆதிகும்பேஸ்வரர் கோவில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, படிச்சட்டத்தில் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story